Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 95: `சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸு' - பரஸ்பரம் பாராட்டிக் கொண்ட அசிம் - விக்ரமன்

பிக் பாஸ் 6 நாள் 95

பிக் பாஸ் ரோலைத் திறமையாக ஆடிக் கொண்டிருந்தார் ஏடிகே. ராபர்ட்டை தனியாக அழைத்து ஒரு சீக்ரெட் டாஸ்க் தந்தார். அமுதவாணனை ‘மூக்குத்தி’யாக நினைத்துப் பழக வேண்டுமாம்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 95: `சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸு' - பரஸ்பரம் பாராட்டிக் கொண்ட அசிம் - விக்ரமன்

பிக் பாஸ் ரோலைத் திறமையாக ஆடிக் கொண்டிருந்தார் ஏடிகே. ராபர்ட்டை தனியாக அழைத்து ஒரு சீக்ரெட் டாஸ்க் தந்தார். அமுதவாணனை ‘மூக்குத்தி’யாக நினைத்துப் பழக வேண்டுமாம்.

பிக் பாஸ் 6 நாள் 95
ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பிறகு, நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொண்ட ஒரு மனிதனுக்குள் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நிகழும். ஆணவம், அகங்காரம், பொறாமை, கோபம், சுயநலம் போன்ற கீழ்மைகளை மட்டுப்படுத்தி மற்றவர்களுக்காக யோசிக்க அவன் ஆரம்பிப்பான். தான் கடந்து வந்த பாதைகளில் கிடைத்த அனுபவ வெளிச்சத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்ட முயல்வான். ஒரு வாழ்க்கையின் நிறைவை நோக்கி நகர்கிற முதிர்ச்சி அது.
பிக் பாஸ் 6 நாள் 95
பிக் பாஸ் 6 நாள் 95

இந்த சீசனும் அப்படியொரு நிறைவை நோக்கி நகர்கிற மனநிலையை நமக்குள் உருவாக்குகிறது. மேலும் பல புதிய விருந்தினர்கள் உள்ளே வந்தார்கள். பழைய நண்பர்களை மீண்டும் பார்க்கிற உற்சாகமும் கலகலப்பும் வீட்டிற்குள் ஏற்பட்டிருக்கிறது. இந்த ரத்தபூமியில் ஏராளமாக நடந்த சர்ச்சைகளுக்குப் பிறகு ஒட்டுமொத்த வீடும் ஒரு பாசிட்டிவ் மோடிற்கு மாறியிருக்கிறது. அசிமும் விக்ரமனும் கூட பரஸ்பரம் மதிப்பு தர ஆரம்பித்து விட்டார்கள். பிக் பாஸ் வீடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் இப்படித்தான் மாற வேண்டும். மாறுமா?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பிக் பாஸ் ரோலைத் திறமையாக ஆடிக் கொண்டிருந்தார் ஏடிகே. ராபர்ட்டை தனியாக அழைத்து ஒரு சீக்ரெட் டாஸ்க் தந்தார். அமுதவாணனை ‘மூக்குத்தி’யாக நினைத்துப் பழக வேண்டுமாம். ராபர்ட் அந்த மாதிரியாக எதையோ முயற்சி செய்ய, அமுது அதை சட்டென்று பிக்கப் செய்து கொண்டு ‘போங்க மாஸ்டர்’ என்று நளினத்துடன் நடந்து சென்றது சிறப்பு. நடிகனுக்குள் உள்ள அடிப்படையான திறமை இது. “RAP பாடுங்க” என்று அசலுக்கான உத்தரவு வந்தது. ‘ஏரியா புள்ள’யின் மனநிலையை தனது வார்த்தைகளில் கச்சிதமாக கொண்டு வந்து பாடினார் அசல். ஏடிகேவும் ஒரு Rapper என்பதால் உள்ளிருந்து அதை மிகவும் ரசித்தார். அவரின் ‘ஒரு நாள் முதல்வர்’ வாழ்க்கை முடிந்தது. “வீடியோல எல்லோரும் பார்க்க நல்லாயிருக்கீங்க” என்று சிரித்தபடி வெளியே வந்தார் ஏடிகே. (இதையே பலரும் சொல்கிறார்கள்.) அசல் தன்னிடம் பேச மறுப்பது குறித்த ஆதங்கம் இன்னமும் ஏடிகேவிடம் இருக்கிறது. “அசிங்கமாப் போச்சு குமாரு” என்று அனத்துகிறார். (ஒருவேளை அசல் செய்வதும் சீக்ரெட் டாஸ்க்கோ?!).

பிக் பாஸ் 6 நாள் 95
பிக் பாஸ் 6 நாள் 95

‘கதிரு’ என்கிற வார்த்தை வருகிற பாடலுடன் நாள் 95 விடிந்தது. வெடிகுண்டு எண்.6-ஐ அறிவித்தார் பிக் பாஸ். ராஜாங்கம் டாஸ்க்கின் போது ஒளிந்திருந்த அதே இடத்தில் தனலஷ்மி ஒளிந்திருக்க, வெடிகுண்டை தேடிப் பார்த்த விக்ரமன், திடீரென்று ஒரு உருவம் உள்ளிருந்து வரவும் பயந்து விட்டார். அது ஆளே மாறிப் போயிருந்த தனலஷ்மி. பளபள ஆடையில், கலக்கலான ஒப்பனையுடன் இருந்தார். தனலஷ்மி தன் கையில் பிக் பாஸ் லோகோவைப் பச்சை குத்தியிருந்ததைப் பார்த்து ‘ஸ்வீட்’ என்று மகிழ்ந்து போனார் பிக் பாஸ்.

‘கலர் கோழி அமுதவாணன்’ – ஷிவின் அடித்த கமெண்ட்

அடுத்த சவால் அமுதவாணனுக்கு. அவர் தன் தலையில் பொன்னிற டையை அடித்துக் கொள்ள வேண்டும். பிக் பாஸ் வீட்டின் ஆஸ்தான ஒப்பனையாளர் மைனா அந்த திருப்பணியை மேற்கொள்ள, வெளியே வந்த அமுதுவைப் பார்த்து ‘கலர் கோழி மாதிரி இருக்கு. பின்னாடி பனம் பழம் சுட்ட மாதிரி இருக்கு’ என்றெல்லாம் ரகளையாக கிண்டலடித்தார் ஷிவின். ‘ஒரு ஃபைனலிஸ்ட்டை இப்படியா அசிங்கப்படுத்துவாங்க?!” என்பது போல் அடிக்கடி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே இருந்தார் அமுது.

“மேக்கப் போடாம நீங்க பார்க்க நல்லாவேல்ல” என்று அசிமிடம் சொன்னார் தனலஷ்மி. வேறு யாருக்கும் இதை வெளிப்படையாகச் சொல்ல துணிவு வராது. “மூஞ்சைக் கூட கழுவக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க” என்று சமாளித்தார் அசிம். பிக் பாஸ் அசிமை நூதனமாக பழிவாங்க முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. “ஆனா உங்க கெட்அப் நல்லாயிருக்கு” என்று காம்ப்ளிமென்ட் செய்து சமன் செய்தார் தனா.

தனலட்சுமி
தனலட்சுமி

“வெளில போனப்புறம் ஜாலியா இருந்துச்சு. ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட வரலை. (அப்படியா?!) மக்கள் நாயகின்னுல்லாம் ஹாஷ்டேக் போட்டதைப் பார்த்தேன்” என்று மக்களிடம் பெருமிதப்பட்டார் தனலஷ்மி. பிறகு விக்ரமனிடம் “மத்தவங்க கிட்டல்லாம் நான் கோபம் காட்டினதைப் பாராட்டினீங்க.. ஆனா உங்க கிட்ட வரும் போது மட்டும் மாறிட்டீங்க” என்று சந்தேகத்தைக் கேட்க, “கோபம் வேற. ரௌத்ரம் வேற” அதற்கு விக்ரமன் விளக்கமளித்தார். ‘தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?’ என்பதுதான் தனலஷ்மி கேட்க வந்த கேள்வி. “சட்னியில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. அதில் தக்காளி சட்னியை தேர்வு செய்து ஒற்றைப் பார்வையில் நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை’ – இப்படியெல்லாம் கூட விக்ரமன் பேசக்கூடும்.

அடுத்ததாக ஷிவினை பிக் பாஸ் ஆக்கினார்கள். ஆனால் ஷிவினால் சிரிப்பை அடக்க முடியாமல் பேச முடியவில்லை. இதனால் தனலஷ்மி வெடிச் சிரிப்பை வைக்க, மற்றவர்களுக்கும் அது தொற்றிக் கொண்டது. ஆனால் தனது அதிகாரத்தை வைத்து ஒரு நல்ல காரியத்தை ஷிவின் மேற்கொண்டது சிறப்பு. ‘விருந்தினர்கள் குழந்தைகளாக மாறுங்க. போட்டியாளர்கள் அவர்களைப் பார்த்துக்கங்க’ என்கிற டாஸ்க்கை வைத்தார்.

ஷிவின்
ஷிவின்

பிறகு அசலை அழைத்து ‘ஏடிகேவின் உடையை மாற்ற வேண்டும்’ என்று சீக்ரெட் டாஸ்க்கை தந்தார் ஷிவின். “அங்கிள்.. என் டிரஸ்ஸூ தரேன்.. போட்டுப்பீங்களா?’ என்று அசல் கேட்க, இன்ப அதிர்ச்சிக்கு மாறிய ஏடிகே “கொடுடா செல்லம்” என்று ஆசையோடு வாங்கி போட்டுக் கொண்டார். ‘தன்னிடம் பேச மாட்டேன்’ என்று சொன்ன அசல், திடீர் பாசம் காட்டியதால் ஏடிகேவிற்கு மகிழ்ச்சி. பிரிந்திருந்தவர்களை ஒன்று சேர்த்த ஷிவினுக்குப் பாராட்டு. இத்தோடு அவரின் ‘பிக் பாஸ் வாழ்க்கை’ முடிந்தது.

ரெட் கார்ப்பெட் வரவேற்புடன் வந்த மணிகண்டன்

கன்ஃபெஷன் அறையில் சிறப்பு தரிசனம் தந்தார் மணிகண்டன். பிக் பாஸ் போல அவர் பேச முயன்றாலும் மைனா உடனே கண்டுபிடித்து விட்டார். அவரின் முகத்தில் அத்தனை சிரிப்பு. அத்தனை உற்சாகம். “ஒரு விஐபி உள்ளே வரப் போறார். அவருக்கு வரவேற்பு சிறப்பா இருக்கணும்” என்று மணி சொல்ல, உண்மையிலேயே ரெட் கார்ப்பெட், ரோஜாப்பூக்கள் இருந்தன. ‘அடப்பாவி மக்கா... நான் பச்சை குத்தினதெல்லாம் வேஸ்ட்டா போச்சே.. நான் வரும் போது மட்டும் இந்த வரவேற்புல்லாம் இல்லையே?” என்று ஜாலியாக கோபப்பட்டார் தனலஷ்மி.

‘வாரேன்.. வாரேன். சீமராஜா’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க, கெத்தாக நுழைந்தார் மணி. மங்கைகள் பூக்களைத் தூவி வரவேற்றார்கள். (பழைய இளவரசர் ஆச்சே?!). போர் தளபதி உள்ளே லுங்கி, பனியனுடன் நின்று கொண்டிருந்தார். “எல்லோரும் நல்லா விளையாடறீங்க” என்கிற டெம்ப்ளேட் புகழுரையைச் சொன்ன மணி, பிறகு ‘நான் எந்த எபிசோடையும் பார்க்கலை’ என்று காலை வாரினார். “என்னைப் பத்தி ஏதாவது தப்பாத் தெரியுதா.. சரியா விளையாடலைன்னு சொல்றாங்கடா” என்பது போல் கவலை முகத்துடன் மைனா விசாரிக்க “ப்ரீயா வுடு” என்றார் மணி.

மணிகண்டன்
மணிகண்டன்

அடுத்ததாக கதிரவன் ‘பிக் பாஸ்’ ஆனார். ஷிவினைப் போலவே இவரும் தனக்கு வந்த வாய்ப்பை பாசிட்டிவ்வாக பயன்படுத்தியது நன்று. “ஒருவரிடம் உள்ள நல்ல குணங்களைப் பற்றி பேச வேண்டும்’ என்று கதிரவன் சொல்ல, ‘அடப்பாவி. விட்டா ஷோவோட நோக்கத்தையே மாத்திடுவான் போலயே’ என்று அசல் பிக் பாஸ் உள்ளே ஜெர்க் ஆகியிருக்கலாம். “அமுதவாணனின் ஹியூமர் பெஸ்ட்” என்று ஷிவின் பாராட்ட, “ஏடிகே ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட். உடனே ஸாரி சொல்லிடுவார்” என்று அமுதவாணன் பாராட்டினார். ‘அதனால அவரை நாமினேட் பண்றேன்’ என்று மைனா அந்தப் பாராட்டை சர்காஸடிக்காக முடித்து வைக்க சபையில் சிரிப்பொலி எழுந்தது.

ஏ.டி.கே
ஏ.டி.கே

“பாசிட்டிவ்வான கேரக்ட்டர்” என்று மைனாவைப் பாராட்டினார் ஏடிகே. இந்த டாஸ்க்கில் விக்ரமனும் அசிமும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டதுதான் சிறந்த காட்சி. “முகத்துக்கு நேரா பேசறது அசிம் கிட்ட எனக்கு பிடிச்ச பழக்கம். நான் அவரை நேசிச்ச தருணங்கள் இருக்கு. அவரோட பேச்சுத்திறமை பிடிக்கும். பிக் பாஸையே டயர்ட் ஆக்கிட்டாரு. கான்பிடன்ஸ் லெவல் அதிகம். எளிதில் சோர்ந்து விட மாட்டார்” என்று அசிமின் நல்ல பக்கங்களை விக்ரமன் பகிர்ந்து கொள்ள கையெடுத்து கும்பிட்டார் அசிம்.

பரஸ்பரம் பாராட்டிக் கொண்ட ‘தல தளபதி்’…

இதே போல் விக்ரமனைப் பாராட்டிய அசிம் ‘எனக்கும் அவருக்கும்தான் அதிக முரண் வந்திருக்கு. ‘தன்னிலை அறிதல்’ன்ற விஷயத்தை அவர் கிட்ட பார்த்திருக்கேன். ஒருவரின் கோபம் அவரைப் பாதித்து விடக்கூடாது’ என்பதற்கு சரியான உதாரணம் அவர். அவரோட கொள்கை, சமூகப் பார்வை, அவதானிப்புத்தன்மை, மத்தவங்களை பேச விடறது போன்ற குணங்கள் பிடிக்கும்” என்று அசிம் சொல்ல வீடே பாசிட்டிவ் மோடிற்கு மாறியது.

மைனாவின் ஃபேவரைட் பொம்மையை திருடும் டாஸ்க்கை மணிக்கும், ஷிவினின் மேக்கப் பொருட்களை ஒளித்து வைக்கும் டாஸ்க்கை ராபர்ட்டிற்கும் தந்தார் ‘பிக் பாஸ்’ கதிவரன். இருவரும் கனகச்சிதமாக செய்து முடித்தார்கள். இத்தோடு கதிரவனின் வாய்ப்பு முடிந்தது. இத்தனை மென்மையான பிக் பாஸை உலகம் பார்த்திருக்காது.

விக்ரமன்
விக்ரமன்

படத்தலைப்புகளை கண்டுபிடிக்கும் விளையாட்டில் ‘க.. க.. போ’ என்பதை சொல்வதற்குள் பத்து முறை வாந்தியெடுத்துக் காட்டினார் முத்து. பிறகு தனலஷ்மி வந்து ‘குத்த வைத்து’ காட்ட வேண்டியிருந்தது. அசிம் சொன்ன தலைப்பை எளிதாக மற்றவர்களுக்கு கடத்தினார் விக்ரமன். ஸ்டோர் ரூமின் வழியாக சர்ப்ரைஸ் எண்ட்ரி தந்தார் க்வீன்சி. இந்த முறையும் அவரைப் பார்த்து பயந்து விட்டார் விக்ரமன். (இத்தனை பயந்த புள்ளையைப் போயி...!) உற்சாகத்துடன் வந்த க்வீன்சியை அனைவரும் உண்மையான மகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக் கொண்டனர். “நீ போனப்புறம்தான் எனக்கு ஒண்ணு புரிஞ்சது. அது டஃப்பான பிளேயரா இருந்தா கூட திடீர்ன்னு எப்ப வேணா தூக்கிடுவாங்க போல” என்று மைனா ஆச்சரியத்துடன் சொல்ல ‘எனக்கு வெளில நல்ல மரியாதை கிடைச்சது' என்றார் தனம்.

‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே’ – க்வீன்சியின் நடனம்

அடுத்ததாக ‘பிக் பாஸ்’ ஆனவர் விக்ரமன். ‘மல்லிப்பூ’ பாடலுக்கு க்வீன்சியை நடனமாடச் சொல்லி வேடிக்கை பார்த்தார் புதிய பிக் பாஸ். (விக்ரமனின் மனசுக்குள்ளயும் ஒரு மல்லிப்பூ பூத்திருக்கு பாரேன்!). மைனாவை ஆங்கிலத்தில் பேசச் சொல்லி கேட்க “வாட் யூ ஆர் டாக்கிங்” என்று தபால் வழிக்கல்வி ஆங்கிலத்தைக் காட்டினார் மைனா. ‘ஒரே ஞாபகம்’ என்கிற பாடலை கதிரவன் பாட, அவரை ரொமாண்டிக் லுக்குடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஷிவின். ‘பிரகாஷ் ராஜ்’ வாய்ஸை மிமிக்ரி செய்யறதுக்கு வாந்தியெடுத்தா போதும்’ என்று கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார் அமுதவாணன். (இருடி செல்லம்! முத்துப்பாண்டி வராரு!).

அடுத்த ‘சர்ப்ரைஸ் எண்ட்ரி’யாக நிவாஷிணி உள்ளே வந்தார். இவர் அரிசி மூட்டைக்குள் ஒளியவில்லை. மெயின் கதவு வழியாக வந்தார். இவரின் மழலைத் தமிழை நீண்ட நாள் கழித்துக் கேட்கும் போது அத்தனை ‘அசலான’ மகிழ்ச்சியாக இருந்தது. அசலின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

ராபர்ட் - நிவாஷினி
ராபர்ட் - நிவாஷினி

அடுத்து நிகழ்ந்தது ஒரு ஜாலியான போட்டி. ஒருவர் பின் ஒருவராக இரண்டு வரிசைகளில் அமர வேண்டும். கண்ணைக் கட்டிய நிலையில், முன்னே இருப்பவர் தரும் மாவை அப்படியே கையில் வாங்கி, பின்னால் இருப்பவரின் தட்டில் கொட்ட வேண்டும். இதில் எல்லோருக்குமே முகம், தலை எல்லாம் மாவு கொட்டியது. அதிக டாமேஜ் மைனாவிற்குத்தான். “பேசாதீங்க.” என்று நடுவர் நிவா பலமுறை கெஞ்சியும் மக்கள் கேட்கவில்லை. ஒட்டுமொத்த கார்டன் ஏரியாவே மாவினால் குப்பையானது.

தியாக வாழ்க்கையை பாதியிலேயே கை விட்ட அசிமிற்கு ‘லுங்கி, பனியனை’ மறுபடியும் பிடிவாதமாக அனுப்பினார் பிக் பாஸ். “ப்ளீஸ்... பிக் பாஸ்.. அந்த டிரஸ் ரொம்ப அசெளகரியமா இருக்கு” என்று அசிம் கெஞ்சிக் கொண்டிருந்த காட்சியோடு எபிசோட் நிறைந்தது.

அசிமும் விக்ரமனுமே பரஸ்பரம் நல்ல குணங்களைப் பேசி ஒண்ணாயிட்டாங்க.. ஆகவே...ஆதரவாளப் பெருமக்களே.. சண்டை முடிஞ்சுடுச்சு.. வாங்க.. பிள்ளை குட்டிங்களை படிக்க வைக்கலாம்!