Published:Updated:

பிக் பாஸ் வீட்டுக்குள் பிரபல பாடகர்... கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரி!

பிக் பாஸ் சீசன் 4 கடைசி நேர அப்டேட்ஸ்!

பிக் பாஸ் தமிழின் சீசன் 4 நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் நாள் என்பதால் மாலை 6 மணிக்கே நிகழ்ச்சி தொடங்குகிறது. போட்டியாளர்களாக உள்ளே செல்பவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு தேர்வானவர்கள் கடந்த சில தினங்களாக பிக் பாஸ் செட் அமைந்திருக்கும் பூந்தமல்லி ஈவிபி அருகேயுள்ள ஓட்டல் ஒன்றில் க்வாரன்டீனில் இருந்து வந்த நிலையில், முதல் எபிசோடுக்கான ஷூட் நேற்று மாலை முதல் தொடங்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.

கடந்த மூன்று சீசன்களின்போதும், நிகழ்ச்சித் தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குக் கூட்டிச் சென்று ஒருநாள் தங்க வைத்து நிகழ்ச்சி குறித்து விளக்கி வந்தார்கள். இந்த ஆண்டு கொரானாவால் அந்த நிகழ்வு இல்லை. அதேபோல் இந்த ஆண்டு கமல்ஹாசன் கலந்து கொள்ளும் வார இறுதி எபிசோடுகளில் பார்வையாளர்கள் பங்கேற்கவும் அனுமதியில்லை என்கிறார்கள்.

அர்ச்சனா டு அனிதா சம்பத்... பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் கம்ப்ளீட் லிஸ்ட்!
ஏற்கெனவே 13 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்ட செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மேலும் மூன்று பேர் கடைசி நிமிடத்தில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக இப்போது நம்பத்தகுந்த சோர்ஸ் சொல்கிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி, விக்னேஷ், பாடகர் வேல்முருகன் ஆகியோர்தான் அந்த மூன்று பேர் என்கிறார்கள்.

ஆக, தற்போதைக்கு மொத்தம் 16 பேர் எனத் தெரிகிறது.

பாடகர் வேல்முருகன்
பாடகர் வேல்முருகன்

இந்தப் பதினாறு பேர்களில் கடைசி நிமிடத்தில் ஓரிருவர் மாறினாலும் மாறலாம். ஏனெனில் அனிதா சம்பத், அரச்சனா போன்ற மற்ற சேனல் தொகுப்பாளர்கள் கலந்து கொள்வதில் சில சிக்கல்கள் நீடித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. எனினும் அர்ச்சனா விஷயத்தில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவே தெரிகிறது.

கடைசி நேரத்தில் தேர்வானவர்களிடம் ஏற்கெனவே வீட்டு க்வாரன்டீனில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், எனவே அவர்கள் நேரடியாக இன்றைய ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட இந்த மூவரும் அவசியமான பொருள்களை எடுத்துக் கொண்டு இன்று காலை கிளம்பி பிக் பாஸ் செட்டுக்குள் சென்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேல்முருகன் பெயர் அடிபடத் தொடங்கியபோதே நாம் அவரிடம் பேசியிருந்தோம்.

"லாக்டௌனால எழுபது கச்சேரிகளுக்கு மேல ரத்தாகிடுச்சு. தனியா நான் ஒருத்தன்னா இந்த சூழலைச் சமாளிச்சிடுவேன். ஆனா ஒரு கச்சேரியை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கு. ஏதோ என்னால முடிஞ்ச சில உதவிகளைச் சிலருக்குச் செஞ்சேன். பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த காலங்கள்ல அப்பப்ப பார்த்திருக்கேன். நம்மள மதிச்சு கூப்பிட்டாங்கன்னா மறுக்கக் கூடாதில்லையா?

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்

அதுவும் போக, சம்பளம்னு ஏதாச்சும் தந்தாங்கன்னா, அதுவும் எனக்கு மட்டுமல்ல, என்னைச் சுத்தி இருக்கிற சிலருக்குமே இந்தக் கொரோனா காலத்துல பெரிய உதவியா இருக்கும். அதனால கூப்பிட்டாங்கன்னா போயிட்டு வருவேன். மத்தபடி அங்க கூட யாரு இருப்பாங்க, என்ன பண்ணுவங்காணு எல்லாம் எதுவும் தெரியாது. எம்பாட்டுக்குக் காலையில எழுந்தோமா, குளிச்சோமா, சாப்பிட்டோமா, கூட இருக்கிறவங்க விரும்பினா ரெண்டு பாட்டுப் படிச்சு அவங்களைச் சந்தோஷப் படுத்தினோமான்னு இருந்துட்டு வர வேண்டியதுதான்" எனச் சொல்லியிருந்தார்.

ஆக, இந்த பிக் பாஸ் சீசனில் நாட்டுப்புறப் பாடல்களை அடிக்கடி கேட்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு