Published:Updated:

``பத்து நாள்களா `நடங்க'ன்னே விட்டுட்டாங்க!'' - `கண்ணம்மா' ரோஷினி ஷேரிங்ஸ்

ரோஷினி ஹரிப்ரியன்
ரோஷினி ஹரிப்ரியன்

"சில படங்களில் ஒரே பாட்டுல எல்லாமே தலைகீழா மாறும் பாருங்க, அப்படியொரு மாற்றம் என் வாழ்க்கையிலும் நடந்திடுச்சு...'' உற்சாகமாக ஆரம்பித்தார் ரோஷினி ஹரிப்ரியன்.

தமிழ் சீரியல் ஏரியாவின் புது வரவு. `பாரதி கண்ணம்மா' தொடரின் ஹீரோயின். சீரியல் ரசிகர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கண்ணம்மா.

``அறிமுகமான முதல் சீரியல்லயே அதுவும் வாரக்கணக்குல... இல்லல்ல, எபிசோடு கணக்குல நடக்க வெச்சே பேரும் புகழும் கிடைக்க வெச்சுட்டாங்க...

'`பாரதி கண்ணம்மா கதை வழக்கமான `நல்ல மருமகள்' கதைதான். அந்த நல்ல மருமகளும் நானே. மாமியார் வீட்டுல எனக்கு முழு சப்போர்ட். ஆனா புருஷன் ஒரு இடத்துல என்னைச் சந்தேகப்படுவார். அப்பதானே ட்விஸ்ட் இருக்கும்!

எவ்வளவுதான் அப்பாவியா இருந்தாலும், புருஷன்கிட்ட இருந்து கேக்கக்கூடாத வார்த்தைகளைக் கேட்டா வெடிச்சிட மாட்டாளா? அப்படி வெடிச்சு வீட்டை விட்டு வெளியேறுகிற காட்சி வரும். அந்த ட்ரான்ஸ்பர்மேஷனை சீரியல் ரசிகர்கள் பொதுவா ரசிப்பாங்கதானே?

ரோஷினி ஹரிப்ரியன்
ரோஷினி ஹரிப்ரியன்

வீட்டை விட்டு வெளியேறியாச்சு. சரி நேரா அம்மா வீட்டுக்கோ அல்லது பிரெண்ட்ஸ் வீட்டுக்குப் போயிடணும்தானே? ஆனா அப்படி நடக்கலை. அடுத்த ரெண்டு நாள் வேற ட்ராக்ல பிசியாகிட்ட யூனிட், என்னை அப்படியே ரோட்டு வழியே நடக்க விட்டுட்டாங்க மூணாவது நாள் எங்காச்சும் அடைக்கலம் தந்துடலாம்னு டைரக்டர்கூட நினைச்சிருப்பார் போல. ஆனா சரியா அன்னைக்குத்தான் ஒரு மீம் கிரியேட்டர் கண்ணுல நான் பட்டிருக்கேன்.

'இந்தப் புள்ளய இன்னும் எவ்வளவு தூரம்யா நடக்க விடுவீங்க'ன்னு வடிவேலுவையும் துணைக்குக் கூப்பிட்டு ஒரு மீம் போட்டார் அந்தப் புண்ணியவான். அந்த மீம் அப்படியே ஷேர் ஆக, அப்படியே தமிழ்நாடு மேப், இந்தியா மேப், உலக மேப் எல்லாத்தையும் வச்சு நாடு கடந்து, கடல் கடந்து நடந்துட்டே இருக்கிற மாதிரி தினமும் மீம் போடத் தொடங்கிட்டாங்க.

'ரசிகர்கள் கொண்டாடுறாங்களே'ன்னு சீரியல்லயும் அடுத்த பத்து நாளைக்கு 'நடங்க'ன்னே விட்டுட்டாங்க. இப்ப பார்க்கிற ரசிகர்கள் செல்ஃபி எடுக்கறப்பக்கூட 'நடந்தாப்ல ஒரு செல்ஃபி ப்ளீஸ்'னு கேட்கறாங்க..." எனச் சிரிக்கிறார்.

- 'நிஜ வாழ்க்கையில் நான் நடந்து வந்ததைச் சொல்லிடட்டுமா?' என்று ரோஷினி ஹரிப்ரியன் பகிர்ந்த பர்சனல் பக்கங்களை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "எல்லாப் புகழும் மீம் கிரியேட்டர்ஸுக்கே!" https://bit.ly/3jELMkM

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு