Published:Updated:

`பாரதி கண்ணம்மா' தொடருக்கு கம்பேக் கொடுத்த `வெண்பா' விஜே ஃபரீனா அசாத்!

ஃபரீனா அசாத்
News
ஃபரீனா அசாத்

"கர்ப்பமாக இருந்த காரணத்தினால் குட்டி பிரேக் எடுத்திருந்த விஜே ஃபரீனா அசாத் மீண்டும் சீரியலுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்!"

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர், பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரில் நாயகியாக நடித்த ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலகியதை அடுத்து வினுஷாஶ்ரீ நாயகியாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருந்த காரணத்தினால் குட்டி பிரேக் எடுத்திருந்த விஜே ஃபரீனா அசாத் மீண்டும் சீரியலுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

'பாரதி கண்ணம்மா' ஃபரீனா
'பாரதி கண்ணம்மா' ஃபரீனா

கர்ப்பமான சமயத்திலும் 'பாரதி கண்ணம்மா' தொடரில் வெண்பா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தொடர்ந்து ஃபரீனா நடித்து வந்தார். நிறை மாதம் வரையில் அவர் நடித்தது குறித்து தொடர்ந்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஃபரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது, மீண்டும் அவர் 'பாரதி கண்ணம்மா' தொடரில் நடிக்கத் தயாராகிவிட்டார். அந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபரீனா பதிவிட்டிருக்கிறார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

'பாரதி கண்ணம்மா' ஃபரீனா
'பாரதி கண்ணம்மா' ஃபரீனா

சமீபத்தில், 'பாரதி கண்ணம்மா' தொடரில் நமக்கு ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும், விஜேவாகவும் பரிச்சயமான அறந்தாங்கி நிஷா என்ட்ரி கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.