Published:Updated:

BB Ultimate 65: "எனக்கெல்லாம் ரசிகர்கள் இருக்காங்களா?" தாமரை கேட்ட கேள்வி; அனிதா, ஷாரிக் ரீ-என்ட்ரி!

BB Ultimate 65

ரம்யாவிற்கும் பாலாவிற்கும் வழக்கம்போல் தீவிரமானதொரு வாக்குவாதம் எழுந்தது. இதன் பின்னணியில் நிரூப்பும் தாமரையும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது ஜாலியான காட்சி.

Published:Updated:

BB Ultimate 65: "எனக்கெல்லாம் ரசிகர்கள் இருக்காங்களா?" தாமரை கேட்ட கேள்வி; அனிதா, ஷாரிக் ரீ-என்ட்ரி!

ரம்யாவிற்கும் பாலாவிற்கும் வழக்கம்போல் தீவிரமானதொரு வாக்குவாதம் எழுந்தது. இதன் பின்னணியில் நிரூப்பும் தாமரையும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது ஜாலியான காட்சி.

BB Ultimate 65
பிக் பாஸ் வீட்டில் கடைசி வாரத்தில் கொண்டாட்டக் களை ஆரம்பித்துவிட்டது. எலிமினேட்டான அனிதா, ஷாரிக் ஆகிய இருவரும் விருந்தினர்களாக உள்ளே வந்திருக்கிறார்கள். “போதும் பிக் பாஸ்... எங்களை வெச்சு செஞ்சது. ஒரு வாரம் நல்ல சாப்பாடா போடுங்க” என்று போட்டியாளர்கள் கெஞ்ச ஆரம்பித்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களைக் கோத்துவிட்டு குடுமிப்பிடிச் சண்டை போட வைக்கும் திருப்பணியை பிக் பாஸ் நிறுத்தவில்லை.

நாள் 64-ல் நடந்தது என்ன?

காலையில் ஒலித்த பாடலுக்கு அதிசயமாக பாலா, நிரூப் ஆகிய இருவருமே நடனம் ஆட வெளியே வந்திருந்தார்கள். (ஃபைனல் வார எஃபெக்ட்டோ?!) காலை டாஸ்க்கில் மக்களுக்கு ஸ்டேட்டஸ் சொல்ல வேண்டுமாம். “கடைசி வாரத்தை Fun-ஆ கொண்டு போங்க பிக் பாஸ்... பழைய Contestant-களை உள்ளே அனுப்புங்க... நல்ல சாப்பாடு போடுங்க” என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டார் பாலா. “போட்டியின் முடிவு, என் உடைகள், வெளியே போக… என்று பல விஷயங்களுக்காக ‘am waiting’..." என்று பன்ச் பேசினார் ரம்யா.

BB Ultimate 65
BB Ultimate 65

“ஓ நோ... ன்னே இத்தனை நாள் கத்திட்டு இருந்தேன். (உங்களுக்கே அது தெரியுதா மேடம்?!) இப்ப ஓ… யெஸ் சொல்றேன்… பசிக்குது... வர்றவங்க நிறைய சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாங்க” என்று குழந்தையாக மாறி நச்சரித்தார் அபிராமி. “நான் இறுதி வாரம் வந்ததையே பெரிய பொக்கிஷமா நெனைக்கிறேன். வெற்றி, தோல்வியை விடவும் இந்த அனுபவத்தை ஜாலியாக்க முயல்கிறேன்” என்று தத்துவம் பேசினார் ஜூலி.

“போரடிக்குது... பேசக் கூட யாருமில்லை” என்று மோட்டுவளையைப் பார்த்து அனத்திக் கொண்டிருந்தார் நிரூப். இது பிக் பாஸ் காதில் விழுந்திருக்கும் போல. “அப்படியா... இருங்க. உங்களுக்கு வேலை தரேன்” என்று தனது நாரதர் கலகத்தை ஆரம்பித்து வைத்தார்.

முடிந்து போன டாஸ்க்கை வைத்து போட்டு வாங்கிய பிக் பாஸ்

போட்டியாளர்கள் முன்பு சொப்புச் சாமான்களை அடுக்கி விளையாடிய டாஸ்க்கின் வீடியோ தொகுப்பை அனைவரையும் அமர வைத்து போட்டுக் காட்டினார். போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியும் சிரிப்பும் கலந்து வந்தது. “நாம தனியா அறைல பேசினதெல்லாம் இப்படித் திரைல வருதே” என்று நமட்டுச் சிரிப்புடன் புன்னகைத்தார்கள். ‘சார்ந்து விளையாடுகிறார்’ என்று முன்பு புகார் சொன்னவர் இப்போது நடுவில் வந்து நிற்க வேண்டும். புகார் சொல்லப்பட்டவர்கள் இவரை கேள்விகள் கேட்கலாம். (இதுக்குப் பேருதான் போட்டு வாங்கறது. கிவ் அண்ட் டேக் பாலிஸி’).
BB Ultimate 65
BB Ultimate 65

முதலில் அபிராமியின் வீடியோ திரையில் வந்தது. ஜூலியுடன் தான் Emotional Support-ல் இருப்பதை ஒப்புக் கொண்ட அபிராமி, தாமரை மீதுள்ள பாசத்தை பாலா டாஸ்க்கில் வெளிப்படுத்துகிறார் என்று வீடியோவில் சொன்ன புகார் விசாரணைக்கு வந்தது. வக்கீல் டாஸ்க்கில் தாமரையை குற்றம் சாட்டி பாலா வழக்காட மறுத்த விவகாரம் இது. “அதுக்குப் பேரு பாசம் இல்ல. மனிதாபிமானம். ‘என் ரெண்டு பிள்ளைங்க மேல சத்தியமா நான் நடிக்கலை’ன்னு ஒருத்தர் சொன்னப்புறமும் அதை வெச்சு எப்படி நான் வாதாட முடியும்?” என்று பாலா கேட்டது ஒரு பக்கம் நியாயம் போல் தெரிந்தாலும் இன்னொரு பக்கம் மழுப்பல்தான். ஏனெனில் டாஸ்க் என்று வந்துவிட்டால் இறங்கி அடித்து விளையாடுவதுதான் பாலாவின் ஸ்டைல்.

BB Ultimate 65
BB Ultimate 65

“அதைத்தான் சொல்றேன். அந்த Emotional Value-வைத்தான் dependency-ன்னு சொல்றேன். எங்களுக்குக் கூட சில விஷயங்கள்ல உடன்பாடில்லை. இருந்தாலும் நாங்க அந்த டாஸ்க் பண்ணலையா?” என்று அபிராமி மடக்கினார். “டாஸ்க்குன்னு வந்துட்டா நான் யாரையும் கண்டுக்க மாட்டேன். மத்தவங்க மாதிரிதான் பாலா கூட நான் பேசறேன்” என்றார் தாமரை. இதில் முதல் பாதி சரி. அடுத்த பாதியில் உண்மையில்லை என்பது அனைவருக்குமே தெரியும். “போட்டோ ஒட்டற டாஸ்க்ல என் மேல கோபப்பட்டிங்க. ‘வாங்க பேசலாம்’ன்னு கூப்பிட்டா கூட நீங்க வரலை. இதுவே பாலா அல்லது நிரூப்பா இருந்தா கண்டிப்பா போயிருப்பீங்க” என்று தாமரையின் பக்கம் வண்டியைத் திருப்பினார் அபிராமி. “கோபம் தணிஞ்சாதான் என்னால பேச முடியும்” என்று சமாளித்தார் தாமரை. “சபிக்கிறா மாதிரி பேசறீங்க” என்கிற அபிராமியின் அடுத்த குற்றச்சாட்டிற்கு பாலா இடையில் புகுந்து டிஃபென்ஸ் ஆடினார். இப்படித் தாமரைக்கு ஆதரவாக வந்து பேசுவதே பாலாவிற்கு எதிரான சாட்சியம்தான். “ஆறுதலுக்கு மனுஷங்க கிட்ட பேசித்தான் ஆகணும். இல்லாட்டி சாக வேண்டியதுதான்” என்று மிகையாக உணர்ச்சிவசப்பட்டார் தாமரை.

அனிதாவிடமிருந்து ரம்யாவுடன் கூட்டணி மாறிய நிரூப்?

அடுத்ததாக நிரூப்பின் வீடியோ வந்தது. ‘அது வந்து... நான் என்ன சொல்றது...” என்று இழுத்து இழுத்து பேசிய நிரூப், ‘நால்வர் கூட்டணி’ என்று பாலா, அபிராமி, ஜூலி, தாமரை ஆகிய நால்வரையும் ஒரே டப்பாவில் அடைத்ததைப் பார்த்ததும் சபையில் சிரிப்பு எழுந்தது. “நீதான் அனிதாவோட ஸ்ட்ராங் கூட்டணி வெச்சிருந்தே. அதனாலதான் சாதாரணமானவங்களைப் பார்த்தா கூட உனக்கு அப்படி தோணுது” என்று காட்டமானார் பாலா. “அனிதா போன பிறகு ரம்யா கூட உங்களுக்கு கூட்டணி அமைஞ்சிருக்கு” என்று புதிய புகாரை நிரூப் மீது ஆரம்பித்து வைத்தார் அபிராமி. "‘பாலாவாலதான் அபிராமி ஷைன் ஆனா’ன்றதை நான் ஒத்துக்க மாட்டேன்” என்று ஆவேசம் அடைந்த அபிராமியிடம் “ஷாரிக் வெளியில போன போது கூட நீங்க அழல. ஆனா பாலா வெளில போற மாதிரி Prank நடந்தப்ப... அப்படி அழுதீங்க” என்று ஆதாரங்களைத் தோண்டி எடுத்தார் நிரூப்.

BB Ultimate 65
BB Ultimate 65

அனிதாவை வைத்தே நிரூப்பைத் தொடர்ந்து மடக்க முயன்றார்கள். “பாலாவின் பிரச்னைகளை வைச்சு ஜூலி கேம் ஆடறா’ன்னு சொல்லியிருக்கே. உன் பிரச்னைகளை வெச்சுதானே அனிதாவும் கேம் ஆடிட்டு இருந்தாங்க” என்று நிரூப்பின் மீது கேள்வித் தோட்டாக்களை வீசிக் கொண்டே இருந்தார் பாலா. இதற்கு இடையில், ‘விடாது கருப்பு’ மாதிரி அந்த FIR விஷயமும் வந்துவிட்டது. “அது தேவையில்லாத ஆணி-ன்னு அனிதாகிட்ட எத்தனையோ முறை சொல்லிட்டேன். அந்தச் சமயத்துல அவங்க கூட எனக்கு பிரெண்ட்ஷிப் இல்லை” என்று கதறினார் நிரூப்.

அடுத்ததாக தாமரையின் வீடியோ திரையில் வந்தது. அதுவரை ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த தாமரை, தன்னுடைய வாக்குமூலம் வெளிப்படும் போது சங்கடத்தில் சிரித்துக் கொண்டே இருந்தார். “அபிராமியும் ஜூலியும் பாலாவைச் சார்ந்து இருக்கிறார்கள்” என்பது தாமரை வீடியோவில் தந்த வாக்குமூலம். “பாலா பேசறதை வாங்கி நான் பேசலை” என்பதை விபரீதமான வாக்கிய அமைப்புடன் ஜூலி விளக்கம் அளிக்க, “ஐயோ... நான் இல்லை” என்று ஜாலியாக அலறி எழுந்தார் பாலா. இதே விஷயத்தை அபிராமியும் ஆவேசமாக மறுத்தார். “அவன் மேலதான் நான் அதிகம் கோபப்பட்டிருக்கேன். என்னைத்தான் அவன் அதிகம் கலாய்ச்சான்” என்று பாலாவின் நட்பை மறுப்பதே அபிராமிக்கு பெரிய வேலையாக மாறிவிடும் போலிருக்கிறது.

BB Ultimate 65
BB Ultimate 65
இதன் நடுவில் ரம்யாவிற்கும் பாலாவிற்கும் வழக்கம்போல் தீவிரமானதொரு வாக்குவாதம் எழுந்தது. ஆனால் பெரியவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது அதன் நடுவே குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதைப் போல நிரூப்பும் தாமரையும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது ஜாலியான காட்சி.

‘வாடி ராசாத்தி’ – ஜாலியாக உள்ளே வந்த அனிதா

மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மெயின் கேட்டில் பாடல் கேட்டது. போட்டது போட்டபடி அனைவரும் வாசலுக்கு ஓடி வந்தார்கள். ‘வாடி ராசாத்தி...’ பாடல் பின்னணியில் ஒலிக்க, உள்ளே வந்து ஆச்சர்யப்படுத்தியவர் அனிதா. 'தெய்வத் திருமகள்' திரைப்படத்தின் விக்ரமும் சாராவும் ஓடி அணைத்துக் கொள்வதைப் போல நிரூப்பும் அனிதாவும் பாசத்தைப் பொழிந்து கொண்டார்கள். இருவருக்குமான நட்புணர்ச்சியின் ஆழம் இந்தச் சம்பவத்தில் புரிந்தது. நிரூப்பும் சரி, அபிராமியும் சரி, முறையே அனிதா மற்றும் ஜூலி உடனான நட்பை இங்கு மறைப்பதில்லை என்பது நல்ல விஷயம். “உன்னை நான் மிஸ் பண்ணலை... போடி” என்று மறைமுக பாசத்தைக் காட்டினார் நிரூப். மற்றவர்களும் அனிதாவை அரவணைத்துக் கொண்டார்கள்.

BB Ultimate 65
BB Ultimate 65

“பிக் பாஸ் உங்க குரலை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று அனிதா சொல்ல “அப்படித் தெரியலையே” என்று கவுன்ட்டர் தந்தார் பிக் பாஸ். “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அனிதா வீட்டில் உள்ளவர்களிடம் கேட்க “நாங்க வீடியோல சொன்னதை வெச்சு எங்களையே பிக் பாஸ் கோத்துவிட்டு விளையாடினாரு” என்றார் நிரூப். ‘என் கூட பேச யாருமில்லை’ என்று காலையில் நிரூப் அனத்திக் கொண்டிருந்ததற்கு கைமேல் பலன் கிடைத்தது போல. நிரூப்பும் அனிதாவும் வெளியே வந்து தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

BB Ultimate 65
BB Ultimate 65

“வெளியே மக்கள் என்னைப் பத்தி நல்லபடியாதான் பேசினாங்க. ஐ ஆம் ஹாப்பி” என்று மகிழ்ந்தார் அனிதா. (யப்பா... இது புரியாம வீட்டுக்குள்ள இருக்கும்போது எத்தனை ஒப்பாரி?!). “நான் உன்கூட பிரெண்டா இருந்தேனாம். நீதான் எனக்காக எப்போதும் பேசினியாம். எல்லா டாஸ்க்லயும் இதையே வெச்சு கும்மியடிச்சாங்க. வேற காரணமே அவங்களுக்குக் கிடைக்கலை” என்று நிரூப் அலுத்துக் கொள்ள எதையோ சொல்ல வந்து பிறகு தயங்கிய அனிதா “ஆக்சுவலி, நான் உனக்காக பேசவேயில்ல. என் விஷயத்தைப் பத்தி பேசும் போதெல்லாம் அதுல நீயும் வந்துடறே... அப்படித்தான் இருந்தது” என்று விளக்கம் அளித்தார்.

“எனக்கெல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்களா?” – தாமரையின் வெள்ளந்தியான கேள்வி

‘சாம்பியன்’ என்று அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். பேஸ்கெட் பால் ஆட்டம்தான். ஆனால் இருவர் மட்டுமே எதிர் எதிராக நின்று ஆட வேண்டும். முதலில் வந்தது பாலா மற்றும் நிரூப். இவர்கள் இருவரும் தனியாக நின்று மோதிக் கொண்ட டாஸ்க் அபூர்வம்தான். ஆனால் மக்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த ஜோடி இது. பாலா பந்தை முதலில் எடுத்துவிட்டாலும் நிரூப்பின் இறுக்கமான பிடியில் இருந்து நகர முடியவில்லை. “என்னதிது... இவன் கையே ஃபுட்பால் சைஸூக்கு இருக்கு?!” என்று ஜாலியாக அலறினார் பாலா. என்றாலும் நிரூப்பை ஏமாற்றி அடுத்த முறை இரண்டு கோல் போட்டு ஜெயித்தார் பாலா.

BB Ultimate 65
BB Ultimate 65

ஜூலியும் தாமரையும் மோதியதில் இருவருக்குமே மண்டை மோதி பொத்தென கீழே விழுந்தார்கள். பாலா மற்றும் அபிராமி இந்த டாஸ்க்கில் ஜெயித்தார்கள். மீண்டும் மெயின் கேட்டில் பாடல் சத்தம். இப்போது உள்ளே வந்தவர் ஷாரிக். இன்னமும் ஸ்டைலாக மாறியிருந்தார். வழக்கம் போல் “ஓ... மை காட்..." என்று கத்தினார் அபிராமி. ஷாரிக் உள்ளே வந்த அடுத்த கணமே பிக் பாஸ் பாட்டை நிறுத்திவிட்டதால் நடனமாடுவதற்காக திட்டமிட்டு வந்த ஷாரிக் ஏமாந்து போனார். ஷாரிக்கை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டார் பாலா. “உன்னை மிஸ் பண்றதா நான் டாஸ்க்ல கூட சொன்னேன்” என்று வரலாற்றைப் பதிவு செய்தார் ஜூலி.

BB Ultimate 65
BB Ultimate 65
பிறகு ஓய்வாக அமர்ந்திருந்த ஷாரிக்கிடம் “எனக்கெல்லாம் ரசிகர்கள் இருக்காங்களா?” என்று வெள்ளந்தியாக (?!) கேட்டுக் கொண்டிருந்தார் தாமரை. இல்லாமலா இத்தனை வாரங்கள் இங்கு கடந்து வந்திருப்பார்?! இனி மேலும் பழைய ஆட்டக்காரர்கள் நிறைய உள்ளே வருவார்கள் போலிருக்கிறது. வீடு கலகலவென்று மாறும். வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரன் மதிப்பதுதானே நம் மரபு?!