Published:Updated:

மகளை ஆசீர்வாதம் செய்த ஆல்யாவின் தாய்.. நெகிழ்ந்து போன சஞ்சீவ்!

நட்சத்திர ஜோடியான ஆல்யா - சஞ்சீவ் தற்போது செம ஹேப்பி. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னய்யா  - செம்பா ஆக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஆல்யா - சஞ்சீவ்  நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் நிச்சயதார்த்தம் விஜய் டிவி-யின் விருது விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆல்யா வீட்டில் அவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடும்பத்தினருடன் ஆல்யா
குடும்பத்தினருடன் ஆல்யா

ஆல்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பித்தனர். இதனால் வீட்டை எதிர்த்து சஞ்சீவின் கரம்பிடித்தார் ஆல்யா. விஜய் டிவி விருது மேடையில் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்தத்துக்கு ஆல்யா வீட்டில் இருந்து யாருமே வரவில்லை.

ஆல்யா - சஞ்சீவ்
ஆல்யா - சஞ்சீவ்

சில மாதங்கள் முன்னர் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்வு எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அதன்பிறகு ஆல்யா அம்மாவாகப் போகிறார் என்று பெருமகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் சஞ்சீவ்.

ஆல்யா கர்ப்பமானது உறுதி செய்யப்பட்டதும், சஞ்சீவ்  ஆல்யாவின் அப்பாவைச் சந்தித்து விஷயத்தைக் கூறியுள்ளார். அவர் தன் மகளை மனசார வாழ்த்தியுள்ளார்.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

ஆனால், ஆல்யாவின் அம்மாவுக்கு தன் மகள் மீதுள்ள கோபம் குறையவேயில்லை. இதனால் ஆல்யா மிகவும் வருத்தத்தில் இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது மனம்மாறிய ஆல்யாவின் அம்மா, தன் மகளுக்கு வளைகாப்பும் நடத்தி முடித்துள்ளார். 7 மாதம் துவங்கியுள்ள நிலையில், ஆல்யாவுக்கு முறைப்படி வளைகாப்பு நடத்தி குடும்பத்தினர் அவரை வாழ்த்தியுள்ளனர். கோபமாகவே இருந்த ஆல்யாவின் அம்மாவும் தன் மகளை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்துள்ளார்.

ஆல்யா - சஞ்சீவ்
ஆல்யா - சஞ்சீவ்

இதனால் சஞ்சீவ்-ஆல்யா ஜோடி இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். வளைகாப்பு நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நேற்று நடந்து முடிந்தது. டிடி, ஷப்னம் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு