Published:Updated:

``அந்த `boy bestie' கூடத்தானே கல்யாணம்னு கேக்குறாங்க?!'' - `பிக் பாஸ்' ஜூலி

ஜூலி
ஜூலி

''அவரு கூட கல்யாணம்; இவருகூடக் கல்யாணம்; ஏன், சிலர் கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னே கூட சொன்னாங்க. நம்ம கூட வம்பு வளர்க்கறதுக்குன்னே இருப்பாங்கல்லய அவ்வங்களைக் கேக்கவே வேண்டியதில்லை. வெறும் வாய்க்கு வெல்லம் கிடைச்ச மாதிரி ஆயிடுச்சு.''

நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழகப் பிரபலமாக்கியது ஜல்லிக்கட்டு போராட்டம். வீரத் தமிழச்சியாக, அன்பு சகோதரியாக அவரைக் கொண்டாடியது சோஷியல் மீடியா சமூகம். ஜல்லிக்கட்டு பிரபலம் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டுவந்தது. இன்னும் பிரபலமானார். நர்ஸ் ஜுலி பிக்பாஸ் ஜூலியாக மாறினார். பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாமே வைரலாக, மீடியா செலிபிரிட்டியானார் ஜூலி. விஜய் டிவியில் சில ஷோஸ், சில படங்கள் என பிஸியானவரைப் பற்றி சமீபகாலமாகச் செய்திகள் எதுவும் பெரிதாக இல்லை. இதற்கிடையில்தான் அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டதாகச் செய்திகள் பரவியது. உண்மை என்ன எனத் தெரிந்துகொள்ள ஜூலியிடமே பேசினேன்.

''என்னது கல்யாண நியூஸா'' எனத் தனது ட்ரேட்மார்க் கலகல கிண்ணச் சிரிப்போடு ஆரம்பித்தார் ஜூலி.

ஜூலி!
ஜூலி!

''கொரோனா வந்து வெளியில எங்கேயும் போக முடியாதபடி, ஏன் வேலைக்கே போக முடியாதபடி எல்லாரையும் போட்டுப்படுத்திட்டிருக்கு. நர்ஸ் வேலையிலேயே இருந்திருந்தா நானும் கூட இந்நேரம் ஏதாவது கொரோனா வார்டுல பி.பி.இ கிட்டுக்குள்ளத்தான் என்னை நுழைச்சுகிட்டு இருந்திருப்பேனே என்னவோ?

மாசக்கணக்குல போயிட்டிருக்கு இந்த லாக்டௌன். அதுக்காக வீட்டுக்குள்ளேயே எத்தனை நாள் சும்மாவே இருக்கறது. ஏதாவது பிடிச்ச, தெரிஞ்ச விஷயங்களைப் பண்ணலாம்தானே? எத்தனையோ பேர் யூடியூப் சேனல் தொடங்கினாங்க. அந்த மாதிரிதான் நானும் ஒரு 'மணப்பெண்’ போட்டோஷூட் பண்ணேன். அதுல ரெண்டு போட்டோவை இன்ஸ்டாவுல ஷேர் பண்ணேன். அந்த போட்டோவை பிடிச்சுக்கிட்டுக் கிளம்பின கதைதான் இதுனு நினைக்கேன்.

அவரு கூட கல்யாணம்; இவருகூடக் கல்யாணம்; ஏன், சிலர் கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னே கூட சொன்னாங்க. நம்ம கூட வம்பு வளர்க்கறதுக்குன்னே இருப்பாங்கல்லயா... அவங்களுக்கு கேக்கவே வேண்டியதில்லை, வெறும் வாய்க்கு வெல்லம் கிடைச்ச மாதிரி ஆயிடுச்சு. உண்மை என்னன்னா, மேரேஜ் இப்ப இல்லை. அப்படி ஏதாவது தகவல் இருந்தா நானே மீடியாவைக் கூப்பிட்டுச் சொல்றேன்'' என்றவரிடம் ''ஓகே... உங்க பாய் ஃபிரெண்ட் பற்றி சொல்லுங்க?'' என்றேன்.

View this post on Instagram

With my Bestie #markhamran ❤️✨

A post shared by maria juliana (@lianajohn28) on

''நான் இன்ஸ்டாவுல என்னுடைய பாய் பெஸ்ட்டியை அறிமுகப்படுத்தினப்ப அவர் பேர் ஹம்ரன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவர் 'ராஜித் இப்ரான்’னு தன்னுடைய பெயரை மாத்திக்கிட்டார். கெட்-அப்பும் கொஞ்சம் மாற, இப்ப அவரோட செல்ஃபி எடுத்துப் போட்டா, ‘அந்த பெஸ்ட்டி என்ன ஆனான்’னு கேக்கறாங்க’’ என்றார்.

''சினிமால நடிக்க ஆரம்பிச்சீங்களே... என்னாச்சு?''

'' 'பப்ஜி’னு ஒரு படம். அடுத்து ரிலீஸாகுற படம்னா இதைத்தான் சொல்லணும். ‘சென்யோரிட்டா’னு ஒரு படம் பண்ணிட்டிருக்கேன். இன்னும் ரெண்டு படங்கள் பேசியிருக்காங்க. இன்னும் கன்ஃபார்ம் ஆகல.’’

'பிக்பாஸ்' ஜூலி
'பிக்பாஸ்' ஜூலி

'' 'நீட்' அனிதா வாழ்க்கை பற்றிய படம் மற்றும் ’அம்மன் தாயி’ படங்கள் என்னாச்சு?''

'' ‘அம்மன் தாயி’ படம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. டைரக்டர்கிட்டதான் என்ன கண்டிஷன்னு நீங்க கேக்கணும். 'அனிதா’ ஸ்டோரிலயும் ஏதோ சட்ட சிக்கல்கள் இருக்குன்னாங்க. அதைச் சரி செய்யற முயற்சிகள்ல இருக்காங்கன்னு நினைக்கேன்.’’

Julie
Julie

''நீங்களும் இப்ரானும் ஜோடியா நடிக்கப் போறதாக்கூட செய்திகள் வந்ததே?''

''ஸ்கிரிப்ட் வந்திருக்கு. நாங்க ரெண்டு பேருமே இப்ப வரைக்கும் அதை கன்ஃபார்ம் பண்ணலை. ஃபியூச்சர்ல சேர்ந்து நடிப்போமாங்கிறது தெரியலை. அப்படி சேர்ந்து நடிச்சா அது கடவுளோட செயல்.’’

அடுத்த கட்டுரைக்கு