Published:Updated:

"அவங்களா நீங்க; நம்பவே முடியலனு சொல்றாங்க" - ரீ-என்ட்ரி அனுபவம் பகிரும் `அழகி' சோனியா

சோனியா

ஷோபா அம்மா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். யாரு ஷோபான்னு யோசிக்கிறீங்களா.. அவங்களே தான். விஜய் சாருடைய அம்மாவே தான்! அவங்க என் கணவருடைய ஃபேமிலி ஃப்ரெண்ட்.

"அவங்களா நீங்க; நம்பவே முடியலனு சொல்றாங்க" - ரீ-என்ட்ரி அனுபவம் பகிரும் `அழகி' சோனியா

ஷோபா அம்மா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். யாரு ஷோபான்னு யோசிக்கிறீங்களா.. அவங்களே தான். விஜய் சாருடைய அம்மாவே தான்! அவங்க என் கணவருடைய ஃபேமிலி ஃப்ரெண்ட்.

Published:Updated:
சோனியா

`அழகி' சீரியலில் அமைதியான குடும்பத்தலைவியாக `திவ்யா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சோனியா. சின்னத்திரையில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் திருமணத்திற்குப் பிறகு பிரேக் எடுத்துக் கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் `அருவி' சீரியலின் மூலம் மீண்டும் சீரியலில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ரீ-என்ட்ரி குறித்து சோனியாவிடம் பேசினோம்.

சோனியா
சோனியா

ரீ-என்ட்ரி கொடுக்கலாம்னு யோசிச்ச சமயம் கரெக்டா இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. என்னுடைய முதல் சீரியலும் சன் டிவியில் தான் ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து மறுபடி ரீ-என்ட்ரியும் சன் டிவியில் அமைந்தது கூடுதல் சந்தோஷம்! இந்தத் தொடரில் நெகட்டிவ் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆரம்பத்தில், ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எல்லாரும் நான் புதுசா நடிக்க வந்திருக்கேன்னுதான் நினைச்சாங்க. முன்னாடி சீரியலில் நடிச்சப்போ கொஞ்சம் ஜப்பியா இருப்பேன். இப்ப வெயிட் லாஸ் பண்ணி சின்னப் பொண்ணு மாதிரியான கேரக்டரில் நடிக்கவும் பலரும் என்னோட முதல் சீரியலே இதுதான்னு நினைச்சிருக்காங்க. ஒவ்வொரு ஷாட் நடிச்சு முடிச்சதும் சூப்பரா நடிக்கிறியேம்மா.. பரவாயில்லன்னு வந்து சொல்லும்போதுதான் அவங்ககிட்ட இதுக்கு முன்னாடி நான் நடிச்சிட்டு இருந்த கதைகளை சொல்லுவேன். அப்படி சொன்னதும், 'அவங்களா நீங்க.. நம்பவே முடியல!' என்பதுதான் அவங்களுடைய பதிலா இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னோட ஃபேமிலி எப்பவுமே எனக்கு சப்போர்ட். மறுபடி கம்பேக் கொடுக்கணும்னு சொன்னப்போ எந்தத் தடையும் சொல்லாம சம்மதிச்சாங்க. ரொம்ப வருஷம் கழிச்சு கேமரா முன்னாடி நடிக்கும்போது அது புது அனுபவமா இருந்துச்சு. ஒட்டு மொத்த டீமும் செம ஃப்ரெண்ட்லி என்பதால் நல்லா செட் ஆகிடுச்சு என்றவரிடம் அவருடைய பிசினஸ் குறித்து கேட்டோம்.

சோனியா
சோனியா

'சார்விக்'ஸ் இட்லி / தோசை மாவு' என்கிற எங்களுடைய நிறுவனத்தை ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் தான் திறந்து வைத்தார். அவ்வளவு பிஸியான சூழலிலும் அவர் வந்து எங்க கடையை திறந்து வைத்தது மிகப்பெரிய விஷயம். பிசினஸ், கெரியர் ரெண்டையும் மேனேஜ் பண்ணிட்டு இருக்கேன் என்றவரிடம் ரீ-என்ட்ரிக்கு பிறகு வந்த மறக்க முடியாத பாராட்டு குறித்து கேட்கவும் புன்னகைக்கிறார்.

ஷோபா அம்மா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். யாரு ஷோபான்னு யோசிக்கிறிங்களா.. அவங்களே தான்.. விஜய் சாருடைய அம்மாவே தான்! அவங்க என் கணவருடைய ஃபேமிலி ஃப்ரெண்ட். நான் கல்யாணம் ஆகிப்போன பிறகு அம்மாவும், நானும் க்ளோஸ் ஆகிட்டோம். அவங்க என்னை விட வயதில் மூத்தவங்களாக இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்! என்னோட பர்சனல் விஷயங்களையும், அவங்களுடைய பர்சனல் விஷயங்களையும் ரெண்டு பேருமே பகிர்ந்துப்போம். இதுவரை விஜய் சாரை பற்றி எதுவுமே அம்மாகிட்ட நான் கேட்டதும் இல்லை, பேசினதும் இல்லை.. ஃப்ரெண்டா எங்களை பற்றி கதை பேசவே எங்களுக்கு டைம் இல்லை.. சீரியல் டெலிகாஸ்ட் ஆனதும் ஷோபா அம்மா பார்த்துட்டு பாராட்டினாங்க.

சோனியா
சோனியா

அதுதவிர, என்னோட பிறந்த ஊர் அந்தமான் நிகோபார் தீவு. புகுந்த ஊர் மும்பை. பொறந்த ஊரில் பார்லிமென்ட் எம்பியாக இருக்கிற குல்தீப் ராய் ஷர்மா அவர்களுக்கு எபிசோட் ஷேர் பண்ணியிருந்தேன். பார்த்துட்டு ஃபோன் பண்ணி விஷ் பண்ணாங்க..நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத பாராட்டு! ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு!' என்றார்.