Published:Updated:

ஓடிடி-யில் நடிக்கிறாரா பிரபல சீரியல் நடிகர் ஆர்யன்?

ஆர்யன்

'விகாஷ் சம்பத் 'பொண்ணுக்கு தங்க மனசு' , 'நீலி', 'செம்பருத்தி' போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். செழியன் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது!'

ஓடிடி-யில் நடிக்கிறாரா பிரபல சீரியல் நடிகர் ஆர்யன்?

'விகாஷ் சம்பத் 'பொண்ணுக்கு தங்க மனசு' , 'நீலி', 'செம்பருத்தி' போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். செழியன் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது!'

Published:Updated:
ஆர்யன்

'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், ஆர்யன். சமீபத்தில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் அந்தத் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. அந்தத் தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. இந்தத் தொடரில் ஆர்யனுக்கு பதிலாக 'ராஜபார்வை' தொடரில் நடித்த விகாஷ் சம்பத் நடிக்கிறார்.

ஆர்யனுக்கு பதில் விகாஷ் சம்பத்
ஆர்யனுக்கு பதில் விகாஷ் சம்பத்

விகாஷ் சம்பத் 'பொண்ணுக்குத் தங்க மனசு' , 'நீலி', 'செம்பருத்தி' போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். செழியன் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அடுத்ததாக ஆர்யன் எந்த ப்ராஜெக்டில் நடிப்பார் என எதிர்பார்த்து வந்த நிலையில், அது குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விஜய் டிவியில் மிகப் பெரும் ஹிட் அடித்த தொடர் 'கனா காணும் காலங்கள்'. தற்போது அந்தத் தொடரின் புதிய பாகம் Disney plus hotstar''-ல் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆர்யன், இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆர்யன்
ஆர்யன்

சீரியல் விலகல் குறித்து 'ஸாரி' என இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக அவருடைய ரசிகர்களிடம் தெரிவித்த ஆர்யன் இந்தத் தகவல் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.