ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சேனல் சைட் டிஷ்: ஆதலினால் காதல் செய்வீர்.... ஏழு முகங்கள்... நிழலும் நிஜமும்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

சீரிஸ்ல புனிதா கேரக்டர்ல நடிக்கிறேன். சொந்த ஊரு அரியலூர். சென்னைக்கு வந்து 15 வருஷங்கள் ஆகுது

‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய ‘வல்லமை தாராயோ’ டெய்லி சீரிஸ், யூடியூபில் மட்டுமே ஒளி பரப்பாகி சாதனை படைத்தது. அதையடுத்து, இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியுள்ள மற்றுமொரு படைப்பு ‘ஆதலினால் காதல் செய்வீர்’. இதுவும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு டெய்லி சீரீஸாக, ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ யூடியூபில் மட்டும் ஒளிபரப்பாகிறது. காதலை மையமாகக் கொண்டுள்ள இந்த சீரிஸ், ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாள்களிலேயே இளைஞர்களின் மனங்கவர்ந்த சீரிஸாக மாறியிருக்கிறது. ‘ஆதலினால் காதல் செய்வீர்’ சீரிஸில் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர்களுடன் கலகல பேட்டி...

குப்ரா: “தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்த குடும்பத்துக்கு தானும் ஏதாவது செய்யணும்னு நினைக்கிற காயத்ரி கேரக்டர்ல நடிக்கிறேன். கதைப்படி வேலைதான் என்னோட அடையாளம்னு முடிவெடுக்கும் பொண்ணு நான். நிஜத்திலும் நான் அப்படித்தான். சொந்த ஊரு கிருஷ்ணகிரி. எனக்குனு ஓர் அடையாளத்தை உருவாக்கணும்னு கனவுகளோட பயணத்தைத் தொடங்கினேன். பல சேனல்கள்லயும் டான்ஸ் ரியாலிட்டி ஷோஸ்ல கலந்துகிட்டேன். தனியார் சேனல்ல தொகுப்பாளினியாக வேலைபார்த்திருக்கேன். பல போராட்டங்களுக்குப் பிறகுதான் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இப்போ எம்.ஏ தமிழ் படிச்சிட்டிருக்கேன். படிப்பும் நடிப்பும் ரொம்ப ஜாலியா போகுது. இன்னும் நிறைய தொடர்கள்ல உங்க வீட்டுப் பெண்ணா என்னைப் பார்ப்பீங்க.”

சங்கவி: “சீரிஸ்ல புனிதா கேரக்டர்ல நடிக்கிறேன். சொந்த ஊரு அரியலூர். சென்னைக்கு வந்து 15 வருஷங்கள் ஆகுது. ஒரு தனியார் நிறுவனத்துல மார்க்கெட்டிங் டீம்ல வேலைபார்த்துட்டு இருந்தேன். பார்ட் டைமா சீரியல்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்ஸ்ல நடிச்சுட்டு இருந்தேன். ‘ஆதலினால் காதல் செய்வீரி’ல் காட்டுற மாதிரி நிஜத்திலும் கொஞ்சம் போல்டா, பெண்ணியம் பேசும் பொண்ணுதான். ஆனா, சீரிஸ்ல காட்டுற மாதிரி, எனக்கு குடிக்கிற பழக்கம் எல்லாம் இல்ல. என்ன மாதிரியே கிராமத்துலேர்ந்து நகரத்துக்கு வரும் கேரக்டர்தான் புனிதாவும். கிராமத்துல இருந்து, சிட்டிக்கு வரும் நிறைய பெண்கள் என்னைப் போலவே, புனிதா கேரக்டரோடு பல இடங்கள்ல தங்களைப் பொருத்திப் பார்த்துக்க முடியும்.”

சேனல் சைட் டிஷ்: ஆதலினால் காதல் செய்வீர்.... ஏழு முகங்கள்... நிழலும் நிஜமும்

அர்ஜுன் ஆதித்யா: “சுந்தர் கேரக்டர்ல நடிக்கிறேன். சொந்த ஊரு திருச்சி. சீரிஸ்ல தன்னைக் கல்யாணம் பண்ணப்போற பெண்ணின் ஆசைக்கு துணை நிற்குற கிராமத்துப் பையன் கேரக்டர்ல நடிக்கிறேன். நிஜத்திலும் நான் ரொம்ப கூலான கேரக்டர். எப்போதும் ஃபிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஃபன் பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசுல இருந்து ராணுவத்துல சேரணும்னு ஆசை. ரியல் ஹீரோவா ஆக முடியல. ஆதலினால் காதல் செய்வீர் சீரியல்ல ஹீரோ ஆயிட்டேன். இப்போ சில பட வாய்ப்பு களும் வந்துட்டு இருக்கு. அம்மா, அப்பாதான் என்னோட உலகம். சீரிஸ்ல பொறுப்புள்ள குடும்ப பையனா, கல் யாணத்துக்குத் தயாராகும் நான், நிஜத்துல சிங்கிளா ஹேப்பியா இருக்கேன்.”

முத்தழகன்: “சீரிஸ்ல சிவா கேரக்டர்ல நடிக்கிறேன். சொந்த ஊர் கடலூர் பக்கத்துல திட்டக்குடி கிராமம். அப்பா, அம்மா ரெண்டு பேரும் டீச்சர்ஸ். நடிப்புதான் என்னுடைய கரியர்னு முடிவு பண்ணி சென்னைக்கு வந்து எட்டு வருஷங்களாச்சு. ஆரம்பத்துல வீட்டுக்குத் தெரியாமதான் நடிக்க ஆரம்பிச்சேன். நிறைய படங்கள்ல என் முகமே தெரியாமகூட நடிச்சிருக்கேன். ஒரு பெரிய படத்துல முகம் தெரியுற மாதிரி நடிச்சுட்டு அம்மா, அப்பாகிட்ட, நடிப்பு பத்தி சொல்லணும்னு வெயிட் பண்ணேன். வேலைக்காரன் படம் அப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்துச்சு. சீரிஸ்ல முன் கோபமுள்ள, எதுக்கும் கவலைப்படாத கேரக்டர் எனக்கு. நிஜ வாழ்க்கையில நான் ரொம்ப ஜாலியான ஆளு.

பிரபாகரன்: “சொந்த ஊரு விருதுநகர். சீரிஸ்ல பாண்டியன் கேரக்டர்ல நடிக்கிறேன். மிடில் கிளாஸ் குடும்பத்துப் பையன் நடிக்கப் போறேன்னு சொன்னா என்ன பிரச்னை வருமோ அதையெல்லாம் கடந்துதான் மீடியாவுக்கு வந்தேன். மிமிக்ரி தொடங்கி ஸ்டாண்ட் அப் காமெடி வரை நான் பண்ணாத விஷயங்களே கிடையாது. விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு சீஸன் 5' எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்துச்சு. அந்த நிகழ்ச்சியிலதான் என் வாழ்க்கைத் துணையையும் கண்டுபிடிச்சேன். சீரிஸ்ல காட்டுற மாதிரி நிஜத்திலும் எல்லாத்தையும் வியந்து பார்க்கும் ஊர்க்காரன் தான் நானும்.

சேனல் சைட் டிஷ்: ஆதலினால் காதல் செய்வீர்.... ஏழு முகங்கள்... நிழலும் நிஜமும்

சார்மிஷா: “இலங்கையிலிருந்து சென்னை வந்து செட்டிலான பொண்ணு நான். ரொம்ப ஜாலியான இன்ட்ரஸ்ட்டிங்கான வாழ்க்கை வாழணும்னு ஆசைப்படுற கவிதா கேரக்டர்ல நடிக்கிறேன். ஆனா, ரியல் லைஃப்ல நான் ரொம்ப சென்சிட்டிவ். சீரிஸ்ல காட்டுற மாதிரி நட்புக்கு எப்பவும் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். இப்போ காலேஜ் ஃபைனல் இயர் படிச்சிட்டிருக்கேன். இதுக்கு முன்னாடி சில படங்கள் பண்ணிருக்கேன். சில படங்கள்ல நடிக்குற வாய்ப்பும் இப்போ வந்திருக்கு. சார்மிஷா ஹேப்பி அண்ணாச்சி.”

ராணவ்: “சொந்த ஊர் சென்னை. நான் ஒரு வழக்கறிஞர். சீரிஸ்ல டான்ஸ் ஸ்டூடியோ வைக்கணும்னு ஆசைப்படும் பரத் கேரக்டர்ல நடிக்கிறேன். நிஜத்திலும் டான்ஸ்தான் எனக்கு உயிரு. கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பு கத்துக்கிட்டேன். எதையும் ஈஸியா எடுத்துக்கும் பாசிட்டிவ்வான பையன். `மாஸ்டர்' உட்பட சில படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர் பண்ணிருக்கேன். சீரிஸ்ல லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருக்குற கேரக்டர்ல நடிக்கிறேன். நிஜத்துல இப்போவரை நான் சிங்கிள்தான். அப்பா, அம்மா பார்க்கும் பொண்ணுக்குதான் கிரீன் சிக்னல்.”

‘ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரைக் காண இந்த‘QR Code’ஐ ஸ்கேன் செய்யுங்கள்.

சேனல் சைட் டிஷ்: ஆதலினால் காதல் செய்வீர்.... ஏழு முகங்கள்... நிழலும் நிஜமும்