Published:Updated:

பிக் பாஸ்: `யாருங்க அது அசிம்?' கடைசி நேரத்தில் என்ட்ரியான திருமா - விசிக; அசிம் தரப்பு சொல்வதென்ன?

விக்ரமன், திருமாவளவன், அசிம்

நாட்டில் பேச வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் இருக்க ஒரு கட்சித் தலைவர் இப்படி ஒரு டிவி நிகழ்ச்சியில வந்து ஓட்டுக் கேக்கறது நல்லாவா இருக்கு. இந்த அரசியல் கலப்பு நல்லதில்லை என்கிறது ஒரு தரப்பு

பிக் பாஸ்: `யாருங்க அது அசிம்?' கடைசி நேரத்தில் என்ட்ரியான திருமா - விசிக; அசிம் தரப்பு சொல்வதென்ன?

நாட்டில் பேச வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் இருக்க ஒரு கட்சித் தலைவர் இப்படி ஒரு டிவி நிகழ்ச்சியில வந்து ஓட்டுக் கேக்கறது நல்லாவா இருக்கு. இந்த அரசியல் கலப்பு நல்லதில்லை என்கிறது ஒரு தரப்பு

Published:Updated:
விக்ரமன், திருமாவளவன், அசிம்
21 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, கடந்த அக்டோபர் மாதம் விஜய் டிவியில் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கிளைமாக்ஸை நெருங்கி விட்டது. வருகிற ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக இருக்கிற நிறைவு நாள் எபிசோடில் டைட்டில் யாருக்கு என்பது தெரிந்து விடும்.

அசிம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், 'மைனா' நந்தினி என ஐந்து பேர் இறுதிச் சுற்றில் களத்தில் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் 'அறம் வெல்லும்' எனக் குறிப்பிட்டு, 'பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் தம்பி விக்ரமனுக்கு ஆதரவு தர வேண்டும்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ட்வீட் செய்ய, 'ஒரு அரசியல் கட்சித் தலைவர் இவ்வளவு சீரியஸாக இதை அணுகத் தேவையில்லை; பிக் பாஸ் ஒரு கேம் ஷோ' என வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் இது குறித்துக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அரசியல் கட்சியின் என் இதில் கருத்து தெரிவிக்க வேண்டும் என பலரும் தெரிவித்த நிலையில்,

தொல்.திருமாவளவனின் பதிவு குறித்துக் கேட்க, அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். 'விடுதலைச் சிறுத்தைகள்' கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் நம்மிடம் பேசினார்.

"அந்த நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ தான். இல்லைன்னு நாங்க சொல்லவில்லை. பெரும்பாலும் திரைப்படத்துறை, சின்னத்திரை சார்ந்தவர்களுக்கே அந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு தந்து வந்த நிலையில, முதல் முறையா எங்கள் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வரும் விக்ரமனைக் கூப்பிட்டாங்க. அவரும் அந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் சமூக நீதி சார்ந்த கருத்துக்களைப் பதிவு செய்தார். அதனாலேயே சமூக நீதிக்கெதிரானவர்கள் அவருக்கு எதிராக பல்வேறு  அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

அசிம்
அசிம்

யாருங்க அது? அசிம்னு யாரோ எதிர்த்து நிற்கிறாராமே, அவருக்கு ஆதரவா ஒரு குரூப் இயங்கி வர்றதாகவும், அந்த குரூப் விக்ரமன் பத்தி தவறான செய்திகளைப் பரப்பிட்டு வர்றதாகவும் தகவல் வந்தது.

இந்தச் சூழல்ல நிகழ்ச்சி நிறைவுக் கட்டத்தை எட்டப் போகிறதால, விக்ரமன் வெல்ல வேண்டும். அதற்கு நாம் அவரைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்களிடம் அவருக்கு ஆதரவு தருமாறு எழுச்சித் தமிழர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அவ்வளவுதான். இதற்கு மேல் இந்த விஷயத்தை சீரியஸா எடுத்துக் கொள்ளத் தேவையில்லை'' என்கிறார் பாவலன்.

தொல். திருமாவளவனின் ட்வீட்டுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பிக் பாஸ் ரசிகர்களிடம் சண்டை இன்னும் சூடு பிடித்துள்ளது.

'நாட்டில் பேச வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் இருக்க ஒரு கட்சித் தலைவர் இப்படி ஒரு டிவி நிகழ்ச்சியில வந்து ஓட்டுக் கேக்கறது நல்லாவா இருக்கு. இந்த அரசியல் கலப்பு நல்லதில்லை' எனக் கண்டிக்கிறவர்கள், இதற்காகவே அசிமுக்குத்தான் டைட்டில் தர வேண்டுமெனக் கோரிக்கையும் விடுக்கிறார்கள்.

ஆனால் 'கோபம், முரட்டுத்தனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாத அசிமுக்கு டைட்டில் தந்தால் அது மோசமான முன்னுதாரணமாகி விடும்' என இதற்கு எதிர் வினையாற்றுகின்றனர், விக்ரமனுக்கு ஆதரவானோர்.

திருமாவளவன்
திருமாவளவன்

தொல்.திருமாவளவனின் ட்வீட் குறித்து நடிகர் அசீமின் தம்பியும் ஃபேமிலி விசிட்டின் போது பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தவருமான ஆதிலிடம் பேசினோம்.

''அறம் வெல்லும்'னு சொல்லி விக்ரமனுக்கு திரு. திருமாவளவன் ஆதரவு கேட்கறதெல்லாம் கொஞ்சம் மிகையான நடவடிக்கையோனு தோணுது. ஏன்னா, அது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி. கலந்துக்கிடுற எல்லாருக்குமே சம்பளம் தர்றாங்க. சமூக நீதி சார்ந்த கருத்துக்களை அந்த நிகழ்ச்சி மூலமா பரப்பறதால விக்ரமனுக்கு ஆதரவு கேட்கிறோம்னு சொல்றதையும் ஏத்துக்க முடியாது. ஏன்னா, சமூக நீதிக்கு எதிரா அந்த வீட்டுக்குள்ள என்ன நடந்ததுனு விக்ரமனுக்கு ஆதரவு தர்றவங்கதான் விளக்கணும். ஒரு பொறுப்பான சேனல்ல அந்த மாதிரி எந்த விஷயங்களையும் அனுமதிக்க மாட்டாங்க.

வெளியில போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்குமே ஆதரவு எதிர்ப்புன்னு இரண்டு தரப்புமே இருக்கத்தான் செய்யும். விக்ரமனுக்கு எதிரா செயல்படுறங்கன்னா, அசிமை வசை பாடறதுக்கும் பெரிய குரூப்பே இருக்கே'' என்கிறார் ஆதில்.

இந்த நிலையில், முதல் நாள் ட்வீட் குறித்து நிறைய விமர்சனங்கள் வந்ததனாலோ என்னவோ, இன்று இன்னொரு ட்வீட் ஒன்று தொல்.திருமாவளவன் கணக்கிலிருந்து வந்ததாக இணையத்தில் உலவுகிறது. அதில், 'விக்ரமன் வெற்றி பெற வேண்டும். இது சராசரியான ஒரு நபராய் என் விருப்பம்' எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தொல்.திருமாவளவனின் ட்விட்டர் பக்கத்தில் அப்படியான பதிவு எதுவும் இல்லை. அதை நீக்கி விட்டதாக அவரது தரப்பில் சொல்கிறார்கள்.