Published:Updated:

"எனக்கு பிரேக்அப் ஆகிடுச்சுங்க.. இப்போ நான் ஹாப்பி சிங்கிள்!" - 'சத்யா' ஆயிஷா

ஆயிஷா
ஆயிஷா

'சத்யா' சீரியலில் நடிக்கும் ஆயிஷாவும், விஷ்ணுவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது

`ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் `சத்யா'. இந்த சீரியலில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆயிஷா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. `பொன்மகள் வந்தாள்' சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அதிலிருந்து விலகினார். இவருடைய டிக் டாக் வீடியோ குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சீரியலின் கதாநாயகன் விஷ்ணு. இவர்கள் இருவரும் இருக்கக்கூடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது. இருவரையும் தேநீர் இடைவெளியில் சந்தித்துப் பேசினோம்.

ஆயிஷா
ஆயிஷா

`சத்யா' சீரியல் சூப்பரா போய்ட்டு இருக்கு. எங்களுக்குப் பெரும்பாலும் தெருக்களில்தான் ஷூட்டிங் இருக்கும். நிறைய பெற்றோர்கள் எங்ககிட்ட வந்து சத்யா சீரியலை என் பசங்க பார்க்குறாங்கன்னு சொல்றப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கு. குழந்தைங்க எங்களுடைய சீரியலை விரும்புறாங்கங்குறதே பெரிய விஷயம். அதனால எங்களுடைய `சத்யா' டீமே ஹாப்பி!" என்ற விஷ்ணுவைத் தொடர்ந்து ஆயிஷா பேசினார்.

``தெலுங்கில் ஒரு சீரியலில் நடிக்கிறேன். இந்த ஷூட்டிங் முடிஞ்சதும் அங்கே போயிடுவேன். இரண்டு சீரியலிலும் பிஸியா ஓடிட்டு இருக்கேன். என்னுடைய இரண்டு ஹீரோக்களும் எனக்கு நல்ல நண்பர்கள். செட்ல செம ஜாலியா நடிச்சிட்டு இருப்போம்" என்றவரிடம் சர்ச்சையான புகைப்படம் குறித்துக் கேட்டதும் சிரிக்கிறார்.

ஆயிஷா
ஆயிஷா

``நாங்க ஷூட்ல நடிச்சிட்டு இருக்கும் போது சும்மா ஜாலிக்காக போட்டோஸ் எடுப்போம். அப்படித்தான் அந்த போட்டோவையும் எடுத்தோம். ஒரே மாதிரி போஸ் கொடுக்கிறது நல்லா இருக்காது.. சும்மா வித்தியாசமா போஸ் கொடுக்கலாமேன்னுதான் அப்படி போஸ் கொடுத்து போட்டோ எடுத்தோம். அதுக்குள்ளே எல்லோரும் லவ்வர்ஸ்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இப்படித்தான் தெலுங்கு சீரியலில் என்கூட ஹீரோவாக நடிக்கிறவருடன் நான் எடுத்திருந்த புகைப்படங்களை நியூஸா போட்டு எங்களுக்கு திருமணம் ஆகிடுச்சுன்னே சொல்லிட்டாங்க. நான் ஓப்பனா சொல்றேன்.. ஐ அம் சிங்கிள்" என்றவரிடம் உங்களுக்கு பிரேக்அப் ஆகிடுச்சான்னு கேட்டோம்.

``சில விஷயங்கள் நம்மளுடைய வாழ்க்கைக்கு நல்லது இல்லைன்னு தோணுச்சுன்னா அதை விட்டுட்டு போகிறதுதான் சரி. அது எனக்கு செட்டாகாதுன்னு தோணுச்சு.. அதனால விலகிட்டேன்! இப்போ சிங்கிளா, ஹாப்பியா இருக்கேன்" என்றதும் விஷ்ணு தொடர்ந்தார்.

ஆயிஷா
ஆயிஷா

``நூறு பேர் நூறு விதமா விமர்சனம் பண்ணுவாங்க. ஆனா, நமக்கு தெரியும் நாம எப்படி இருக்கோம்னு.. நானும், ஆயிஷாவும் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம்னு சிலர் நினைக்கிறாங்க. ஆனா, உண்மை அது இல்லைன்னு எங்களுக்கு தெரியும். ஷூட்டிங் தவிர்த்து பெரும்பாலும் நான் இவங்ககிட்ட பேசுறதே இல்லை. செட்டுல எல்லோரிடமும் ஜாலியா பேசிட்டு இருப்போம்.. அவ்வளவு தானே தவிர எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் காதலெல்லாம் இல்லைங்க" என்றவரை நிறுத்தி ஆயிஷா தொடர்ந்தார்.

``என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் பண்ணிட்டாங்க. அதனாலதான் புது அக்கவுன்ட் ஓப்பன் பண்ணியிருக்கேன். நாம முன்னேறி போகிறோம்னா அது சிலருக்குப் பிடிக்காமல்தான் போகும். அதுக்காக நாம என்ன பண்ண முடியும்?" என்றார். விஷ்ணுவிடம் அமுல்பேபி பெயர்க் காரணம் குறித்துக் கேட்டோம்.

ஆயிஷா
ஆயிஷா

``நான் ரொம்பவே அமைதியான பையன். பார்க்கிறவங்க என்னை வேற மாதிரி நினைப்பாங்க. ஆனா, உண்மையிலேயே நான் அப்படியெல்லாம் கிடையாதுங்க. ரொம்பவே வெகுளி என்றவரை நிறுத்தி, `இவன் நிஜத்தில் அமுல்பேபில அதனாலதான் இவனுக்கு இந்தப் பெயர்!' என ஆயிஷா கிண்டலடிக்க இவங்க பெயர் என்னன்னு தெரியுமா? ஆயிஷாவுக்கு ரெளடி பேபின்னு பெயர் வைச்சிருக்கோம். ஏன்னா, மேடமுக்கு பயங்கரமா கோபம் வரும். கோபம் வந்தால் எதையாவது தூக்கி அடிச்சிடுவாங்க. பக்கா டெரர் பீஸூங்கன்னு சொல்லவும்" ஆயிஷா கோபப்பட அவர்களுடைய சண்டை ஆரம்பமாக அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆனோம்.

அடுத்த கட்டுரைக்கு