Published:Updated:

பிக் பாஸ் 5: இந்த வாரம் வெளியேறியது யார்?

கேப்டனாக இருப்பவரைப் பார்த்து ;நீங்கள் சரியாக உங்கள் வேலைகளைச் செய்யவில்லை' என பிக் பாஸ் சொன்னது இதற்கு முன் எந்த சீசனிலும் நடக்காத ஒன்று.

பிக் பாஸ் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று (20/11/21) காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது.

வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் அபிநய், இசைவாணி, நிரூப், பாவினி, இமான் அண்ணாச்சி, தாமரை, அக்ஷரா, சிபி, ஐக்கி என மொத்தம் ஒன்பது பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் இசைவாணி மிகக் குறைவான வாக்குகள் பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

பிபிசியின் 2020-ம் ஆண்டின் உலக டாப்-100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த வடசென்னையின் `இசைவாணி'. `கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் (Casteless Collective)' என்ற கானா இசைக் குழுவைச் சேர்ந்தவர்.

கானா பாடல்களின் வழியே அரசியல் அவலங்களையும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் கஷ்டங்களையும் மற்றவர்களுக்கு எடுத்துரைத்து வருகிற இவரை பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ல் ஒரு போட்டியாளராக அனுப்பியது விஜய் டிவி.

தாமரை உள்ளிட்ட சக போட்டியாளர்களுக்கும் இவருக்குமான வாக்குவாதங்களை முந்தைய எபிசோடுகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதேபோல் காயின் வைத்து பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக ஆன போதும் அந்தப் பொறுப்பையும் திறமையாகச் செய்யவில்லை என்கிற விமர்சனமும் எழுந்தது.

பிக்பாஸ் இசைவாணி
பிக்பாஸ் இசைவாணி

கேப்டனாக இருப்பவரைப் பார்த்து ;நீங்கள் சரியாக உங்கள் வேலைகளைச் செய்யவில்லை' என பிக் பாஸே சொன்னது இதற்கு முன் எந்த சீசனிலும் நடக்காத ஒன்று. கமலே இது குறித்து இசைவாணியிடம் பேசவும் செய்தார்.

'நிறைய பெண்களுக்கு கானா பாடல்கள் பாட விருப்பம் இருந்தாலும் பல தயக்கங்களால பாடுறது இல்ல. நான் இந்தத் துறைக்குள்ள வந்த பிறகு நிறைய பெண்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசி, அவங்களோட `கானா கனவு' பத்தி சொல்லிருக்காங்க. பெண்கள் நிச்சயமா அவங்களுக்குப் பிடிச்ச துறையில சாதிக்கணும். அதுக்கு எத்தனை தடைகள் இருந்தாலும் தாண்டி வரணும்" என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் இசை.

இசை வெளியேறிய எபிசோடு நாளை 21/11/21 இரவு ஒளிபரப்பாக உள்ளது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு