Published:Updated:

BB Ultimate 21: `வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்’ பிக் பாஸை கண்டித்த வனிதா; நீருப் எனும் விக்ரமன் பட ஹீரோ!

BB Ultimate 21

கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த அபிராமி, கேமரா தன்னை நோக்கி நகர்ந்ததும் “ஓ... உள்ள என்னைப் பத்திதான் பேசறாங்க போல” என்று சரியாகக் கண்டுபிடித்து விட்டார். புத்திசாலிதான்.

Published:Updated:

BB Ultimate 21: `வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்’ பிக் பாஸை கண்டித்த வனிதா; நீருப் எனும் விக்ரமன் பட ஹீரோ!

கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த அபிராமி, கேமரா தன்னை நோக்கி நகர்ந்ததும் “ஓ... உள்ள என்னைப் பத்திதான் பேசறாங்க போல” என்று சரியாகக் கண்டுபிடித்து விட்டார். புத்திசாலிதான்.

BB Ultimate 21

எந்த நேரத்தில் நிரூப்பை ‘குழந்தை’ என்று அனிதா அழைத்தாரோ தெரியவில்லை. பால் பவுடருக்கே பிக் பாஸ் பட்ஜெட் அதிகம் செலவாகும் போல் இருக்கிறது. அந்த அளவிற்கு குழந்தை தொடர்பான விஷயங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. நாலு வயது குழந்தையாக நிரூப் செயல்படும் டாஸ்க்கைத் தொடர்ந்து வீட்டின் அடுத்த வாரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கும் ‘தொட்டில் குழந்தை’ திட்டமாக அமைந்தது.

இந்த கேப்டன்சி டாஸ்க் மகா குழப்பங்களுடன் நடந்தது ஒருபக்கம் என்றால் நேற்றைய எபிசோடில் எடிட்டிங் மிக மோசமாக இருந்தது. தொட்டில் குழந்தை டாஸ்க்கின் விதிகள் உள்ளிட்ட பல அடிப்படையான காட்சிகள் மெயின் எபிசோடிற்குள் வராததால், போட்டியாளர்களை விடவும் நாம் அதிகம் குழம்ப வேண்டியிருந்தது. இதைப் போலவே ‘வேதாள விளக்கு’ யாரிடம் கை மாறியது என்கிற விவரங்களும் அதிகம் காட்டப்படவில்லை.

BB Ultimate 21
BB Ultimate 21
வனிதாவிற்கும் தாமரைக்கும் இடையில் முட்டிக் கொண்டதைத்தான் நேற்றைய எபிசோடின் ஹைலைட் எனலாம். தாமரையின் கிராமத்து வலுவிற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் வனிதா திணறினார். (சபாஷ்! சரியான போட்டி!).

நாள் 20-ல் நடந்தது என்ன?

‘அம்முகுட்டியே’ என்கிற குழந்தை வாசனையுடன் ஒரு குத்துப்பாடல் காலையில் ஒலித்தது. எல்லோரையும் மிஞ்சி முழு எனர்ஜியுடன் குத்தி ஆடுவதில் அனிதா எப்போதும் முன்னணியில் இருக்கிறார். போன் பூத்தில் மணி அடிக்க, அவசரக்குடுக்கையாக சென்று எடுத்து சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார் வனிதா. அவருக்குக் கிடைத்தது ‘வேதாள விளக்கு’ என்னும் தண்டனை. அடுத்த பஸ்ஸர் அடிக்கும் வரை வனிதா இந்த விளக்கை தன்னுடனே சுமக்க வேண்டும். இந்தச் சமயத்தில் நிற்கவோ, உட்காரவோ கூடாது. பஸ்ஸர் அடித்ததும், தனக்குப் பிடிக்காத நபருக்கு இதை கை மாற்றி விடலாம். தன்னுடைய முறை முடிந்ததும் பாலாவிற்கு இந்த வேதாளத்தை அளித்து பழிவாங்கினார் வனிதா. மீண்டும் வனிதாவிற்கே அளித்து பழிப்புக் காட்டினார் பாலா. அடுத்த முறை தாமரைக்கு அளித்தார் வனிதா.

BB Ultimate 21
BB Ultimate 21

தொலைக்காட்சியில் உணவுப்பொருள்களைக் காட்டி காசு பிடுங்கும் வியாபாரத்தை ஆரம்பித்தார் பிக்பாஸ். வழக்கத்தை விடவும் கட்டணங்கள் அதிகமாக இருந்தன. “பிக் பாஸ் கமிஷன் அடிக்கறாரு போல” என்று சிரித்தார் சிநேகன். ‘வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்’ என்பதை தன்னுடைய டெம்ப்ளேட் வசனமாக வனிதா வைத்திருக்கிறார் போலிருக்கிறது. எனவே இந்த வாக்கியத்தைச் சொல்லி பிக் பாஸை கண்டித்தார். “வெளில லாக்டௌனோ? அதான் பொருள்கள் விலை ஏறிடுச்சோ?” என்பது பொருளாதார மேதை வனிதாவின் சந்தேகம். யாரும் எந்தப் பொருள்களையும் வாங்காமல் சிக்கனமாக இருந்து புத்திசாலித்தனமாக பிக் பாஸ் கரன்ஸியை சேமித்தார்கள்.

‘நீயும் பொம்மை... நானும் பொம்மை’

அடுத்த வார தலைவருக்கான போட்டியின் முதல் கட்டம் ஆரம்பித்தது. (இதற்கான விதிகள் மெயின் எபிசோடில் இல்லை). ஏறத்தாழ, சீசன் 5-ல் நடந்த பொம்மைப் போட்டியைப் போல்தான் இதுவும். ‘யார் தலைவர் ஆக வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறாரோ, அவருக்காக ஓட வேண்டும்’ என்பதுதான் அடிப்படையான விதி.
BB Ultimate 21
BB Ultimate 21

போட்டியாளர்களின் பெயர்கள் கொண்ட குழந்தை பொம்மைகள் வழங்கப்படும். கார்டன் ஏரியாவில் தொட்டில்கள் இருக்கும். குழந்தை அழும் சத்தம் கேட்டதும், யாரை தலைவர் ஆக்க விரும்புகிறோமோ, அவருடைய பெயர் கொண்ட பொம்மையை எடுத்து ஓடிச் சென்று தொட்டிலில் போட வேண்டும். தன்னுடைய பொம்மையைத் தேர்வு செய்ய முடியாது. குழந்தையை தொட்டியில் போட்டு வெளி வட்டத்தில் வந்து நிற்க வேண்டும். அழுகைச் சத்தம் ஓய்ந்ததும் பொம்மையை வெளியே எடுத்து விடலாம். இந்தச் சமயத்திலும் தன்னுடைய பெயர் கொண்ட பொம்மையை எடுக்க முடியாது. இறுதியில் யாருடைய பொம்மைக்கு தொட்டில் கிடைக்கவில்லையோ, அந்த நபர் போட்டியிலிருந்து வெளியேறுவார்.

சற்று நிதானித்துப் புரிந்து கொண்டால் இதன் விதிகள் எளிமையானவை. ஆனால் மக்கள் இதை கொத்துப் பரோட்டா மாதிரி குதறிப் போட்டு குழப்பினார்கள். ஆளாளுக்கு ரகசியக் கூட்டணிகளை அமைத்துக் கொண்டார்கள். முதல் சுற்று துவங்கியது. குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதும் மக்கள் பாய்ந்து ஓடினார்கள். தொட்டிலை வனிதா நெருங்குவதற்குள் தொலைவில் இருந்தே தன் பொம்மையை தொட்டிலின் உள்ளே தூக்கிப் போட்டார் நிரூப். இதனால் வனிதாவிற்கு தொட்டில் கிடைக்காமல் வெளியேறும் நிலைமை ஏற்பட்டது. (வனிதாவின் கையில் இருந்தது பாலாஜி பெயர் போட்ட பொம்மை).

BB Ultimate 21
BB Ultimate 21
ஆனால், தன் தோல்வியை வனிதா ஒப்புக் கொள்ளவில்லை. (ஒப்புக் கொண்டால் அது வனிதா இல்லை). “நான்தான் முதலில் போட்டேன்” என்று மற்றவர்களிடம் வாதாட ஆரம்பித்தவர் “குழந்தையை இப்படித் தூக்கிப் போடலாமா... ரூல்ஸ் இருக்கா?” என்று பிக் பாஸை கேள்வி கேட்க ஆரம்பித்தார். (பேருந்தில் சீட் பிடிப்பதற்காக அசலான குழந்தையையே ஜன்னல் வழியாக தூக்கிப் போடும் ஊர் என்பது வனிதாவிற்குத் தெரியாது போல.)

சில பல வாக்குவாதங்களுக்குப் பிறகு வனிதா அவுட் என்பது தெளிவு செய்யப்பட்டது. (ஆக... பாலாஜி தலைவராக முடியாது). “டாஸ்க் வேற... நட்பு வேறன்னு மத்தவங்கள்லாம் தெளிவா இருக்காங்க. நான் மட்டும் ஏண்டா இப்படி இருக்கேன்?” என்று நிரூப்பிடம் பரிதாபமாக கேட்டுக் கொண்டிருந்தார் தாமரை. “அது அப்படித்தான். இப்ப ஷாரிக்கைக் கூட பாரு. டாஸ்க் ஆரம்பிச்சதும் மாறிட்டான்” என்று தாமரைக்கு உபதேசம் செய்தார். (ஆனால் இப்படி பாவனை செய்தே முன்வரிசைக்கு தாமரை வந்துவிடுகிறார்).

BB Ultimate 21
BB Ultimate 21

“விளக்கமும் வேணாம். ஒண்ணும் வேண்டாம்... கிளம்பு”

டாஸ்க் என்று வந்துவிட்டால் நிரூப் மூர்க்கமாகி விடுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது அபிராமிக்கு எரிச்சல் ஊட்ட, அவர் தன் அதிருப்தியை ஜூலியிடம் முணுமுணுத்தார். நிரூப் இதற்கான விளக்கத்தைச் சொல்ல வரும் போது ‘ஒண்ணும் தேவையில்ல கிளம்பு... காத்து வரட்டும்’ என்கிற ரேஞ்சில் துரத்திவிட்டார். இரண்டாவது சுற்றில் அபிநய் அவுட் ஆக வேண்டியிருந்தது. (இவர் வைத்திருந்தது சுருதி பெயர் போட்ட பொம்மை). நிரூப் + தாமரையின் ஸ்ட்ராட்டஜி காரணமாக தான் வெளியேற வேண்டியிருந்தது என்று கருதிய அபிநய், அதற்காக கோபமும் வருத்தமும் கொண்டார். நிரூப் வந்து இதற்கான விளக்கத்தை அளிக்க முற்பட்டபோது “ஒண்ணும் தேவையில்லை கிளம்பு... காத்து வரட்டும்” என்று அபிநய்யும் துரத்திவிட, “இன்னாடா இது... இன்னிக்கு எங்க போனாலும் கேட்டை மூடறாங்க” என்று நிரூப் உள்ளுக்குள் கதறியிருக்கக்கூடும்.

BB Ultimate 21
BB Ultimate 21
வனிதாவுடன் சண்டை, நிரூப்பிடம் மனவருத்தம் என்று அபிராமியின் சமீபத்திய நடவடிக்கைகள் ‘மந்திரித்து விட்ட கோழி’ மாதிரி இருப்பதாக வனிதா, நிரூப்பிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த அபிராமி, கேமரா தன்னை நோக்கி நகர்ந்ததும் “ஓ... உள்ள என்னைப் பத்திதான் பேசறாங்க போல” என்று சரியாகக் கண்டுபிடித்து விட்டார். புத்திசாலிதான்.

அடுத்த சுற்றின் போது வனிதாவிற்கு தாமரைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காம்பினேஷன் இது என்பதால் சண்டைப்பட ரசிகர்கள் உற்சாகமாகியிருப்பார்கள். குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதும். வனிதாவை இடித்து முந்திக் கொண்டு வந்த தாமரை, பொம்மையை தொட்டிலில் போட்டு விட “அந்தப் பக்கம் காலியாத்தானே இருந்தது? அங்க போயிருக்காமில்ல? அப்படித்தானே முன்னாடி பேசி வெச்சிருந்தோம்... ஏன் என் கூடயே வந்து முட்டணும்? என்னவோ பிளான் பண்ணியிருக்காங்க போல...” என்று தாமரையின் ‘ஸ்ட்ராட்டஜி’யை காட்டமாக விமர்சித்த வனிதா, தன் வழக்கமான இயல்பின் படி ‘பிராடு’ என்று வார்த்தையை விட, தாமரை என்ன ஜூலியா? அழுது விட்டுப் போக!

BB Ultimate 21
BB Ultimate 21

“யாரு பிராடு... என்னா பிராடு... எப்படி பிராடு?’

வனிதாவையும் மிஞ்சும் வகையில் தாமரை சாமியாட ஆரம்பித்தார். (வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.) “யாரு பிராடு... என்னா பிராடு... எப்படி பிராடு? அப்படி என்ன பிராடுத்தனம் பண்ணினேன். சொல்லு… அந்த வார்த்தையை சொன்னா... அவ்வளவுதான். நான் பொல்லா கோபக்காரியா மாறிடுவேன்.” என்று தன் கோபத்தைக் காண்பிக்க பதிலுக்கு வனிதாவும் ஆக்ரோஷத்தைக் காட்ட முயன்றாலும் தாமரையைச் சமாளிக்க முடியாமல் வனிதா திணறுவதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

“ஏண்டா நிரூப்பு. நீ சொல்லியா நான் விளையாடறேன்... சொல்லுடா” என்று நிரூப்பின் சட்டையைப் பிடித்து தாமரை இழுக்க “நான் இந்த விளையாட்டை ஆட மாட்டேன். எனக்குப் பிடிக்கலை” என்று வழக்கம் போல் ‘வாக்அவுட்’ செய்தார் வனிதா. அடுத்த சுற்றில் ஜூலி அவுட். இவர் வைத்திருந்தது வனிதாவின் பொம்மை. (ஹப்பாடா!). “பிக் பாஸ்... நான் அவுட்டான்னு நீங்கதான் சொல்லணும். சந்தேகமா இருக்கு” என்று ஜூலி கோரிக்கை வைக்க, "ஜூலி வைத்திருந்த பொம்மைக்குத்தான் தொட்டிலில் இடம் இல்லை” என்று அறிவித்த பிக் பாஸ் “இனிமே இதை நீங்கதான் பார்த்துக்கணும்... ஒவ்வொரு முறையும் நான் பார்த்து சொல்ல முடியாது” என்று கெத்து காட்டினார். வனிதாவின் அட்ராசிட்டி மொழியில் சொன்னால் “எனக்கு வேற வேலை இல்ல?!” என்பதே அதன் பொருள்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்

இப்படி சச்சரவும் சர்ச்சையுமாக போட்டியாளர்களின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் நிரூப், தாமரை, பாலா, ஷாரிக் ஆகியோர் எஞ்சினார்கள். தன்னுடைய பெயர் போட்ட பொம்மையை கையில் வைத்திருந்த தாமரையை விளையாடச் செல்லாதவாறு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தார் நிரூப். “ஏண்டா இப்படிப் பண்றே?” என்று நிரூப்புடன் மல்லுக்கட்டினார் தாமரை. “என் கால்ல அடிபட்டிருக்கு... அடுத்த ரவுண்டிற்கு ஓட முடியாது... நீங்க விளையாடுங்க” என்று எஞ்சிய போட்டியாளர்களுக்கு உணர்த்த விரும்புவதே நிரூப்பின் நோக்கமாம். பஸ்ஸர் ஒலி அடித்ததும் தாமரையை முந்திக் கொண்டு ஓடி பொம்மையை தொட்டிலில் போட்டார் நிரூப். எனில் தாமரையை அவர் தலைவராக்க விரும்புகிறார் என்று தெரிகிறது. (உன்னைப் பார்த்தா அவ்வளவு நல்லவனா தெரியலையே? இதுல என்னமோ உள்குத்து இருக்கு!).

BB Ultimate 21
BB Ultimate 21

நிரூப்பிற்கு உதவுவதற்காக பாலாவும் ஷாரிக்கும் தங்களின் கைகளில் இருந்த பொம்மையை தொட்டிலில் போடாமல் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தன்னுடைய பெயர் பொறித்த பொம்மையைத் தூக்கி வெளியில் போட்டு தியாகியானார் நிரூப். இப்படி இவர்கள் விக்ரமன் படத்தின் பாத்திரங்கள் போல் விட்டுக் கொடுத்து விளையாடுவதைக் கண்டு டென்ஷன் ஆன பாலாஜி, வீட்டின் உள்ளே சென்று வனிதாவிடம் போட்டுக் கொடுத்தார். “நானாவது விளையாடியிருப்பேன்” என்று நொந்து போய் சொன்னார் அபிநய்.

பிறகு வீட்டின் உள்ளே வந்த நிரூப்பை அனைவரும் சூழ்ந்து கொண்டு விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். தன் வழக்கமான பாணியில் திக்கித் திணறி காரணம் சொல்லிக் கொண்டிருந்தார் நிரூப். “என்னடா சொல்றான் இவன்?” என்கிற குழப்பமே அவர்களின் முகங்களிலும் தெரிந்தது. தலைவருக்கான முதல் கட்ட போட்டியில் எஞ்சியிருப்பவர்கள், பாலா, ஷாரிக் மற்றும் தாமரை. யார் தலைவர் என்பது இனிமேல்தான் தெரியும்.
BB Ultimate 21
BB Ultimate 21

தலைவர் தேர்தலுக்கும், பொம்மைகள் இருப்பதற்கும் என்னமோ தொடர்பு இருக்கிறது போல. பிக் பாஸ் ஏற்கெனவே எச்சரித்ததைப் போல இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கிறது. அந்த இரண்டு பேர் ‘அபிநய் மற்றும் ஷாரிக்’ என்கிற தகவல் வெளிவந்துவிட்டது. இது தவிர வனிதாவின் கேப்டன்சி பற்றி மதிப்பிடும் போது "சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல” என்று மற்றவர்கள் வனிதாவை வறுத்தெடுப்பதை பிரமோவில் காண முடிகிறது. “கேமை கெடுக்கறதுதான் அவங்க கேம்” என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் நிரூப்.

ஆக... இன்றைக்காவது தரமான சம்பவங்கள் நிகழும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்.