Published:Updated:

முதல் 'அன்பு' ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

பிக்பாஸ் – நாள் 97

விட்டுத் தந்து செல்பவனை ‘கோயிஞ்சாமி’யாகவே நினைத்து ஒதுக்குகிறோம். ஆனால் ‘விட்டுத் தந்தவர்கள் கெட்டுப் போனதில்லை’ என்னும் பொன்மொழி, சோமின் வெற்றி வழியாக நிரூபணமாகியிருக்கிறதா?

Published:Updated:

முதல் 'அன்பு' ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

விட்டுத் தந்து செல்பவனை ‘கோயிஞ்சாமி’யாகவே நினைத்து ஒதுக்குகிறோம். ஆனால் ‘விட்டுத் தந்தவர்கள் கெட்டுப் போனதில்லை’ என்னும் பொன்மொழி, சோமின் வெற்றி வழியாக நிரூபணமாகியிருக்கிறதா?

பிக்பாஸ் – நாள் 97

முயல் – ஆமை கதை போல பிக்பாஸ் கதையிலும் ஒரு ட்விஸ்ட் நடக்குமா என்று அடிக்கடி கேட்டிருந்தேன். முதல் Finalist ஆக சோம் வந்து விட்டதின் மூலம் அது நடந்து விட்டதாகவே தோன்றுகிறது. பலரும் எதிர்பார்த்தது போல ஆரி அல்லது பாலாஜிதான் இதில் வருவார்கள் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் காற்று திசைமாறி விட்டது. ஆனால் சோமின் இந்த வெற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு நீதியை நிலைநாட்டியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

பிக்பாஸ் போட்டி என்பது டாஸ்க்குகளை சிறப்பாக செய்வதோ, ஆக்ரோஷமாக சண்டையிடுவதோ, உரத்த குரலில் விவாதித்து தன் இருப்பை நிலைநாட்டுவதோ இல்லை. ஒருவகையில் அம்மாதிரியான வன்முறைகள்தான் நமக்கு அதிக கிளர்ச்சியைத் தருகின்றன. அவர்களைத்தான் முக்கிய போட்டியாளர்களாக நாம் கருதுகிறோம். விட்டுத் தந்து செல்பவனை ‘கோயிஞ்சாமி’யாகவே நினைத்து ஒதுக்குகிறோம். ஆனால் ‘விட்டுத் தந்தவர்கள் கெட்டுப் போனதில்லை’ என்னும் பொன்மொழி, சோமின் வெற்றி வழியாக நிரூபணமாகியிருக்கிறது.

கோபம் வரக்கூடிய தருணங்களைக்கூட தன் பொறுமையாலும் நகைச்சுவையாலும் கடந்து போய் விடுபவர் சோம். போலவே மற்றவர்களின் சண்டைகளையும் தடுத்து நிறுத்தி விடுபவர். பிக்பாஸ் வீட்டில் அனைவருடனும் இணக்கமாகச் செல்பவர்களில் முதன்மையாகவராக சோமைத்தான் சொல்ல வேண்டும். அர்ச்சனா சொல்லிச் சென்ற திருவாசகம் ஒருவகையில் உண்மையானதுதான். ‘இறுதியில் அன்புதான் வெல்லும்’. அதுதான் இப்போது வெளிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத நீதி.

பொறுமையான குணாதிசயத்தைக் கொண்டவர்கள் தங்களின் வாழ்க்கையில் எத்தனையோ கீழ்மைகளை, அவதூறுகளை பொறுமையுடன் சகித்துக் கொண்டு கடந்திருப்பார்கள். ‘'நாம் இப்படி பொறுமையாக போய்த்தான் ஆகணுமா?” என்று சமயங்களில் அவர்களுக்குள் ஆற்றாமை உள்ளிருந்து எழலாம். ஆனால் பொறுமையும் அன்பும் நிதானமும்தான் கடைசியில் வெல்லும். அதுவேதான் மெய்வருத்தக் கூலி தரும்.

சோம் மீது குறைகளே இல்லையா? இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நெடும் நாட்கள் கழித்த பின்னர் கூட அவரின் தனித்தன்மையோ சுயஅடையாளமோ வெளிப்படவில்லை. ‘அன்பு’ குழுவின் பின்னால் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் ஒளிந்து கொண்டிருந்தார். அர்ச்சனா அகன்ற பிறகுதான் அவரின் தனித்தன்மை மெல்ல வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. ஒருவகையில் அதீத அன்பும் விஷம்தான்.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

உண்மையான அன்பு என்பது பாரபட்சமில்லாதது. ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்று பாரதி பாடியது இதைத்தான். எவரையும் எதிரியாக நினைக்காமல் பிரியம் காட்டுவதுதான் அசலான அன்பு. ‘செலக்ட்டிவ் அம்னீசியா’ போல தனக்கு இணக்கமானவர்களிடம் மட்டும் அன்பு காட்டுவதின் பெயர் குழு மனப்பான்மை. சோம் செய்வது ஒருவகையில் இதுதான்.

இன்று நிகழ்ந்ததைக் கூட கவனியுங்கள். ‘ஆரி காப்பாற்றப்பட்டார்’ என்று கமல் அறிவித்த பின்னர் ‘'உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் காப்பாற்றப்பட்டிருந்தா சந்தோஷம் அடைந்திருப்பேன்'’ என்று கேபியிடம் சொல்கிறார் சோம். தங்கள் அணியை விடவும் ஆரி சிறந்த ஆட்டக்காரர் என்பது சோமிற்கு நன்றாகவே தெரியும். எனில் ஆரியின் வெற்றியை விடவும் தங்கள் அணியின் வெற்றிதான் முக்கியம் என்று யோசிப்பது சுயநலத்துடன் கூடிய அன்பு.

'‘யார் வேணா ஜெயிக்கட்டும். ஆனா நேர்மையா வெளையாடுங்க. அதுதான் எனக்கு சந்தோஷம்'’ என்று ஆரி அடிக்கடி சொல்கிறார் அல்லவா? ஒருவகையில் அதுதான் உண்மையான அன்பு. பாரபட்சமில்லாத அன்பு.

‘முதல் Finalist’ என்கிற பெருமையோடு சோமின் வெற்றி நின்று போவதுதான் அவருக்கு கிடைக்கப் போகும் இன்னொரு வகையான நீதி என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

97-ம் நாளில் என்ன நடந்தது?

உறுத்தாத நீல வண்ண நிறத்திலான கோட் அணிந்து கொண்டு வந்தார் கமல். ‘'பிக்பாஸ்ல நல்லதே இல்லையான்னு கேட்கறாங்க. போட்டியாளர்களுடன் மக்களுடன் சேர்ந்து விவாதிக்கிறார்கள்.. சண்டை போடுகிறார்கள்… சமாதானம் அடைகிறார்கள்…. வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு நடப்பதைப் போலவே வெளியில் உள்ளவர்களுக்கும் சுயதரிசனம் கிடைக்கிறது. அதுவே இந்த நிகழ்ச்சியினால் கிடைத்த நன்மை'’ என்று பெருமிதம் அடைந்தார் கமல்.

முதல் சீஸனில் இருந்து நான் சொல்லிக் கொண்டு வருவது இதைத்தான். இந்த நிகழ்ச்சியை சுயபரிசீலனையுடன் அணுகி அதன் நேர்மறை மாற்றங்கள் நமக்குள் பரவும்படி அமைத்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு செய்யும் நேரத்திற்கான நிகர லாபம். மாறாக வம்பு, கிண்டல், வன்மம், புறணி என்று இதைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் அதனால் இழப்பு நமக்குத்தான்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார் கமல். ‘சிங்கப்பெண்ணே’ என்கிற உணர்வுபூர்வமான பாடல் முடிந்ததும் தன் வேலையை காட்டத் துவங்கி விட்டார் பிக்பாஸ். ‘சிங்கங்கன்னா சும்மா இருக்கக்கூடாது. சண்டை போட்டுக்கணும்’ என்று ஷிவானியையும் ரம்யாவையும் பரஸ்பரம் பந்து எறிந்து கொள்ளும்படி அறிவிப்பு செய்தார்.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

ரம்யா அரைமனதாக பந்து எறிய, ஷிவானிக்கு அது கூட இயலவில்லை. அவரும் பதிலுக்கு ஆவேசமாக பந்து எறிந்தாலும் பிறகு ‘இப்படியெல்லாம் செய்துதான் ஜெயிக்க வேண்டுமா?’ என்கிற இரக்கவுணர்ச்சி பொங்க திகைத்து நின்று விட்டார். அவர் இளகிய மனம் கொண்டவர் என்பதைத்தான் இது காட்டுகிறது. ‘டோண்ட் கிவ் அப்’ என்று மற்றவர்கள் உற்சாகப்படுத்திய போது ‘எனக்கு பந்து எறிய வாட்டம் இல்லை’ என்ற போது ‘அடப்பாவி மக்கா’ என்று தோன்றியது.

இருவரும் முகத்தில் அடித்துக் கொள்வதற்கு பதிலாக கயிறு பிடித்திருக்கும் கையின் மீது அடித்திருந்தால் பலன் கிடைத்திருக்கலாம். முகத்தில் அடியும் படாது. நல்ல வேளையாக பரஸ்பர பந்து எறிதல் வைபவத்தை உடனே நிறுத்திய பிக்பாஸ் இருவரையும் பாதியாக மடிந்த நிலையில் நிற்கச் சொன்னார்.

சரியாக வேலை செய்து பழகாதவர்களை ‘அவனுக்கு முதுகு வளையுதான்னு பாரேன்’ என்று கிண்டலடிப்பார்கள். அதைப் போல Physical task என்றாலே பயந்து நடுங்கும் ரம்யாவிற்கு இது பயங்கரமான சோதனையாக இருந்தது. எனவே வலி தாங்காமல் கயிற்றை விட்டு விட்டார். அப்போதும் ஷிவானி கயிற்றை விடவில்லை. கொடிகாத்த குமரன் மாதிரி பிடித்துக் கொண்டே நின்று பிறகு சோர்வாகி பொத் என்று விழுந்தார்.

இருவரும் ஏறத்தாழ நான்கு மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறார்களாம். பாராட்டுகள். சோர்வுடன் இருந்த இருவரையும் சக போட்டியாளர்கள் முதல்உதவி செய்து தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தி கைத்தட்டி பாராட்டியது நல்ல காட்சி.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

போட்டியாளர்களை மடிந்த நிலையில் நிற்கச் சொல்லி பிக்பாஸ் அறிவுறுத்திய போது ரியோ ஏன் கோபம் கொண்டு கத்தினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே சோர்ந்திருக்கும் பெண் போட்டியாளர்களை இன்னமும் வதைக்கிறார்களே என்பது தொடர்பான கரிசனமாக இருக்கலாம். ஆனால் அவர் சம்பந்தமேயில்லாத இடங்களில் கோபத்தைக் காண்பிப்பது ஒரு பக்கம் நகைச்சுவையாகவும் இன்னொரு பக்கம் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

97-வது நாள் விடிந்தது. வெளியே இருந்த மதிப்பெண் பட்டியலில் இருந்த மாற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தார் ஆரி. பிக்பாஸ் விதிகளை கறாராக பின்பற்றியவர்கள் பின்னால் தங்கிப் போக, மீறியவர்கள் முன்னே நிற்கிறார்களே என்கிற ஆற்றாமை அவர் கண்களில் தெரிந்தது.

இத்தனை நாட்களில் ஆரி பொதுவாக அதிகம் உணர்ச்சிவசப்பட்டு யாரும் பார்த்ததில்லை. அவருடைய மகள் வந்த போது கூட பிக்பாஸ் விதிகளை கறாராக கடைப்பிடித்தவர். ஆனால் இன்று அவர் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதை பார்க்க முடிந்தது. பாலாஜியை அழைத்த அவர் '‘ரூல்ஸ்லாம் புக்ல இருந்தா போதும். ஃபாலோ பண்ணத் தேவையில்லை. உன் ஸ்போர்ட்மேன்ஷிப்பை கேள்வி கேட்டதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேன். குற்றவுணர்ச்சியா ஃபீல் பண்றேன்'’ என்று கண்களில் நீர் வழிய சொன்னார்.

கயிற்றை பிடிக்கும் டாஸ்க்கில் பிழை செய்திருந்தாலும் கூட ரியோவும் கேபியும் முன்னணியில் இருப்பதுதான் ஆரியின் ஆதங்கத்திற்கு காரணம். '‘சரி. விடுங்க. இதுக்கு ஃபீல் பண்ணாதீங்க.. நாம நேர்மையா விளையாடுவோம்'’ என்று ஆரியின் கண்களை பாலாஜி துடைத்து விட்டது அருமையான காட்சி. ஏறத்தாழ ஆரியின் இடத்தில் பாலாஜியையும் பாலாஜியின் இடத்தில் ஆரியையும் பார்த்தது போன்றதொரு பிரமை.

ஆரி இவ்வாறு குற்றவுணர்வு அடையத் தேவையில்லை. அவர் செய்தது சரியான காரியமே. ஆனால் ‘நல்லவங்களுக்கு கெடைக்க வேண்டிய அத்தனை மரியாதையும் கெட்டவங்களுக்கு கெடைச்சுடுதே’ என்கிற மகாநதி திரைப்படத்தின் வசனம் போன்ற ஆதங்கம் அவருக்குள் பெருகியிருக்க வேண்டும்.

இங்கு இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. சக போட்டியாளர்களின் பிழைகளை கண்காணிப்பது ஆரியின் பலமா, பலவீனமா என்று தெரியவில்லை. தான் நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வாறு செயல்படாதவர்களின் மீது கோபம் வருவது இயல்பே. ஒரு நீண்ட வரிசையில் நாம் ஒழுங்காக நிற்கும் போது சாமர்த்தியமாக இடையில் புகுபவர்களின் மீது ஏற்படும் சீற்றம்தான் ஆரியுடையது.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

இதைத் தவிர பிக்பாஸ் வீட்டில் அபத்தமானதொரு நடைமுறை இருக்கிறது. நடுவர் அல்லாத டாஸ்க்குகளில் போட்டியாளர்களைக் கண்காணிக்க யாரும் இருப்பதில்லை. பிக்பாஸூம் இதில் தலையிடுவதில்லை. எனவே போட்டியாளர்கள் பிழை செய்யும் போது அது விதிமீறலா அல்லது தளர்வா என்று அவர்களே குழம்புகிறார்கள். இது பிழை செய்பவர்களுக்கு செளகரியமாகப் போய் விடுகிறது. பிழை செய்திருந்தாலும் கூட மதிப்பெண் பெறுவதால் குழப்பம் மேலும் கூடுகிறது.

‘பிக்பாஸ் இதில தலையிடறதில்ல. பார்த்தீங்கள்ல’ என்று கமல்ஹாசனும் ஒருமுறை குறிப்பிட்டார். எனில் போட்டியாளர்களே சுயப்பொறுப்புடனும் நேர்மையுடனும் விளையாட வேண்டும் என்பதுதான் இதன் பொருள். ஆனால் இதை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியுமா?

முதல் Finalist-ஐ தேர்வு செய்வதற்காக நடந்து முடிந்திருக்கும் ஒன்பது டாஸ்க்குகளில் 43 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தில் சோம் இருந்தார். அதற்கு அடுத்த இடத்தில் 40 மதிப்பெண்களைப் பெற்று ரியோ இருந்தார். 39 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் ஷிவானி இருந்தது ஆச்சரியம்.

ஆரியும் பாலாஜியும் அமர்ந்து மீண்டும் பரஸ்பர நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘கமல் சார் கேட்டா கூட சமயங்கள்ல நான் மன்னிப்பு கேட்டதில்லை. ஆனா உங்க கிட்ட கேக்கறேன்’ என்று உருகிக் கொண்டிருந்தார் பாலாஜி. (இந்தக் காட்சியை கமல் சாரே ஸ்கீரினில் லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை பாலாஜி அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்).

“வெளில போனா கூட உங்க கிட்ட அட்வைஸ் கேப்பேன். நீங்க மனுஷனே இல்லைன்னு சொல்லியிருக்கேன். ஆனா நீங்கதான் பெரிய மனுஷன்’ என்றெல்லாம் பாலாஜி உருகிக் கொண்டிருந்தது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்னமும் சில நாட்கள் போட்டி தொடரப் போகும் போது பழைய ‘அமாவாசை’ திரும்பி வந்து விடக்கூடாது. இதை ஆரி கவனத்தில் வைத்துக் கொள்வார் என்றுதான் தோன்றுகிறது.

‘போட்டியின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருந்தாலும் போட்டியாளர்களிடம் நேர்மறையான மனமாற்றம் இப்போது ஏற்பட்டிருப்பதைப் பார்த்தோம். இதைத்தான் அவர்கள் வெற்றியாக, சொத்தாக வெளியே எடுத்துச் செல்வார்கள்’ என்று நெகிழ்ச்சியுடன் முன்னுரை வழங்கினார் கமல். (அப்போ பரிசுப்பணம் கிடையாதா?).

‘இந்த நூறு நாட்கள் தந்த பாடம் என்பது அற்புதம். My days are made..’ என்றெல்லாம் நெகிழ்ந்த கமல் ‘பேச்சு சுதந்திரம் என்பது மற்றவர்களை சாடுவதற்கு மட்டும் கிடையாது. சக மனிதனை கனிவுடன் கைதூக்கி விட்டால் அன்பு செழிக்கும்’ என்று ஆரியை முன்னிறுத்தி சொன்னார். கமலின் இன்றைய உரையாடல் அருமையாகவும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், ‘இறுதிப் போட்டியாளராக’ தேர்வான சோமை வாழ்த்தி அதற்கான சான்றிதழை வழங்கியதோடு கட்அவுட் ஒன்றையும் திறந்து வைக்கச் சொன்னார். ‘எனக்குப் பேச்சே வரலை.. சார்’ என்று சோம் நெகிழ்ச்சியுடன் சொன்னதை, இந்தச் சூழலில் நாம் வேறு மாதிரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சோம் மகிழ்ச்சியால் திணறினார். பேச்சில் திணறவில்லை. சக போட்டியாளர்களுக்கு சோம் நன்றி சொன்னது நல்ல விஷயம்.

‘இதற்குத் தகுதியானவர் சோம்’ என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியாக சொன்னார்கள். பாலாஜி கோபக்காரராகவும் விளையாட்டுத்தனமாகவும் பொதுவாக அறியப்பட்டாலும் ஆத்மார்த்தமாக பேசும் சமயங்களில் சரியான சொற்களால் தன் உணர்வுகளைப் பதிவு செய்து விடுகிறார். சோமை வாழ்த்தும் போதும் இந்த உணர்வு வெளிப்பட்டது. ‘சோமின் நற்குணங்கள், அன்பு, பொறுமை போன்றவற்றிற்கு கிடைத்த பரிசு இது’ என்று பாலாஜி சொன்னது அருமை.

தன்னுடைய அம்மா வீடியோவில் வந்து இன்ப அதிர்ச்சி தந்ததால் சோம் கூடுதலாக நெகிழ்ந்தார். ‘அவங்க அதிகம் பேசமாட்டாங்க’ என்று பிறகு சோம் சொன்னதை முதலிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. ‘என்ன பேசுவது’ என்று தெரியாமல் தத்தளித்தார் சோமின் அம்மா. கண்களில் மட்டும் அன்பும் பாசமும் பெருகி வழிந்தது.

சோமிற்கு அடுத்த இடத்தில் இருந்த ரியோவின் மனவலிமையைப் பற்றியும் பாராட்டினார் கமல். பாலாஜி மற்றும் ஆரியோடு ஒப்பிடும் போது ரியோவின் மனவலிமை சமயங்களில் ஆச்சரியமூட்டுகிறது என்பதை இந்தத் தொடரிலும் குறிப்பிட்டிருக்கிறேன். ‘யாரையும் under estimate பண்ணக்கூடாதுன்னு தெரியுது’ என்று கமல் சொன்னது அருமையான பாடம்.

“பாட்டு கண்டுபிடிக்கற டாஸ்க்ல பின்னாடியே நின்னுட்டீங்களே.. ஏன்?’ என்று ஆரியிடம் கமல் விசாரிக்க ‘கடந்த வாரத்தின் இறுதியில் நீங்கள் என்னைப் பற்றி வைத்த விமர்சனங்கள் என்னைச் சற்று சோர்வடைய வைத்தன. மேலும் தோள்மூட்டு வலி உள்ளிட்ட காரணத்தினால் சில டாஸ்க்குளை சரியாகச் செய்ய முடியவில்லை’ என்று ஆரி தந்த விளக்கத்தை கமலும் புரிந்து கொண்டார். (சினிமா படப்பிடிப்பு ஆக்ஷன் காட்சிகளில் எனக்கு விலகாத மூட்டா?!).

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

‘பாராட்டுக்கள் இன்னமும் முடியலை’ என்று அகம் டிவி வழியாக திரும்பி வந்த கமல் சொன்னார். மூன்றாவது இடத்தில் இருக்கும் ஷிவானியின் அர்ப்பணிப்பு உணர்ச்சியை அப்போது பாராட்டினார். (இப்போதுதான் ஷிவானி மெல்ல வெளிப்படத் துவங்கியிருக்கிறார். ஆனால்….?).

“எங்கப்பா அழுது நான் பார்த்ததில்லை.. தாத்தா செத்தப்ப கூட கல்லு மாதிரி நின்ன மனுஷன். நீ ‘சுருக்’குன்னு ஒரு வார்த்தை சொன்னவுடனே கண்ல தண்ணி விட்டாரு’ என்று ‘வசூல்ராஜா’ படத்தில் வசனம் பேசுவார் கமல். இதைப் போலவே ரம்யா அழுதும் கமல் பார்த்ததில்லையாம். கயிறு டாஸ்க்கில் அவர் கண்களில் நீரைப் பார்த்தாராம்.

‘சிங்கப்பெண்ணே’ பாடல் தந்த உணர்ச்சியும் சக போட்டியாளரின் மீது பந்து எறிய வேண்டிய மனக்கஷ்டமும் அழுகையை வரவழைத்து விட்டது என்று ஷிவானியும் ரம்யாவும் சொன்னார்கள்.

கமல் சொல்வதை சமயங்களில் கோக்குமாக்காக புரிந்து கொள்வதே ரியோவின் வழக்கம். இன்றைய நாளிலும் கமல் எதையோ சொல்ல, தான் காலை மடித்து சோபாவில் வைத்திருப்பதைத்தான் கமல் குறிப்பிடுகிறாரோ என்று தவறாக நினைத்து ரியோ பதற அவரை ஆற்றுப்படுத்தி ‘தான் சொல்ல வந்தது வேறு’ என்றார் கமல்.

தரையில் உருண்டு பந்து வைக்கும் டாஸ்க்கில், கேபியை எளிதாக கணக்கிட்டு அவரை தன் போட்டியாளராக பாலாஜி தேர்ந்தெடுத்த பிழையைப் பற்றி நான் எழுதியிருந்தேன். கமலும் அதையே சொல்லி ‘ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல’ என்று கேபியைப் பாராட்டியது சிறப்பு.

அதென்னமோ, ரம்யா என்றால் மட்டும் சற்று கூடுதல் உரிமையும் செல்லமும் கமல் எடுத்துக் கொள்கிறார். ‘கரகாட்டக்காரி’ போஸ்ல நீங்க வந்து ஜெயிச்சது பார்க்க நல்லாயிருந்தது’ என்று சிரிப்புடன் கமல் பாராட்ட ‘physical task-ல நான் ஜெயிச்சது அது மட்டும்தான் சார்’ என்று பதிலுக்கு புன்னகையைக் கொட்டினார் ரம்யா.

‘இந்த வார டாஸ்க்ல பாலாஜி ரூல்ஸ் எல்லாம் ஒழுங்கா ஃபாலோ பண்ணாரு. அதுவே அவருக்கு பெரிய வெற்றிதான்’ என்று சர்காஸ்டிக் பாராட்டை கமல் வழங்க சங்கடத்துடன் சிரித்தார் பாலாஜி.

‘மத்த பிக்பாஸ்ல பாருங்க.. எப்படியெல்லாம் திட்டறாங்க.. நீங்க ஏன் அதைச் செய்ய மாட்றீங்கன்னு என்னைக் கேட்கறாங்க. என் அணுகுமுறை அதுவல்ல. நான் அப்படிச் செய்ய மாட்டேன். ‘இப்படிச் செஞ்சீங்க. ஆனா இப்படி செய்திருக்கலாம்’னு இரண்டு தேர்வுகளையும் போட்டியாளர்கள் கிட்டயே கொடுத்துடுவேன்’ என்று கமல் சொன்னது அற்புதம். அன்பு மற்றும் பொறுமையினால்தான் ஒருவரிடம் உண்மையான மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

“நீங்கள்லாம் தெரியாம தவறு செய்யறவங்க. ஆனா தெரிஞ்சே தப்பு பண்ணா விட மாட்டேன். தட்டிக் கேட்பேன்’ என்று அரசியல் ரூட்டிற்குள் நுழைந்தார் கமல். இதற்காக ‘ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால்’ என்கிற ‘க்ளிஷே’வான (எம்.ஜி.ஆர்) பாடலையும் பயன்படுத்தினார்.

‘என் பாணியையைத்தான் ஆரிக்கு பரிந்துரை செய்தேன். கனிவோடு உபதேசம் செய்தால் அதற்கான பலன் கிடைக்கும்’ என்ற கமல் ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா’ பாடலைப் பார்க்கறீங்களா.. சூப்பரா வந்திருக்கு.. ரெண்டு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க’ என்று ஆரியும் பாலாஜியும் நெகிழ்ந்து பேசிக் கொண்டிருந்த வீடியோவைச் சுட்டிக் காட்டி பேசினார்.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

‘யப்பா.. சாமி. இவிய்ங்களை நம்பவே கூடாது. இதைத்தான் நான் மொதல்ல இருந்தே சொல்லிட்டு வர்றேன். நம்ம முன்னாடி அக்னி நட்சத்திரம், பிரபு – கார்த்திக்’ மாதிரி இருந்துட்டு பின்பக்கம் போய் ‘லா..லா.. லா’ன்னு விக்ரமன் படம் ஓட்டறாங்கடோவ்’ என்று அவர்களைக் கலாய்த்தார் ரம்யா. இப்படி இவர் வெள்ளந்தியாக கலாய்ப்பதுதான் சமயங்களில் இவருக்கே வில்லங்கமாகி விடுகிறது.

ஆரியைக் குறித்து பாலாஜி சொன்னது உண்மையிலேயே நெகிழ்வாக இருந்தது. ‘நீதி வாக்கியம் டாஸ்க்கில் அவருக்கு நல்ல வாக்கியத்தை விட கெட்ட வாக்கியம்தான் அதிகம் கெடைச்சது. சிவப்பு மையைத்தான் நான் அதிகம் பார்த்திருக்கேன் போல. பச்சை மையை நான் பார்க்கத் தவறிட்டேன்’ என்றெல்லாம் கலங்கினார் பாலாஜி. (நீங்க சீரியலுக்கு வசனம் எழுதப் போகலாம் பாஸூ). ‘பாலாஜி மேல எனக்கு துளி கூட வன்மம் கிடையாது. அவன் நல்லா விளையாடணும்னுதான் அவன் கூட சண்டை போட்டேன்..” என்று பதிலுக்கு ஆரியும் நெகிழ்ந்தார்.

‘இது இரு கரங்களும் சேர்ந்து ஒழுப்பிய ஒலி. அன்பின் ஒலி’ என்று இதன் summary-ஐ சிறப்பான மொழியில் எழுதினார் கமல். (பாலாஜியையும் ஆரியையும் வைத்து இணைந்த கைகள் –பார்ட்-2 எடுத்து கமலை டைரக்ட் பண்ணச் சொல்லலாம் போல).

“பாருங்க. இவங்களே ஒண்ணு கூடிட்டாங்க.. சோஷியல் மீடியாவுல இவிய்ங்களுக்காக கொலைவெறியோட அடிச்சுக்கறவங்க இதைப் பத்தி யோசிக்கணும் மக்களே’ என்று கமல் சொன்னது திருவாசகம்.

தாங்கள் எந்த நேரத்தில் அப்படி நெகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தோம் என்பது பாலாஜிக்கும் ஆரிக்கும் நினைவில் இல்லை. அந்த அளவிற்கு உணர்ச்சிப்பெருக்கில் மூழ்கி விட்டார்கள் போலிருக்கிறது. எனவே அதைப் பற்றி குழம்பி பேசிக் கொண்டிருந்தார்கள். ‘இந்த சீஸன்ல லவ் ஸ்டோரியே இல்லைன்னு நெனச்சேன். இவங்க அந்த ஹிஸ்டரியை எழுதிட்டாங்க’ என்று இவர்களை சோம் கிண்டலடித்தது சிறப்பு.

‘கப்பு முக்கியம் குமாரு’ என்று முழங்கிக் கொண்டிருந்த பாலாஜி, இப்போது ‘டாஸ்க்ல ஜெயிக்கறது முக்கியமில்ல. மக்களின் மனங்களில் ஜெயிப்பதுதான் முக்கியம்’ என்று பேசுமளவிற்கு முன்னேறி இருக்கிறார். (அடுத்து என்ன.. அரசியலா. பாஸூ?!).

அகம் டிவி வழியாக கமல் திரும்பி வந்த போது ரம்யா வரத் தாமதம் ஆனது. ‘அவங்களுக்கு கால்ல அடிபட்டிருக்கு சார். அதான் காரணம். ஆனா வாய் மட்டும் நல்லாப் பேசும்’ என்று கிண்டலடித்தார் சோம். இதற்கு தனது டிரேட் மார்க் புன்னகையை இறைத்தார் ரம்யா. (என்னவே நடக்குது இங்க?.. லவ் ஸ்டோரி டிராக் இருக்கு போலயே!).

நீதி வாக்கிய டாஸ்க் விசாரணைக்கு வந்தார் கமல். தங்களுக்கு வழங்கப்பட்ட வாசகங்களை நினைவுகூர போட்டியாளர்களால் இயலவில்லை. (ரியோ போன்றவர்கள் விதிவிலக்கு). எனவே குத்துமதிப்பாக அதன் பொருளை எடுத்துரைத்தார்கள். ‘புறம் பேசுவது குறித்து எனக்கு ரெட் கார்ட் கிடைச்சது. நான் எல்லோரையும் கலாய்ப்பேன். அதுல வில்லங்கம் இருக்காது. ஆனால் காலர் ஆஃப் தி வீக்ல ஒருத்தர் வந்து சொன்ன பிறகுதான் உணர்ந்தேன். உள்நோக்கத்தோடு நான் எதையும் பேசலை’ என்று விளக்கம் தந்தார் ரம்யா.

தன்னுடைய கோபம் பல எதிர்மறை வாக்கியங்களைப் பெற்றுத் தந்த துயரத்தை கண்கலங்கச் சொன்னார் பாலாஜி. ‘பொறுப்பிலிருந்து விலகும் குணாதிசயத்தால் ஒரு ரெட் கார்ட் வாங்கியதை சங்கடத்துடன் சொன்ன ஷிவானி, இனி மாறப் போவதாக சபதம் எடுத்திருக்கிறார்.

‘எனக்கு முன்னாடியே தெரியும். நான்தான் லாஸ்ட்ல வருவேன்னு’ என்றார் ஆரி. ‘காய்த்த மரம்தான் கல்லடி படும்’ என்கிற பொன்மொழியை பிறகு பாலாஜியிடம் (சிறிது தவறாக) சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி.

‘பாரபட்சம் காட்டிய விவகாரத்தில் தனக்கு எதிர்மறை வாக்கியம் கிடைத்ததை சொன்ன சோம் ‘முட்டைகளை share பண்ணியிருக்கேன்’ என்கிற ரகசிய உண்மையை இப்போது(தாவது) ஒப்புக் கொண்டார்.

‘ஒற்றுமை வலிமையாம்’ என்கிற வாக்கியம் தனக்கு கிடைத்தில் மகிழ்ச்சி என்றார் ரியோ. ‘எதை என் பலவீனம் என்றார்களோ.. அதுவே கடைசியில் எனக்கு தகுதியாகவும் நேர்மறையாகவும் கிடைத்தது மகிழ்ச்சி’ என்று அகம் மகிழ்ந்தார் ரியோ. ஆனால் ரியோவின் புரிதல் தவறு.

ஒருவர் ஒற்றுமையுணர்வுடன் இருப்பதில் தவறேயில்லை. நல்ல விஷயம்தான். ஆனால் ஒரு குழுவின் ஒற்றுமை அதன் வெளியே இருப்பவருக்கு பாரபட்சத்தையும் அநீதியையும் நிகழ்த்தக்கூடாது. ‘அன்புக்கூட்டணி’ மீதிருந்த பெரிய விமர்சனமே இதுதான். இந்த எளிய தர்க்கம் ரியோவிற்கு ஏன் புரியவில்லை என்று தெரியவில்லை.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

‘ஒரு ஆங்கரா தெளிவா பேசித்தான் நல்ல பெயரைச் சம்பாதிச்சிருக்கேன். என்னைப் போய் தெளிவா பேசறதில்லைன்னு சொல்லிட்டாங்களே..." என்று ஜாலியாக அனத்திய ரியோ ‘'தனிநபரா நான் நிச்சயம் நிறைய குழம்புவேன்'’ என்கிற உண்மையையும் கூடவே ஒப்புக் கொண்டது சிறப்பு. ‘நல்ல பையன் சார் அவன்’ என்று தன் கட்அவுட்டை மறுபடியும் தானே கட்டிப் பிடித்துக் கொண்டார் ரியோ.

‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்னும் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டி தனது விசாரணையை முடித்துக் கொண்டார் கமல். (என்னடா இது! திருக்குறளை ஆத்திச்சூடின்னு சொல்றானேன்னு யோசிக்காதீங்க. நம்ம அரசியல்வாதிகள் அந்தளவிற்கு போட்டுக் குழப்பறாங்க. அவங்க முடிவு செஞ்சு ஒண்ணு சொல்லட்டும்).

ஓகே.. எல்லோருமே நாமினேஷன்ல இருக்கீங்க. சோம் எஸ்கேப் ஆயிட்டார். ஒருத்தரை இப்போ காப்பாத்தலாமா?’ என்று சற்று போக்கு காட்டிய கமல், பிறகு ஆரி காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார். ஆரி இதற்கு முற்றிலும் தகுதியானவர். ஆனால் வழக்கமாக இது போன்ற தருணங்களில் புன்னகையுடனும் நெகிழ்ச்சியுடனும் தன்னுடைய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ளும் ஆரி, கடைசி வாரங்களில் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கிறார்.

தான் காப்பாற்றப்பட்ட செய்தியைக் கேட்டவுடன் தரையில் அமர்ந்து கையால் தட்டி சபதமிட்டதைக் கண்டவுடன் உங்கள் மனதில் சட்டென்று எந்தக் காட்சி மனதில் வந்தது? ஆம்.. அதுவேதான் எனக்கும் வந்தது. ஆரியின் அறச்சீற்றம் இப்படியாக பொங்கியது போல.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97

‘'ஒருத்தன் எவ்வளவுதான் உண்மையா உழைக்கிறது.. உன் மேல எனக்கு ஒரு சதவீதம் கூட காழ்ப்புணர்ச்சி கிடையாது'’ என்று பாலாஜியிடம் அதே நெகிழ்ச்சியை மறுபடியும் கொட்டிக் கொண்டிருந்த ஆரி, அதை நிரூபிப்பதற்காக தன் குழந்தையின் மீது சத்தியம் செய்தததெல்லாம் ஓவர்.

“ஆரி காப்பாற்றப்பட்டது நல்ல விஷயம்தான். ஆனா உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் காப்பாற்றப்பட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்’ என்று கேபியுடம் சொல்லிக் கொண்டிருந்தார் சோம். (யப்பா.. அன்புக்கூட்டணி. உங்க அலப்பறை தாங்கலை. கேம் முடிஞ்சா கூட திருந்த மாட்டீங்க போல).

இந்த வாரத்தில் ஷிவானி வெளியேறுகிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது. இது நீண்ட காலமாக எதிர்பார்த்ததொன்றுதான். ஆனால் இது முன்பே நடந்திருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். ஏனெனில் இப்போதுதான் ஷிவானி வாய் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார். கடுமையான டாஸ்க் என்றால் கூட சவாலாக நிற்கிறார். குறிப்பாக பாலாஜிக்கு அவசியமான சமயங்களில் அவர் தந்த ஆலோசனைகள் எல்லாம் கச்சிதம். எனவே இந்த நிலையில் அவர் வெளியேற்றப்படுவது சற்று பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

முதல் 'அன்பு'  ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே..! பிக்பாஸ் – நாள் 97
குட்பை ஷிவானி. ஆல் தி பெஸ்ட்.