Published:Updated:

`ஆள்மாற்றம்; பஞ்சாயத்து; பாராட்டு!' சின்னத்திரை 2021 ரீவைண்டு!'

சின்னத்திரை 2021 ரீவைண்டு
News
சின்னத்திரை 2021 ரீவைண்டு

முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென தொடரில் இருந்து விலகியிருக்கிறார்கள்.. பல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.. பல சீரியல் பஞ்சாயத்துகளும் 2021-ல் நடந்தேறியிருக்கிறது. சின்னத்திரையின் 2021 ரீவைண்ட் இதோ!

2021 சின்னத்திரையில் பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்தவர்கள் திடீரென தொடரில் இருந்து விலகியிருக்கிறார்கள்.

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

பல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பல சீரியல் பஞ்சாயத்துகளும் 2021-ல் நடந்தேறியிருக்கிறது. சின்னத்திரையின் 2021 ரீவைண்ட் இதோ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ராதிகா - சித்தி 2 :

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

'சித்தி' தொடர் வெற்றியடைந்த பின்னர் அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு 'சித்தி 2' தொடர் 2020-ல் ஆரம்பமானது. இந்தத் தொடரில் 'சாரதா' கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா திடீரென தொடரில் இருந்து வெளியேறினார். வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தவர், சின்னத்திரைக்கு பிரேக் எடுத்துக் கொண்டு தற்போது வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரோஷினி ஹரிப்பிரியன் - பாரதி கண்ணம்மா :

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

'பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரியானவர், ரோஷினி. இந்தத் தொடரில் அவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. டஸ்கி ஸ்கின் டோன் கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வந்தார். இந்நிலையில், திடீரென அந்தத் தொடரில் இருந்து அவர் விலகுவதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதால் சீரியலில் இருந்து விலக அவர் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு பின்னர் வினுஷாஶ்ரீ என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரச்சிதா - நாம் இருவர் நமக்கு இருவர் :

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

சீரியலில் இருந்து ரச்சிதா வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியான சமயம் தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்தார், ரச்சிதா. அந்தத் தொடரில், வேண்டும் என்றே சீன் கொடுக்காமல் ஒதுக்கி வைத்ததாகவும், நானே சீரியலில் இருந்து விலகுகிறேன் என சொல்லணும்னு அவங்க எதிர்பார்த்திருந்திருக்காங்க.. அதுவே நடந்துடுச்சு எனவும் ஒரு பேட்டியில் ரச்சிதா குறிப்பிட்டிருந்தார். ரச்சிதாவே தொடரில் இருந்து விலகுவதாக புரொடக்‌ஷனில் கூறிவிட்டு விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக, 'அரண்மனைக்கிளி' தொடரில் நடித்த மோனிஷா தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

தீபிகா - பாண்டியன் ஸ்டோர்ஸ் :

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர், தீபிகா. ஐஸ்வர்யா - கண்ணன் காம்பினேஷன் பலருக்கும் பிடித்திருந்தது. பலரும் இந்த ஜோடிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், திடீரென அந்தத் தொடரில் இருந்து தீபிகா வெளியேறினார். எனக்கு முகப்பரு அதிகமாக இருக்குங்குறதால நான் டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். சேனலில் இருந்தும் அதை சரி பண்ண எனக்கு டைம் கொடுத்தாங்க. ஆனா, அந்த டிரீட்மென்டுக்கு கொஞ்சம் டைம் எடுக்குங்கிறதால வேற வழி இல்லாம தான் என்னை மாத்திட்டாங்க எனவும் தீபிகா தெரிவித்திருந்தார். தற்போது அவருக்கு பதிலாக 'ஈரமான ரோஜாவே' சீரியல் புகழ் காயத்ரி நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஷாமிலி சுகுமார் - ரோஜா :

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

'ரோஜா' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தவர், ஷாமிலி. அவருடைய காமெடி கலந்த நெகட்டிவ் கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. கர்ப்பமான காரணத்தினால் ஷாமிலி தொடரில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஷாமிலிக்கு பதிலாக அனு கதாபாத்திரத்தில் விஜே அக்‌ஷயா நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்வேதா கெல்ஜ், தமன் - வானத்தைப் போல :

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

அண்ணன் - தங்கை சென்டிமென்ட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர், வானத்தைப் போல. இந்தத் தொடரில் அண்ணன், தங்கை கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா, தமன் இருவரும் அடுத்தடுத்து தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். தயாரிப்பு சார்ந்த பிரச்னையால் தொடரில் இருந்து விலகியதாக நம்மிடையே ஸ்வேதா பகிர்ந்து கொண்டார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஸ்வேதாவின் விலகலை பெரியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. மாறாக, தமனை அடுத்த நடிகரை தேர்ந்தெடுக்கும் வரையில் நடித்துக் கொடுக்க சொன்னதாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், அவர் என்ன காரணத்திற்கான விலகுகிறார் என்பது எங்களுக்கே தெரியவில்லை எனவும் கூறினர். படங்களில் நடித்து பெரிய அளவில் ரீச் ஆகததால் தான் சீரியலுக்குள் வந்தார். பின்னர் ஏன் விலகினார் எனத் தெரியவில்லை என்கிறார்கள், சீரியல் தரப்பை சார்ந்தவர்கள்! தற்போது, ஸ்வேதாவிற்கு பதில் மன்யா என்பவர் 'துளசி' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமனுக்கு பதிலாக 'சின்ராசு' கதாபாத்திரத்தில் நடிகர் ஶ்ரீ நடிக்கிறார்.

அகிலன் - பாரதி கண்ணம்மா :

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

'பாரதி கண்ணம்மா' தொடரில் அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் தொடரில் இருந்து வெளியேறினார். சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போது சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. தொடர்ந்து சினிமா ஷூட்டிங் இருக்கிறதனால என்னால சீரியலுக்கு சரியா தேதிகள் ஒதுக்க முடியலை. அதுனாலதான் வேற வழியில்லாம சீரியலில் இருந்து விலகிட்டேன் என விலகல் குறித்து நம்மிடையே அகிலன் பகிர்ந்து கொண்டார். தற்போது அவருக்கு பதிலாக சுகேஷ் என்பவர் அகில் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஃபரீனா ஆசாத் - பாரதி கண்ணம்மா :

2021 ரீவைண்ட்
2021 ரீவைண்ட்

'வெண்பா' கதாபாத்திரத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானவர், ஃபரீனா. விஜேவாக நம்மிடையே பரிச்சயமானவர் வில்லியாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். இவர் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போது கர்ப்பமான காரணத்தினால் தொடரில் இருந்து விலக நினைத்தார். ஆனால், இயக்குனர் கொடுத்த நம்பிக்கையால் தொடர்ந்து சீரியலில் நடித்தார். கர்ப்பமாக இருக்கும் போது ஸ்டண்ட் காட்சிகள் உட்பட பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்தார். நிறை மாதம் வரையில் நடித்துக் கொடுத்துவிட்டு பிரசவத்திற்காக சென்ற ஃபரீனா குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே மீண்டும் குழந்தையுடன் ஷூட்டிங்கிற்கு புறப்பட்டுவிட்டார். கடமையில் உறுதியாக இருக்கும் ஃபரீனாவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.