Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 86: `Ticket to Finale’ டாஸ்க்; ரச்சிதாவின் விவாதம்;ஷிவின் அழுகை; அசிமின் தடுமாற்றம்

பிக் பாஸ் 6 நாள் 86

மத்தங்களுக்கு மரியாதை தர்ரது ஒரு க்வாலிட்டி” என்று ரச்சிதா ஆரம்பிக்க “அவங்களோட பிளஸ் பாயிண்டைப் பேசறதை விடவும், என்னைக் குறை சொல்றதுலதான் ஆர்வம் காட்டறாங்க” என்று ரச்சிதாவின் முதல் பாயிண்டை அநாயசமாக உடைத்தார் அசிம்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 86: `Ticket to Finale’ டாஸ்க்; ரச்சிதாவின் விவாதம்;ஷிவின் அழுகை; அசிமின் தடுமாற்றம்

மத்தங்களுக்கு மரியாதை தர்ரது ஒரு க்வாலிட்டி” என்று ரச்சிதா ஆரம்பிக்க “அவங்களோட பிளஸ் பாயிண்டைப் பேசறதை விடவும், என்னைக் குறை சொல்றதுலதான் ஆர்வம் காட்டறாங்க” என்று ரச்சிதாவின் முதல் பாயிண்டை அநாயசமாக உடைத்தார் அசிம்.

பிக் பாஸ் 6 நாள் 86
‘Ticket to Finale’ டாஸ்க் ஆரம்பமாகி விட்டது. புத்தியோடு, உடல் சக்தியையும் கலந்து ஆடும் வகையில் போட்டிகளை அமைத்தது பாராட்டுக்குரியது. ஆனால் நமக்கு ‘விவாதம்’ என்பதின் அடிப்படையான அர்த்தம் கூட இன்னமும் தெரியவில்லை என்பதை சம்பந்தப்பட்ட பகுதிகள் நிரூபித்தன.

தொலைக்காட்சிகளில் வரும் ‘அரசியல் விவாதம்’ போல ஒரே சந்தைக்கடை இரைச்சல். எதிர் தரப்பிற்கு பாயிண்ட்டுகளை ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்லும் பழக்கம் எப்போது வரும்? போலவே அதைப் பொறுமையுடன் கேட்டு பதில் சொல்லும் நாகரிகமும் எப்போது வரும்?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘மகான்’ படத்திலிருந்து ‘எவன்டா எனக்கு கஸ்டடி?’ என்கிற ரகளையான பாடலுடன் நாள் 86 விடிந்தது. மைக்கை சரியாக போடாமல் கேப்டன் ஏடிகேவை ஜாலியாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் அமுதவாணன். இது தொடர்பான உரையாடலில் விக்ரமன் அடித்த கமெண்ட்டிற்கு மைனா கோபித்துக் கொண்டார். ‘இதுக்கெல்லாமா கோபிச்சிப்பாங்க?’ என்று மற்றவர்கள் வியந்தனர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் பொதுவாக இன்னொரு புறம் பயங்கர சென்சிட்டிவ்வாக இருப்பார்கள்.

‘பிஸிக்கல் டாஸ்க் செய்யறதுக்கு உடம்பை தயாரா வெச்சிருக்கணும்’ என்பது போல் அமுதவாணன் அடித்த சர்காஸ்டிக் கமெண்ட்டிற்கு விக்ரமன் மெலிதாக கோபித்துக் கொண்டு “எனக்கு ஜிம்னாஸ்டிக் தெரியாது. எங்களுக்கு படிப்புதான் முக்கியம். ஒண்ணுமில்லாம வந்தவங்க நாங்க.. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு துறையில சிறப்பா இருப்பாங்க.. இதையே சொல்லிட்டு இருக்காதீங்க” என்று மெலிதாக டென்ஷன் ஆக, “ஏன்.. இப்படி கூல்” என்று பின்வாங்கினார் அமுதவாணன்.

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

‘வெற்றிக்கு தடம் பதிக்கும் பினாலே விளையாட்டு’

‘டிக்கெட் டூ பினாலே’ அறிவிப்பு ஆரம்பித்தது. ‘இறுதி வாரத்திற்கு நேரடியாக செல்ல ஒரு வாய்ப்பு. அதற்கான வாரம் இது. உடல் வலிமையோடு மன வலிமையும் தேவைப்படும் அளவிற்கு ஆட்டங்கள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பெயர்கள் கொண்ட டைல்கள் இருக்கும். போட்டியில் வென்று டைல்களைப் பெறுவதின் மூலம், கார்டன் ஏரியாவில் உள்ள ‘ஹைவே’யில் அதைப் பதிக்க வேண்டும். வெற்றிக்கான தடம் அதுதான். இறுதியில் யாரின் டைல்கள் அதிகம் இருக்கிறதோ, அவருக்குத்தான் ‘Ticket to Finale’ கிடைக்கும். ஒரு டாஸ்க்கில் முதலிடம் பிடிப்பவருக்கு 8 டைல்கள் தரப்படும். எட்டாம் இடத்தில் வருபவருக்கு ஒரு டைல். முதல் இடத்திற்கு வந்தவருடன் மற்றவர்கள் சவாலில் ஈடுபடலாம். சவாலில் ஈடுபவர் வென்ற எண்ணிக்கையை மற்றவருக்கு தர வேண்டும்’ என்று விதிகளை வாசித்தார் விக்ரமன்.

முதல் டாஸ்க் தொடங்கியது. ஒரு நீளமான பலகையின்மீது டைல்ஸ்களை அடுக்கி, அதன்மீது பந்துகளை உருட்டி, முனையில் உள்ள கூடையில் விழச்செய்ய வேண்டும். பந்தை வேகமாக உருட்டினால் டைல்ஸ்கள் சரிந்துவிடும். போட்டி ஆரம்பித்தது. முதலில் பந்தைக் கூடையில் போட்டு பிக் பாஸிடம் பாராட்டு வாங்கியவர் ஏடிகே. ஷிவின் ஆடும்போது ‘நல்ல உருட்டு' என்று பிக் பாஸ் கிண்டலடிக்க, ‘இருங்க தாத்தா .. உங்களை வெச்சுக்கறேன்” என்றார். அசிம் தடுமாறும் போது “என்ன அசிம்.. இப்படி உருட்டிட்டே இருந்தா எப்படி?” என்று பிக் பாஸின் கிண்டல்கள் தொடர்ந்தன. இந்த டாஸ்க்கில் குறைந்த நேரத்தில் பந்துகளைப் போட்டு முன்னணியில் வந்தவர் மைனா. கடைசியில் வந்தவர் விக்ரமன்.

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

விக்ரமனை சவாலுக்கு அழைத்தார் மைனா. இதனால் அவர் தோற்றால் கூட ஒரு டைலைத்தான் இழக்க வேண்டி வரும். ஆனால் ஏழாம் இடத்தைப் பிடித்தவரை சவாலுக்கு ஒருவேளை அவர் அழைத்திருந்தால் ஏழு டைல்களைப் பெறலாம். ஆனால் மைனா ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இரண்டாவது சுற்றின் சவாலிலும் மைனா வென்று, விக்ரமனின் டைலைப் பறித்தார். பிறகு நடந்த உரையாடலில் ‘மைனா ரிஸ்க் எடுக்க பயப்படறாங்க” என்று அமுதவாணனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரமன்.

ரணகளமான உஷ்ணத்துடன் நடந்த ‘விவாத மேடை’

டாஸ்க் 2, ‘நேருக்கு நோ்’ – ‘இந்த ஷோவிற்கு வந்தது முதல் அனைத்து விஷயங்களையும் சரியா செஞ்சீங்களா, இல்லையா?” என்று இரண்டு நபர்கள் நேருக்கு நேர் விவாதிக்க வேண்டும். இதை மற்ற போட்டியாளர்கள் பார்த்து மதிப்பிட்டு ‘விளக்கை’ எரிய வைப்பார்கள். யாரின் விளக்கு அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ, அவரே அந்தச் சுற்றின் வெற்றியாளர். அசிமுடன் மோத வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே ரச்சிதா சோகமாகி விட்டார். வில்லனுடன் அனுப்பப்படும் நாயகி போல கண்கலங்கினார். ‘மாத்தேன் போ’ என்று சிணுங்கினார்.

ஆனால் முதல் போட்டியே அசிம் Vs ரச்சிதாதான். “நான் யாரையும் காயப்படுத்தினதில்லை. மத்தங்களுக்கு மரியாதை தர்ரது ஒரு க்வாலிட்டி” என்று ரச்சிதா ஆரம்பிக்க “அவங்களோட பிளஸ் பாயிண்டைப் பேசறதை விடவும், என்னைக் குறை சொல்றதுலதான் ஆர்வம் காட்டறாங்க” என்று ரச்சிதாவின் முதல் பாயிண்டை அநாயசமாக உடைத்தார் அசிம். (மத்தவங்களை குறை சொல்லி, தன்னை உயர்த்திக் கொள்வது அசிமிற்கு மட்டுமே வழங்கப்பட்ட உரிமை!). “என்னால நார்மலாத்தான் இருக்க முடியும். இதுதான் என் இயல்பு” என்ற ரச்சிதாவிடம் “சமையல் டீம்ல இருந்தீங்க.. அந்தச் சேவையைத் தவிர வேற என்னதான் பண்ணீங்க.. சொல்லுங்க பார்க்கலாம்” என்று அசிம் எகத்தாளமாக கேட்க ‘சமைச்சு வெச்ச போதெல்லாம் வந்து முழுங்கிட்டு பேச்சைப் பாரு’ என்று ரச்சிதாவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம்.

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

“நான் எல்லா டாஸ்க்கும் பண்ணியிருக்கேன். அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா?” என்று சூடாக ஆரம்பித்தார் ரச்சிதா. “வேற.. வேற.. என்ன எண்டர்டெயின்மெயின்ட் பண்ணியிருக்கீங்க?” என்று அசிம் மடக்க “நான் நானாத்தான் இருக்கேன். அதுவே போதும்” என்று ரச்சிதா சொல்ல “பெய்ட் ஹாலிடேஸ்ல இருக்கீங்களா?’ன்னு பார்வையாளர்கள் கேட்டது ஞாபகம் இருக்கா?” என்று அசிம் கேட்க (நல்ல ஞாபக சக்தி!). “அது போன வாரம். இது இந்த வாரம்.. குறை சொல்றதே வேலையா வெச்சிருக்கீங்க. உங்க கிட்ட எந்த நிறையும் எனக்குத் தெரியல” என்று தேங்காய் உடைப்பது போல் சொன்னார் ரச்சிதா. அசிமும் ரச்சிதாவின் குறையைத்தான் நோண்டிக் கொண்டிருந்தாரே தவிர, தன் பிளஸ் பாயிண்ட்டுகளை சொல்லவில்லை. இறுதியில் ரச்சிதாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் அவர் வெற்றி.

‘ஷிவின் பேசவே விட மாட்றாங்க’ – ஏடிகே ஆட்சேபம்

அடுத்ததாக மோத வந்தவர்கள் ஏடிகே Vs ஷிவின். “நான் இங்க எண்பது நாளைக்கு மேல இருக்கேன். நீங்க ஜெயிக்கறதுக்கு வேற காரணம் இருக்கலாம். எனக்கு சென்ஸ் ஆஃப் ஹியூமர்’ இருக்கு” என்று அபத்தமாக ஆரம்பித்தார் ஏடிகே. ‘அது என்ன வேற காரணம்?!’ “எல்லோரும் சேவ் ஆகற காரணம்தானே எனக்கும் இருக்கும்?” என்று சரியாக மடக்கினார் ஷிவின். “கத்திப் பேசி சாதிக்கணும்னு அவசியமில்ல” என்று ஷிவினின் கத்தலை ஏடிகே குத்திக் காட்ட “ராஜாங்கம் டாஸ்க்ல நீங்க கூடத்தான் அசிம் கூட ஹைடெஸிபல்ல கத்திச் சண்டை போட்டீங்க. பிரெண்ட்ஷிப் ஜோன்ல போனப்புறம் அசிமை குறை சொல்ல பயப்படறீங்க” என்று நேரடியாக இறங்கி அடித்தார் ஷிவின்.

“இவங்க பேசவே விட மாட்றாங்க.. அசிம் கிட்ட தனியா சொல்லியிருக்கேன். குத்தம் சொல்லிட்டே இருக்கக்கூடாது” என்று ஏடிகே சொல்ல “நான் கேமிற்கு உண்மையா இருக்கேன்” என்று ஷிவின் சொல்ல பஸ்ஸர் அடித்தது. இதில் ஷிவின் வெற்றி.

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

‘கதிரவன் டிப்ளமஸியா இருக்காரு’ – விக்ரமன் புகார்

அடுத்ததாக விக்ரமன் Vs கதிரவன். யானைக்கும் பூனைக்குமான சண்டை இது. விக்ரமன் ஆரம்பித்தார் “நான் நானா இருக்கறதுதான் என்னோட முதல் அடிப்படை தகுதி. ரொம்ப மரியாதையோட சொல்றேன் கதிர். நீங்க ரொம்ப டிப்ளமஸியா இருக்கீங்க.. நடுநிலைன்ற பேர்ல ஜாக்கிரதையா ஆடறீங்க. நான் மத்தவங்க தப்புகளைச் சொல்லி பகையைச் சம்பாதிச்சிருக்கேன். நீங்க ஆர்க்யூமெண்ட்டை அவாய்ட் பண்ணிடறீங்க.. துணிச்சல் இல்லை. சேஃப் பிளே பண்றீங்க” என்று கதிரவனின் பலவீனத்தை சரியாகத் தொட்டுப் பேசினார் விக்ரமன்.

“நான் இங்க நிறைய எண்டர்டெயின்மெண்ட் பண்ணியிருக்கேன். பிரச்சினை வரும் போதுதான் நீங்க உள்ளே வரீங்க. ஆனா என்னைப் போன்ற ஆட்கள் இருந்தால் பிரச்சினையே வராது. உங்கள மாதிரி ஆட்களுக்கு அவசியமே நேராது” என்று கதிரவன் சொன்னது சரியான பாயிணட். ஆனால் இங்குள்ள வழக்கப்படி ஒரு விஷயத்தை உரத்த குரலிலும் எதுகை மோனை ரைமிங்கிலும் சொன்னால்தான் மக்களிடம் உடனே சென்று சேரும். அப்படியே நாம் பழகி விட்டோம். இந்த நோக்கில் கதிரவன் மென்மையாகச் சொன்னது பலவீனமான அம்சம்.

“நீங்க டிப்ளமஸியா இருக்கீங்கன்றதை நான்தான் முதல்ல எக்ஸ்போஸ் பண்ணேன். அதுக்கப்புறம்தான் நீங்க நாமினேட் ஆனீங்க” என்று அபத்தமான பாயிண்டை முன்வைத்தார் விக்ரமன். எனில் சக போட்டியாளர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ இந்த விஷயம் தெரியாதா? முதன் முதலில் இந்த ‘உண்மை’யைக் கண்டுபிடித்த பெருமை விக்ரமனுக்குத்தான் சேருமா? இந்தச் சுற்றில் விக்ரமன் வெற்றி.

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

ரத்தபூமிக்கு நடுவே நடந்த விக்ரமன் – ஷிவினின் ஆக்ரோஷமான மோதல்

அடுத்து ஆரம்பித்த ஷிவின் Vs விக்ரமன் விவாதம் ரணகளமாக இருந்தது. உரையாடல் முடிந்த பிறகும் கூட அதன் சூடு தணியாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். ‘அதை விட இது இண்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு’ என்று சர்காஸம் செய்தார் மைனா. யார் குரலும் கேட்காமல் ஒரே சந்தைக் கடை இரைச்சல். இதை்ததான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னேன். நமக்கு விவாதம் செய்யத் தெரியவில்லை. மாறாக பரஸ்பரம் ஒருவரைப் பார்த்து ஒருவர் கத்திக் கொண்டேயிருக்கிறோம். ஷிவினும் விக்ரமனும் இதற்கு விதிவிலக்கல்ல.

“ரேங்கிங் டாஸ்க்ல நான் அசிமிடன் முதல் இடத்திற்குப் போட்டியிட்டேன். ஆனா நீங்க ரெண்டாம் இடத்திற்குத்தான் போட்டியிட்டிங்க. அப்படின்னா.. உங்களை விட நான் பெட்டர்ன்னு அதுலயே தெரிஞ்சுடுச்சே?” என்று ஆரம்பத்திலேயே டாப் கியரைப் போட்டார் விக்ரமன். “நானும்தான் அசிமோட சண்டை போட்டேன். நான் அவருக்கு பயப்படலை” என்று பதிலடி தந்தார் ஷிவின். (அசிமை அடிச்சுதான் இவங்க பெரிய ஆளா ஆகறாங்க போல!) “கத்திப் பேசறதே உங்க வழக்கம்” என்று விக்ரமன் சொல்ல “நீங்க கூடத்தான் அசிமை ‘ஏய்’ன்னு சொன்னீங்க” என்று பழைய பாயிண்ட்டை தூசு தட்டி எடுத்தார் ஷிவின். இது ஷிவினின் அபத்தமான குற்றச்சாட்டு. அவமதிப்பாக பேசி கோபம் அடையத் தூண்டிய அசிமிடம் ஒரு சிறிய எதிர்வினையைக் கூடவா விக்ரமன் செய்யக்கூடாது?!

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

“ஏய்ன்றது தப்பு கிடையாது” என்று விக்ரமன் சொல்ல “நீங்களும் கத்தறீங்க –ன்ற உதாரணத்திற்குத்தான் அதைச் சொன்னேன்” என்று ஷிவின் பதிலடி தர “நீங்க மரியாதையே தர மாட்டீங்க” என்று விக்ரமன் குற்றம் சாட்ட “அசிம் பட்டனைப் போடுங்க. தொப்பை வெளிய வருது –ன்னு நான் அசிமை செஞ்சது ஒரு கிண்டல். ஆனா பாடி ஷேமிங் பண்ணாதீங்க –ன்னு விக்ரமன் உள்ளே வராரு” என்று ஷிவின் இன்னொரு சம்பவத்தை உதாரணம் காட்டினார். ‘அய்யோ.. அதுவும் காமெடியா சொன்னதுதாங்க” என்று விக்ரமன் தலையை பிடித்துக் கொள்ள “இவரு எப்ப சீரியஸா சொல்வாரு.. எப்ப காமெடி பண்ணுவாருன்னு எப்படி தெரியும்” என்று பதிலுக்கு வெடித்தார் ஷிவின்.

‘என்னைத் தனியா விடுங்க’ – ரச்சிதாவிடம் வெடித்த ஷிவின்

இருவரும் பரஸ்பரம் கத்தி ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்தாலும் கூட அந்த அறையின் உஷ்ணம் குறையவில்லை. ஷிவினின் கத்தல் பற்றி எரிச்சல் கொண்ட ஏடிகேவும் களத்தில் குதிக்க ரணகளத்தின் சதவீதம் அதிகரித்தது. பிறகு அசிமும் ஆட்சேபம் எழுப்ப, நரம்பு வெடித்து விடுமளவிற்கு சுழன்று சுழன்று போராடினார் ஷிவின். இறுதி்யில் ஷிவின் வெற்றி அடைய ‘அடப்பாவிங்களா?’ என்று ஆச்சரியமடைந்தார் விக்ரமன். எட்டு டைல்களைப் பெற்று முதல் இடத்திற்கு வந்தார் ஷிவின்.

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

விக்ரமன் உள்ளிட்ட மற்றவர்களுடன் செய்த விவாதத்தின் சூடு காரணமாக உணர்ச்சிப் பெருக்கில் அழுத ஷிவினிடம் “இது டாஸ்க்குதானே?” என்று மற்றவர்கள் ஆறுதல் சொல்ல முன்வரும் போது ‘என்னை தனியா விட்டுருங்க.. நானா இதுல இருந்து வெளியே வரேன்” என்று ஷிவின் சொன்னது சரியான அணுகுமுறை. ஆனால் ரச்சிதாவோ உரிமை எடுத்துக் கொண்டு “ஏன் ஷிவின் அழறே.. இது தேவையில்லை?” என்று உள்ளே வர “அதான் சொல்றேன்ல. விட்ருங்க. நானா இதை பிராசஸ் பண்ணிக்கறேன்” என்று வெடித்தார் ஷிவின். ஆனால் இந்தக் கோபத்தை ரச்சிதா பிறகு கூலாக எடுத்துக் கொண்டது பாராட்டத்தக்கது. ‘உனக்கு பன்ச்சிங் பேக்’-ஆ இருந்தா கூட எனக்கு ஓகேதான்’ என்றெல்லாம் ரச்சிதா சொன்னது அவரின் பெருந்தன்மை. ஆனால் நெருங்கிய நட்பு என்கிற உரிமையை அநாவசிய நேரத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் இதில் உள்ள நீதி. ஒவ்வொருக்குமான பிரைவேட் ஸ்பேஸை அனுமதிக்க வேண்டும்.

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

‘கதிரவனோட டிப்ளமஸியை நான் சுட்டிக் காட்டினப்புறம்தான் அவர் நாமினேட் ஆனாரு’ன்னு நான் சொன்னது கருத்து திணிப்பு மாதிரி ஆகிடுச்சு. அதற்காக நான் மன்னிப்பு கேட்கறேன்” என்று சபையில் பொது மன்னிப்பு கோரினார் விக்ரமன். இதுவும் பாராட்டத்தக்க விஷயம்தான். ‘ஓகே. கூல்’ என்று இதை இயல்பாக அணுகினார் கதிரவன். “ஷிவின் கத்தினது ஒரு பக்கம். விக்ரமனும் அவரைப் பேச விடலை” என்று அமுதவாணன் உள்ளிட்டோர் பிறகு வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள்.

டாஸ்க்கில் தடுமாறிக் கொண்டிருக்கும் அசிம்

சூட்டோடு சூடாக அடுத்த போட்டியை அறிவித்தார் பிக் பாஸ். சாய் பலகையின் மீது ஒரு முனையில் இருந்து நடந்து அடுத்த முனையில் பந்துகளை வைக்க வேண்டும். சற்று சமநிலை தவறினால் கூட பந்துகள் கீழே விழுந்து விடும். மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். முதல் சுற்றில் விக்ரமன், ரச்சிதா, ஷிவின், அமுதவாணன் ஆகிய நால்வரும் விளையாடினார்கள். அமுதவாணன் ஆரம்பத்தில் இருந்தே முன்னணியில் இருந்தார். ‘சர்க்கஸ்மேன்’ மாதிரி அவரால் எளிதில் பேலன்ஸ் செய்ய முடிந்தது. ஆனால் தடுமாறிக் கொண்டிருந்த ஷிவின் முதல் இடத்திற்கு திடீரென வந்து சேர்ந்தார். அமுதவாணனுக்கு இரண்டாம் இடம். “ஷிவின் ஒரு பந்தை நீங்க மறுபடியும் வெச்சாகணும்” என்று பிக் பாஸ் அறிவித்தார். எனவே இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படலாம். அமுதவாணனுக்கு முதல் இடம் கிடைக்கக்கூடும்.

பிக் பாஸ் 6 நாள் 86
பிக் பாஸ் 6 நாள் 86

அடுத்த ரவுண்டில் ஏடிகே, அசிம், மைனா, கதிரவன் ஆகியோர் ஆடினார்கள். ‘சிரிக்காதீங்கப்பா..’ என்று ஆரம்பத்திலிருந்தே அசௌகரியமாக இருந்தார் அசிம். ஆச்சரியகரமாக கதிரவன் முதலில் முடித்து விட, ஏடிகேவும் மைனாவும் ஒரு மாதிரியாக தொடர்ந்து செய்து முடித்தார்கள். ஆனால் அசிம் மட்டும் தொடர்ந்து தடுமாறிக் கொண்டே இருந்தார். அவரால் பேலன்ஸ் செய்து நடக்க முடியவில்லை. உடம்பு முழுக்க வியர்வை ஊற்றிக் கொண்டே இருந்தது. “ஸாரி.. என்னால டைம் ஆகுது” என்று அவர் வருத்தப்பட “கூல். நேரம் எடுத்து பொறுமையா பண்ணு” என்று மற்றவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். ரச்சிதா கொட்டாவி விட்டார். நேரம் நீண்டு கொண்டே இருந்தது.

‘ஏன் பேலன்ஸ் வர மாட்டேங்குது.. இந்தக் கம்பி சரியில்லையோ?” என்றெல்லாம் அசிம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த காட்சியோடு எபிசோட் நிறைந்தது. முந்தைய எபிசோடில் பொழுது விடிய விடிய பேசியே டாஸ்க்கை வென்றார் அசிம். ஆனால் இந்த ஆட்டத்தை அவர் ஆடி முடிப்பதற்குள் பொழுது அதுவாக விடிந்து விடும் போலிருக்கிறது. ஆடி முடித்தாரா, இல்லையா என்பது நாளைக்குத் தெரிந்து விடும்.