Published:Updated:

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

இந்த இடத்தில் எனக்குத் தோன்றிய ஒரு நெருடலை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

Published:Updated:

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

இந்த இடத்தில் எனக்குத் தோன்றிய ஒரு நெருடலை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பெரும்பாலோனோருக்குப் பிடித்த பாட்டுதான். ஆனால் குழந்தைகளுக்கு இந்த பாட்டு அதிகம் பிடித்திருப்பதில் ஏதோவொரு வசீகரமான ரகசியம் ஒளிந்திருக்கிறதுபோல. ஆம், ‘சல்மார்’ என்கிற ரகளையான பாடலை இன்று காலையில் போட்டார்கள். தினமும் எல்லோரும் தத்தக்கா பித்தக்கா என்று நடனம் ஆடினாலும் பெரும்பாலான நாட்களில் பாலாஜி ஓரமாக அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்கிறார். நடனமும் ஓர் உடற்பயிற்சிதான்!.

‘அழுகாச்சி’ டாஸ்க்கிற்காக காலையிலேயே கேபியை கூப்பிட்டார் பிக்பாஸ். 'மற்றவர்கள் செய்யும் கேலிகளால் எவ்வாறு இளமைப்பருவத்தில் நான் பாதிக்கப்பட்டேன். பிறகு எவ்வாறு மீண்டேன்’ என்பதையெல்லாம் கேபி ஏற்கெனவே உருக்கமாக கூறியிருக்கிறார். ‘உனக்கு தகுதியில்லை’ என்கிற குத்தலான வார்த்தைகள் கேபியை சமீபமாக புண்படுத்தியிருக்கின்றன போல. எனவே அது குறித்து கலங்கினார். ‘நட்புதான் முக்கியம் என்று நான் நினைப்பதை இவர்கள் ஸ்ட்ராட்டஜி என்கிறார்கள்’ என்பதும் கேபியின் அழுகைக்கு இன்னொரு காரணம்.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

‘உங்களுக்குத் தகுதியில்லை’ என்று மற்றவர்களை நோக்கி ஆரி உண்மையிலேயே அடிக்கடி சொல்கிறாரா? அல்லது பாரபட்சத்தோடு குழுமனப்பான்மையுடன் இவர்கள் ஆடுவதை ஆரி அடிக்கடி எதிர்ப்பதால் அவர்களுக்கு ஆரி வில்லனாக தோன்றுகிறாரா என்பது ஆய்வுக்குரியது. ‘'திறமையிருக்கிறவங்க யாரு வேணா கப்பு அடிக்கட்டும். எனக்கு சந்தோஷம். ஆனா நேர்மையா விளையாடுங்க'’ என்பதுதான் அவர் அடிக்கடி சொல்வது.

அல்லது ஆரி அப்படி சொல்வது உண்மையென்றால் அது அவரின் ஸ்ட்ராட்டஜி என்று புரிந்து கொண்டு அந்த உளவியல் தாக்குதலில் இருந்து வெளியே வர வேண்டியதுதான்.

“இனிமே யாராவது உன்னை ‘சப்பாணின்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சுடு” என்று ‘பதினாறு வயதினிலே’ சப்பாணிக்கு, மயில் தரும் ஊக்க வார்த்தை போல “இனிமே நீ வெறும் கேபி இல்ல... BG.. அதாவது பிக்பாஸோட கேபி. வெளியே போய் தைரியமா சொல்லு” என்று கலங்கிய கேபிக்கு ஊக்கம் அளித்தார் பிக்பாஸ். ‘ஸோ.. ஸ்வீட்’ என்பது போல் நெகிழ்ந்து போனார் கேபி. தனக்கு கிடைத்த புது பட்டப்பெயரை வெளியே வந்து மகிழ்ச்சியுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பிக்பாஸ் பாராட்டுவதை ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் அனுபவித்து மகிழ்கிறார்கள். இது குறித்து ‘இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்’ என்று முன்னர் சொல்லியிருந்தேன். இப்போது என் யூகத்தை சொல்லி விடுகிறேன்.

ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை ஆண்கள் வந்தாலும் அவளின் மனதிற்குள் ஒரு ரகசிய காதலன் இருப்பான். அந்தப் பெண்ணிற்கு தீராத அன்பை திகட்ட திகட்ட தந்து கொண்டேயிருப்பான். பதிலுக்கு இந்தப் பெண்ணும் அவனை நாள் பூராவும் செல்லம் கொஞ்சிக் கொண்டேயிருப்பாள். Teddy bear போல. அவனுக்கு நிகரான ஆண் உலகத்திலேயே இருக்க முடியாது என்றாலும் ‘ரகசிய காதலனின்’ சாயலில் உள்ள சில ஆண்களை இந்தப் பெண்ணுக்கு அதிகம் பிடிக்கும். Father figure என்கிற விஷயமும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது.

பிக்பாஸின் குரலில் உள்ள கரகரகரப்பும் ஆண்மைத்தனமும்தான் பெண்களை வசீகரிக்கும் முதல் காரணி என்று தோன்றுகிறது. போலவே பிக்பாஸ் என்கிற பிம்பத்தில் உள்ள Anonymity. அந்த முகமற்ற தன்மைதான் ‘ரகசிய காதலின்’ சாயலுக்கு நெருக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எனவேதான் பெண் போட்டியாளர்கள் அந்தக் குரலின் மீது காதலைக் கொட்டுகிறார்கள். அந்தக் குரல் சிறிது பாராட்டினாலும் கூட உலகத்தையே வென்றது போல் மகிழ்ச்சியடைகிறார்கள்.

‘அலைபாயுதே’ திரைப்படத்தில் வரும் ‘ரகசிய சிநேகிதனே’ பாடலை இங்கு நினைவுகூறலாம். முகம் தெரியாத சந்தர்ப்பத்தைக் பயன்படுத்திக் கொண்டு இணைய உரையாடலில் அன்பைக் கொட்டுவது போல் பாவனை செய்யும் ஆண்களிடம் பெண்கள் சிலநேரங்களில் ஏமாறுவதின் பின்னணி இதுதான். ஏமாற்றுபவன் மிகச் சுமாரான தோற்றம் கொண்டவனாக கூட இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு தன்னைக் கொண்டாடும் ஆணே முக்கியம். ஆணுக்குத் தனக்குப் பணிவிடைகள் செய்யும் பெண்ணைப் பிடிப்பதைப்போல!

''எந்த டாஸ்க்கா இருந்தாலும் அதை எப்படி விளையாடலாம்னு ரெண்டு மணி நேரம் செலவு செஞ்சு பேசுவாங்க... ஆனா பஸ்ஸர் அடிச்சவுடனே அத்தனையையும் மறந்துட்டு பாய்ஞ்சிடறாங்க'’ என்று வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார் ஆஜித். (என்ன பண்றது தம்பி?! survival of the fittest’ன்னு ஏற்கெனவே சொல்லியிருக்காங்க! மனுஷன் இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து வர்றான்) ‘உனக்கு தகுதியில்லை’ என்று மற்றவர்களை நோக்கி ஆரி அடிக்கடி சொல்வதை மினி ஓரங்க நாடகம் போல சொல்லிக் காட்டி அனத்திக் கொண்டிருந்தார் பாலாஜி.

குழந்தையைக் கிள்ளி அழ வைக்கும் டாஸ்க்கிற்காக அடுத்தது ரம்யாவை அழைத்தார் பிக்பாஸ். அவர் எப்போதும் தன்னை செல்லம் கொஞ்சுவார் என்று எதிர்பார்த்து உள்ளே சென்ற அம்மணிக்கு காத்திருந்தது ஆப்பு. ‘கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க மேடம்’ என்று பிக்பாஸ் சற்று அதட்டியவுடன் அம்மணியின் முகத்திலிருந்த புன்னகை மறைந்து சீரியஸ் ஆனது. (‘டாஸ்க்கிற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறதே’ என்று உள்ளுக்குள் பிக்பாஸே கலங்கியிருக்க வேண்டும்).

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

‘'பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் பாசிட்டிவா உணர்ந்தேன்’' என்று ரம்யா சொல்வது மிக மாறுதலான பதில். எதிலும் நேர்மறையைப் பார்க்கிறவர்கள்தான் இப்படி சொல்ல முடியும். ‘'ரிகர்சல்லாம் பார்த்துட்டு இங்க வர முடியாது. இது வாழ்ந்து கத்துக்க வேண்டிய வாழ்க்கை'’ என்று பிக்பாஸ் வீட்டைப் பற்றி அம்மணி சொன்னதும் திருவாசகம். பிக்பாஸ் வீட்டின் அழுகையில் பொய்யும் நிஜமும் கலந்திருக்கிறது என்று ரம்யா சொன்னதும் உண்மையான பதில்.


‘'யோசிச்சிக்கிட்டே இருந்தே வேலைக்காவாது. செயல்ல ஈடுபடுங்க’' என்று புத்தி சொல்லி அனுப்பினார் பிக்பாஸ்.

நமக்கு போரடித்தால் தொலைக்காட்சியைப் போட்டு நியூஸ் பார்ப்பதைப் போல் பிக்பாஸ் வீட்டில் அனிதாவை டிவி சேனலாக பயன்படுத்துகிறார்கள். ‘'இப்போதைய நிலவரத்தைப் பற்றி சொல்லுங்கள் அனிதா...’' என்று நிலையத்திலிருந்து கேட்பதைப் போல் ஆரி கேட்க, வாக்குமூல அறையிலிருந்து வெளியே வந்த ரம்யாவை வைத்தே செய்தியை ஆரம்பித்தார் அனிதா. அழுகாச்சி டாஸ்க்கிற்கு ‘நீ யாரு.. திரும்பிப் பாரு’ என்று அனிதா தந்த தலைப்பு சூப்பர்.

‘'பிக்பாஸையே சிரித்துக் குழப்பி வெற்றிகரமாக வெளியே வந்திருக்கிறார் ரம்யா பாண்டியன். அவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இன்னமும் எழுபது நாட்கள் கூட பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்கக்கூடிய அளவிற்கு கல்லுளிமங்கி'’ என்றெல்லாம் அனிதா பாராட்டிய போது ‘'அடிப்பாவி... உள்ளே ஊமைக்குத்தா வாங்கிய அடி எனக்குத்தான் தெரியும்'’ என்பது ரம்யாவின் மைண்ட்வாய்ஸாக இருக்கலாம்.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

‘'நீ ஒரு பாட்டு பாடு... அதை நான் செய்தியா வாசிக்கறேன்'’ என்று ஆஜித்தையும் தனது விளையாட்டிற்கு அழைத்தார் அனிதா. ‘ஊதா கலரு ரிப்பன்’ பாட்டை ஆஜித் பாடிய விதம் அருமை. நிறைய சங்கதிகளை அட்டகாசமாகப் போட்டு பாடினார். அந்த வரிகளை சற்று கூட்டி வளர்த்து அனிதா செய்தியாக வாசித்ததும் அருமை. செய்தி வாசிக்கும் மோடிற்கு மாறுகிற போது அனிதாவின் குரலில் ஒரு வசீகரமும் கம்பீரமும் தன்னிச்சையாக வந்து விடுகிறது. வாசித்து முடித்தவுடன் ‘என்னவோ உளறினேன்’ என்று சிரித்து பழைய மோடிற்கு மாறி குழந்தையானார் அனிதா.

அடுத்து ஒரு டாஸ்க். டிவி பார்த்துக் கொண்டே சாக்லேட் சாப்பிட வேண்டுமாம். (என்னய்யா... டாஸ்க் இதெல்லாம்?!) டிவி பார்ப்பவர் திசை திரும்பி விட்டால் அவரது அணியில் இருப்பவர் ஏதாவது ஒரு தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். (தப்பு செஞ்சவனை விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறவன் மண்டைல குட்றதெல்லாம் என்னப்பா விளையாட்டு?!).

தொலைக்காட்சியின் வழியாக திடுக்கிடும் இசை, மென்மையான இசை, பிக்பாஸ் டைட்டில் இசை போன்றவை காட்சிகளுடன் வந்தன. கேபி, ஷிவானி, அர்ச்சனா ஆகியோர் தங்கள் பங்கை இதில் சிறப்பாக செய்தனர். (ஆனா என்னதான் பண்ணாங்கன்னு நமக்குப் புரியல).

ரம்யாவின் முறை வரும் போதுதான் ஆரம்பித்தது வில்லங்கம். ‘ரோபோ டாஸ்க்’ உள்ளிட்டு முந்தைய டாஸ்க்குகளின் போது சிரிக்காமல் மிக கட்டுப்பாடாக இருந்த ரம்யா இப்போதோ அடிக்கடி சிரிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் மற்றவர்களுக்குத்தானே தண்டனை என்று பழிவாங்க ஆரம்பித்து விட்டார் போல.

ரம்யாவின் முதல் சிரிப்பிற்கு தண்டனையாக, அனிதா கோழி போல நடனமாட வேண்டியிருந்தது. (உண்மையிலேயே நமக்குத்தான் அது தண்டனை). அடுத்த சிரிப்பிற்கு தண்டனை ஆஜித்திற்கு கிடைத்தது. அவர் முகத்தில் வெண்ணையை தடவிக் கொள்ள வேண்டும். ‘'டேய் பார்க்க நல்லாயிருக்குடா'’ என்று சிரிப்புடன் ரம்யா கலாய்க்க ‘'கொண்டே புடுவேன்'’ என்று ஜாலியாக காண்டானார் ஆஜித்.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

அடுத்த சிரிப்பிற்கு தண்டனை ஷிவானி. உண்மையில் இரண்டாவது சிரிப்பிற்கான தண்டனையின் போது ஷிவானியைத்தான் ஆஜித் போகச் சொன்னார். ஆனால் அதை ஷிவானி மறுத்து ஆஜித்தை அனுப்பினார். அப்போதே ஷிவானி போயிருக்கலாம். ஏனெனில் ‘'பின்னாடி ஒருத்தன் பலாப்பழத்தோட வர்றான்'’ என்கிற ஜோக்கின் கதை போலாகி விட்டது. ஆம்... ஷிவானி மூன்று பச்சை மிளகாயை கடித்து சாப்பிட வேண்டும்.

கரக்கரக் என்று விரைவில் சாப்பிட்டு முடித்தார் ஷிவானி. ஒருவகையில் இதுவும் நல்லதே. ஏனெனில் மற்றவர்களை விட இரண்டு சாக்லேட்டுகளை கூடுதலாக அவர் சாப்பிட முடியும். ரம்யா அடிக்கடி சிரித்தது கூட சாக்லேட்டுக்களை நிதானமாக அமர்ந்து அதிகம் மொக்க முடியும் என்கிற காரணத்தினால்தான் போல. இந்த டாஸ்க்கில் கேபி வென்றார். வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கிடைத்தது. வேறென்ன..,? அதே சாக்லேட்தான்.

‘வின்னர்’ படத்தில் ‘ஹாயாக’ காலை விரித்தபடி படுத்து வடிவேலு தூங்க முயல்வதைப் போல பாலாஜி ‘பப்பரப்பே’ என்று காலை விரித்தபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது காமிரா அவ்வப்போது அவரை ‘ஜூம்’ செய்ததால் வெட்கப்பட்டு தன் உடையை சரி செய்து கொண்டார். (அய்யோ.. வெட்க வெட்கமா வருதே?!)

வடிவேலுவின் கால்களின் இடையில் சைக்கிள் விட்டு பிரசாந்த் விளையாடுவதைப் போல ‘ஹாயாக’ படுத்திருந்த பாலாஜியை ‘'ஏதோ பலமான யோசனை போல... சிந்தனையை முடிச்சிட்டு வர்றீங்களா?” என்று பிக்பாஸ் அழைக்க பதற்றமே இல்லாமல் ‘அண்ணன் இதோ வர்றேண்டா... நீ போயிட்டே இருடா தம்பி” என்கிற டோனில் பாலாஜி சொன்னது சுவாரஸ்யம். பிக்பாஸ் குரலைக் கேட்டாலே மற்றவர்கள் நடுங்கும் போது பிக்பாஸை கூட இடது கையால் பாலாஜி ஹேண்டில் செய்வது சிறப்பு.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

உள்ளே சென்ற பாலாஜியை '‘என்ன அப்படி யோசனை?” என்று பிக்பாஸ் விசாரிக்க ஆரம்பித்தார். ‘'இல்ல ச்சும்மா... அப்படியே சுவத்துல இருந்த ஓவியங்களைப் பார்த்துட்டு இருந்தேன்’ என்று பாலாஜி சொல்ல, ‘'ஆமாம்... இவரு.. பெரிய கலாரசிகரு... ரசிக்கறாரு.. இப்படி சும்மா இருக்கற நேரத்துல உருப்படியா ஏதாவது வேலை பண்ணலாம்ல’' என்று தண்டச் சோறு சாப்பிடும் மகனை அப்பன்காரன் திட்டுவது போன்ற டோனில் பிக்பாஸ் கிண்டல் செய்தார்.

‘'இங்க என்னை பிளேம் பண்றாங்க. கையை நீட்டிப் பேசாதேன்னு சொல்றாங்க. அதனாலேயே விளையாட தயக்கம் வருது'’ என்று பாலாஜியையும் கண்கலங்க வைத்து விட்டார் பிக்பாஸ். (பப்லு ஆர்மி நேத்து நைட்டு சாப்பிடாம அழுதுட்டே இருந்திருப்பாங்க போல... பாவம்!). ‘கல்லை உடைத்தால் சிலை... அது போல தவறுகளை திருத்திக் கொண்டால்தான் அது பாலாஜி. யாருக்கும் நீ பயப்படாத… நீ கலக்கு சித்தப்பூ’ என்பது போல் பிக்பாஸ் ஊக்கம் அளித்தவுடன் ‘இனிமேதான் இந்த காளியோட ஆட்டம் இருக்கு’ என்று பழைய உத்வேகத்துடன் வெளியே வந்தார் பாலாஜி.

ஆனால் சந்தடி சாக்கில் பாலாஜி போடும் உடைகளையும் பிக்பாஸ் பாராட்டியதுதான் விநோதம். அந்த மாதிரி டிரஸ்ஸையெல்லாம் போட்டு ஒருத்தன் ஊருக்குள்ள உலவ முடியுமா?! ‘இனிமே என்னை ‘தம்பி பாலா’ன்னுதான் கூப்பிடணும்’ என்று பிக்பாஸ் அண்ணனிடம் கோரிக்கை வைத்தார் தம்பி பாலா.

அடுத்ததாக தலைவர் போட்டிக்கான டாஸ்க் நடந்தது. இந்த முறையாவது பாலாஜி தலைவர் ஆகி விடுவாரா என்று நேற்று பிறந்த குழந்தை கூட எதிர்பார்த்திருக்கும். தெர்மகோல் அடங்கிய எட்டு பைகளை சன்னல் வலையின் வழியாக நுழைத்து வெளியே எடுக்க வேண்டும். யார் இதை முதலில் முடிக்கிறாரோ அவரே தலைவர்.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

அர்ச்சனா, ரம்யா, பாலா என்று மூவருமே சீரான வேகத்தில் இதைச் செய்து கொண்டிருந்தார்கள். பாலா சில இடங்களில் தவறு செய்யும்போது நடுவர் ரியோ சுட்டிக் காட்ட டென்ஷன் ஆகி விட்டார் பாலாஜி. அது மட்டுமில்லாமல் ‘வித்தியாசமாக சிந்திக்கிறேன் பேர்வழி’ என்று திரும்பி நின்று பின்னங்கையால் நுழைத்து எடுத்ததெல்லாம் அபத்தமான யோசனை. அனிதா சொன்னது போல் பை தவறி கீழே விழுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். இப்படி வித்தியாசமாக சிந்தித்ததால் பாலாஜியின் வேகம் மட்டுப்பட்டது என்று நினைக்கிறேன்.

மற்றவர்களை விடவும் கூடுதலான வேகத்தில் செய்து முடித்த அர்ச்சனா, கடைசி பையை பெடஸ்டலின் மீது வைக்காமல் வெற்றி மகிழ்ச்சியில் தூக்கி அடித்தார். ஆக, அர்ச்சனாதான் அடுத்த வார தலைவர். உடல் தகுதியைக் கொண்ட டாஸ்க்காக இருந்தாலும் ஒரு பெண் போட்டியாளர் வென்றது மகிழ்ச்சி.

‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பது அருமையான பொன்மொழி. முன்பு கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையெல்லாம் ராஜதந்திரத்துடன் (?!) வீணாக்கி விட்டு இப்போது திராட்சைப் பழத்திற்காக ஏங்கும் நரியின் கதை போல் ஆகி விட்டது பாலாஜியின் நிலைமை. திருமண வயதைத் தாண்டியும் ‘சிங்கிளாக’ தவிக்கும் முதிர்கண்ணன் போல், கேப்டன் ஆகாமலேயே ஃபைனல் வரைக்கும் பாலாஜி சென்று விடுவார் போல. ‘Out of the box thinking’ என்று சொல்லியே இவரை உசுப்பேற்றி வைத்திருக்கிறார்கள்.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

அர்ச்சனா வென்ற செய்தியை அறிந்தும் கூட தன் போட்டியை இறுதிவரை செய்து முடித்தது பாலாஜியின் சிறப்பு. பின்பு தனியாக இருக்கும் சமயத்தில், இந்த வெற்றியை தன் மகளுக்கு கண்கலங்கலுடன் சமர்ப்பித்தார் அர்ச்சனா.

ரியோ நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படமான ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. (வடிவேலு தமிழ் சமூகத்தின் அகராதிக்கு எத்தனை வார்த்தைகளை கொடையாக அளித்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது!). ரியோவின் புதிய படத்திற்காக பிக்பாஸ் வீடே மகிழ்ச்சி அடைந்தது. அவரைப் பாராட்டியது.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

ரியோ ஒரு சிறந்த நட்சத்திரமாக மின்னுவதற்கு என்னுடைய பாராட்டும் வாழ்த்தும். ஆனால் இந்த இடத்தில் எனக்குத் தோன்றிய ஒரு நெருடலை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

ரியோவின் புதிய திரைப்படத்தின் ட்ரெய்லர் பிக்பாஸ் விளம்பரத்தின் மூலம் பல கோடி மக்களைச் சென்று அடைவது நல்ல விஷயம்தான். ஆனால் அவரும் இங்கு போட்டியாளராக இருக்கும் போது இந்த ட்ரெய்லர் வெளியிடப்படுவதால் போட்டியில் சலனம் ஏற்படலாம். ரியோவின் ஸ்டார் அடையாளம் மீண்டும் இங்கு புதுப்பிக்கப்படுவதால் அது இதர போட்டியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். சிலர் ரியோவை பிரமிப்பாக பார்த்து அதனால் அவருக்கு சாதகமாக இருக்கலாம். சிலர் மனப்புழுக்கம் காரணமாக ரியோவிடம் பொறாமை கொள்ளலாம்.

ஏனெனில் பிக்பாஸ் போட்டியாளர்களின் பலருடைய கனவும் சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று இருக்கிறது. நான் இப்படி குறிப்பிட்டுச் சொல்வதின் தாக்கம் அடுத்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது.

நேற்று ஆரியைப் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்த பாலாஜி, இன்று திடீரென்று மனம் நெகிழந்து திருந்தி ‘'ஆரியண்ணாவையும் ரியோவையும் நான் பலமுறை கையைப் பிடிச்சு கீழே இழுத்திருக்கேன். அதுக்கு ஸாரி கேட்கணும்.. நீங்கள்லாம் நிறைய சாதிச்சவங்க. எனக்கு எந்த ஒரு தகுதியும் இல்ல'’ என்றெல்லாம் நெகிழ்ந்து போய் பேச ‘ஏண்டா தம்பி... இப்படியெல்லாம் பேசற” என்றது போல் இருவரும் எழுந்து வந்து பாலாஜியைக் கட்டிக் கொண்டார்கள்.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

'‘எனக்கும் இந்த மாதிரி இடத்திற்கு போகணும்ன்றதுதான் ஆசை'’ என்று ரியோவின் ஹீரோ பிம்பத்தை வைத்து வெளிப்படையாக தன் விருப்பத்தை சொல்லிய பாலாஜிக்கு பாராட்டு. ஆனால், ‘'புரொடியூசர் பையன்றதால ரமேஷ் கிட்ட பணிஞ்சு போறீங்களா” என்றெல்லாம் ஆரியை கடுமையாக புகார் சொல்லி வறுத்தெடுக்கும் அளவிற்கு கறாராக இருந்த பாலாஜியைக் கூட இந்த ட்ரெய்லர் நெகிழ வைத்து விட்டது அல்லவா? அதைத்தான் ஆட்சேபித்திருக்கிறேன். இந்த ட்ரெய்லரை பிக்பாஸ் இறுதி நாள் கொண்டாட்டத்தில் வெளியிட்டிருக்கலாம்.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

இன்று கேபி பிறந்தநாள் என்பதால் கேக்கும் வாழ்த்து அட்டையும் வந்தது. வீடியோவும் வெளியிடப்பட்டது. தனது குடும்ப உறுப்பினர்களைப் பார்த்த மகிழ்ச்சியை விடவும் தன் வளர்ப்பு நாய் ‘தியா’வைக் கண்டு அதிக மகிழ்ச்சியடைந்து குதூகலித்தார் கேபி. வீட்டில் நாய் போன்ற விலங்குகளை வளர்ப்பவர்களால்தான் அந்த உணர்வை புரிந்து கொள்ள முடியும்.

பிறந்த நாள் கேக்கில் கேபி மற்றும் நாயின் உருவம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர்கள் வெட்டிவிடக்கூடாதே என்று என் மனம் பதைபதைத்தது. “நீ ஃபீல் பண்ணது போதும். நாங்கள்லாம் கேக்கிற்காக வெயிட் பண்ணிட்டிருக்கோம்’' என்று அர்ச்சனா கேட்டது சுவாரஸ்யமான கிண்டல்.

ரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'! – நாள் 75

இன்று பஞ்சாயத்து நாள். ‘கோழி டாஸ்க்கில்’ நடந்த குளறுபடிகளை கமல் நிதானமாகவும் நீளமாகவும் விசாரிப்பதற்குள் சேவல் கூவி பொழுதே விடிந்து விடும் என்று தோன்றுகிறது.

இந்த வாரம் எவர் வெளியேறுவார் என்கிற யூகம் அல்லது எவர் வெளியேற வேண்டும் என்கிற விருப்பம் போன்றவை தொடர்பான உங்களின் ‘தங்க முட்டை’ கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்கள்..