கடந்த ஒரே வாரத்தில் பிரபலமான தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென அடுத்தடுத்து தொடர்களில் இருந்து விலகியிருக்கிறார்கள். அவர்களுடைய ரசிகர்கள் பலரும் அவர்களை மிஸ் செய்வதாக சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். யார், யார் என்னென்ன தொடர்களில் இருந்து விலகியிருக்கிறார்கள் எனப் பார்க்கலாம்.
கண்ணான கண்ணே

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'கண்ணான கண்ணே'. இந்தத் தொடரில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், நித்யாதாஸ். மலையாள நடிகையான இவர் தமிழ் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது, படங்களில் கமிட் ஆகி இருப்பதால் தேதி பிரச்னை காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக, 'வண்ண வண்ண பூக்கள்' வினோதினி யமுனா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அன்பே வா

சன் டிவியில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர்களுள் 'அன்பே வா' தொடருக்கும் நிச்சயம் இடம் உண்டு. இந்தத் தொடரில் வாசுகி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த பூஜா என்பவர் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகி இருக்கிறார். இது குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எல்லா முடிவுக்கு பிறகும் நல்லதொரு ஆரம்பம் இருக்கும்... 'அன்பே வா' தொடரிலிருந்து விடைபெற்றுவிட்டேன். உங்கள் அனைவரையும் மற்றொரு நல்ல புராஜெக்டில் சந்திக்கிறேன்!" என பதிவிட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக, மகாலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நம்ம வீட்டு பொண்ணு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'நம்ம வீட்டு பொண்ணு'. இந்தத் தொடரில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரவீன் இந்தத் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக, பின்னணி பாடகி ரோஷினியின் கணவர் ஜாக் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரைக்கு பிறகு ஜாக் நடிக்க இருக்கும் முதல் சீரியல் இது என்பது குறிப்பிடத்தக்கது.