Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 66: `அண்ணே! அசிமுக்கு வணக்கத்தைப் போடு!' - ஓவர் டோஸ் தனலஷ்மி; ஜெர்க்கான அசிம்

பிக் பாஸ் 6 நாள் 66

‘தன்னையும் மணியையும் இணைத்து ஃபேவரிட்டஸம்’ என்று யாராவது சொன்னால் மைனாவிற்கு அசாத்திய கோபம் வருகிறது. ஆனால் அவரே இது போன்ற புகாரை அடுத்தவரின் மீது எளிதாக சொல்கிறார்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 66: `அண்ணே! அசிமுக்கு வணக்கத்தைப் போடு!' - ஓவர் டோஸ் தனலஷ்மி; ஜெர்க்கான அசிம்

‘தன்னையும் மணியையும் இணைத்து ஃபேவரிட்டஸம்’ என்று யாராவது சொன்னால் மைனாவிற்கு அசாத்திய கோபம் வருகிறது. ஆனால் அவரே இது போன்ற புகாரை அடுத்தவரின் மீது எளிதாக சொல்கிறார்.

பிக் பாஸ் 6 நாள் 66
சொர்க்கம் நரகம் டாஸ்க்கில் சற்று சூடு பிடித்திருக்கிறது. தேவதைகளுக்கு பல்வேறு நெருக்கடிகள் தந்தால்தான், சாத்தான்கள் தப்பிப்பதிலும் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அதனால் ஆட்டம் விறுவிறுப்பாகும். அது இன்று நிகழ்ந்தது. FDFS டிக்கெட் வாங்குவது போல் அடித்துப் பிடித்து பலர் கூட்டமாக சொர்க்கத்திற்குள் நுழைந்தார்கள்.

‘பத்து வயது மாணவனின் ஐக்யூ கேள்விகளுக்கு கூட ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பதில் தெரியவில்லையே?’ என்று பார்வையாளர்கள் கிண்டலடிக்கலாம். ஆனால் இணையத்தில் தேடாமல் சிலவற்றிற்கு நமக்கும் பதில் தெரியாது என்பதுதான் உண்மை. அதற்காக ‘தேசிய விலங்கு எது?’ என்கிற கேள்விக்கு பாய்வது போல் கைகளை வைத்துக் கொண்டு ‘சிறுத்தை’ என்று தனலஷ்மி பதில் சொன்னதெல்லாம் ஓவர். தமிழ். தமிழ்.. என்று முழங்கும் அசிமிற்கு, பாரதியாரின் எளிய பாட்டை நினைவுகூர அத்தனை தடுமாற்றம். போலியான பெருமைகள் இப்படித்தான் அம்பலமாகின்றன.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘உள்ளே தேடத் தேட..’ என்கிற பாடலுடன் நாள் 66-ன் பொழுது புலர்ந்தது. “நேத்து நான் தப்பிச்சிருப்பேன். மைனா ஓவர்ஆக்ட் பண்ணி கெடுத்துட்டா. இனிமே அடிதான். கடிதான்..’ எனறு காலையிலேயே கொலைவெறியோடு ரியாக்ஷன் தந்து கொண்டிருந்தார் ஜனனி. ‘ நீ பேசறதெல்லாம் சரிதான்.. ஆனா.. உன் பாடி லேங்வேஜை மாத்து’ என்று அமுதவாணன் ஆலோசனை சொல்ல, ‘அது என் இஷ்டம்..’ என்று சிணுங்கி அடம்பிடித்தார் ஜனனி. (ஜெனிலியாகளுக்கு எப்போதும் அழிவில்லை!).

பிக் பாஸ் 6 நாள் 66
பிக் பாஸ் 6 நாள் 66

மீன் உணவை நரகவாசிகளுக்கு காட்டி காட்டி வெறுப்பேற்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அமுதவாணன். ‘நாசமாப் போக’ என்று அவர்கள் சபித்துக் கொண்டிருந்தார்கள். ‘இருங்க உங்களுக்கு பழைய கஞ்சியை சுட வெச்சு தரோம்’ என்று இன்னமும் காண்டாக்கினார் அமுதவாணன். அவரின் பக்கத்திலேயே அமர்ந்து நாக்கு ஊற பார்த்துக் கொண்டிருந்த ஏடிகே, ‘இந்த வெண்டைக்காய் பொறியலை எடுக்க மறந்துட்டீங்க பாஸ்” என்று தள்ளி வைத்தார். ‘நடிகன்’ திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில், சத்யராஜை பிளாக் மெயில் செய்து சாப்பிடும் கவுண்டமணி ‘உல்லான் ஃபிரை’ உடனே வேண்டுமென்று அடம்பிடிப்பார். முட்டை தொக்கை தொட்டு விடும் சத்யராஜின் விரலை நக்கி விட்டுத்தான் அவரை அனுப்புவார். அமுதவாணன் – ஏடிகே செயல்பட்டது இந்தக் காட்சியை நினைவுப்படுத்தியது.

டாஸ்க் பஸ்ஸர் அடித்த பிறகும் அமுதவாணன் கோஷ்டி உணவை விட்டு எழ மனம் வராமல் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்க, நரகவாசிகள் ஹோல்சேலாக வீட்டிற்குள் நுழைந்து விட்டு ‘எதிர்பார்க்கலைல்ல.. நாங்க வருவோம்ன்னு எதிர்பார்க்கலைல..’ என்று கோரஸாக கத்தினார்கள். சொர்க்கத்திற்குள் வந்து விட்டால் சொல்ல வேண்டிய கோட் வேர்டு போல. பிறகு உள்ளே வருபவர்களும் இதே வசனத்தைத்தான் கத்தினார்கள். ‘எல்லாம் வெளியே போங்க’ என்று வாட்ச்மேன் மாதிரி தள்ளி கதவைச் சாத்தினார் மணிகண்டன்.

ஜனனி எளிதாக தப்பிக்க அமுதவாணன் உதவினாரா?

டாஸ்க் உண்மையில் ஆரம்பித்தது. சபதம் ஏற்றபடி ஜனனி தப்பி குறுக்குவழியின் பாதையில் பாய, சட்டென்று சுதாரித்துக் கொண்ட அமுதவாணன் ஜனனியை தாவிப்பிடித்து தடுத்தார். அவரை கட்டிப் போட்டு மூட்டையில் இட்டு பாதையின் அருகில் படுக்க வைத்தார்கள். ஆனால் ஜனனியோ எலி மாதிரி கையில் இருந்த டேப்பை கடித்து கடித்து வீட்டின் உள்ளே பாய்ந்து ‘எதிர்பார்க்கலைல்ல.. நான் வருவேன்னு..’ என்கிற கோட் வோ்டை கத்த சொர்க்கவாசிகளுக்கு அதிர்ச்சி. “ஈஸியா கட்டிட்டாங்களா?’ என்று ஷிவின் இயல்பாக கேட்க, அதையே இன்னமும் காட்டமாக கேட்டார் மைனா. “எனக்கு எங்க எங்கல்லாம் டேப் போட்டு டைட்டா கட்டி வெச்சீங்க.. அவளுக்கு மட்டும் ஏன் இரண்டு இடத்துல மட்டும் டேப்?” என்று கோபமாக கேட்ட மைனாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

பிக் பாஸ் 6 நாள் 66: ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 66: ஜனனி

அமுதவாணன் வேண்டுமென்றே எளிதாக கட்டி ஜனனியை தப்பிக்க வைத்து விட்டார் என்பது மாதிரி சந்தேகம் எழவே, அமுதவாணனுக்கு கோபம் வந்தது. “ஏற்கெனவே இருக்கற பஞ்சாயத்து முடியல.. இது வேறயா?’ என்று அவரின் மைண்ட் வாய்ஸின் அலறியிருக்க வேண்டும். ஜனனியை பாய்ந்து பிடித்தவரே அவர்தான். கட்டியது கூட ஓகே. ஆனால் பாதையின் வாசலிலேயே கொண்டு போய் போட்டதுதான் தவறு. அதுதான் ஜனனிக்கு மிக எளிதாகப் போய் விட்டது. (ஒருவேளை அதுவும் பிளானோ?!)

‘தன்னையும் மணியையும் இணைத்து ஃபேவரிட்டஸம்’ என்று யாராவது சொன்னால் மைனாவிற்கு அசாத்திய கோபம் வருகிறது. ஆனால் அவரே இது போன்ற புகாரை அடுத்தவரின் மீது எளிதாக சொல்கிறார். மைனாவின் குற்றச்சாட்டு காரணமாக கோபம் கொண்ட அமுதவாணன், இறக்கையை கழற்றிப் போட்டு விட்டு ‘நான் நரகத்திற்குப் போகிறேன்’ என்று புலம்ப, மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். “நீங்க இப்ப போனா.. நீங்கதான் செஞ்சீங்கன்றது மாதிரி உண்மையாயிடும்” என்று விக்ரமன் சொன்ன லாஜிக் சிறப்பு. “அந்தப் பக்கம் காவலுக்கு நான் நின்னிருக்கணும்.. ஸாரி” என்று என்று தன் தவறை நேர்மையாக ஒப்புக் கொண்ட ரச்சிதாவிற்கு பாராட்டு.

ஜனனி உள்ளே வந்து விட்டதால் சொர்க்கவாசிகளில் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்து நரகத்திற்கு செல்ல வேண்டும். காவலில் கவனக்குறைவாக இருந்த ரச்சிதா பெருந்தன்மையுடன் நரகவாசியாக கன்வெர்ட் ஆனார். சொர்க்கவாசிகள் கவனக்குறைவாக இருந்த சமயத்தில் தனலஷ்மி, ஷிவின், மைனா ஆகிய மூவருமே குறுக்குப் பாதையில் அடித்துப் பிடித்து வீட்டின் உள்ளே புகுந்தார்கள். அவர்களைத் தடுப்பது எளிதான காரியமாக இல்லை. முதலாவதாக தனலஷ்மி புகுந்து விட்டார். ‘எதிர்பார்க்கலைல்ல..’என்கிற கோஷத்தை அவர் கத்த, பின்னாடியே ஷிவினும் மைனாவும் வந்தார்கள். ‘யாராவது ஒருவர்தான் அனுமதிக்கப்படுவார்’ என்று பிக் பாஸ் அறிவிக்க, முதலில் வந்த தனலஷ்மி இருக்கட்டும் என்று ஷிவின் விட்டுத் தந்தார். இதற்கான தவறுக்கு அமுதவாணன் பொறுப்பேற்று வெளியே சென்றார்.

பிக் பாஸ் 6 நாள் 66: விக்ரமன்
பிக் பாஸ் 6 நாள் 66: விக்ரமன்

‘அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளா.. பதில் சொல்றது ரொம்ப கஷ்டம் பாஸூ’..

இதையே காண்பித்துக் கொண்டிருந்தால் போரடிக்கும் என்று எண்ணிய பிக் பாஸ் எடிட்டிங் டீம், லக்ஸரி பட்ஜெட் பகுதிகளை காட்டத் துவங்கியது. அறிவுத்திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும் என்று பிக் பாஸ் சொன்ன அடுத்த நொடியே ‘அப்படின்னா நாங்க ஜெயிக்கறது கஷ்டம்’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் மைனா. பத்து வயது மாணவனின் ஐக்யூ கேள்விகள் என்றாலும் கூட பலர் எளிமையான கேள்விகளுக்கு தடுமாறினார்கள். சிலர் சரியாக சொல்லி ஆச்சரியப்படுத்தினார்கள். முதலில் சென்ற மைனா ‘மொத்த தமிழ் எழுத்துக்கள் 18’ என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ‘வானவில்லின் நிறங்கள் என்ன?’ என்கிற அடுத்த கேள்விக்கு பதில் சொல்வது சற்று சிரமம்தான். தேசியக் கொடியின் நிறங்களை சரியாகச் சொல்லி விட்டார். மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கைக்கு, வாய்க்கு வந்த எண்ணைச் சொல்லி வெறும் ஐம்பது மதிப்பெண்களுடன் வெளியேறினார் மைனா. (விடை: 206).

31 நாட்களைக் கொண்ட ஆங்கில மாதங்கள் எத்தனை?, நீரின் கொதிநிலை என்ன?, ஆங்கில எழுத்துக்களில் O எத்தனையாவது எழுத்து?, மயில் அகவும்’ என்கிற கேள்விகளுக்கு அனைத்துப் பதில்களையும் சரியாகச் சொல்லி முழுமையான மதிப்பெண்களைப் பெற்றவர் விக்ரமன் மட்டுமே. அடுத்ததாக வந்த தனலஷ்மி ‘தேசிய விலங்கு சிறுத்தை’ என்று கைகளை உர்ரென்று காட்டிச் சொன்னதைக் கேட்டு சிறுத்தைக்கே கோபம் வந்திருக்கும். ‘சூரியன் உதிக்கும் திசை’யை மட்டும் சரியாகச் சொல்லி விட்டார். ஆங்கில எழுத்தில் உள்ள Vowels பற்றி தனலஷ்மிக்குத் தெரியவில்லை. ‘படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம்’ என்று முனகியபடி ஐம்பது மதிப்பெண்களுடன் வெளியே சென்றார் தனலஷ்மி.

‘நாமினேஷன் ப்ரீ சலுகை முக்கியம் குமாரு’

சொர்க்கம்-நரகம் டாஸ்க்கில் சில சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தார் பிக் பாஸ். அதன்படி பஸ்ஸர் அடிக்கப்படும் போது இரு அணிகளும் பரஸ்பரம் ஒருவரை மாற்ற வேண்டும். இதைக் கூடிப் பேசி தேர்ந்தெடுக்க வேண்டும். நரகவாசிகள் 1 முதல் 25 வரையான பிளாக்குகளை அடுக்கி அதை பத்து நிமிடங்கள் வரைக்கும் காப்பாற்றி விட்டால் நரக ஏரியாவில் சுதந்திரமாக இருக்கலாம். சொர்க்கத்திலேயே தங்குபவர்களுக்கு ‘நாமினேஷன் ஃபரீ’ வாய்ப்பு கிடைக்கும். இப்படியெல்லாம் டாஸ்க்கில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக வியூகங்கள் மாறின. ஆட்டமும் வேகம் எடுத்தது.

எண்களின் பிளாக்குகளை கதிரவனும் ரச்சிதாவும் அடுக்க முற்படுகையில் அதை சொர்க்கவாசிகள் கலைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூண்டிலிருந்து தப்பித்து வீட்டிற்குள் வெற்றிகரமாக புகுந்து விட்டார் ஏடிகே. திட்டமிடுதலில் கவனக்குறைவாக இருந்த விக்ரமன், பலியாடாக குற்றம் சாட்டப்பட்டு வெளியேறினார். “மணிதான் ஆரம்பத்துல இருந்து வீட்டுக்குள்ளேயே இருக்கான்.. நாமளும் அதே மாதிரி தக்க வெச்சுக்கணும். வெளில போகக்கூடாது. நாமினேஷன் ப்ரீ முக்கியம் குமாரு” என்று தனலஷ்மியும் ஜனனியும் அடிக்கடி கூடி ரகசியம் பேசிக் கொண்டார்கள்.

இன்னொரு பக்கம் அசிம் வேறொரு திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தார். ‘ப்ரீ நாமினேஷன் சலுகையை ரச்சிதா அடைய விடக்கூடாது. அதை அவர் ஏற்கெனவே அனுபவித்து விட்டார். இந்த முறை வேறு யாராவதுதான் எடுக்க வேண்டும். எனக்கு வேண்டாம்’ என்று அவர் ரகசியம் பேச “ண்ணோவ்.. நீங்க கெத்துன்னா.. நாமினேஷன்ல வந்தாலும் மறுபடியும் உள்ளே வந்துடுவீங்க. தமிழ்நாடே உங்க பின்னாடி இருக்கு. அவ்ள மாஸூண்ணா. நீங்க” என்று தனலஷ்மி உசுப்பேற்ற, அதற்கேற்ப தாளம் போட்டார் ஜனனி. ‘இவிய்ங்க பாராட்டறாங்களா.. இல்ல கலாய்க்கறாங்களான்னே தெரியலையே’ என்று குழம்பினார் அசிம்.

பிக் பாஸ் 6 நாள் 66: மணிகண்ட்டா, தனலஷ்மி
பிக் பாஸ் 6 நாள் 66: மணிகண்ட்டா, தனலஷ்மி

ஆட்களை மாற்ற வேண்டிய நேரம். “சீட்டுப் போட்டு எடுத்துடலாமா?” என்று மணிகண்டன் சொல்ல, ‘ஏம்ப்பா.. இதெல்லாம் நியாயமே இல்ல. நான் இப்பத்தான் உள்ளே வந்தேன்” என்று ஏடிகே சொன்னது சரியானது. ‘நான் போக மாட்டேம்ப்பா..” என்று தனலஷ்மி அடம் பிடிக்க, அதையே பின்பாட்டாக பாடினார் ஜனனி. (சொந்தமா யோசிக்கவே மாட்டீங்களா?!) வேறு வழியில்லாமல் ‘சரி.. நான் போறேன்..’ என்று மணிகண்டன் நரகவாசியாக மாற “வாடா.. வாடா.. மச்சான்..” என்று உற்சாகமானார் அசிம். சாத்தான்கள் தரப்பிலிருந்து ஷிவினைத் தேர்ந்தெடுத்து வீட்டிற்குள் அனுப்பினார்கள். முன்னர் ஷிவின் விட்டுத்தந்த பெருந்தன்மைக்கான பரிசு.

“ஆத்திச்சூடி சினிமாப்பாடலை பாடி காமெடி செய்த கதிரவன்"

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் காமெடி டிராக்கை மீண்டும் இணைத்தது எடிட்டிங் டீம். இப்போது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வந்தவர் கதிரவன் ‘ஆத்திச் சூடியின் நான்கு வரிகளைச் சொல்லுங்கள்” என்கிற கேள்விக்கு உண்மையாகவே சொதப்பினாரா அல்லது வேண்டுமென்றே காமெடி செய்தாரா என்று தெரியவில்லை. “ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி..’ என்று அவர் பாட்டுப்பாட ‘ஹலோவ்.. ஒளவையார் எழுதிய ஆத்திச்சூடியைக் கேட்டேன்” என்று பிக் பாஸ் கடுப்பானார். ஆனால் கதிரவனுக்கு அது தெரியவில்லை. “வருடத்தில் எத்தனை புதன்கிழமைகள் வருகின்றன?’ என்பது அடுத்த கேள்வி. 48 என்று கதிரவன் குத்துமதிப்பாகச் சொல்ல, சரியான விடை 52-ஆம்.

திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன? என்று பிக் பாஸ் அதிகாரமாக கேட்க அதற்கும் தடுமாறினார் கதிரவன். ‘தமிழகத்தின் மாநிலப்பறவை எது?’ என்கிற கேள்விக்கு பலருக்கு பதில் தெரிந்திருக்காது. தேசியப்பறவையுடன் இணைத்து குழம்பியிருப்பார்கள். ‘மரகதப்புறா’ என்று பிக் பாஸ் விடை சொன்னார். வெட்கப்பட்டுக் கொண்டே வெளியே வந்த கதிரவனினிடம் “நான் பாடிய பாட்டைச் சொன்னதுக்கு ரொம்ப மகிழ்ச்சி” என்று மகிழ்ச்சியை தெரிவித்தார் ஏடிகே.

பிக் பாஸ் 6 நாள் 66: கதிரவன்
பிக் பாஸ் 6 நாள் 66: கதிரவன்

“கதிரவன். உன்னை ரொம்ப அறிவாளின்னு நெனச்சேன். பெரிய பெரிய விஷயமெல்லாம் பேசுவியே..?” என்று அசிம் கிண்டலடிக்க “அடுத்தது உங்களைத்தான் கூப்பிடறாங்க.. போங்க சார்” என்று மைனா அவரைக் கிண்டலடிக்க, தலைவன் அசிம் பம்மிக் கொண்டே உள்ளே சென்றார். ‘சூரியக் குடும்பத்தின் கோள்கள் எத்தனை?’ என்கிற முதல் கேள்விக்கு ஆணித்தரமாக பதில் வரவே ‘அடடே.. பரவாயில்லையே’ என்று தோன்றியது. ‘நீரில் வாழ்ந்தாலும் நீரை அருந்தாத உயிரனம் எது?’ என்கிற கேள்விக்கு ‘க்ரொக்கடைல்’ என்று அசிம் ஆங்கிலத்தில் ஸ்டைலாக சொன்ன பதில் தப்பாம். ‘டால்ஃபின்’ என்பது சரியான விடை.

‘ஒரே தலைநகரைக் கொண்ட இரண்டு மாநிலங்கள்’ என்பதற்கும் தடுமாறினார் அசிம். வெளியே அமர்ந்திருந்த விக்ரமன் சொன்ன பதிலும் தவறு. ‘பஞ்சாப். ஹரியானா’ என்பதுதான் சரியான பதிலாம். அடுத்து நடந்ததுதான் பெரிய காமெடி. பாரதி எழுதிய “ஓடி விளையாடு பாப்பா’ பாடலின் அடுத்த சில வரிகளைச் சொல்லுங்கள்’ என்கிற கேள்விக்கு பாப்பா மாதிரியே விழித்தார் அசிம். ‘என்னய்யா.. தமிழ்.. தமிழ்..ன்னு சொல்லிட்டு.. ஒரு சாதாரண பாட்டுக்கு இப்படி விழிக்கறே..’ என்று பார்வையாளர்கள் பலரின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கும். “வெளில போய் மனப்பாடம் பண்ணுங்க” என்று அசிமை பங்கப்படுத்தி அனுப்பினார் பிக் பாஸ்.

பிக் பாஸ் 6 நாள் 66: அசிம்
பிக் பாஸ் 6 நாள் 66: அசிம்

பிக் பாஸிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அசிம்

சீசனின் இறுதிக்கட்டம் வரைக்கும் பயணிக்கக்கூடிய டாப் 3 Finalist பற்றியும் மற்றும் பின்னடைவைச் சந்திக்கக்கூடிய ஆட்டக்காரர்கள் பற்றியும் ஒவ்வொரு சொர்க்கவாசியும் சொல்ல வேண்டும். தன்னையும் அதில் இணைத்துக் கொள்ளலாம்.

முதலில் வந்த ஷிவின், விக்ரமன் மற்றும் கதிரவனின் பெயர்களை வெற்றியாளர்களின் வரிசையில் சொன்னார். விக்ரமனின் சமநிலையான ஆட்டம், கதிரவனின் நிதானம் போன்றவை இதற்குக் காரணமாம். அசிமின் காரசார உரையாடல், அனைத்திலும் காமெடி செய்கிற மைனாவின் தவறு அவர்களின் பின்னடைவிற்கு காரணமாக இருக்கலாம் என்பதும் ஷிவினின் அபிப்பராயம். மைனா எப்போதும் காமெடியாகவே இருப்பதை பின்னால் வந்த பலரும் குறையாகச் சொன்னார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 66: தனலஷ்மி, ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 66: தனலஷ்மி, ஜனனி

கடைசியாக வந்த தனலஷ்மி “இந்த விளையாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைவன் அசிம்தான் டாப் 3-ல் வருவார்’ என்று அடித்துச் சொன்ன போது அசிமிற்கே உள்ளுக்குள் ஜெர்க் ஆகியிருக்கும். என்றாலும் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னார்.

‘கத்தரிக்கா முளைச்சா கடைத்தெருவிற்கு வந்துதான் ஆகணும்’ என்றொரு பழமொழி இருக்கிறது. அந்தக் கத்தரிக்காய் அசிமா, விக்ரமனா, ஷிவினா என்பது எப்படியும் கடைசியில் தெரியத்தான் போகிறது.