Published:Updated:

பிக் பாஸ் 6: "என்ன ஆனாலும் அசிம் அண்ணா அந்த விஷயத்தைப் பண்ணமாட்டார்!" - அசிம் தம்பி ஆதில் நேர்காணல்

ஆதில் - அசிம்

அசிம் திரும்பத் திரும்ப எழுந்து வரானே! இவன திருப்பியும் நாமினேட் பண்ணி, இந்த வாரமாவது வெளியில அனுப்பிடணும்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க.

பிக் பாஸ் 6: "என்ன ஆனாலும் அசிம் அண்ணா அந்த விஷயத்தைப் பண்ணமாட்டார்!" - அசிம் தம்பி ஆதில் நேர்காணல்

அசிம் திரும்பத் திரும்ப எழுந்து வரானே! இவன திருப்பியும் நாமினேட் பண்ணி, இந்த வாரமாவது வெளியில அனுப்பிடணும்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க.

Published:Updated:
ஆதில் - அசிம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் பைனலிஸ்ட் அசிமின் சகோதரர், தன் சகோதரர் அசிம் குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

உங்க அண்ணன் அசிமுக்கு சோஷியல் மீடியால வர்ற நெகட்டிவ் கமென்ட்ஸ், ஹேட்டர்ஸ் பத்தி என்ன நினைக்குறீங்க?

அசிம்
அசிம்

"வெறுக்கிறவங்க வெறுத்துக்கிட்டே தான் இருப்பாங்க. அவருடைய நல்ல குணங்கள் சில பேருக்குத் தெரியாது. வெளியில எப்படி இருப்பாரோ அதே மாதிரி தான் பிக் பாஸ் வீட்லயும் இருக்காரு. கோபப்படுறது, அந்த சிச்சுவேஷன்ல அவருக்கு என்ன தோணுதோ, அதை முகத்துக்கு நேரா சொல்லிடுவாரு. ஆனா அவரு சொன்னது கரெக்ட்டா இருக்கும். அதைக் கொஞ்சம் கடுமையா ஹார்ஷா சொன்ன மாதிரி ஃபீல் ஆகும். அவர் நடிக்கலாம் இல்ல. கேமரா, புரோமோவுக்காக எதுவும் பண்ணக் கிடையாது. அவரோட தன்மை அதுதான். இவர் ஏதாவது சொல்லி யாராவது ஹர்ட் ஆகிட்டா, உடனே போய் சாரி கேட்டுருவாரு. யார் கிட்டயும் பகையோட இருக்கணும்னு அவர் நினைக்கவே மாட்டார்."

அசிம் கோபப்படுறாரு, ஆக்ரோஷத்தைக் காட்டுறாரு, திடீர்னு நல்லவராகி அன்பா இருக்கார் அது நடிக்கிற மாதிரி இருக்கு. அசிம்ம புரிஞ்சுக்கவே முடியலன்னு சொல்றாங்கறளே கவனிச்சீங்களா?

அசிம்
அசிம்

"கோபம் எல்லா மனுஷங்களுக்கும் வரும். கோபம் வர விஷயத்துல, அதை காமிச்சிரணும், அதை சொல்லிடணும். இதுவரை என்னுடைய புரிதல்ல நான் பார்த்த வரைக்கும், அசிம் யாரைப் பத்தியும் பின்னாடி பேசுனது கிடையாது. கண்டிப்பா இது வரைக்கும் கிடையாது. யாராயிருந்தாலும் முகத்துக்கு நேராவே சொல்லிடுவாரு. போன எபிசோட்ல சொன்ன மாதிரி, 'என்னைய செதுக்கின சிற்பியாகத்தான் நான் உங்களை பாக்குறேன்னு' கமல் சார்கிட்ட சொன்னாரு. இதுதான் நானும் நம்புறேன். அந்த வகையில கமல் சாருக்கு பெரிய நன்றிகள்."

நாமினேஷன்னு வந்துட்டா, ரெண்டு பேர்ல ஒருத்தர் அசிம்ம நாமினேட் பண்றாங்களே; அது ஏன் அப்படி அமையுது?

அசிமுடன் ஆதில்
அசிமுடன் ஆதில்

"ஹவுஸ்மேட்ஸ் எல்லோருக்கும் அசிமை ரொம்பப் பிடிச்சிருக்கு போல. நாமினேட் பண்ண பண்ண, அசிம் திரும்பத் திரும்ப எழுந்து வரானே! இவன திருப்பியும் நாமினேட் பண்ணி, இந்த வாரமாவது வெளியில அனுப்பிடணும்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க.. ஆனால் மக்கள் இதை எதிர்ப்பாக்கல, இவர இன்னும் பிக் பாஸ் வீட்டில் உட்கார வச்சு, பைனல்ஸ் வரைக்கும் கொண்டு வந்துருக்காங்க. இதுக்கு மேல உள்ளதும் மக்கள் கையில தான் இருக்கு.!"

எல்லாருக்கும் டாஸ்க் ஒன்னு குடுத்தாங்க. ஆனால் அசிம் அந்த பெண் வேடம் ஏத்துக்காம இருந்ததற்கான காரணம் என்ன.?

"அஜித் சார் படத்தில சொன்ன மாதிரி, நோ மீன்ஸ் நோ தான். வேண்டாம்-னா வேண்டாம் தான். இதையே தான் கமல் சாரும் சொல்லி இருந்தாங்க, ஒருத்தவங்க விரும்பி தான் அந்த விஷயத்த செய்யணும். அதுமாதிரி தான், தனக்கு புடிச்சத செய்யணும்னு கடைசி வரைக்கும் அதிலேயே நின்னுட்டாரு.

இரண்டு, மூன்று பேர் பண்ண மாட்டேன்னு சொன்னாங்க. ஆனா மத்த போட்டியாளர்கள் சொன்னதுனால, அவங்களும் பண்ணக்கூடிய சூழ்நிலை வந்துச்சு. இருந்தாலும், எல்லாரும் வற்புறுத்தியும் அசிம் அதை பண்ணல. அவர் பண்ணாததுனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவருக்குப் பிடிக்காத விஷயத்தை யார் சொல்லியும் பண்ணல, பண்ணனும்-னும் நினைக்கல."

பிக் பாஸ் ஃபைனல்ஸ் வந்திருச்சு, வின்னர் யாருன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. டைட்டில் வின் பண்ண யாருக்கு வாய்ப்பு இருக்குனு நீங்க நினைக்கிறீங்க.?

அசிம்
அசிம்

"மக்கள் கையில தான் இருக்கு. எல்லாருமே சூப்பரா விளையாடிட்டு இருக்காங்க. எல்லாருமே அவங்களுடைய தனித்திறமையை காண்பிச்சதாலதான், டாப் 5-ல வந்து நிக்கிறாங்க. என்னையப் பொறுத்தவரைக்கும், அந்த அஞ்சு பேரும் வெற்றியாளர்கள்தான். அதுல மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்குறாங்க என்பதைப் பொறுத்து இருக்கு. டைட்டில் யாருக்குக் கிடைத்தாலும் பிரச்னை இல்லை. அவர் நூறு நாளுக்கு மேல பிக் பாஸில் இருக்காருங்கிறதே ஹேப்பி தான்.!"

அசிம்மின் சகோதரர் ஆதிலின் முழுமையான நேர்காணலைப் பார்க்க...