சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “கர்ப்பமா இருந்தாலும் நடிக்கிறேன்!”

ஃபரீனா அசாத்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபரீனா அசாத்

என்னை ஆரம்பத்திலிருந்தே சீரியலில் நடிக்கக் கேட்டிருக்காங்க. ரொம்பப் பிடிச்சுதான் ஆங்கரிங் பண்ண வந்ததால அதை விட முடியாதுங்கிறதுல உறுதியா இருந்தேன்.

‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வெண்பாவாக நடித்து நம்மை மிரட்டிக்கொண்டிருப்பவர், ஃபரீனா அசாத். ஆங்கராகத் தனது மீடியாப் பயணத்தை ஆரம்பித்தவர் நடிகையாக மாறிய கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``காலேஜ் படிக்கும்போதே ஆங்கர் ஆகிட்டீங்களாமே..?’’

“டி.வி-யில் ஆங்கரிங் பண்றவங்களைப் பார்த்துட்டு நானும் இப்படிப் பேசணும்னு வீட்டில சொல்லிட்டிருப்பேன். காலேஜ் செகண்ட் இயர் படிக்கும்போது, ராஜ் டி.வி-யில் ஆங்கருக்காக நடந்த ஆடிஷனில் கலந்துக்கிட்டு செலக்ட் ஆனேன். அப்படித்தான் என் ஆங்கரிங் கரியர் ஸ்டார்ட் ஆச்சு. பிறகு, நான் ஆங்கரிங் பண்ணாத சேனலே இல்லைங்கிற அளவிற்கு ஆகிடுச்சி. நிறைய செலிபிரிட்டி இன்டர்வியூஸும் பண்ணினேன். சன் டி.வி-யில் ‘கிச்சன் கலாட்டா’ நிகழ்ச்சி மூலமாதான் ‘ஃபரீனா’ன்னு ஒரு ஆங்கர் இருக்காங்கன்னு பலருக்கும் தெரிஞ்சது. எனக்காக அந்த ஷோ பார்க்கிறேன்னெல்லாம் பலர் சொல்லிக் கேட்டிருக்கேன்.”

ஆங்கர் to ஆக்டர்: “கர்ப்பமா இருந்தாலும் நடிக்கிறேன்!”

``சீரியல் என்ட்ரி எப்படி ஆரம்பிச்சுது..?’’

“என்னை ஆரம்பத்திலிருந்தே சீரியலில் நடிக்கக் கேட்டிருக்காங்க. ரொம்பப் பிடிச்சுதான் ஆங்கரிங் பண்ண வந்ததால அதை விட முடியாதுங்கிறதுல உறுதியா இருந்தேன். இதுக்காக நான் மிஸ் பண்ணின பல ஹிட் சீரியல்கள் இருக்கு. ‘ராஜாராணி’ சீரியல் முதல் சீசனில் ஆங்கரிங் பண்ற மாதிரியான ஒரு சீனில் நடிக்கக் கேட்டாங்க. அதுல நடிச்சதைப் பார்த்துட்டு அந்த சீரியலுடைய டைரக்டர் பிரவீன் சார் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்கக் கூப்பிட்டாங்க. அவர்கிட்டேயும் முதலில் பண்ணலைன்னுதான் சொன்னேன். பிறகு சும்மா டிரை பண்ணிப் பார்ப்போம்னு விளையாட்டாதான் நடிக்க வந்தேன்.”

``சீரியலில் நடிக்கிற அனுபவம் எப்படியிருக்கு..?’’

“ஆங்கரா கிட்டத்தட்ட ஆறு வருஷம் டிராவல் பண்ணியிருக்கேன். சீரியலில் நடிக்க ஆரம்பித்த புதிதில் எனக்கு செட்டாகவே இல்ல. பிடிக்காமதான் பண்ண ஆரம்பிச்சேன். கதை போகப் போக நடிப்புன்னா என்னன்னு முழுசாக் கத்துக்கிட்டுப் பண்ண ஆரம்பிச்சேன். அப்போதான் அதுல நிறைய ஈடுபாடு வந்தது. இப்போ நான் கர்ப்பமா இருக்கேன். ஆனாலும் சீரியலில் தொடர்ந்து நடிக்கிறேன். ஒவ்வொரு நாளும் புதுவித அனுபவமா இருக்கு. எல்லாத்தையும் என்ஜாய் பண்ணி நடிக்கிறேன்”

‘`நீங்க ‘ஆங்கர் ஃபரீனா’வை எவ்வளவு மிஸ் பண்றீங்க..?’’

“ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். ஆங்கரிங்கை நான் மிஸ் பண்றேன்னு தோண ஆரம்பிச்ச உடனேயே, ஒரு பொண்ணு மைக் பிடிச்சிருக்கிற மாதிரியான டாட்டூ குத்திக்கிட்டேன்.”

``ஆங்கரிங்ல மறக்கமுடியாத ஒரு மொமன்ட்..?’’

“ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மான் சாரை இன்டர்வியூ பண்றதுக்காக அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். உலகமே வியக்கற ஒருத்தர்கிட்ட பேசப் போறோம்னு அந்த இன்டர்வியூக்கு ரொம்பவே பதற்றத்தோட போனேன். ஆனா, அவர் ஆரம்பத்திலேயே ரொம்ப இயல்பா பேச ஆரம்பிச்சிட்டார். அவரைச் சந்திச்சு பேட்டி எடுத்த மொமன்ட் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!’’

ஆங்கர் to ஆக்டர்: “கர்ப்பமா இருந்தாலும் நடிக்கிறேன்!”

``கர்ப்பமான பிறகும் தொடர்ந்து நடிக்கிறது எவ்வளவு சேலன்ஜிங்கா இருக்கு..?’’

“ரொம்பவே சேலன்ஜிங்காகத்தான் இருக்கு. ஏன்னா, பொதுவா சீரியலில் நடிக்கிற ஆர்ட்டிஸ்ட் நிஜத்தில் கர்ப்பமானாங்கன்னா அவங்க சீரியலிலும் கர்ப்பமாகிற மாதிரி சீன் மாத்தி அமைச்சிடுவாங்க. ஆனா, இந்த சீரியலில் என் கேரக்டர் கல்யாணம் ஆகாத பொண்ணுங்கிறதனால வேற ஆப்ஷன் எதுவுமில்ல. ‘என்னால முடியும், தொடர்ந்து நடிக்கிறேன்’னு சொன்னதும் என்மேல நம்பிக்கை வச்சு டைரக்டர் என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணினார். வீட்ல இருக்கும்போதுகூட சோர்வா ஃபீல் பண்ணியிருக்கேன். நடிக்கப் போகும்போது ரொம்பவே ஆக்டிவா மாறிடுவேன். இது என்னுடைய வேலை. அதை முழு ஈடுபாட்டோட பண்ணணும்னு நினைக்கிறேன். இப்போ, எனக்கு ஒன்பதாவது மாசம் ஆகிடுச்சு. இன்னும் இரண்டு, மூன்று வாரத்தில டெலிவரி ஆகிடும். ஆனாலும், பிரக்னன்ஸியோட தொடர்ந்து சீரியலில் நடிச்சது என் வாழ்க்கையில் எப்பவும் மறக்க முடியாத அனுபவமா இருக்கும்!”