Published:Updated:

Dhoni-கிட்ட தோனி மாதிரியே மிமிக்ரி பண்ணினேன்; அதுக்கு அவர்... - சந்திப்பு குறித்து படவா கோபி

படவா கோபி

இந்தியா Vs பாகிஸ்தான் மேட்ச். ஐபிஎல் பற்றி எல்லாம் பேசினேன். நான் விளையாடுற எல்லாருக்கும் பிரஷர் இருக்குமான்னு கேட்டப்ப, கேம்ல ஆடுற எல்லாருக்குமே நிச்சயமா பிரஷர் இருக்கும் என்பதை வெளிப்படையாகவே ஒத்துக்கிட்டார். - படவா கோபி

Dhoni-கிட்ட தோனி மாதிரியே மிமிக்ரி பண்ணினேன்; அதுக்கு அவர்... - சந்திப்பு குறித்து படவா கோபி

இந்தியா Vs பாகிஸ்தான் மேட்ச். ஐபிஎல் பற்றி எல்லாம் பேசினேன். நான் விளையாடுற எல்லாருக்கும் பிரஷர் இருக்குமான்னு கேட்டப்ப, கேம்ல ஆடுற எல்லாருக்குமே நிச்சயமா பிரஷர் இருக்கும் என்பதை வெளிப்படையாகவே ஒத்துக்கிட்டார். - படவா கோபி

Published:Updated:
படவா கோபி

`படவா' கோபி பண்பலைத் தொகுப்பாளராகத் தனது கரியரைத் தொடங்கியவர். இன்று பன்முகக் கலைஞராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவு செய்திருந்தார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் அதன் பின்னால் இருக்கும் ஹாப்பி மொமண்ட்ஸ் குறித்து தெரிந்து கொள்ள அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

படவா கோபி
படவா கோபி

விளம்பரப் படம் பண்றோம்... அதற்காக உங்ககிட்ட பேசுறோம்னு சொல்லி எனக்கு ஃபோன் பண்ணினாங்க. கான்செப்ட் எல்லாம் சொல்லிட்டு என் பட்ஜெட் என்னன்னு கேட்டப்ப நானும் ஒரு பட்ஜெட் சொன்னேன். இல்லைங்க சின்ன பட்ஜெட்ல தான் பண்றோம் நீங்க கொஞ்ச சதவிகிதம் குறைங்கன்னு கேட்டாங்க. சரின்னு சொல்லி பட்ஜெட் எல்லாம் பேசி முடிச்சாச்சு. அப்புறமா தான் யாரெல்லாம் பண்றாங்கன்னு விசாரிச்சேன். எம்எஸ் தோனி பண்றாரு சாருன்னு சொன்னாங்க. என்னப்பா சொல்ற.. தோனின்னா நம்ம CSK அவரான்னு ஷாக் ஆகி கேட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவங்க ரொம்ப சாதாரணமா, ஆமாங்க அவர்தான்னு சொல்லவும் மொத்த கான்வர்ஷேசனும் மாறிடுச்சு. என்னப்பா நான் உனக்கு பேமன்ட் தரேன்.. நீங்க என்னைக்குன்னு மட்டும் சொல்லுங்க உடனே வந்திடுறேன்னு சொன்னேன் அப்படித்தான் இந்தச் சந்திப்பு ஆரம்பமாச்சு.

படவா கோபி அவரது மனைவியுடன்
படவா கோபி அவரது மனைவியுடன்

விளம்பரப்படம் என்பதால் அவங்க பேசக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாதுன்னுலாம் சொன்னாங்க. நான் அங்கே போய் அவரைப் பார்த்ததும் அப்படியே உறைஞ்சிட்டேன். டிவியில் அவரைப் பார்த்து, பார்த்துப் பழகினதனால டிவியில் பார்க்கிறோமா, நிஜமாவே அவரைப் பார்க்கிறோமான்னு எனக்குள்ளேயே கேட்டுக்கிட்டேன். அவரைத் தொட்டுப் பார்த்ததும் அவர் சிரிச்சாரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் சகஜமா அவர்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டேன். நான் உங்களை இமிடேட் பண்ணி பேசின வீடியோ ரொம்ப வைரலாச்சு சார்னு சொல்லிட்டே அவர் மாதிரி அவர் முன்னாடியே பேசிக் காட்டினேன். ரொம்ப ரசிச்சு சிரிச்சிட்டே பார்த்துட்டு இருந்தார். ஷூட்டே ஆரம்பிக்கல. ஆனாலும் பயங்கரமா அவருடைய வேலையில் சின்சியரா ரிகர்செல் பண்ணிட்டு இருந்தார். நான் அவரைப் பார்த்துட்டே அவர் அழகை ரசிச்சிட்டு இருந்தேன்.

படவா கோபி
படவா கோபி

ஃபோட்டோ எடுக்கணும்னு சொன்னதும் தனியா கூட்டிட்டு போய் என் தோள் மீது கை போட்டு ஃபோட்டோ எடுத்தார். என் மனைவி குறித்தும் விசாரிச்சார். நம்ம ரசிக்கிறது இயல்பு. நாம பேசுறதை அவர் ரசிக்கிறதெல்லாம் பெரிய விஷயம். அவர் நான் பேசுனதை அப்படி ரசிச்சார். என்னால நம்பவே முடியல. நான் பெருசா யாருடனும் போட்டோ எடுத்துக்க விரும்பமாட்டேன். நான் ஃபோட்டோ எடுக்கணும்னு ஆசைப்பட்டது ரெண்டு பேர் கூடதான்! ஒன்று, அப்துல் கலாம் ஐயா இன்னொன்னு எம்எஸ் தோனி. அந்த ஆசை இப்ப நிறைவேறிடுச்சு.

இந்தியா Vs பாகிஸ்தான் மேட்ச், ஐபிஎல் பற்றி எல்லாம் பேசினேன். எப்படி பிரஷர் ஹேண்டில் பண்றதுன்னு கேட்டதும் விளக்கமா அவர் எப்படி ஹேண்டில் பண்றாருன்னு சொன்னார். நான் விளையாடுற எல்லாருக்கும் பிரஷர் இருக்குமான்னு கேட்டப்ப, கேம்ல ஆடுற எல்லாருக்குமே நிச்சயமா பிரஷர் இருக்கும் என்பதை வெளிப்படையாகவே ஒத்துக்கிட்டார். அவருடனான சந்திப்பு ரொம்பவே ஸ்பெஷல்!" என சிலாகித்தார் `படவா' கோபி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism