Published:Updated:

ஸ்டாலின் - OPS ரெண்டு பேர் போட்டோவையும் போட்டு ஓட்டுக்கேட்டாங்க, தேர்தல் ரத்தாச்சு! -டிவி பஞ்சாயத்து

டிவி நடிகர் சங்க நிர்வாகத்தினர்

ரெண்டு மூணு நாள்ல சினிமா இயக்குநர் சங்கத்துக்கும் லைட்மேன் யூனியனுக்கும் தேர்தல் வருது.அந்தத் தேர்தல்களுக்கு இதுவரைக்கும் அனுமதி மறுக்கப்பட்டதா தெரியலை. கொரோனா பரவினா டிவி நடிகர்களுக்கு மட்டும்தான் பரவுமா?

ஸ்டாலின் - OPS ரெண்டு பேர் போட்டோவையும் போட்டு ஓட்டுக்கேட்டாங்க, தேர்தல் ரத்தாச்சு! -டிவி பஞ்சாயத்து

ரெண்டு மூணு நாள்ல சினிமா இயக்குநர் சங்கத்துக்கும் லைட்மேன் யூனியனுக்கும் தேர்தல் வருது.அந்தத் தேர்தல்களுக்கு இதுவரைக்கும் அனுமதி மறுக்கப்பட்டதா தெரியலை. கொரோனா பரவினா டிவி நடிகர்களுக்கு மட்டும்தான் பரவுமா?

Published:Updated:
டிவி நடிகர் சங்க நிர்வாகத்தினர்

இன்று (20/1/22 ) நடக்க இருந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. கொரோனா பரவலைச் சுட்டிக்காட்டி சென்னை விருகம்பாக்கம் போலீஸார் உத்தரவு பிறப்பித்த நிலையில், இதன் பின்னனியில் ஏக புகார்கள் வாசிக்கப்படுகின்றன. சுமார் 1500 உறுப்பினர்கள் இருக்கும் சங்கத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். தற்போது ரவி வர்மா தலைவராக இருக்கிறார். இவரது நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக கடந்த சில ஆண்டுகளாக உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டி வந்த நிலையில்தான் ஜனவரி 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பரஞ்ஜோதி தேர்தல் அதிகாரியாகச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘தேர்தல் அதிகாரி மீதே எங்களுக்கு நம்பிக்கை இல்லை சார். தேர்தல்ல நிற்கிறவங்க அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டு பிரசாரம் செய்யக்கூடாதுன்னு விதி. ஆனா ரவி வர்மா ஒருபக்கம் முதல்வர் ஸ்டாலின் மறுபக்கம் ஒ.பி.எஸ் போட்டோவைப் போட்டு ஓட்டுக்கேட்டார். எந்தத் தேர்தல்லயாச்சும் இப்படியொரு காமெடி நடக்குமா, தேர்தல் அதிகாரிகிட்ட இதைச் சொன்னா அவர் கண்டுக்கல.

சங்கீதா பாலன்
சங்கீதா பாலன்

இதுமட்டுமல்ல நிர்வாக ரீதியா ரவி வர்மா டீம் மீது நிறையப் புகார்கள் இருக்கு. தகுதி வாய்ந்த சில உறுப்பினர்களை ஓட்டுபோட முடியாத படி செஞ்சிருக்கார். இதனாலதான் சி.எம். செல்லில் புகார் தந்தோம். தேர்தல் நிறுத்தப்பட்டிருக்கு’ என்கிறார் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சீனியர் உறுப்பினராக இருக்கும் நடிகை சங்கீதா பாலன்.

ரவி வர்மா தரப்பினரிடம் கேட்டால்,

"எந்தத் தேர்தல் அதிகாரிமீது நம்பிக்கை இல்லைனு சொல்றாங்களோ அதே தேர்தல் அதிகாரிகிட்டத்தான் தேர்தல்ல போட்டிபோட மனு வாங்கிட்டுப் போனாங்க இவங்க. தேர்தல்ல தோத்துடுவோம்னு பயம் வந்திடுச்சு. அதனாலதான் தேர்தல் நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறாங்க. ஆளுங்கட்சித் தொடர்புல இருக்கிற சிலர உறுப்பினர்கள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தத் தடை உத்தரவை வாங்கியிருக்கறதாத் தெரியுது. எங்க சங்கத் தேர்தல் கலாசார நிகழ்வு கிடையாது. நிர்வாக ரீதியிலான ஒரு நடவடிக்கை. இதுக்குத் தடை விதிக்கக் கூடாது. ஆனா விதிச்சிருக்காங்க. ரெண்டு மூணு நாள்ல சினிமா இயக்குநர் சங்கத்துக்கும் லைட்மேன் யூனியனுக்கும் தேர்தல் வருது. அந்தத் தேர்தல்களுக்கு இதுவரைக்கும் அனுமதி மறுக்கப்பட்டதா தெரியலை. கொரோனா பரவினா டிவி நடிகர்களுக்கு மட்டும்தான் பரவுமா? அரசு ஒருதலைபட்சமா நடவடிக்கை எடுக்கக் கூடாதுங்கிறதுதான் எங்க கோரிக்கை’ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism