Published:Updated:

அர்ச்சனா டு அனிதா சம்பத்... பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் கம்ப்ளீட் லிஸ்ட்!

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்

பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முழுப் பட்டியல்...

செம பரபரப்பில் இருக்கிறது விஜய் டிவி, கூடவே கமல்ஹாசனும். 'பிக் பாஸ்' நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் முழுவதுமாக இறுதிசெய்யப்பட்டுவிட்டார்கள்.

முந்தைய சீசன்களைப் போல அதே 100 நாள்கள் ஒளிபரப்பாக உள்ளது. கோவிட் சூழல் காரணமாக இந்த முறை பார்வையாளர்கள் இல்லாமல் நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் கமல்ஹாசன். ''சர்ச்சைகளை உண்டாக்குவார்கள் எனத் தெரிந்தாலோ, வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ அவர்களை அனுமதிக்க வேண்டாம்'' என இம்முறை கமல்ஹாசனே கேட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்

நான்காவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி-யில்தான் பிக்பாஸ் செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டுக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் போட்டியாளர்கள் அனைவரும் க்வாரன்டீனில் இருந்து வருகிறார்கள். இங்கே அவர்களுக்குத் தொடர்ந்து கொரொனா டெஸ்ட் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. இரண்டு வார க்வாரன்டீன் முடிந்ததும் இவர்கள் பிக்பாஸ் செட்டுக்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

ஓகே... போட்டியாளர்கள் யார், யார்?!

ரியோ

ரியோ
ரியோ

’சரவணன் மீனாட்சி’ சீரியலை முடித்துவிட்டு, சில படங்களிலும் நடித்துகொண்டிருந்த ரியோ, இம்முறை பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறார். இவர் விஜய் டிவியின் சாய்ஸாம்.

அர்ச்சனா

அர்ச்சனா
அர்ச்சனா

சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' மூலம் பிரபலமான அர்ச்சனா இந்த ஆண்டு பிக்பாஸ் போட்டியாளர். ஜீ தமிழ் சேனலில் இருந்தவர் திடீரென விஜய் டிவிக்கு வந்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. பிக் பாஸ் முடிந்து மறுபடியும் ஜீ தமிழுக்குப் போவாரா என்பது விடைதெரியா கேள்வி.

அனிதா சம்பத்

அனிதா சம்பத்
அனிதா சம்பத்

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவரை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது விஜய் டிவி.

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியின் காமெடி ஷோக்களில் பங்கெடுத்து வந்தவரை ஷோவுக்குள் இறக்கி விட்டிருக்கிறார்கள். ஒன்லைனர்களால் கலகலப்பூட்டுவார் என எதிர்பார்க்கிரார்கள். இவருக்குக் கைக்குழந்தை இருக்கிறது.

‘கடலோரக் கவிதைகள்’ ரேகா

முன்னாள் கதாநாயகி. ‘குக் வித் கோமாளி’ மூலம் விஜய் டிவிக்கு வந்தவரை பிக் பாஸ் ஷோவுக்கு கூட்டி வந்திருக்கிறார்கள்.

பாலாஜி முருகதாஸ் (மாடல்)

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உறவுக்காரர் என்கிறார்கள். மாடலிங் செய்து வருகிறார்.

 நடிகை ரேகா
நடிகை ரேகா

ஜித்தன் ரமேஷ்

நடிகர் ஜீவாவின் சகோதரர். பெரிதாக பட வாய்ப்புகள் அமையாமல் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் பக்கம் வந்திருக்கிறார்.

ஆரி

நடிகர். ‘மாயா’ படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர். `நெடுஞ்சாலை' படத்தில் கவனம் ஈர்த்தவர்.

ரம்யா பாண்டியன்

நடிகை. மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் மூலம் சோஷியல் மீடியாவில் அதிகப்படியான ஃபாலோயர்ஸ் கிடைக்கப் பெற்றவர்.

சிங்கர் ஆஜித் காலிக்

சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலக்கியவர் ஆஜித் காலிக்.

ஆஜித் காலிக்
ஆஜித் காலிக்

ஷிவானி நாராயணன்

ரம்யா பாண்டியன் வழியில் ஃபோட்டோஷூட் மூலம் பிரபலமானவர். ஆனால், ரம்யா பாண்டியன் க்ளாமர் விஷயத்தில் கொஞ்சம் லிமிட்டாக இருந்தார். இவரோ அன்லிமிடட்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ஷனம் ஷெட்டி

கடந்த ஆண்டு சீசனில் கலந்துகொண்ட தர்ஷனின் முன்னாள் காதலி. தர்ஷன் மீது சமீபத்தில் பல குற்றச்சாட்டுகள் சொல்லி பரபரப்பானவர் இந்தாண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறார்.

நாசர் மகன், மன்சூர் அலிகான்... கெடுபிடி டெஸ்ட்..! பிக் பாஸ் சீசன் 4 அப்டேட்ஸ்

கேப்ரில்லா

தனுஷின் '3' படத்தில் நடித்ததவர். சோஷியல் மீடியாவில் புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தவர்.

ஷிவானி, Shivani
ஷிவானி, Shivani

இவர்களைத் தவிர ஒரு மாதம் கழித்து வழக்கமான வைல்டு கார்டு எண்ட்ரியும் இருக்கிறதாம். இதற்கான பட்டியல் இப்போது தயாராகிக்கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு