Published:Updated:

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்

Big Boss
பிரீமியம் ஸ்டோரி
News
Big Boss

Big Boss

`உலகமே ஒரு பிக்பாஸ் ஹவுஸ்தான். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. கொரோனா இஸ் வாட்சிங்!’ என மீம்கள் உலா வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமக்கு வந்த நிலையை ஏற்கெனவே அனுபவித்த பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசினேன்.
கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுஜா வருணி

“கொரோனா வைரஸால் நாடே இப்போ வீட்டுக்குளே முடங்கியிருக்கு. இது கஷ்டமான சூழல்னாலும், நாம கடைப்பிடிச்சுதான் ஆகணும். இது நம்ம கடமையும்கூட. உலகமே இப்போ ஒரு பிக்பாஸ் ஹவுஸ்னு பேசிட்டு இருக்காங்க. எனக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ளே இருந்ததுக்கும், இப்போ இருக்குறதுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டீங்கன்னா, என் குழந்தையோடு இருக்குறதுதான். என் குழந்தையோடு நான் சூப்பர் பிஸி.

Suja Varunee
Suja Varunee

பிக்பாஸ் டைம்ல அப்படி வெளியுலகத் தொடர்பே எங்களுக்குக் கிடையாது. இப்போ வீட்டுக்குள்ளே இருந்தாலும், அதுமாதிரி இல்ல. அந்த அனுபவமும் இந்த அனுபவமும் மொத்தமா வேற. இரண்டையும் ஒப்பிடவே முடியாது. இந்தச் சூழல்ல பிக்பாஸ்ல நாங்க இருந்தபோது எங்க மனநிலை எப்படி இருந்திருக்கும்னு மக்கள் ஓரளவு புரிஞ்சுக்குவாங்கன்னு நம்புறேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘தாடி’ பாலாஜி

``பிக்பாஸ் வீட்டுக்குள்ள டிவி, மொபைல், வெளியுலக தொடர்புன்னு எதுவுமே இருக்காது. ஆனா, கூட ஆட்கள் இருந்ததால அவ்வளவு நாள் சமாளிச்சேன். ஆனா, இப்ப என்கிட்ட எல்லாமே இருக்கு. யாரும் கூட இல்லாததால், வெளிய போக முடியாம நாள்களை நகர்த்தறது கஷ்டமா இருக்கு. இந்த நாள்கள்ல எல்லாருக்கும் குடும்பத்துக்குள்ள புரிதல் அதிகமாகும். அதேமாதிரி, சாப்பாடு எந்த அளவுக்கு முக்கியம்கிறதும் தெரிஞ்சிருக்கும். இப்படி கொரோனாவால நன்மையும் இருக்கு.

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்

எங்க அப்பார்ட்மென்ட்ல இருக்கறவங்க எல்லாருமே என்கிட்ட கேட்கற ஒரு விஷயம் ‘எப்படி அவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்தீங்க?’ன்றதுதான். என்னை, நிறைய விஷயங்கள்ல வீட்டுக்குள்ள இருந்த அந்த நாள்கள் மாத்தியிருக்கு. அந்த மாதிரி பல மனிதர்களை நல்ல விதமா இந்த நாள்கள் மாத்தும். என்னைப் பொறுத்தவரை பிக்பாஸும் கொரோனாவும் ஒண்ணுதான். ஏன்னா, ரெண்டு பேரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க. ஆனா, நம்மளைத் திருத்துவாங்க. அவ்வளவுதான் சொல்லுவேன்.”

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்

சக்தி

``21 நாள்கள் வீட்டுக்குள்ளயே இருக்கணும்னு சொன்னதும், எனக்கு பிக்பாஸ் நாள்கள்தான் மீண்டும் நினைவுக்கு வந்தது. இதுக்கு முன்னாடி, ஜிம் போறது, ஸ்டோரி டிஸ்கஷன்னு பிஸியா இருந்ததால வீட்ல என்ன நடக்குதுன்னுகூட தெரியாது. ஆனா, இப்போ அப்படி இல்லை. வீட்ல சமைக்கறது, வீடு சுத்தம் பண்றது, படங்கள் பார்க்கறதுன்னு இருக்குற வேலைகளைச் செஞ்சு, என்னை பிஸியா வெச்சிருக்கேன். பிக்பாஸ்ல வீட்ல இருக்கறதுக்கும் இப்போ இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டீங்கனா, அங்க யாருனே தெரியாத புது நபர்கள் கூட இருக்கணும். நாம ஒரு விஷயம் பேசினா, அதை வேற மாதிரி புரிஞ்சுகிட்டு பிரச்னை வந்துடுமோன்னு பார்த்துப் பார்த்துப் பேச வேண்டியதா இருக்கும். ஆனா, இங்க வீட்ல சொந்தங்கள்கூட இருக்கோம். மனசுல படறதை எல்லாம் பேசலாம். இதெல்லாம்தான் வித்தியாசங்கள். ஒற்றுமைன்னு கேட்டீங்கன்னா, இருக்குற வேலைகளைச் செஞ்சு நம்மளை பிஸியா வெச்சுக்கணும். இல்லன்னா போர் அடிச்சுடும்.”

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்

டேனியல்

``வீட்டுக்குள்ளயே பத்திரமா இருக்கேன். ரொம்ப அவசியமான தேவையைத் தவிர வேறெதுக்கும் வெளிய போக மாட்டேன். அதையே எல்லாரும் ஃபாலோ பண்ணினா நல்லா இருக்கும். இந்தச் சமயத்துல குவாரன்டைன் தொடர்பா நிறைய மீம்ஸ் போட்டுட்டு இருக்காங்க. அதுல பிக்பாஸோடு இப்ப இருக்கிற நிலைமையையும் தொடர்புபடுத்தி ‘உங்க அருமை இப்பதான் புரியுதுங்கிற’ மாதிரியான மீம்ஸும் பார்த்தேன். பிக்பாஸ் ஹவுஸுக்குள்ள இருக்கறதைவிட, வீட்டுக்குள்ள இப்படி இருக்கறது ஜாலியாதான் இருக்கு. ஏன்னா, இங்க வீட்ல டிவி, மொபைல்னு எல்லா வசதியும் இருக்கு. அங்க அப்படிக் கிடையாது. என்னைப் பொறுத்தவரை ரெண்டையும் ஒப்பிடவே முடியாது. ஏன்னா, அது தெளிவா திட்டமிடப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோ. இந்தச் சூழ்நிலையில நாம இப்படி இருக்கிறதுங்கிறது நம்ம கடமை. அப்படித்தான் நான் பார்க்கிறேன். அதனால எல்லோரும் `எனக்கெல்லாம் ஒண்ணும் ஆகாது’ன்னு வெளிய வராம வீட்டுக்குள்ளயே உங்களுக்கான நேரத்தை செலவிடுங்க.”

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்

கஸ்தூரி

``வீட்ல எனக்கும் சில பொறுப்புகள் இருக்கு, என்னை நம்பியும் சில பேர் இருக்காங்க அப்படிங்கறதால வீட்டுக்குள்ளயே இருக்கிறது எனக்குப் பெரிய சுமையா தெரியலை. பிக்பாஸுங்கறது திட்டமிடப்பட்ட ஒரு ஷோ. ஆனா, இப்ப இருக்கிற சூழல் உண்மை. பிக்பாஸ் வீட்டுக்குள்ள நமக்குப் பிடிக்கலைன்னாலும் எல்லோர் கூடவும் இருக்கணும். ஆனா, வீட்ல நான் தனிமைல இருக்கிறது பிரச்னை இல்லை. பிக்பாஸ்ல நினைச்ச நேரத்துல சாப்பிட முடியாது, தூங்க முடியாது, பிடிக்காதவங்களைத் தவிர்க்க முடியாது. ஆனா, இப்ப நடக்கிறது போர். அப்பெல்லாம் போர் நடக்கும்போது மூணு மாசத்துக்குக் கோட்டைக்குள்ள இருப்பாங்க. தேவையான பொருள்கள் எல்லாம் வெச்சுப்பாங்க. கோட்டையத் திறந்தா, எதிரி இருப்பாங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில வீட்டுக்கதவைத் திறந்தா கொரோனா இருக்கு. இப்படி வேணா ஒப்பிடலாமே தவிர பிக்பாஸையும் இந்தச் சூழலையும் ஒப்பிட ஒண்ணுமே இல்லை. இது பிக்பாஸ் கிடையாது. நாட்டுக்கே பிக்`லாஸ்’.”