Published:Updated:

சர்வைவர் 71 : நான்கு பேர் இல்லாத ஷோ; கண்கலங்கிய இனிகோ!

இனிகோ

அம்ஜத் அல்லது நாராயணன் இன்று வீழப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலை மாறி சூழலே தலைகீழாகி விட்டது.

Published:Updated:

சர்வைவர் 71 : நான்கு பேர் இல்லாத ஷோ; கண்கலங்கிய இனிகோ!

அம்ஜத் அல்லது நாராயணன் இன்று வீழப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலை மாறி சூழலே தலைகீழாகி விட்டது.

இனிகோ

‘இருக்கு.. இன்னிக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு..’ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், போட்டி மைதானமே காலியாக இருந்தால் எப்படியிருக்கும்? நேற்றைய எபிசோட் அப்படித்தான் இருந்தது. ‘டிரைபல் பஞ்சாயத்தின்’ வழக்கமான ரணகள தருணங்கள் இல்லை. வாக்கெடுப்பு இல்லை. எலிமிமேஷன் இல்லை. இப்படி பல ‘இல்லைகள்’ நேற்று இருந்தன.

இதற்கான காரணங்களை அர்ஜுன் விளக்கினார். விக்ராந்த், உமாபதி, வனேசா ஆகிய மூவரும் மருத்துவ சிகிச்சைக்காக (கோவிட் 19) சென்றிருந்தார்கள். எனவே அவர்கள் வரவில்லை. ‘சொந்தக் காரணங்களுக்காக’ லேடிகாஷ் போட்டியிலிருந்து வெளியேறி விட்டாராம். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு லேடிகாஷ் வெளியிட்டிருந்த அறிக்கையில் ‘தனக்கு உடல்பாதிப்பு இருந்தும்கூட சர்வைவர் நிர்வாகம் அதை முறையாக கவனிக்கவில்லை’ என்று குற்றம்சாட்டியிருந்தார். “உங்களுக்கு கோவிட் அறிகுறி இல்லை" என்று சொல்லி விளையாடுவதற்கு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அதனால் வெளியேறி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அர்ஜுன்
அர்ஜுன்

ஆக.. நால்வர் இல்லாத நிலையில் மீதமுள்ள நால்வர் மட்டுமே டிரைபல் பஞ்சாயத்தில் பரிதாபமாக அமர்ந்திருந்தனர். “அவர்கள் பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்” என்கிற குரல்களே மாறி மாறி இவர்களிடமிருந்து கேட்டுக் கொண்டிருந்தது.

சர்வைவர் 71-ம் நாளில் என்ன நடந்தது?

அம்ஜத் அல்லது நாராயணன் இன்று வீழப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலை மாறி சூழலே தலைகீழாகி விட்டது. “ஆமாம். நான் இன்செக்யூரா ஃபீல் பண்றேன்” என்று விஜி கவலைப்படும் அளவிற்கு நிலைமை ரொம்பவும் மோசம். ‘நம்பர் கேம்” என்று ஆட்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த காடர்களின் பலத்தை இயற்கை தன்னாலேயே பறித்துக் கொண்டதில் ஏதோவொரு மறைமுக நீதி இருக்கிறது.

நால்வருடன் டிரைபல் பஞ்சாயத்து பலவீனமாக ஆரம்பித்தது. பாம்பு வந்த நாளன்று போட்டியாளர்கள் திறந்த வெளியில் தூங்கியதால் பனியினால் பாதிக்கப்பட்டு அவர்களில் மூவருக்கு உடல்நிலை சீர்குலைந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக அறிவிப்பு வந்தது. “சர்வைவரும் ரயில் பயணம் மாதிரிதான். சிலர் வருவாங்க. போவாங்க. ஆட்டம் தொடர்ந்து நடக்கணுமில்லையா?” என்று பஞ்சாயத்தில் சோர்வுடன் அமர்ந்திருந்தவர்களுக்கு ஊக்கமளிக்க முயன்றார் அர்ஜுன்.

“இன்னிக்கு நான்தான் போவேன்னு நெனச்சேன். நாராயணனுக்கு காற்சிலம்பு வாய்ப்பாவது இருக்கிறது. எனக்கு அது கூட இல்லை. எனவே வேப்பங்குச்சிகளையெல்லாம் (மூன்றாம் உலகத்தில் கிடைக்காது) நிறைய எடுத்துக் கொண்டு தயாராக இருந்தேன்.” என்றார் அம்ஜத். “இவ்ளோ ரெடியானப்புறமும் நீ போகலைன்னா. நானே காற்சிலம்பு வாய்ப்பை உபயோகிச்சு உன்னை மூன்றாம் உலகத்திற்கு அனுப்பிடுவேன்னு சொன்னேன்” என்று சிரித்துக் கொண்டே நாராயணன் சொன்னார்.

சர்வைவர் - நாராயணன்
சர்வைவர் - நாராயணன்

தங்களின் தலை தற்காலிகமாக தப்பியதில் இருவருக்கும் மகிழ்ச்சி என்பதால் இந்தக் காமெடி பேச்சு வருகிறது போல.

“கொம்பர்களா மாறினப்புறம் அவங்ககூட என்னால இணைய முடிஞ்சாலும் வெளியே போகும் தேர்வில் நானும் இருந்தேன்” என்கிற பின்குறிப்பை நாராயணன் சேர்த்துக்கொண்டார். “ஏன்.. அம்ஜத். நீங்க காடர்களிலும் இருந்தீங்க இல்லையா.. அந்தக் கோட்டையை உங்களால் உடைக்க முடியவில்லையா?” என்கிற கேள்விக்கு ‘நான்தான் அங்க சமைப்பேன். உமாபதிக்கு உடம்பு சரியில்லாதப்ப தினமும் காலைல காஃபி போட்டுக் கொடுப்பேன். ஆனா அந்தக் கூட்டணிக்குள்ள நான் கட்டாயமா உடைச்சு போக விரும்பலை. அது சரியா இருந்திருக்காது” என்று விளக்கமளித்தார் அம்ஜத்.

“இனிகோ. நீங்க ஆரம்பத்துல அதிகம் பேசாம இருந்தீங்க. இப்ப பார்த்தா அடிச்சு தூள் கிளப்பறீங்க.. எப்படி இந்த மாற்றம்?” என்று விடையறிந்த கேள்வியை மீண்டும் கேட்டார் அர்ஜுன் . “வேடர்கள் அணியில் நாராயணன்கூட மட்டும்தான் என்னால கொஞ்சம் க்ளோஸ் ஆக முடிஞ்சது. மத்தபடி என்னால அங்க ஒட்டவே முடியலை. கொம்பர்களா மாறினப்புறம் காலேஜ் நண்பர்களை சந்திச்ச மகிழ்ச்சி ஏற்பட்டது. சந்தோஷமா இருக்கும் போது ஒருத்தரோட அவுட்புட் நல்லா வருமில்லையா?” என்று தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை விளக்கினார் இனிகோ.

“பானை டாஸ்க்ல உங்களைத்தான் முதல்ல டார்கெட் பண்ணாங்க. உங்களுக்கு கஷ்டமா இருந்ததா?” என்று அம்ஜத்தை நோக்கி கேட்டு அந்தப் பானையை மீண்டும் உடைத்தார் அர்ஜுன்.

“பானை டாஸ்க்ல உங்களைத்தான் முதல்ல டார்கெட் பண்ணாங்க. உங்களுக்கு கஷ்டமா இருந்ததா?” என்று அம்ஜத்தை நோக்கி கேட்டு அந்தப் பானையை மீண்டும் உடைத்தார் அர்ஜுன். “வருத்தம்தான். ஆனா அவங்க பார்வையில் இருந்து பார்க்கும்போது அப்படித்தான் செய்ய முடியும். எனக்கு இம்யூனிட்டி ஐடல் கிடைச்சா. அவங்க பிளான் ஸ்பாயில் ஆகும்னு அவங்க நெனச்சிருக்கலாம். நாராயணனை அவங்க முதல்ல டார்க்கெட் பண்ணலை. அவருக்கு காற்சிலம்பு ஆப்ஷன் இருக்கு. எனக்கு இல்லை. இது ஒரு காரணமா இருந்திருக்கலாம்” என்றார் அம்ஜத். “இப்படியெல்லாம் நாங்க யோசிக்கவேயில்லை. ``அம்ஜத் மாத்தி மாத்திப் பேசறார்’னு உமாபதி வருத்தப்பட்டார். அதனாலதான் அவரை முதல்ல டார்கெட் செஞ்சோம்” என்று உள்விவகார உரையாடலை வெளியில் சொன்னார் இனிகோ.

“உங்களை டார்கெட் செஞ்ச மாதிரி உணர்ந்தீங்களா?” என்கிற கேள்வியை நாராயணனிடமும் வைத்தார் அர்ஜுன் . “உமாபதி ஒரு ஸ்ட்ராங் பிளேயர். அதனாலதான் அவரைக் குறி வெச்சேன். அதிர்ஷ்டவசமா முதல் பானையே உடைஞ்சது. ஓகே.. மீதி ரெண்டு பானையையும் உடைச்சுடலாம்னுதான் தோணுச்சு” என்றார் நாராயணன்.

“ஓகே.. டைம் மெஷின்ல போய் சில விஷயங்களை மாத்த முடியும்ன்ற மாதிரி, இந்த சர்வைவரில் நீங்க மாத்த விரும்புகிற விஷயம் ஏதாவது இருக்கிறதா?” என்று அடுத்த தலைப்பிற்கு மாறினார் அர்ஜுன் . “காயத்ரிக்கு எதிரா வாக்களிச்சது தவறுன்னு பிறகு உணர்ந்தேன். மூன்றாம் உலகத்தில்தான் அவங்களைப் பத்தி நல்லா புரிஞ்சது. அவங்க ஒரு நல்ல பிளேயர். எனக்கு இப்பத்தான் ஃபீல் ஆகுது” என்று சொல்லி இந்த பாவமன்னிப்பு டாஸ்க்கை துவக்கி வைத்தார் விஜி.

“தனி நபர் ஆட்டத்தில் நான் மட்டுமே முடிவெடுக்கலாம்னு வரும்போது எக்ஸ்ட்ரா முயற்சிகள் என்னிடமிருந்து வெளியே வந்தது. ஆனா டீமா விளையாடும்போது கொஞ்சம் பின்னாடி நின்னுட்டேன். முடிஞ்சா இப்ப அதை மாத்திப்பேன்” என்றார் நாராயணன். “சில காரணங்களால் ஒரு கேமில் மட்டும் நான் வெளியே நின்னேன். இப்ப அந்த டாஸ்க்கை பண்ண விரும்புவேன்” என்றார் அம்ஜத்.

அர்ஜுன்
அர்ஜுன்

“உங்க பிஹேவியர்.. இல்லைன்னா.. பேச்சை மாத்திப் பேசினது.. இந்த மாதிரி தவறான விஷயங்களை இப்ப திருத்திக்க விரும்புவீங்களா?” என்று அடுத்த டாப்பிக்கை ஆரம்பித்தார் அர்ஜுன் . “சரணிற்கு எதிரா வாக்களிச்சது தப்போன்னு இப்ப தோணுது. ஆனா அந்த டைம்ல சரின்னுதான் தோணிச்சு” என்றார் நாராயணன். “நான் எப்பவுமே ஓப்பனா பேசிடுவேன். அதனால சிலர் காயப்பட்டிருக்கலாம். ஆனா நான் மாத்திக்க விரும்பினால்கூட என்னால் முடியாது. அதுதான் என் இயல்பு” என்றார் இனிகோ. “சரணால் நான் மூன்றாம் உலகம் போக நேர்ந்தப்ப அவன் மேல செமயா கோபம் இருந்தது. பழிவாங்கணும்கூட தோணிச்சு. இப்ப யோசிச்சா. அது தேவையில்லைன்னு படுது” என்று பாவமன்னிப்பு கோரினார் விஜி. “படபடன்னு பேசிடுவேன். கொஞ்சம் கம்மியா பேசியிருக்கலாம்னு இப்ப தோணுது” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் அம்ஜத்.

“இந்தக் கேள்வியை இனிகோ மற்றும் விஜி கிட்ட கேட்கறேன். இப்ப நீங்க இன்செக்யூரா ஃபீல் பண்றீங்களா?” என்று அர்ஜுன் ஆரம்பிக்க “எனக்கு அதெல்லாம் இல்லை சார்.. உடம்பு சரியில்லாம போனவங்க பத்திதான் கவலையா இருக்கு. இந்த கேம்ல கலந்துக்க வந்தது சாதாரண விஷயம் இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்க திரும்பி வரணும்ன்றதுதான் இப்ப என் கவலை” என்று இனிகோ சொல்ல “ஆம்.. நான் இன்செக்யூரா ஃபீல் பண்றேன்” என்று தேங்காய் உடைப்பது போல் உண்மையை உடைத்துப் போட்டார் விஜி. “நம்பர் கேம்-ன்னு பார்க்கறப்ப நாங்க ரெண்டு பேர்தான் இருக்கோம்” என்று விஜி சொன்ன போதுதான் வேடர்கள் இதுவரை அடைந்த உளைச்சல் காடர்களுக்குப் புரிந்திருக்கும். (வாழ்க்கை ஒரு வட்டம்டா!).

“மூன்றாம் உலகத்தில் இருப்பவர்களும் இங்க திரும்பி வருவாங்க. அவங்க பழைய வேடர்களா இருந்தவங்க. தைரியமா இருக்கீங்களா?” என்று கேட்டு பீதியைக் கூட்டினார் அர்ஜுன் . “நான் வேடர்களில் இருந்தவன் என்றாலும் சரண் எந்த மனிநிலையில் வருவான்னு என்னால யூகிக்க முடியல. நான் அவனை எதிர்த்துதான் வாக்களிச்சிருக்கேன்” என்று தன் உள்ளார்ந்த அச்சத்தை ஒப்புக் கொண்டார் அம்ஜத்.

சர்வைவர் - விஜி
சர்வைவர் - விஜி

நாராயணனும் அதையே வழிமொழிய “அங்க நந்தா, ஐஸ்வர்யாவும் இருக்காங்க.. ஏன் நீங்க சரண் பத்தி மட்டுமே பேசறீங்க?” என்று சரியான பாயின்டைப் பிடித்தார் அர்ஜுன் .

“நந்தா, ஐஸ்வர்யாலாம் இருக்கும்போது நீங்க செக்யூர்டாதானே இருப்பீங்க?” என்று கேள்வியை மாற்றிப் போட்டார் அர்ஜுன். “இந்த கேம்ல எதையுமே சொல்ல முடியலை. பாதுகாப்பு உணர்வு இருக்காது. ஆனா ஸ்ட்ராங்கா இருப்போம்னு நம்பறேன்” என்றார் நாராயணன்.

“காடர்களா இருந்தபோது என்கூட யாராவது இருப்பாங்க. இப்ப ரெண்டு பேருதான் இருக்கோம். வாய்ப்பு கம்மியா இருக்கு. சின்ன அட்வான்டேஜ் கூட எடுத்தே ஆகணும். யெஸ்.. நான் பாதுகாப்பற்ற உணர்வில்தான் இருக்கிறேன்” என்று தேங்காயை மறுபடியும் உடைத்தார் விஜி.

“ஓகே.. உங்களுக்கு சில வீடியோ செய்திகள் இருக்கு. அதைப் பார்க்கலாம்” என்று அர்ஜுன் சொல்ல போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியும் ஆசுவாசமும் ஏற்பட்டது. குறிப்பாக இனிகோ மற்றும் விஜியின் முகங்களில் கூடுதல் மலர்ச்சி. விக்ராந்த், உமாபதி மற்றும் வனேசா என்கிற வரிசையில் வீடியோக்களை ஒளிபரப்பி, ஒவ்வொன்றிற்கும் போட்டியாளர்களின் எதிர்வினைகளைக் கேட்டறிந்தார் அர்ஜுன் .

விக்ராந்த்தும் உமாபதியும் இனிகோ மற்றும் விஜியை பிரத்யேகமாக விசாரிப்பார்கள் என்பது அறிந்த விஷயம்தான். ஆனால் விஜியைக் கூட பின்னால் தள்ளி விட்டு இனிகோவிற்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் தந்தது சற்று ஆச்சரியம். ஆனால் வனேசா மட்டும் தன் வீடியோவில் “விஜியை ரொம்ப மிஸ் பண்றேன். அவங்க எனக்கு சிஸ்டர் மாதிரி” என்று நெகிழ, அதையே வழிமொழிந்தார் விஜி.

விக்ராந்த்
விக்ராந்த்

“நாங்க வரலைன்னாகூட அதைப் பத்தி கவலைப்படாம நீங்க நல்லா விளையாடுங்க. நாங்க வெளியே இருந்து வேடிக்கை பார்ப்போம்” என்றார் விக்ராந்த். “நாங்க வர்ற வரைக்கும் நீங்க லுலுவாய்க்கு ஆடிட்டு இருங்க.. நாங்க திரும்பி வந்தப்புறம் உக்கிரமா ஆடுவோம்” என்று தன் வழக்கமான பாணியில் உமாபதி சிரித்துக்கொண்டே சொல்ல, “இந்தத் திமிர்தான் உமாபதியோட அடையாளம்” என்று சொல்லிச் சிரித்தார் விஜி. அர்ஜுனும் அதையே குறிப்பிட்டு ரசித்தார். “இந்த ஆட்டத்துக்குனே தயாரிக்கப்பட்ட மாடல் சார் அவன்” என்று உமாபதியை குறிப்பிட்டு மகிழ்ந்தார் அம்ஜத்.

விக்ராந்த் மற்றும் உமாபதியின் பிரிவிற்கு அதிகமாக கண்கலங்கியவர் இனிகோதான். விஜி கூட இயல்பாகவே இருந்தார். ஆனால் வனேசாவின் வீடியோ வந்தபோது இனிகோவிடம் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. தலைமுடியையெல்லாம் சரிசெய்து கொண்டு அவர் நிமிர்ந்து உட்கார “பார்ரா.. இதுவரைக்கும் தலையை தொங்கப் போட்டுக் கொண்டிருந்த இனிகோவா இது?” என்று அர்ஜுன் கிண்டலடித்தார். “என் மாமா பொண்ணு மாதிரி சார் அவ.. சும்மா கிண்டலடிச்சுட்டு கிடப்பேன்” என்று அசடு வழிந்தார் இனிகோ. “வனேசா.. மாடலா இருக்கலாம். ஆனா எனக்கு ரோல்மாடல்” என்று வசனத்தில் பின்னினார் நாராயணன். பல மருத்துவ சிரமங்களுக்கு இடையில் வனேசா தன் குடும்பத்தை அத்தனை கரிசனையுடன் பார்த்துக் கொள்கிறாராம்.

வீடியோவில் வந்தவர்கள் அம்ஜத்திற்கும் வாழ்த்து சொல்லி “உங்க குடும்பத்திற்காக நல்லா விளையாடுங்க” என்றார்கள். “நாராயணனுடன் இப்பத்தான் பேச ஆரம்பிச்சிருக்கோம். அவரும் இறங்கி ஆடணும்” என்று சொல்லி வைத்தாற் போல் மூவரும் ஒரே மாதிரி சொன்னார்கள். “ரிவார்ட் சேலஞ்சில்தான் அவர் கிட்ட பேச வாய்ப்பு கிடைச்சது. நிறைய சேட்டைகள் பண்ணாரு” என்று வனேசா வீடியோவில் சொல்லும்போது இனிகோ ஜெர்க் ஆகி, நாராயணனை முறைத்துப் பார்க்க, இதை அர்ஜுன் பிறகு குறிப்பிட்டு கிண்டலடித்தார். ‘நாராயணனின் சொதப்பல்களைத்தான் ‘சேட்டை’ என்கிற வார்த்தையில் வனேசா சொன்னார்’ என்று விஜி விளக்கமளித்து இனிகோவை ஆசுவாசப்படுத்தினார்.

சர்வைவர் ஷோவில் அரஜுன்
சர்வைவர் ஷோவில் அரஜுன்

“ஓகே.. சிகிச்சைக்கு போனவங்க சீக்கிரம் திரும்பிடுவாங்கன்னு நம்புவோம். நிச்சயம் வந்துடுவாங்க. லேடிகாஷ் ஆட்டத்தை விட்டு வெளியேறி விட்டதால அவங்க வர மாட்டாங்க. அவங்க கிட்ட தந்த நீலப்பெட்டியை இப்ப திறக்க முடியாது. அடுத்த வார தலைவர் கிட்ட இதை ஒப்படைப்போம். ஸோ… இந்த வாரம் வாக்கெடுப்பு கிடையாது… எலிமினேஷன் கிடையாது. மனம் தளராம ஆட்டத்தை தொடருங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை” என்கிற ஊக்கமான வார்த்தைகளோடு அர்ஜுன் அனைவருக்கும் விடைதந்தார்.

உமாபதி, விக்ராந்த், வனேசா ஆகிய மூன்று போட்டியாளர்கள் இல்லாத நிலையில் மூன்றாம் உலகத்தில் உள்ளவர்களை விரைவில் மெயின் அணியில் திரும்ப அழைத்துக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது. ‘சட்டென்று’ நான்கு போட்டியாளர்கள் குறைந்த நிலையில் இந்த ஆட்டம் பழைய விறுவிறுப்பை அடையுமா என்கிற கேள்வியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இனி எப்படியிருக்கும்?.

பார்த்துடுவோம்.