கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: “இன்ஸ்டாகிராமில் திட்டுறாங்க!”

ஃபரீனா
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபரீனா

‘சித்ரா எல்லாருடனும் திறந்த மனதோட பழகறவங்க. அதனால பீல்டுல அவங்களுக்கு நிறைய பேர் ப்ரெண்ட்ஸ்தான்.

இன்றைய தேதிக்கு தமிழ் சீரியல்களின் மிரட்டல் வில்லி என்றால், அது ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாதான். ஷூட்டிங் பிரேக்கில் இருந்தவரிடம், ‘கொஞ்ச நேரம் பேசலாமா’ என்றேன்.

எந்தச் சேனல் போனாலும் சமையல் நிகழ்ச்சியே பண்ணிட்டிருந்தீங்களே... எப்படி சீரியலுக்குள் வந்தீங்க?

‘‘சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கறதுன்னா ஷோவுல பண்ற விதவிதமான பதார்த்தங்களை டேஸ்ட் பண்ணிட்டு ஏதோ பேசிட்டு வந்துடுறதுன்னு நினைக்கறீங்களா? தப்புங்க. ஆங்கரிங்ல சின்னதா சொதப்பினாலும் சாம்பார் புளிக்குழம்பாகிடும். கூடவே நம்ம ஷோவும் கேன்சலாகிடும். எனக்குத் திரும்பத் திரும்ப சமையல் நிகழ்ச்சியே கிடைச்சதுன்னா, நான் அதை நல்லா பண்ணினேன்னுதானே அர்த்தம். சரி, சீரியல் கதைக்கு வர்றேன். வந்த வாய்ப்புகளையெல்லாம் ஏத்துக்காமத்தான் இருந்தேன். ‘நம்ம முகத்தையெல்லாம் தினமும் பார்ப்பாங்களா’ன்னு சின்னதா ஒரு தாழ்வு மனப்பான்மை. அதென்னவோ தெரியல, ‘பாரதி கண்ணம்மா’வுக்குக் கூப்பிட்டப்ப ‘வெண்பா’ங்கிற அந்தக் கேரக்டரின் பெயரே எனக்குப் பிடிச்சிருந்தது. அதனால ரீச் ஆகும்னு உள்மனசு சொன்னதால சம்மதிச்சேன். நான் எதிர்பார்த்தது நடந்திடுச்சு. தினமும் காலையில இன்ஸ்டாகிராம் போனா, ‘குட் மார்னிங்’குக்கு முன்னாடி கெட்ட வார்த்தைகள்தான் வரவேற்கும்.’’

விகடன் TV: “இன்ஸ்டாகிராமில் திட்டுறாங்க!”

‘பாரதி கண்ணம்மா’ ஹிட்டுக்குக் காரணம் கண்ணம்மாவா... இல்ல, வெண்பாவா?

‘‘ஆஹா, செம கேள்வில்ல (?) ஆனா எங்கிட்ட ஒரு பதில் இருக்கு. ஒரு நாள் ரோட்டுல ஷூட்டிங். கேரவன்லாம் அங்க கிடையாது. நான் நடிச்சிட்டிருக்கிறப்ப திடீர்னு என்னுடைய புடவை கழண்டுடுச்சு. சரியா கட்டத் தெரியாததால நடந்த விபரீதம். உடனே எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. ஆனா திடீர்னு எங்கூட இருந்த அந்த வில்லன், யூனிட் கேமரா மேன், அசிஸ்டண்ட் ரெண்டு பேருன்னு நாலு ஆண்கள் என்னைச் சுத்தி அரண் போல நின்னுக்கிட நான் சேலையைச் சரி செஞ்சேன். அந்த நிமிடம் ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்தது. ‘என் டீம்டா’ன்னு கத்தணும் போல இருந்தது. அப்படியான ஒரு டீமின் வெற்றி இது.’’

விகடன் TV: “இன்ஸ்டாகிராமில் திட்டுறாங்க!”

சித்ராவுடன் உங்களுக்கு நல்ல நட்பு இருந்ததாமே?

‘‘சித்ரா எல்லாருடனும் திறந்த மனதோட பழகறவங்க. அதனால பீல்டுல அவங்களுக்கு நிறைய பேர் ப்ரெண்ட்ஸ்தான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சீரியல் நடிச்சதில்லை. ஆனாலும், நிகழ்ச்சிகள் ஏதாவது வந்து அவங்களால பண்ண முடியலைன்னா அந்த வாய்ப்பை எனக்குத் திருப்பி விடுவாங்க. எந்தப் பிரதிபலனும் எதிர்பாராம அப்படிச் செய்வாங்க. அவங்க இப்ப இல்லைங்கிறதை இந்த நொடி வரைக்குமே என்னால நம்ப முடியலை.’’