கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: “எனக்கு ரசிகர் மன்றம் வெச்சிருக்காங்க!”

விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
விஷால்

ஒரு வருஷம் ‘ஜோடி’ முடிச்சுட்டு சும்மாவே இருந்தேன். அந்தச் சமயம்தான் கலைஞர் டிவியில் ஆங்கரிங் பண்ண வாய்ப்பு கிடைச்சது.

ன்னைப் பார்க்கிறவங்க எல்லோரும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ன்னு சொல்றாங்க. சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு!’’ எனப் புன்னகைக்கிறார், விஷால். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் அம்மா பிள்ளையாக நடித்துக்கொண்டிருப்பவருடன் ஒரு பர்சனல் சாட்!

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சிட்டு இருக்கும்போது திடீர்னு வீட்ல பணரீதியா கொஞ்சம் கஷ்டம் ஏற்பட்டுச்சு. அப்போகூட எங்க வீட்ல என்னை வேலைக்குப் போகச் சொல்லலை. எனக்கு மனசு கேட்காம அவங்களுக்கே தெரியாம பார்ட் டைம் வேலைக்குப் போனேன். ஹோட்டல். கேக்‌ஷாப்னு நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கேன். ரோட்டுல நின்னு விளம்பர நோட்டீஸ் கொடுத்திருக்கேன். ஒருநாள் மாலில் இப்படி விளம்பர நோட்டீஸ் கொடுத்துட்டு இருக்கும்போது சிம்கார்டு விக்கிற ஒரு அக்கா மைக்ல பேசி எல்லோரையும் அவங்க பக்கம் திரும்ப வெச்சாங்க. அவங்க பேசுறதைக் கேட்டு அங்கே கூட்டம் கூடுச்சு. அவங்ககிட்ட அந்த சிம்கார்டு தொடர்பான நோட்டீஸைக் கொடுத்தாங்க. நாம பேசுனாதான் மத்தவங்களுடைய கவனத்தை ஈர்க்க முடியும் என்பதை அப்போதான் புரிஞ்சுகிட்டேன். அந்தச் சமயத்திலிருந்து ஆங்கரிங் மேல ஆர்வம் ஏற்பட்டுச்சு.

வேந்தர் டிவியில் வி.ஜே, விஜய் டிவியில் தாம்சன் அண்ணாவிடம் அசிஸ்டெண்ட் டைரக்டர், அதுக்குப் பிறகு ‘ஜோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்கிற வாய்ப்பு கிடைச்சது. ஜோடியில் ஆடும்போது செட் லைட் என் தலையில் விழுந்து பதினாறு தையல் போட்டாங்க. டீம்ல எல்லோரும் என்னை தொடர்ந்து ஆட வேண்டாம்னு சொன்னாங்க. அடிபட்ட ஒரு வாரம் மட்டும்தான் நான் டான்ஸ் ஆடலை. அடுத்த வாரத்திலிருந்து தொடர்ந்து ஆடி இரண்டாவது பரிசு வாங்கினேன்.

விகடன் TV: “எனக்கு ரசிகர் மன்றம் வெச்சிருக்காங்க!”

ஒரு வருஷம் ‘ஜோடி’ முடிச்சுட்டு சும்மாவே இருந்தேன். அந்தச் சமயம்தான் கலைஞர் டிவியில் ஆங்கரிங் பண்ண வாய்ப்பு கிடைச்சது. அப்போது ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைச்சது. சென்னையில் ஷூட் முடிச்சுட்டு டீம் முழுக்கவும் டெல்லி போனோம். அங்கே குளிர் எனக்கு ஒத்துக்காம மூன்றாவது நாள் மூக்கில் ரத்தம் வந்திடுச்சு. ‘ரிஸ்க் எடுக்க வேண்டாம், கிளம்பு’ன்னு லோகேஷ் அண்ணன் அனுப்பி வெச்சிட்டாங்க. மாஸ்டரில் நடிக்கிறதுக்கு முன்னாடியே விஜய் டிவியிலிருந்து ஒரு சீரியலில் ஹீரோவாக நடிக்கணும்னு கேட்டாங்க. ஆனா, நான் வேண்டாம்னு சொல்லி மறுத்துட்டேன். டெல்லியில் இருந்து வரவும் மறுபடி கூப்பிட்டுப் பேசினாங்க. ‘அம்மா - மகன் உறவுதான் இந்த சீரியல். உங்களுக்கு 100% பாசிட்டிவ் ரோல்’னு சொன்னாங்க. புரொமோ வந்தப்போவே பயங்கர ரீச் கொடுத்துச்சு. இந்த சீரியல் வரவும் என்னைப் பார்க்கிற எல்லோருமே ‘எங்க வீட்டுப் பிள்ளை’ன்னு என்னைக் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. திருப்பூர்ல எனக்கு ரசிகர் மன்றம்லாம் வெச்சிருக்காங்க” என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறார்.