தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் ஹிட்டான தொடர்களுள் `பாரதி கண்ணம்மா' தொடரும் ஒன்று! கர்ப்பமான கண்ணம்மா பல கிலோமீட்டர் நடந்து சென்றதாக இருக்கட்டும்... டி.என்.ஏ டெஸ்ட் ஆக இருக்கட்டும்... அப்பப்பா ஒன்றா, ரெண்டா? இதுக்கு இல்லையாங்க ஒரு எண்டு என ஆடியன்ஸே கதற, ஒரு வழியாக அந்த சீரியல் முடிவடைந்தது.
இந்த கேப்பில்தான் `பாரதி கண்ணம்மா சீசன் 2' புரோமோ ஆன் தி வே எனக் கேள்விபட்டதும், 'முதல் சீசன் டி.என்.ஏ-வை வச்சுப் போச்சு... ரெண்டாவது சீசன் ஹேமா, லட்சுமி ரெண்டு பேரும் வளர்ந்த மாதிரி டிராக் காட்டுவாங்களோ' எனப் பலவிதமாக யோசித்தால்... அங்கேயும் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குநர்! 'பாரதி கண்ணம்மா சீசன் 2' புதிய பரிமாணத்தில் எனச் சொல்லிட்டார்கள்! அந்த புரொமோதான் இன்றைய ட்ரெண்ட்.
என்ன பாரதி கண்ணம்மா புதிய பரிமாணமா? தாங்காதுடா! சரி, அப்படி அந்த புரொமோவில் என்னதாங்க இருக்கு?
'பாரதி கண்ணம்மா'வின் கதாநாயகியான ரோஷினி திடீரென அந்தத் தொடரிலிருந்து விலகி 'குக்கு வித் கோமாளி'யில் என்ட்ரி கொடுத்ததால் வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இப்போது அவரே இந்த இரண்டாவது சீசனிலும் கண்ணம்மாவாக நடிக்கிறார்.
இதைப் பார்த்தவுடன் ஒரு பக்கம் அருண் பிரசாத் - ரோஷினி ஜோடிதான் நிஜ 'பாரதி கண்ணம்மா' என ஒரு புரட்சிப் படை போஸ்ட் செய்த வண்ணம் இருக்கிறது.
அதே சமயம் 'டைரக்டர் சார் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா' என மற்றொரு பக்கம் சீரியல் ரசிகர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். சீசன் 1-ல் நடித்திருந்த கேரக்டர்களையாவது மாற்றியிருக்கலாம், பார்க்கப் புதிதாக இருந்திருக்கும் என்பதே அவர்களின் குமுறலுக்குக் காரணம்!
கதாநாயகனாக சிபு சூர்யன் நடிக்கிறார். சன் டிவியில் அர்ஜுன் சாராக சாகசங்கள் செய்து கொண்டிருந்தவரை விஜய் டிவியில் பாரதியாக இனி பார்க்க இருக்கிறோம். இந்த பாரதியும் டாக்டர்தானா, என்றால் பொறுத்திருந்துதாங்க பார்க்கணும்!
எது எப்படியோ, நிச்சயம் இந்தத் தொடரும் ஹிட்டடிக்கும் என `பாரதி கண்ணம்மா' சப்போர்ட்டர்ஸ் சமூகவலைதள பக்கங்களில் சத்தியம் செய்து வருகின்றனர். தொடர் வெற்றியடைய வாழ்த்துகள்!