Published:Updated:

சர்வைவர் 80: அட்வான்டேஜை கூலாக இனிகோவிடம் கொடுத்த விஜி... படுதோல்வியடைந்த ஐஸ்வர்யா!

சர்வைவர் 80: விஜயலட்சுமி

‘ஜெயிக்கணும்’ என்று மண்டைக்குள் கத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. தலைக்குள் இருக்கும் இன்னொரு சமாச்சாரத்தையும் சற்று அவர் உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். ஒரே தவறை மூன்று முறையா ஒருவர் தொடர்ந்து செய்வார்?

Published:Updated:

சர்வைவர் 80: அட்வான்டேஜை கூலாக இனிகோவிடம் கொடுத்த விஜி... படுதோல்வியடைந்த ஐஸ்வர்யா!

‘ஜெயிக்கணும்’ என்று மண்டைக்குள் கத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. தலைக்குள் இருக்கும் இன்னொரு சமாச்சாரத்தையும் சற்று அவர் உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். ஒரே தவறை மூன்று முறையா ஒருவர் தொடர்ந்து செய்வார்?

சர்வைவர் 80: விஜயலட்சுமி
கொம்பர்களின் அணியின் தலைவருக்கான கடைசி தேர்தல் நடந்தது. இதில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார் விஜி. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு சங்கடமான காரணம் இருந்தது. அது இல்லாவிட்டால் இது முழுமையான வெற்றியாக இருந்திருக்கும்.

ஃபீனிக்ஸ் பறவை போல் திரும்பத் திரும்ப எழுந்தாலும் புத்தி சாதுர்யத்தை உபயோகப்படுத்தாத காரணத்தால் ஐஸ்வர்யா இந்தப் போட்டியில் படுதோல்வி அடைந்தார். ‘ஜெயிக்கணும்’ என்று மண்டைக்குள் கத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. தலைக்குள் இருக்கும் இன்னொரு சமாச்சாரத்தையும் சற்று அவர் உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். ஒரே தவறை மூன்று முறையா ஒருவர் தொடர்ந்து செய்வார்?

சர்வைவர் 80-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதால் வியூகங்கள் மாறிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. ‘இம்யூனிட்டி சவால்ல சூதானமா விளையாடணும். ஏமாந்துடக்கூடாது” என்று அம்ஜத்தை எச்சரித்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “சிகிச்சைக்கு போனவங்க வந்துட்டாங்கன்னா நிலைமை மாறிடும்” என்பது போல் சரணிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“பழைய கதையெல்லாம் இனி தேவையில்லை. எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சுட்டு இனி நடக்கப் போறதில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன்” என்கிற தீர்மானத்தில் இருக்கிறார் சரண். நல்ல முடிவு. ஐஸ்வர்யா, இனிகோ மாதிரி பழைய சர்ச்சைகளையே திரும்பத் திரும்ப கிளறிக் கொண்டிருப்பதால் கசப்புதான் மிஞ்சும். இனிகோவிடம் சென்று 'எது நடந்திருந்தாலும் ஸாரி..' என்று சொல்லி இணக்கமானார் சரண். பிழைக்கத் தெரிஞ்ச பிள்ளை.

சர்வைவர் 80:
சர்வைவர் 80:

இன்னொரு பக்கம் விஜியிடம் சென்று புதிய கூட்டணியை அமைக்க முயன்றார் ஐஸ்வர்யா. “யோசிச்சு சொல்றேன்” என்று சாமர்த்தியமாக கழன்று கொண்டார் விஜி. சிகிச்சைக்கு சென்றவர்கள் திரும்பினால் தங்களின் பலம் மறுபடியும் திரும்பி விடும் என்கிற கணக்கு விஜியிடம் இருந்தது.

சர்வைவர் 80:
சர்வைவர் 80:
“இனிமே எந்தக் கூட்டணியா இருந்தாலும் கேமரா முன்னாடி பேசுவோம். சாட்சியம் இருக்கட்டும்” என்று விஜி சொன்னதை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். இனிமே ‘வேடர்கள், காடர்கள் என்ற பிரிவுல்லாம் போயிடும்” என்று நாராயணன் சொன்னார். அவர் வேடர் அணியிலிருந்து கணிசமாக விலகி விட்டார் என்பது நன்கு தெரிகிறது. ஆனால் பாசக்கார அணியைச் சேர்ந்த விஜி "அதெல்லாம் போகாது. கடைசி வரை இருக்கும்" என்றார். விஜி சொல்வதுதான் நிதர்சனம் என்று தோன்றுகிறது.

“இனிமே ஜூரிகளில் காடர்கள், வேடர்கள் ஆகிய இருவரும் இருப்பார்கள். அதைப் பொறுத்து கூட நிலைமை மாறும். வாக்கு பிரியும்” என்று சொன்ன விஜியிடம் "அனைத்து காடர்களும் உங்களை சப்போர்ட் செய்வார்களா?" என்று நாராயணன் கேட்க "தெரியல... என்ன வேணா நடக்கலாம்" என்று ஜாக்கிரதையாக பதில் சொன்னார் விஜி.

தலைவர் போட்டிக்கான ஓலை வந்தது. இந்தச் சமயத்தில் “நீ போயேன். நீதான் போயன்” என்றுதான் அதுவரை சொல்லிக் கொண்டிருந்தவர்களும் கடைசி போட்டி என்பதால் ‘நான் போறேன்... நான் போறேன்!’ என்று ஆளாளுக்கு ஆர்வமாக கை தூக்கினார்கள். கடைசி போட்டியில் முக்கியமான அட்வான்டேஜ் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ‘எல்லோருமே நிப்போம்.. அங்க போய் பார்த்துக்கலாம்’ என்று கிளம்பினார்கள். “விஜி.. நம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரு ஜெயிக்கணும் விஜி” என்று கங்கணம் கட்டிக் கொண்டார் இனிகோ.

சர்வைவர் 80
சர்வைவர் 80
‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று கொம்பர்களை வரவேற்ற அர்ஜூன், ‘மெயின் டீமில் மீண்டும் இணைந்த சரணை வாழ்த்தினார். “இதுதான் தலைவருக்காக நடக்கவிருக்கும் கடைசி போட்டி. இதுவரை இருந்ததில் யார் யாருக்கு எந்தத் தலைவர் பிடிக்கும்?” என்று கேட்டார்.

அம்ஜத் மற்றும் ஐஸ்வர்யா, லட்சுமியையும், விஜி, விக்ராந்த்தையும், சரண், உமாபதியையும் (பார்றா!), நாராயணன் இனிகோவையும் (அடடே!) இனிகோ, நாராயணனையும் (அடடடே!) பிடித்த தலைவர்களாக குறிப்பிட்டு அதற்கான காரணத்தையும் சொன்னார்கள்.

“ஓகே.. இந்த தலைவர் போட்டில இரண்டு பேர்தான் கலந்துக்க முடியும். ஆனா எல்லோருக்குமே கலந்துக்க ஆசை இருக்கும். அதிர்ஷ்டக்கல் மூலமா அந்த இரண்டு பேரைத் தேர்ந்தெடுக்கலாம்” என்று சொன்ன அர்ஜூன், அத்றகான சடங்கில் ஈடுபட்டார். எந்த இருவருக்கு கறுப்பு நிறக்கல் வருகிறதோ, அவர்களே போட்டிற்கு தகுதியானவர்கள்.

சர்வைவர் 80
சர்வைவர் 80

ஐஸ்வர்யா மற்றும் இனிகோவிற்கும் கறுப்புக்கல் வந்ததால் அவர்கள் போட்டியிடுவார்கள் என்று அர்ஜூன் அறிவிக்கப் போகிற சமயத்தில் “எனக்கு தலை சுத்துது.. யார் கிட்டயாவது கொடுத்துடட்டுமா.” என்று இனிகோ சொன்ன போது ‘விளையாட்டுக்காக சொல்கிறார் என்றே முதலில் தோன்றியது. பிறகு பார்த்தால் அவர் சீரியஸாகத்தான் சொல்லியிருக்கிறார். “மாத்திரைல்லாம் போட்டிருக்கேன். கால்வலியும் இருக்கு” என்று பரீட்சைக்கு மட்டம் போடும் மாணவன் மாதிரி இனிகோ காரணம் சொன்னதால் “ஓகே.. யாருக்கு கொடுக்கப் போறீங்க?” என்று அதை அர்ஜூன் அனுமதித்ததெல்லாம் எந்த மாதிரியான விதியில் வரும் என்று தெரியவில்லை. இனிகோ யாருக்குத் தருவார்? வேறு யார்... விஜிதான்.

"நல்லா யோசிச்சுக்கங்க.. இதுவொரு நல்ல வாய்ப்பு.” என்று அர்ஜூன் மறுபடி எச்சரித்தும் இனிகோ தன் முடிவில் இருந்து மாறவில்லை. “இதை அதிர்ஷ்டக்கல் தேர்விற்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே? போட்டிக்கு வந்து நின்னப்புறம் ஏன் சொல்லணும்? மீசைல மண் ஒட்டலைன்றது கூட ஒருபக்கம் இருக்கட்டும். அதுக்கு முதல்ல மீசை இருக்கணும்." என்று பன்ச் வசனத்தோடு கோபமானார் அம்ஜத்.

சுற்றியிருந்த கேமின் செட்டப்பை ஏற்கெனவே பார்த்து வைத்திருந்த விஜி “எனக்கு இப்பவே ஸ்ட்ராட்டஜி கூட தோணிச்சு” என்று சொல்லி விட்டு ‘கடவுளே எனக்கு வாய்ப்பு கிடைக்கணும்" என்று வேண்டிக் கொண்டிருந்தார். அந்த வரம் இனிகோவின் வழியாக கிடைத்தது. ஒருவர் உடல்நலம் சரியில்லை என்கிற காரணத்தைச் சொல்லி தனக்கு சார்பானவர்களுக்கு அந்த வாய்ப்பைத் தருவது என்ன மாதிரியான போட்டி விதி என்று தெரியவில்லை.

சர்வைவர் 80
சர்வைவர் 80

போட்டியின் கான்செப்டை விளக்கத் துவங்கினார் அர்ஜூன். இங்கு 150 மரத்துண்டுகள் இருக்கும். அதை வைத்து கோபுரம் போல் உருவாக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் கம்பத்தை விடவும் அதிக உயரத்தில் கட்டமைப்பை முதலில் உருவாக்கி விட்டால் அவரே வெற்றியாளர்” என்று அவர் அறிவிக்கவும் விஜியும் ஐஸ்வர்யாவும் களத்தில் இறங்கினார்கள். “யார் கூட வேண்டுமானாலும் போட்டியிடத் தயார். எனக்கு பயம் கிடையாது” என்று சொல்லிக் கொண்ட ஐஸ்வர்யா “இந்தப் போட்டி எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். ஜெயிக்கணும்.. ஜெயிக்கணும்” என்பதை மந்திரம் போல் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார்.

மரத்துண்டுகளை அடுக்குவதில் விஜியும் ஐஸ்வர்யாவும் வெவ்வேறு உத்திகளை பயன்படுத்தினார்கள். விஜி தனது கோபுரத்தை சதுரவடிவில் வைத்து எழுப்பிக் கொண்டு போக, ஐஸ்வர்யா முக்கோண வடிவத்தை பயன்படுத்தினார். ஐஸ்வர்யாவிற்கு சரண் உரத்த குரலில் ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார். இது போன்ற உதவிகள் போட்டியில் தரப்படக்கூடாது என்பதை கறாராக அர்ஜூன் அறிவிக்க வேண்டும். அது காடர்களாக இருந்தாலும் சரி, வேடர்களாக இருந்தாலும் சரி.

“விஜி... சரணின் குரல் உங்களுக்கு தொந்தரவா இருக்கா?” என்று அர்ஜூன் கேட்க “ஆம்” என்றார் விஜி. எனில் முந்தைய ஆட்டத்தில் அவர் இனிகோவிற்கு உரத்த குரலில் உதவிய போது ஐஸ்வர்யாவிற்கு அது தொந்தரவாக இருக்குமே என்பதையும் யோசித்திருக்க வேண்டும். இது விஜியின் போங்காட்டம். என்றாலும் சிறிது நேரத்திற்குப் பிறகு சரண் ஆலோசனை தருவதில் தமக்கு பிரச்சினையில்லை என்று சொல்லி விட்டார்.

விஜி உருவாக்கிக் கொண்டிருந்த சதுர வடிவ கோபுரம் அடிப்படையில் உறுதியான தன்மையைக் கொண்டது. மேலே மேலே எழுப்பிச் சென்றாலும் நான்கு புறமும் சப்போர்ட் இருப்பதால் எடையை தாங்கும். ஆனால் ஐஸ்வர்யா உருவாக்கிய முக்கோண வடிவம், சீட்டுக்கட்டு மாதிரியானது. காற்றடித்தால் மொத்தமும் சாய்ந்து விடும். ஏன் இந்த வடிவத்தை ஐஸ்வர்யா தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அவர் சரண் சொன்னதைப் பின்பற்றிக் கொண்டிருந்தார்.

சர்வைவர் 80
சர்வைவர் 80

ஆனால் வழக்கம் போல் அதிர்ஷ்டம் ஐஸ்வர்யாவிற்கு உதவிக் கொண்டிருந்தது. அவர் அடுக்கிக் கொண்டிருந்த கோபுரம் கணிசமான அளவில் பாதகமில்லாமல் செல்ல, விஜியின் கோபுரம் அடிக்கடி சரிந்து கொண்டிருந்தது. முக்கோண வடிவில் அடுக்கினாலும் குறிப்பிட்ட அடுக்குகளுக்குப் பிறகு அவற்றின் இடைவெளியில் சற்று தள்ளி அடுக்கினார் ஐஸ்வர்யா. (ஒருமுறை சரண் உபயோகித்து வெற்றி பெற்ற உத்தி இது).

சதுர வடிவம் என்றாலும் விஜயின் கோபுரம் சரிந்தது. இதனால் விஜி பதட்டம் அடைந்தாலும் நிதானத்தை இழந்து விடாமல் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார். ஒரு ஆள் உயரத்தை விடவும் ஐஸ்வர்யாவின் கோபுரம் அதிகமானதால் மேஜையின் மீது ஏறி நின்று அடுக்கத் துவங்கினார். ஆனால் எப்போது வேண்டுமானாலும் ஐஸ்வர்யாவின் முயற்சி பாழாகும் என்று தோன்றியது. காற்றும் அப்போது அடித்துக் கொண்டிருந்தது. எதிர்பார்த்தது போலவே ஐஸ்வர்யாவின் கோபுரம் மெல்ல ஆட்டம் கண்டு பிறகு மொத்தமும் கீழே சரிந்தது. இதுவே சதுரவடிவம் என்றால் இழப்பு சிறிதாகத்தான் இருந்திருக்கும்.

சர்வைவர் 80
சர்வைவர் 80
அதிர்ஷ்டக்காற்று இப்போது விஜியின் பக்கம் சென்று விட்டது போல. அவரின் கோபுரம் நிதானமாகவும் வலுவாகவும் உயர்ந்தது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் போல மீண்டும் தன் கோபுரத்தை எழுப்பத் துவங்கினார் ஐஸ்வர்யா. ஆனால் மீண்டும் ஏன் முக்கோண வடிவத்தையே பின்பற்றினார் என்று புரியவில்லை. துவக்கத்தில் இருந்து ஆரம்பித்தாலும் மளமளவென முன்னேறினார் ஐஸ்வர்யா.

முயல் – ஆமை கதை போல, தோற்பது போல் முதலில் பாவனை காட்டி விட்டு கடைசியில் ஜெயிப்பதுதான் ஐஸ்வர்யாவின் ஸ்டைல். ஒருவேளை கிளைமாக்ஸ் அப்படி ஆகுமோ என்று தோன்றியது. ஐஸ்வர்யாவின் அடுக்கும் வேகம் அப்படியாக இருந்தது. ஆனால் இரண்டாம் முறையும் அது சரிந்து விழுந்தது. இதிலிருந்தாவது ஐஸ்வர்யா பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ம்ஹூம்.. மீண்டும் அதே வடிவத்தில் அடுக்க ஆரம்பித்தவரை என்னவென்று சொல்வது?! ஒரு சமயத்தில் பயந்து போய் தான் கற்றுத் தந்ததை நிறுத்தி விட்டார் சரண்.

ஆனால் ஐஸ்வர்யா முயன்ற முக்கோண வடிவத்தில் ஒரு அனுகூலம் இருந்தது. அதற்குப் பலகைகளின் எண்ணிக்கை குறைவாகவே தேவைப்படும். உயரம் போனாலும் பிரச்சினையில்லை. ஆனால் சதுரத்தில் அப்படியல்ல. என்றாலும் தேவையான அளவிற்கு பலகைகள் இருந்தன.

சர்வைவர் 80
சர்வைவர் 80
“பலகையில் இருக்கும் நண்டு படத்தைக் கவனித்து அந்த வரிசையை பின்பற்ற பாரு” என்று உத்தியில் கூடுதல் ஐடியாவை சேர்த்தார் சரண். இந்தச் சமயத்தில் விஜியின் கோபுரத்திலும் சேதாரம் ஏற்பட்டது. என்றாலும் அதிக பாதிப்பின்றி அதை சமாளித்தார்.

ஆட்டம் ஆரம்பித்து நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தன. விஜியின் கோபுரம் நிதானமாக மேலெழும்பிக் கொண்டிருக்க, நகத்தைக் கடித்துக் கொண்டு பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏறத்தாழ கம்பத்தின் உயரத்தை விஜியின் கோபுரம் அடைந்தது. இந்தச் சமயத்தில் கோபுரத்தில் சற்று விரிசல் ஏற்பட அர்ஜூனே பதறிப் போனார். ஆனால் இந்தச் சிக்கலை திறமையாக சமாளித்தார் விஜி. இன்னமும் இரண்டு அடுக்குகளை அவர் வைத்து விட்டால் வெற்றி கிடைத்து விடும்.

ஆனால் தொடர்ந்து சென்றால் ஒட்டுமொத்த கோபுரமும் சரிந்து விடுமோ என்கிற அச்சம் அவருக்குள் ஏற்பட்டது. எனவே ஒரு புதிய உத்தியை கையாள முயற்சித்தார். அது நிச்சயம் calculated riskதான். பலகையை சதுர வடிவில் அடுக்காமல், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, பேப்பரின் மேல் எடை வைப்பதைப் போன்று, அந்தக் கோபுரத்தின் மேலே வைத்து விட்டால் எடையின் அழுத்தம் காரணமாக அது சரியாது என்கிற கணக்கு விஜிக்குள் வந்தது.

ஆனால் இது மதில் மேல் பூனை மாதிரியான கணக்குதான். 50 சதவீதம் வெற்றிக்கு வாய்ப்புண்டு. போவே தோல்விக்கும். ஆனால் விஜியின் இந்த யோசனை அருமையானது. “சார்.. சார். நான் வைக்கறேன். நீங்க 1,2,3, சொல்லுங்க சார், என்று பதறியபடி அர்ஜூனை அழைத்தார் விஜி. அனைத்துக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டு அடுக்குப் பலகையை தூக்கி கோபுரத்தின் மீது வைக்க அர்ஜூன் எண்ணத் துவங்கினார்.

1…… 2…. 3….. யெஸ்.. கோபுரம் சரியாமல், சாயாமல் நிமிர்ந்து அப்படியே நின்று கொண்டிருக்க.. விஜி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரின் வெற்றி அறிவிக்கப்பட்டு அவர்கள் கலைந்து செல்லும் வரை கோபுரம் அப்படியே நின்று கொண்டிருந்தது. “அது விழாது சார்.. அவ்வளவு ஸ்ட்ராங்கா ஃபேஸ்மெண்ட் போட்டிருக்கேன்” என்று பயம் நீங்கி பரவசமானார் விஜி. விஜியின் இந்த சாகசத்தை விசிலடித்துக் கொண்டாடினார் அர்ஜூன்.

சர்வைவர் 80
சர்வைவர் 80
விஜி தலைவர் பதவியை வென்றதால் 'அட்வான்டேஜ் ஓலை’ தரப்பட்டது. அதைக் கொண்டு போய் இனிகோவிடம் தந்தார் விஜி. 'யாரிடம் இருந்தால் என்ன?'

ஆக.. இனிகோ தந்த வாய்ப்பை விஜி மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்த வாரத்தின் தலைவர் ஆகி தனது இருப்பை பலப்படுத்திக் கொண்டார். சரியான உத்தி அமைக்காத ஐஸ்வர்யா முயற்சி இருந்தும் தோற்றுப் போனார்.

இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை முடிந்து விக்ராந்த், உமாபதி, வனேசா ஆகிய மூவரும் மெயின் அணிக்குத் திரும்பும் காட்சியை பிரமோவில் காண முடிந்தது. எனில் இனி என்னவாகும்?

பார்த்துடுவோம்.