Published:Updated:

`ராஜா ராணி' நடிகையைக் கரம் பிடித்த `பாரதி கண்ணம்மா' நடிகர்!

பிரவீன் - ஐஸ்வர்யா
News
பிரவீன் - ஐஸ்வர்யா

இந்த வருடத்தில் சின்னத்திரை நடிகர்கள் பலர் அடுத்தடுத்து திருமணம் செய்திருக்கிறார்கள். அதில், பெரும்பாலும் தன்னுடன் நடிக்கும் அல்லது நடிப்புத் துறையைச் சேர்ந்தவர்களை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள்.

'பாரதி கண்ணம்மா' தொடரில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், பிரவீன் தேவசகாயம். இவருக்கும், 'ராஜாராணி' தொடரில் நடித்த ஐஸ்வர்யாவிற்கும் நேற்று நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

பிரவீன் - ஐஸ்வர்யா
பிரவீன் - ஐஸ்வர்யா

'ஈரமான ரோஜாவே', 'பாரதி கண்ணம்மா' போன்ற தொடர்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரவீன் நடித்து வந்தார். அவரும், 'ராஜாராணி' சீசன் ஒன்றில் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்துள்ளனர். 'ராஜாராணி' தொடரில் நடிக்கும்போது சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். அந்தத் தொடருக்கு முன்பாகவே இருவரும் அறிமுகமாகியிருக்கிறார்களாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பல வருடங்களாக காதலித்து வந்தவர்கள் தற்போது கரம் பற்றியிருக்கிறார்கள். ஐஸ்வர்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரவீனை காதலிப்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். தொடர்ந்து அவர் குறித்த காதல் பதிவுகளையும் அவர் பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், காதல் கை கூடிய சந்தோஷத்தில் இருவரும் இருக்கிறார்கள்.

பிரவீன் - ஐஸ்வர்யா
பிரவீன் - ஐஸ்வர்யா

பிரவீன், 'பாரதி கண்ணம்மா' தொடரில் வில்லனாக என்ட்ரி கொடுத்து, பின் நல்லவனாக மாறி கதாநாயகிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதால் பலருக்கும் இவர் பரிச்சயம்.

இந்த வருடத்தில் பல சின்னத்திரை நடிகர்கள் பலர் அடுத்தடுத்து திருமணம் செய்திருக்கிறார்கள். அதில், பெரும்பாலும் தன்னுடன் நடிக்கும் அல்லது நடிப்புத் துறையைச் சேர்ந்தவர்களை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில், இந்த ஜோடியும் இணைந்துள்ளது.

சமூகவலைதள பக்கங்களில் இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.

வாழ்த்துகள் ஐஸ்வர்யா - பிரவீன்!