Published:Updated:

பிக் பாஸ் பாவனி ரெட்டிக்கு கொரோனா பாசிடிவ்!

பாவனி

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாம் ரன்னர்அப்-ஆக தேர்வுபெற்ற நடிகை பாவனி ரெட்டி கொரோனோவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

பிக் பாஸ் பாவனி ரெட்டிக்கு கொரோனா பாசிடிவ்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாம் ரன்னர்அப்-ஆக தேர்வுபெற்ற நடிகை பாவனி ரெட்டி கொரோனோவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பாவனி

அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி 16 அன்று நிறைவு பெற்றது. இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாவனி ரெட்டி இறுதி போட்டியில் பல்வேறு விர்சனங்களுக்கு மத்தியில் இராண்டாவது ரன்னர்-அப் ஆக தேர்வு பெற்றார். சின்னத்திரை பிரபலமும் நடிகருமான இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 100 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த நிலையில் தனக்கு கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் முடிவு வந்திருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

பாவனியின் இன்ஸ்டா பதிவு
பாவனியின் இன்ஸ்டா பதிவு

மருத்துவர்களின் அறிவுரையின்படி தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தனக்கு நோய் அறிகுறிகள் பெரியளவில் இல்லையென்றும் தெரிவித்து உள்ளார். மீண்டு வருவேன் எனத் தெரிவித்திருந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதலைப் பகிர்ந்து வருகின்றனர்.