Published:Updated:

ரெடியா இருங்க மதுரை, கோவை லேடிஸ்... `பாக்கியலட்சுமி' சீரியல் டீம் ஆன் தி வே!

பாக்கியலட்சுமி டீம்

கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்ட இருக்கும் நிகழ்ச்சியில் 'பாக்கியலட்சுமி' சீரியல் டீமுடன் 'பிக் பாஸ்' மற்றும் 'கலக்கப் போவது யாரு' ஆகிய ஷோக்க‌ளில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ரெடியா இருங்க மதுரை, கோவை லேடிஸ்... `பாக்கியலட்சுமி' சீரியல் டீம் ஆன் தி வே!

கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்ட இருக்கும் நிகழ்ச்சியில் 'பாக்கியலட்சுமி' சீரியல் டீமுடன் 'பிக் பாஸ்' மற்றும் 'கலக்கப் போவது யாரு' ஆகிய ஷோக்க‌ளில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Published:Updated:
பாக்கியலட்சுமி டீம்

விஜய் டிவியில் தினமும் இரவு 8.30க்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாக்கியலட்சுமி'. சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் இது.

கணவன் கோபி, மாமனார் மாமியார் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நடுத்தர வயதுடைய அப்பாவிக் குடும்பத் தலைவி பாக்கியலட்சுமி. கணவரின் அன்பும் அரவணைப்பும் இவருக்குக் கிடைப்பதில்லை. கணவர் கோபி தன் பழைய பெண் நண்பர்களிடம் தொடர்பை வளர்த்துக் கொண்டு வரும் சூழலில் பாக்கியலட்சுமியை அவர் விவகாரத்து செய்வாரா என்பது போல் நகர்கிறது கதை.

சீரியல் ரசிகர்களிடையே இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க முக்கிய நகரங்களில் சீரியல் ரசிகர்களைச் சந்தித்து வருகிறது 'பாக்கியலட்சுமி' சீரியல் டீம்.

சீரியலில் நடித்திருக்கும் முக்கியக் கதாபாத்திரங்கள் கலந்து கொள்ள 'ரசிகர்கள் சந்திப்பாக' இந்த நிகழ்வை நடத்தி வருகிறது விஜய் டிவி.

பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி

அந்த வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு 'மகளிர் மட்டும்' என்கிற பெயரில் இன்று மாலை (11/3/22) கோயம்புத்தூரிலும் 18/3/22 அன்று மதுரையிலும் ரசிகர்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது.

கோவையில் செல்வபுரம் பகுதியிலுள்ள சிவாலயா மஹால் கல்யாண மண்டபத்தில் நடக்க இருக்கிற இந்த நிகழ்வு. மதுரையில் நிகழ்ச்சி நடக்கும் இடம் குறித்து ஓரிரு தினங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் கிடையாது.

ஆட்டம், பாட்டு எனக் கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்ட இருக்கும் இந்த நிகழ்ச்சியில் 'பாக்கியலட்சுமி' சீரியல் டீமுடன் 'பிக் பாஸ்' மற்றும் 'கலக்கப் போவது யாரு' ஆகிய ஷோக்க‌ளில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மதுரை, கோவை லேடிஸ்... 'பாக்கியலட்சுமி' டீமை வரவேற்க ரெடி ஆகிட்டீங்க தானே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism