Published:Updated:

`தவிர்க்க முடியாத காரணத்தினால் விலகுகிறேன்!' - ஃபரீனா அசாத்

ஃபரீனா

ஃபரீனா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் தொடரில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.

`தவிர்க்க முடியாத காரணத்தினால் விலகுகிறேன்!' - ஃபரீனா அசாத்

ஃபரீனா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் தொடரில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.

Published:Updated:
ஃபரீனா

'பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் சீரியலுக்குள் என்ட்ரியானவர் விஜே ஃபரீனா. அந்தத் தொடரில் வெண்பாவாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஃபரீனா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் தொடரில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார். தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

ஃபரீனா
ஃபரீனா

'பாரதி கண்ணம்மா' தொடரில் நெகட்டிவ் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் ஃபரீனா கர்ப்பமான போதும் கூட பிரேக் எடுக்காமல் நடித்தது குறிப்பிடத்தக்கது. குழந்தையுடன் அவர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்த புகைப்படங்கள் வைரலாகியது. அப்படி வேலையில் மிகவும் டெடிகேஷனாக இருப்பவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'அபி டெய்லர்' தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபரீனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ' சில தவிர்க்க முடியாத காரணங்களால் பவானி கதாபாத்திரத்தில் என்னால் தொடர முடியவில்லை. வாய்ப்பளித்த புரொடக்‌ஷன் நிறுவனத்திற்கும், முழு ஒத்துழைப்பு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி! எனத் தெரிவித்திருக்கிறார்.

farina post
farina post

ஃபரீனாவிற்கு பதிலாக 'ராஜபார்வை' தொடரில் நடித்த கீர்த்தி இந்தத் தொடரில் 'பவானி'யாக நடிக்க இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism