சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் சாப்பாடு!”

ஃபரீனா ஆஸாத்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபரீனா ஆஸாத்

இது ஏழாவது மாசம். ஆனாலும் என்னவோ எனக்கு இயல்பாவே அவ்வளவா வயிறு தெரியலை.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கர்ப்பிணியாக வயிற்றில் குழந்தையைச் சுமந்தபடி நடந்தே சீரியலைப் பிரபலப்படுத்தினார் தொடரின் ஹீரோயின் பாரதி (ரோஷினி). ஆனால் நிஜத்திலோ வில்லி வெண்பாதான் புள்ளத்தாச்சிப் பெண்ணாக தினமும் அந்த ஷூட்டிங்கிற்கு வந்து போய்க் கொண்டு இருந்திருக்கிறார். யெஸ், தான் அம்மா ஆகப் போவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் ஃபரீனா ஆஸாத். வாழ்த்து சொல்லிப் பேசினேன்.

விகடன் TV:  “ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் சாப்பாடு!”

‘‘நாங்க பாப்பாவுக்காக எந்த பிளானும் பண்ணலை. நாள் தள்ளிப் போய், வாந்தி, மயக்கம் வந்துச்சு. அப்போகூட ஷூட்டிங் களைப்புலதான் உடம்புக்கு ஏதோ பண்ணுதுன்னு நினைச்சேன். பிறகு எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கலாம்னு பார்த்தப்போதான் எங்களுக்குக் கிடைச்சது அந்த மகிழ்ச்சியான செய்தி.

விகடன் TV:  “ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் சாப்பாடு!”

அடுத்த நொடி, ‘அப்ப இனி ஷூட்டிங்’ என்னாகும்கிற கேள்வி வந்திடுச்சு. அஞ்சாவது மாசம் ஆனதும், ‘வயிறு தெரிய ஆரம்பிச்சிட்டா எப்படி நடிக்கிறது. சீரியல்ல இருந்து விலகிக்கிடட்டுமா’ன்னு டைரக்டர்கிட்ட கேட்டேன். ‘அதெல்லாம் பார்த்துக்கலாம், பிரேக் வேணும்னு நினைக்கிறப்ப எடுத்துக்கங்க’ன்னு சொல்லிட்டார். அதனால ஷூட் போயிட்டேதான் இருக்கேன். யூனிட்ல எல்லாருமே என்னை ரொம்பவே அக்கறையுடன் பார்த்துக்கிடறாங்க. ஒவ்வொருத்தர் வீட்ல இருந்து விதவிதமா சாப்பாடு எனக்காக வருது. நான் கால் நீட்டி உட்கார்ந்தா, கை, கால் பிடிச்சு விடுறா ஸ்வீட்டி. அருண் பக்கத்துல இருந்த மரத்துல ஏறி மாங்காய் எல்லாம் பறிச்சுக் கொடுத்தார். மொத்தத்துல வேகமா நடக்கக்கூட அனுமதிக்காத அளவுக்கு என்னை பத்திரமா பார்த்துக்கிட்டாங்க’’ என்றவரிடம், `ஸ்கிரீன்ல நீங்க மாசமா இருக்கிறதே தெரியலையே?’ எனக் கேட்டேன்.

விகடன் TV:  “ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் சாப்பாடு!”
விகடன் TV:  “ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் சாப்பாடு!”

‘`எல்லோரும் இதையேதான் கேட்குறாங்க. இது ஏழாவது மாசம். ஆனாலும் என்னவோ எனக்கு இயல்பாவே அவ்வளவா வயிறு தெரியலை. ‘அம்மாவுடைய வேலைக்கு இடையூறா இருக்கக்கூடாதுன்னு நினைச்சு பாப்பாவே சப்போர்ட் பண்றா போல’’ எனச் சிரிக்கிறார்.