Published:Updated:

ரகசியமாக நடந்த சித்து - ஸ்ரேயா மெகந்தி பங்ஷன்; திருமணம் எப்போது?

அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவர்களுக்கு மெகந்தி ஃபங்ஷன் நடைபெற்றிருக்கிறது. அவர்களுடைய ரசிகர்கள் பலரும் 'ஸ்ரேயா- சித்து'வின் திருமண புகைப்படங்களை பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடரில் கதாநாயகனாக நடித்த சித்துவும், அந்தத் தொடரில் நாயகியாக நடித்த ஸ்ரேயாவும் காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

சித்து -ஸ்ரேயா
சித்து -ஸ்ரேயா

ஸ்ரேயா மங்களூரைச் சேர்ந்தவர். ‘திருமணம்’ தொடரில் ஹீரோ ஹீரோயினாக இவர்கள் இருவரும் கமிட் ஆனதுமே, ஸ்ரேயாவுக்குத் தமிழ் சொல்லித்தரத் தொடங்கினார் சித்து. இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவரும் மெளனமாகவே இருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி பிரபலமாகியது. இவர்கள் பெயரில் சமூக வலைதளங்களில் ஃபேன்ஸ் கிளப்கள் தொடங்கப்பட்டு இவர்களுடைய ஜோடி புகைப்படங்கள் வைரலாக பரவ ஆரம்பித்தது. பிறகு, இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாகவே அறிவித்தனர். லிவ்விங் டு கெதரில் இருவரும் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன.

இந்தநிலையில், அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவர்களுக்கு மெகந்தி பங்ஷன் நடைபெற்றிருக்கிறது. அவர்களுடைய ரசிகர்கள் பலரும் 'ஸ்ரேயா- சித்து'வின் திருமண புகைப்படங்களை பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள்!

சித்து -ஸ்ரேயா
சித்து -ஸ்ரேயா

சமீபத்தில் 'ஷபானா - ஆர்யன்' திருமணமும், 'மதன் - ரேஷ்மா' திருமணமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது சித்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி சீசன் 2' தொடரில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு