Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 74 : 80-ஸ் கல்லூரி; `பூமர் அங்கிள் ஆனாரா அசிம்' - ஏடிகே வின் காலேஜ் அட்ராசிட்டி!

பிக் பாஸ் 6 நாள் 74

ஏடிகேவோ ரச்சிதாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால் ‘காதல்’ என்கிற வார்த்தையே ரச்சிதாவின் டிக்ஷனரியில் இல்லையாம். ‘வேண்டாம் கோப்பால்’ என்று மறுத்துக் கொண்டிருந்தார்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 74 : 80-ஸ் கல்லூரி; `பூமர் அங்கிள் ஆனாரா அசிம்' - ஏடிகே வின் காலேஜ் அட்ராசிட்டி!

ஏடிகேவோ ரச்சிதாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால் ‘காதல்’ என்கிற வார்த்தையே ரச்சிதாவின் டிக்ஷனரியில் இல்லையாம். ‘வேண்டாம் கோப்பால்’ என்று மறுத்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் 6 நாள் 74
கடிதம் வாசிக்கும் டாஸ்க்கில், மற்றவர்கள் தங்களின் குடும்பத்தினருக்காக எழுதும் போது விக்கிரமன் மட்டும் டாக்டர் அம்பேத்கருக்கு எழுதியது வித்தியாசமான செய்கை. இது ‘கிம்மிக்ஸ்ஸாக’ சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இப்படிப்பட்ட அரசியல் அடையாளங்கள், மெயின்ஸ்ட்ரீம் பிளாட்பாரங்களுக்குள் நுழைந்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பிக் பாஸ் 6 நாள் 74
பிக் பாஸ் 6 நாள் 74

அதுவரையான தமிழ் சினிமாக்களில் அம்பேத்கரின் புகைப்படம் என்பது சும்மா செட் பிராப்பர்ட்டி போல அரசு அலுவலகம் தொடர்பான காட்சிகளில், பயன்படுத்தப்பட்டு வந்தது. அவரின் அரசியல் பிரகடனங்களோ, கொள்கைகளோ, அடித்தட்டு மக்களுக்காக அவர் நிகழ்த்திய போராட்டங்களோ அதற்குரிய அரசியல் பொருளுடன் ஒலிக்கவில்லை. ‘பாட்டாளிகளுக்காகப் போராடுவதாக’ தங்களை காட்டிக் கொண்ட ஹீரோக்கள் கூட, அழுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவனாக தங்களைக் காட்டிக் கொள்வதில் தயக்கமும சங்கடமும் நிலவியது. பா.இரஞ்சித் போன்ற இயக்குநர்கள் வந்தபிறகுதான் சூழலில் மெல்ல மாற்றம் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பிக் பாஸ் போன்ற கோடிக்கணக்கான பார்வையாளர்களைச் சென்று சேரும் நிகழ்ச்சியில் ‘ஜெய் பீம்’ என்கிற அரசியல் முழக்கம் ஒலிப்பது முக்கியமான முன்னேற்றம். இதை நிகழ்த்திய விக்ரமனுக்குப் பாராட்டு.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கடிதம் வாசிக்கும் டாஸ்க் தொடர்ந்தது. கதிரவனும் மணிகண்டனும் இயல்பாக வாசித்து முடித்தார்கள். ரச்சிதா மற்றும் தனலஷ்மியால் தங்களின் விம்மல்களை இன்னமும் அடக்க முடியவில்லை. தனது கடிதத்தை ‘அன்புள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்’ அவர்களுக்கு என்று துவங்கியிருந்தார் விக்ரமன்.

பிக் பாஸ் 6 நாள் 74
பிக் பாஸ் 6 நாள் 74

“ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களை தலைநிமிரச் செய்தவர் நீங்கள். ‘Give back to the society’ என்ற முழக்கத்தோடு நீங்கள் சிரமப்பட்டு பெற்ற கல்வியை, கேட்க நாதியில்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினீங்க. நான் இங்க டவுனா, தனிமையா ஃபீல் பண்ணும் போதெல்லாம் நீங்க வெளிநாட்டில் படித்த போது எதிர்கொண்ட சிரமங்கள், ஆதரவில்லாமல் போராடிய நாட்கள், இந்தக் கொடுமையான சமூகத்தில் நீங்கள் எதிர்கொண்ட வலிகள், ரணங்கள் போன்றவற்றைத்தான் உத்வேகமாக எடுத்துக் கொள்வேன். உங்க அளவிற்கு என்னால உழைக்க முடியுமான்னு தெரியல. அதுல அஞ்சு சதவிகிதமாவது எட்டிப் பிடிக்க முயல்வேன். ஜெய்பீம், நன்றி வணக்கம்” என்று வாசித்து முடித்தார்.

அசிம் தனது ‘வாப்பாவிற்கு’ எழுதியிருந்த கடிதம் உணர்ச்சிகரமாக இருந்தது. ‘என்னோட எல்லா வெற்றிலயும் நீங்க இருக்கீங்க. இங்க டாஸ்க்ல ரொம்ப சிரமப்பட்ட போதெல்லாம் உங்க ஞாபகம் வந்தது. வெயில்ல கொஞ்ச நேரம் இருந்தாலே ஏஸில போய் உக்காந்துப்பேன். அப்பத்தான் வெயில், மழைல நீங்க பட்ட சிரமம்லாம் தெரிஞ்சது. என் வளர்ச்சியின் எல்லா நிலைகளிலும் உறுதுணையா இருந்திருக்கீங்க. நான் அடையும் வெற்றி உங்களுக்கத்தான்” என்று முடித்தார்.

‘பூமர் அங்கிள்ன்னா என்ன அர்த்தம்?’ – ஏடிகேவின் சந்தேகம்

‘ஹே.. கலா.. கலா’ என்கிற பாடலோடு நாள் 74 விடிந்தது. பார்த்திபன் இயக்கி, தேவாவின் இசையில், எஸ்.பி.பியின் குரலில் ‘சரிகமபதநி’ என்கிற திரைப்படத்திலிருந்து ஒலித்த இந்தப் பாடலை நிறைய பேர் நீண்ட காலம் கழித்து கேட்டிருப்பார்கள். ‘பூமர் அங்கிள்ன்னா என்ன?’ என்று காலையிலேயே சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் ஏடிகே. அவர் இலங்கையில் இருந்து வந்தவர் என்பதால் ‘லோக்கல்’ அர்த்தம் தெரிந்திருக்காது. ‘பழைய பஞ்சாங்கமா இருக்கறது. சொன்னதையே சொல்றது.. அட்வைஸா தர்றது’ என்று மைனா விளக்கம் அளிக்க “அப்படின்னா அது சாட்சாத் அசிம்தான்” என்று கிண்டலடித்தார் ஏடிகே. (அசிம் ஆர்மியினர் இதைக் கேட்டு நொந்திருப்பார்கள்!).

பிக் பாஸ் 6 நாள் 74
பிக் பாஸ் 6 நாள் 74

பிக் பாஸ் வீடு ‘இந்திரன் சந்திரன் கலைக்கல்லூரி’யாக மாறியது. ஹவுஸ்மேட்ஸ் எண்பதுகளி்ல் வந்த திரைப்படப் பாத்திரங்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். ‘நான் இந்தக் காலேஜ்லயே பொறந்து வளர்ந்து இன்னமும் இங்கேயே இருக்கறவன்டா” என்று சுருட்டை முடியுடன் அலப்பறை செய்து கொண்டிருந்தார் ஏடிகே. அவரின் கேரக்ட்டர் பெயர் ‘தாமுவாம்’. ‘குட் ஜாப்’ என்று அவரைப் பாராட்டினார் பிக் பாஸ். ஏடிகேவின் லுக்கை ஷிவின் பங்கம் செய்ய, ஏடிகே லேசாக டென்ஷன் ஆனார். சைக்காலஜி டீச்சரான விக்ரமனை ‘சைக்கோ’ என்று ரச்சிதா உள்ளிட்ட மற்றவர்கள் சுருக்கி கூப்பிட்ட போதெல்லாம் அதை அவர் ரசிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

பிக் பாஸ் 6 நாள் 74
பிக் பாஸ் 6 நாள் 74

‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கதிரவன்’ என்கிற பெயரில் ரஜினியின் உடல்மொழியைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று இஞ்சி கசாயம் குடித்தது போலவே முகத்தை வைத்துக் கொண்டு விறைப்பாக சுற்றிக் கொண்டிருந்தார் கதிரவன். இவரும் ஏடிகேவும் அவ்வப்போது போட்ட ‘டிஷ்யூம்.. டிஷ்யூம்’ சண்டை காமெடியாக இருந்தது. ‘டிஸ்கோ டான்ஸர்’ என்கிற பெயரில் கமலின் குரலை மிமிக்ரி செய்து கொண்டிருந்தார் அமுதவாணன். ரச்சிதா மைனா, மற்றும் ஷிவினின் லுக் நன்றாக இருந்தது. எண்பதுகளின் திரைப்படங்களில் ‘லேடீஸ் கிளப் மெம்பர்கள்’ என்கிற பெயரில் மிகையான ஒப்பனையுடன் சில துணைப்பாத்திரங்கள் வருவார்கள். தனலஷ்மியின் ‘லுக்’ அவர்களை நினைவுப்படுத்தியது.

நடன மாஸ்டராக பிரகாசித்த மணிகண்டன்

அசிமின் விக் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம். இயல்பான முடியுடன் நன்றாகத் தோற்றமளித்த விக்ரமன், ஒரு கொடுமையான வி்க், தாடியை மாட்டியவுடன் டி.ஆரின் தம்பி மாதிரியே மாறி விட்டார். இருப்பதிலேயே டாப் மணிகண்டனின் ‘லுக்’தான். சினிமாவில் ‘கே.சிவசங்கர்’ என்றொரு டான்ஸ் மாஸ்டர் இருந்தார். பெண்மையின் நளினமும் குழைவும் அவரது அசைவுகளில் இருக்கும். இந்த கேரக்ட்டரை மிகச் சிறப்பாக நகலெடுத்திருந்தார் மணிகண்டன். “வாங்கம்மா.. நமஸ்காரம் பண்ணிக்கங்க” என்று அவரது வாய்ஸ் மாடுலேஷனும் பக்காவாக இருந்தது. விஸ்வரூபம் படத்தில் வந்த கமல்ஹாசனின் சாயலும் நினைவிற்கு வந்தது.

பிக் பாஸ் 6 நாள் 74
பிக் பாஸ் 6 நாள் 74

“நான் இந்த காலேஜ்லதான் எப்பவும் இருப்பேன்’ என்று பழம்பெரும் மாணவனாக பெருமையடித்த ஏடிகேவிடம் “நீங்க வாட்ச்மேனா?’ என்று கேட்டு பங்கம் செய்தார் மைனா. ‘சிங்காரவேலன்’ படத்தில் வரும் வடிவேலு மாதிரியே ஏடிகேவின் லுக் இருக்கிறது’ என்று மைனா செய்த கிண்டல் பொருத்தமானது. ஹைஸ்கூலில் ஆரம்பித்த கெட்ட பழக்கத்தை அசிம் இன்னமும் நிறுத்தவில்லை. தனலஷ்மியை ஓரங்கட்டி ‘என்னைத்தானே லவ் பண்றே?” என்று கேட்டு டார்ச்சர் செய்து கொண்டிருந்தார். ஏடிகேவோ ரச்சிதாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால் ‘காதல்’ என்கிற வார்த்தையே ரச்சிதாவின் டிக்ஷனரியில் இல்லையாம். ‘வேண்டாம் கோப்பால்’ என்று மறுத்துக் கொண்டிருந்தார்.

‘ஏ ஷப்பா.. ஏ ஷப்பா.. (யேசப்பா இல்லை) என்கிற பாடலுக்கு ஒருபக்கம் டிஸ்கோ நடனமும் இன்னொரு பக்கமும் பரதநாட்டியப் பயிற்சியும் நடந்தது. ‘கதிரவன் எவ்ள அளகா இருக்காருல்ல?’ என்று கதிரவனை மைனா சைட் அடித்துக் கொண்டிருக்க அதனால் டென்ஷன் ஆனார் ஏடிகே. ‘அழுக்கு மூட்டை, சுருட்டை முடி’ என்றெல்லாம் மைனா எழுதிய கடிதத்தின் இறுதியில் ஒரு டிவிஸ்ட் இருந்தது. அது ஏடிகேவிற்காம்.

பிக் பாஸ் 6 நாள் 74
பிக் பாஸ் 6 நாள் 74

‘பாரதிராஜான்னு ஒரு புதுப்பையன் டைரக்டரா வந்திருக்காரு. மார்க் மை வேர்ட்ஸ்.. பெரிய ஆளா வருவாப்பல.. அவர் கண்ணில் நீங்க பட்டா ஹீரோயினா ஆயிடுவீங்க” என்று ரச்சிதாவை விக்ரமன் உசுப்பேற்ற, கண்ணைச் சிமிட்டி சிமிட்டி சினிமா கனவில் மிதந்தார் ரச்சிதா. ‘ஏ.. உன்னைத்தானே’ என்கிற பாடலுக்கு நடனமாட ரச்சிதாவிற்கு அமுதவாணன் பயிற்சி தந்து கொண்டிருக்க, அதில் குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்பினார் ஏடிகே.

சைக்காலஜி வகுப்பு துவங்கியது. வருகைப் பதிவேட்டிற்குப் பின்னர் ஆரம்பித்தார் விக்ரமன். ஆனால் இந்த வகுப்பில் எதற்கு மாணவர்களை எக்ஸ், ஓ என்கிற ஆங்கில எழுத்துக்களின் வடிவில் தரையில் படுக்கச் சொன்னார் என்று தெரியவில்லை. பிக் பாஸிற்கு நிகராக யோசித்து ஒரு புதிய டாஸ்க்கை தந்தார் விக்ரமன். “நீங்க ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை இண்டர்வியூ செய்து வேலைக்கு எடுக்கணும். தகுதியான பாயிண்ட்ஸ் இருந்தா அதை எழுதுங்க, இல்லைன்னா மேம்படுத்திக்க வேண்டிய பாயிண்ட்ஸ் எழுதுங்க.. இவற்றை எழுதி பேட்ஜா மாட்டணும்” என்று அவர் சொல்ல நேர்காணல் பகுதி துவங்கியது.

'மாடில இருந்து கீழே குதிச்சா வேலை தரோம்’

தனலஷ்மியை இண்டர்வியூ செய்த ஷிவின் “பிக் பாஸிற்கு முன், பின்.. உங்கள் அனுபவம், மாற்றம் எப்படி இருந்தது?’ என்று நீண்ட கேள்வியை கேட்க ‘மாஸ்டர் ஒரு ஊத்தப்பம்’.. என்பது மாதிரி “நான் நானாத்தான் இருக்கேன்” என்று சுருக்கமாக முடித்து விட்டார் தனலஷ்மி. தேர்வில் அவர் பாஸ். மைனாவை இன்டர்வியூ செய்த தனலஷ்மி, ஏறத்தாழ அதே மாதிரியான கேள்வியைக் கேட்க “யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க மாட்டேன். சீரியஸா மாத்திக்கச் சொன்னாங்க. முடியல. காமெடியா இருக்கறதுதான் என் இயல்பு” என்று மைனா அளித்த விளக்கத்தை தனம் ஏற்றுக் கொண்டார்.

பிக் பாஸ் 6 நாள் 74
பிக் பாஸ் 6 நாள் 74

‘லேட்டரல் திங்க்கிங்’ தொடர்பாக சில விஷயங்களை கதிரவன் படித்திருக்கிறார் போலிருக்கிறது. எனவே ‘மாடில இருந்து குதிச்சாதான் வேலைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க” என்று ரச்சிதாவிடம் கேட்க “முடியாது. என் உயிர்தான் முக்கியம்’ என்று பிராக்டிக்கலான பதிலை அவர் சொல்ல “தவறான பதில். பாராஷூட் தாங்க... குதிக்கறேன்’ன்னு சொல்லி நீங்க வேலையைச் சம்பாதிச்சிருக்கலாம்” என்றார் கதிரவன். (தேங்கா எண்ணையை வெச்சு நான் எப்படி குதிக்கறது?!” என்று அமுதவாணனாக இருந்தால் கேட்டிருப்பார்!). ரச்சிதாவும் பாஸ்.

பிறகு ஃபேர்வெல் பார்ட்டியோடு கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வர ‘டாஸ்க்கும் முடிகிறது’ என்று சொல்லி காதில் தேன் வார்த்தார் பிக் பாஸ். பிறகு பிஸ்கெட் விளம்பரத்திற்கான ஆட்டங்கள். பிஸ்கெட்டை தூக்கிப் போட்டு வாயில் பிடிக்க வேண்டும், (தொண்டைல போய் சிக்கினா என்ன ஆவறது?!)

குக்கியை வாயில் வைத்துக் கொண்டே பாட வேண்டும்’ என்றெல்லாம் போட்டிகள் நடந்தன. (ஒரு பிஸ்கெட்டை விக்கறதுக்குள்ள என்னென்ன கிம்மிக்ஸ் பண்ண வேண்டியிருக்கு?!). இதில் அமுதவாணன் அணி பெரும்பாலான சுற்றுகளில் வெற்றி பெற்று காமிரா உள்ளிட்ட பரிசுகளை அள்ளிச் சென்றது.