Published:Updated:

``துக்கத்தையும் எப்படி தைரியமா கடக்கணும்னு சொல்ல விரும்புறேன்!" - 'அழகி' அப்சரா

'சின்ன வயசில இருந்தே கதை எழுதுறது ரொம்ப பிடிக்கும். சன்டிவியில் ஒளிபரப்பான 'விதி' தொடருக்கு நான் தான் கதை எழுதினேன். அதுக்கப்புறம் சில தமிழ் சீரியல்களில் நடிச்சேன்!' - 'அழகி' அப்சரா

தமிழில், 'அழகி' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை, அப்ஸரா என்கிற லிடியா பால். சீரியலில் நடிக்கும்போது பொட்டிக் ஒன்றை நடத்தி வந்தார். தமிழ் சீரியலில் முகம் காட்டாத அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

ரகசியமாக நடந்த சித்து - ஸ்ரேயா  மெகந்தி பங்ஷன்; திருமணம் எப்போது?
அப்ஸரா
அப்ஸரா

என்னோட சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் செட்டில் ஆகிட்ட இடம் சென்னைதாங்க. 'அழகி' சீரியலில் அப்சரா என்கிற கேரக்டரில் நடிச்சேன். அதுக்கப்புறம் என்னை பார்க்கிற எல்லாருமே 'அப்சரா'ன்னே கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஆரம்பத்தில் எனக்கு தமிழ் தெரியாததனால சீரியல் டைட்டில் கார்டில் என்ன பெயர் பயன்படுத்துறாங்கன்னு கூட தெரியாது. பிறகுதான், எல்லா இடங்களிலும் 'அப்சரா'ன்னு தான் என் பெயரை பயன்படுத்துறாங்கன்னு அந்தப் பெயரையே வச்சிட்டேன்.

சின்ன வயசில இருந்தே கதை எழுதுறது ரொம்ப பிடிக்கும். சன்டிவியில் ஒளிபரப்பான 'விதி' தொடருக்கு நான்தான் கதை எழுதினேன். அதுக்கப்புறம் சில தமிழ் சீரியல்களில் நடிச்சேன். ஆனாலும், நான் எதிர்பார்த்த மாதிரியான நல்ல கதைக்களம் அமையலை.

அப்சரா
அப்சரா

இப்போ மலையாளத்தில் ஃபேமஸான 'மழவில் மனோரமா' வில் ஒளிபரப்பாகும் 'ராக்குயில் (Raakkuyil) எனும் தொடருக்கு கதை எழுதி, அதில் நடிக்கவும் செய்றேன். நான் எப்பவும் கற்பனையில் எனக்கு தோணுறதை கதையா எழுத மாட்டேன். என்னை சுற்றியுள்ள மனுஷங்களுக்கு நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையா கொண்டு கதை எழுதுவேன். சீரியல் வெறும் பொழுதுபோக்கான ஒண்ணு மட்டுமில்லைங்க.. அதுல சமூகத்துக்கு தேவையான விஷயங்களை சொல்றதும் ரொம்பவே முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்பவும் அழுதுட்டே இருக்கிற மாதிரியான காட்சிகளெல்லாம் தேவையில்லாதது. நிஜத்தில் யாருமே அப்படி இருக்க மாட்டோம். சந்தோஷம், துக்கம் ரெண்டுமே கலந்தது தானே வாழ்க்கை. துக்கத்தையும் எப்படி தைரியமா கடக்கணும்னு என் சீரியல் மூலமா சொல்ல விரும்புறேன். சீரியல் பெண்களுக்கான மீடியமா இருக்கிறதனால அவங்க வாழ்க்கையோடு தொடர்புபடுத்துற மாதிரியான காட்சிகளையும், பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பாசிட்டிவா அவங்ககிட்ட கொண்டு போய் சேர்க்க விரும்பினேன். அந்த ஆத்மார்த்தமா செய்துட்டு இருக்கேன். அந்த நிறைவே போதும்!

அப்சரா
அப்சரா

ராக்குயில், கம்பர்டபுளான டீம்.. ரொம்பவே ஜாலியா நடிச்சிட்டு இருக்கேன். ஷூட்டிங் இருக்கும்போது மட்டும் கேரளா போய்ட்டு வருவேன். மற்ற நாட்களில் நான் விரும்பி ஆரம்பிச்ச பொட்டிக்கை பார்த்துக்கிறேன் என்றவரிடம் தமிழில் ரீ-என்ட்ரி குறித்துக் கேட்டோம். தமிழில் எனக்கு பிடிச்ச மாதிரி இன்னும் எந்தக் கேரக்டரும் அமையலை. அப்படி அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன் எனப் புன்னகைக்கிறார், அப்ஸரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு