Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 85: ஆபீஸ் ரூம் அழைத்து மிரட்டிய பிக் பாஸ்; அவரையே டயர்ட்டாக்கி வெற்றி பெற்ற அசிம்!

பிக் பாஸ் 6 நாள் 85

நீண்ட நேரமாக அசிம் வெளியே வராததால், “என்னடா, பொழுதே போயிடுச்சு. இருட்டா ஆயிடுச்சு... இவனை ஆளக்காணோம். ஏடிகேவும் ஷிவினும் தூங்கியே தூங்கிட்டாங்க... போயி ஒன்றரை மணி நேரம் ஆவுது... என்னய்யா நடக்குது?" என்று மக்கள் குழம்பினார்கள்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 85: ஆபீஸ் ரூம் அழைத்து மிரட்டிய பிக் பாஸ்; அவரையே டயர்ட்டாக்கி வெற்றி பெற்ற அசிம்!

நீண்ட நேரமாக அசிம் வெளியே வராததால், “என்னடா, பொழுதே போயிடுச்சு. இருட்டா ஆயிடுச்சு... இவனை ஆளக்காணோம். ஏடிகேவும் ஷிவினும் தூங்கியே தூங்கிட்டாங்க... போயி ஒன்றரை மணி நேரம் ஆவுது... என்னய்யா நடக்குது?" என்று மக்கள் குழம்பினார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 85

‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பார்கள். அசிம் விஷயத்தில் அது உண்மையாகி விட்டது. இத்தனை நாள் அவருக்கு எதிரியாக இருந்த வாயே, இன்று அவருக்கு பிளஸ் பாயின்ட்டாகி விட்டது. ‘சங்கீத ஸ்வரங்கள்... ஏழே கணக்கா... இன்னும் இருக்கா...’ பாடலில் வருவது போல விடிய விடியப் பேசி, பிக் பாஸையே டயர்ட் ஆக்கி வெற்றி பெற்றுவிட்டார் அசிம். தனது பேச்சுத்திறமையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ‘நாமினேட் விலக்கு' பெற்ற ஒரே போட்டியாளரான அசிமிற்கு வாழ்த்துகள்.

தலைவர் போட்டியை உடல்ரீதியான வலிமையைக் கொண்டு அமைக்காமல், வாதம் செய்து வெற்றியைப் பெறும்படியாக மாற்றிய பிக் பாஸ் டீமுக்கும் வாழ்த்துகள். இது தொடரட்டும்!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

நடு இரவில் வந்த புத்தாண்டு கேக்குக்காக மக்கள் பேயாகக் கத்தி ஆவலுடன் ஓடினார்கள். ஸ்டோர்ரூம் கதவை ஷிவின் அடித்த வேகத்தில், அதன் விளம்பர போட்டோவில் இருக்கும் நபருக்கே பயங்கரமாக வலித்திருக்கும். ‘வேர் ஈஸ் தி பார்ட்டி?’ என்கிற அட்டகாசமான பாடலுடன் பொழுது விடிந்தது. ‘குடுவை மண்’ போட்டி முடிவில் நிகழ்ந்த சர்ச்சையைப் பற்றி இன்னமும் விக்ரமனிடம் அனத்திக் கொண்டிருந்தார் அமுதவாணன்.

பிக் பாஸ் 6 நாள் 85
பிக் பாஸ் 6 நாள் 85

தலைவர் போட்டிக்காக மோதுவதற்காக ஏற்கெனவே தகுதி பெற்றிருக்கும் அசிம் மற்றும் ஏடிகேவை அழைத்தார் பிக் பாஸ். இந்த முறை குடுமிப்பிடிச் சண்டையெல்லாம் இல்லை. வாதத் திறமையால் வெல்ல வேண்டும். ‘தலைவர் ஆவதற்கு நான் எந்த வகையில் சிறப்பானவன், தலைவரானால் என்னென்ன மாற்றங்களையெல்லாம் கொண்டு வருவேன்?’ என்பதையெல்லாம் முன்னிட்டு பேச வேண்டும். ஆனால் இந்தப் போட்டியில் அசிம் விட்டுக் கொடுத்ததுபோல்தான் தெரிந்தது. ஏடிகே இதுவரை தலைவர் ஆனதில்லை என்பதால் விட்டுத் தந்தாரோ, என்னவோ?! (நம்ம அசிமா இது?! பார்றா!)

தலைவரான ஏடிகே – அசிம் விட்டுத் தந்தாரா?

முதலில் தன் வாதத்தைத் தொடங்கினார் அசிம். பிளேட்டில் பெயர்களைப் போட்டது, அவரவர்களின் பிளேட்டுகளை அவரவர்களே கழுவ வைத்தது, டீம் பிரிப்பதில், குறிப்பாக கிச்சன் டீமில் இருந்த பாலிட்டிக்ஸை களைந்தது, ஆண்களை சமையல் டீமில் போட்டது... ஆகியவற்றைச் சொன்ன அசிம் “இனி தலைவரா வந்தா சொல்லாததையும் செய்வேன்” என்றார்.

இதற்குப் பதில் வாதம் வைத்த ஏடிகே, “நான் சுய ஒழுக்கம் உள்ள ஆளு. எழுந்த பிறகு படுக்கையைச் சுத்தமா வைக்கறதுலதான் ஒரு நாளே தொடங்குது. அதை நான் தினமும் செஞ்சுடுவேன். ‘ஏடிகே வேலை செய்யலை'ன்னு யாரும் சொல்லாதபடிக்கு எல்லா வேலையும் செஞ்சிருக்கேன். எனக்குக் கோபம் வராது. பொறுமை அதிகம்” என்று முடித்தார். "கோபம்-ன்றதையே வெச்சு என்னை முத்திரை குத்தறீங்க.. .நான் கோபக்காரன்தான், ஆனா மோசக்காரன் இல்ல" என்று தெலுங்கு டப்பிங் பட டைட்டில் மாதிரி விரக்தியுடன் சொல்லி முடித்த அசிம், உரையாடலில் ஏடிகே வென்றதாக ஒப்புக் கொண்டார். கோபம் என்கிற வார்த்தையை ஏடிகே பயன்படுத்தியது அசிமிற்கு நெருடலை அளித்திருக்க வேண்டும்.

பிக் பாஸ் 6 நாள் 85
பிக் பாஸ் 6 நாள் 85

“உரையாடலா...? அந்தச் சம்பவம் எப்ப நடந்துச்சு... என்னய்யா விளையாடுகிறீர்களா? ஒழுங்கா ஆர்க்யூ பண்ணுங்க. என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருவோம்ன்னு சொல்லுங்க. இது செல்லாது" என்று பிக் பாஸ் கறாராகச் சொல்லி விட, வேறு வழியின்றி மீண்டும் விவாதிக்க வேண்டியதாக ஆனது. ஏடிகே மீண்டும் ஆரம்பித்தார். “சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ண மாட்டேன். அடுத்தவங்களைப் பேச அனுமதிக்கிற சுதந்திரத்தைத் தருவேன். குறைகளை நிதானமாகக் கேட்பேன். மத்த கேப்டன்கள் முதல் நாள் மட்டும்தான் வேலை செஞ்சாங்க. நான் தினமும் செய்வேன்” என்று முடித்தார்.

எந்த வித டிபன்ஸ் வாதத்தையும் வைக்காமல், ஏடிகே வென்றதாக அசிம் ஒப்புக் கொள்ள, ‘எப்படியாவது ஒழிங்க’ என்று பிக் பாஸூம் ஏடிகேவைத் தலைவராக அறிவித்தார். கிச்சன் டீமில் ரச்சிதாவையும் அசிமையும் வைத்த ஏடிகே, தினமும் ஒவ்வொரு அணியில் வேலை செய்வேன் என்று சொன்னது பாராட்டத்தக்கது.

அதிரடியாக நடந்த நாமினேஷன் ஆட்டம்

நாமினேஷன் சடங்கை வித்தியாசமான முறையில் அதிரடியாக ஆரம்பித்தார் பிக் பாஸ். இதற்காக எந்தவித அறிவிப்பையும் அவர் செய்யவில்லை. ஒவ்வொரு போட்டியாளரையும் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்தார். ‘நாள் ஒன்று முதல் இன்று வரை மக்களுக்குச் சுவாரஸ்யமாக என்ன செய்துள்ளீர்கள்?’ என்று தொடர்ந்து பேச வேண்டும். பேசுவதில் தடங்கல் ஏற்பட்டு பத்து செகண்ட் இடைவெளி வந்தால் அவர் அவுட். இது மட்டுமல்ல, உரையாடலின் இடையில், சிபிஐ விசாரணை போல பிக் பாஸ் குறுக்கிட்டு கேள்விகளைக் கறாரான குரலில் கடுமையாக்கிக் கொண்டே வருவார். “கேட்கல... இன்னும் சத்தமா... கேட்கல.... இன்னும் சத்தமா...” என்று மிரட்டுவார். அதுதான் முக்கியமான சவால். அந்தக் கடுமைக்குப் பயந்து, தயங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து பேச வேண்டும். இதில் வெல்பவருக்கு ‘நாமினேஷன் ஃப்ரீ வாய்ப்பு’ கிடைக்கும்.

பிக் பாஸ் 6 நாள் 85
பிக் பாஸ் 6 நாள் 85

முதலில் வந்த மைனா, இந்த அதிரடித் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. பிக் பாஸின் பிளானும் அதுதானே?! “வீட்டைக் கலகலப்பா வெச்சிருக்கேன். பூனை சேகர், ஸ்கூல் டாஸ்க்லாம் நல்லாப் பண்ணியிருக்கேன்.” என்று மைனா சொல்லும் போதே குறுக்கிட்ட பிக் பாஸ் “அதெல்லாம் டாஸ்க்... வேற என்ன பண்ணீங்க?” என்று கேட்டு கெத்து காட்டினார். “என்ன பண்ணி கிழிச்சீங்க?” என்று கூட அந்தக் கேள்வியின் கடுமையைச் சொல்லலாம். திக்கித் திணறி மைனா எதையோ சொல்லி முடித்து இடைவெளி விட ‘அவுட்’ ஆனார். “ஓகே. நீங்க கிளம்புங்க. ஆனா நான் உங்களை அடிச்சதை வெளில சொல்ல வேணாம். மத்தவங்க உஷாராகிடுங்க” என்று எச்சரித்து அனுப்பினார். ‘இதுதான் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கா?’ என்று வெள்ளந்தியாகக் கேட்ட மைனாவிடம் “ம்ஹூம்... இது தேறாது...’ என்பது மாதிரியே ஹாண்டில் செய்தார் பிக் பாஸ்.

வெளியே வந்த மைனாவிடம் ‘உள்ளே என்ன நடந்தது... பஸ்ஸர் சத்தம் இங்க வரைக்கும் கேட்டுச்சு. (அவ்வளவு சத்தமாவா கேக்குது?!)” என்று ஷிவின் விசாரிக்க, மற்றவர்களுக்கும் அதே ஆவல். “ஆத்திச்சூடியை அறுபது செகண்ட்ல சொல்லச் சொன்னாரு” என்று சுமாரான பொய்யைச் சொல்லி மைனா சமாளிக்க “நீங்க என்ன ஔவையாரா?” என்று கிண்டலடித்தார் விக்ரமன்.

‘மக்களுக்கு என்ன சுவாரஸ்யம் தந்தீங்க?’ – நெருக்கடியை ஏற்படுத்திய பிக் பாஸ்

“ஆபிஸ் ரூமுக்கு வாங்கோ... வாங்கறதுக்கு வாங்கோ" என்கிற திட்டத்தில் அடுத்தபடியாக உள்ளே வந்தவர் கதிரவன். “நிறைய விஷயங்கள் சுவாரஸ்யமா பண்ணியிருக்கேன். (என்ன விஷயங்கள்?!). வீட்டைச் சுத்தமா வெச்சிருக்கேன். (எந்த வீடு?!) பிரச்னைகளைப் பொறுமையா டீல் பண்ணியிருக்கேன். (என்ன பிரச்னைகள்?!) ராஜாங்கம், சைக்கிள் ஜாக்சன் டாஸ்க்ல நல்லாப் பண்ணேன். (வேற... வேற...) டான்ஸ், பாட்டு, பீட்லாம் நல்லாப் போட்டிருக்கேன்” என்ற கதிரவன் அதற்கு மேல் தம்பட்டம் அடிக்க முடியாமல் திணறி நிற்க, “போயிட்டு வாங்க தம்பி” என்று வழியனுப்பினார் பிக் பாஸ்.

பிக் பாஸ் 6 நாள் 85
பிக் பாஸ் 6 நாள் 85

அடுத்து வந்த ஏடிகே, “முதல் வாரம் ஃபோகஸ் பண்ண முடியாம இருந்துச்சு. அதுக்கு அப்புறம் ஃபாஸ்டா பிக்கப் பண்ணிட்டேன். வீடு சுத்தமா வெச்சிருக்கேன். போகபுஸ்ஸா, குழந்தை டாஸ்க்ல நல்லாப் பண்ணேன்...” என்று சில நிமிடங்கள் திகைத்து நிற்க, ‘கெட் அவுட் ப்ளீஸ்!’. அடுத்து வந்த அமுதவாணன், ‘என்டர்டெயின்மென்ட்’ என்கிற வார்த்தையையே எப்போதும் வைத்துக் கொண்டு ஜல்லியடிக்கிறார். இப்போதும் அதே. “எம்.ஆர்.ராதா மாதிரி பண்ணேன். கமல் சார் கூட பாராட்டினார். (அவர் பாராட்டியதெல்லாம் வேணாம். நீங்க என்ன பண்ணீங்க?!) அந்த டிவி, இந்த டிவி, பராசக்தி டாஸ்க்... (டாஸ்க் தவிர வேற... வேற...) நிறையச் சிரிக்க வெச்சிருக்கேன், பாட்டுப்பாடியிருக்கேன்... அப்புறம்... அப்புறம்... அப்புறம்...” என்று வண்டி நின்று போக “சரி... கிளம்புங்க தம்பி. லெட்டர் போடறோம்” என்று அனுப்பி வைத்தார் பிக் பாஸ். (என்னாவொரு வில்லத்தனம்?!)

பிக் பாஸ் 6 நாள் 85
பிக் பாஸ் 6 நாள் 85

அடுத்து வந்த ஷிவின், மெஷின் கன் போல படபடப்பார் என்று பார்த்தால் ஓரளவுக்குச் சமாளித்தார். “நான் என்டர்டெயின்மென்ட் ஃபீல்ட்ல இருந்து வரலை. இருந்தாலும் அதையெல்லாம் பண்ணேன். எல்லா டாஸ்க்லயும் ஆக்டிவ்வா இருந்திருக்கேன். கமல் சார் கூட பாராட்டியிருக்காரு. (இப்போது பிக் பாஸ் ஆட்சேபிக்கவில்லை. ஏன்யா?!) யாரையும் மரியாதைக் குறைவா பேசியதில்லை. உள்ளே ஒண்ணு... வெளியே ஒண்ணு...ன்னு நடந்ததில்லை. நட்பு வேற, கேம் வேறன்ற தெளிவு இருக்கு” என்று முடித்துக் கொண்டார்.

பிக் பாஸையே டயர்ட் ஆக்கிய அசிம்

அடுத்து வந்தாரய்யா அசிம். திறமையாகப் பேசி சமாளித்து விடுவார் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி தீய தீய கடலை வறுத்து பிக் பாஸையே கரெக்ட் செய்து விடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அட்டகாசமான திறமை! “ஒவ்வொரு வாரமும் சிரிக்க வெச்சிருக்கேன். (எதே?!) என்னை வெச்சு மத்தவங்க காமெடி பண்ணியிருக்காங்க. நானும் பண்ணியிருக்கேன். (என்ன காமெடி?!) பாட்டு தப்புத் தப்பா பாடுவேன். மத்தவங்க சிரிப்பாங்க. விக்ரமன், ஆயிஷா கூட மோதல் கொஞ்சம் அதிகமாயிடுச்சு. அதுல இருந்து திருந்தி மன்னிப்பு கேட்டு ஓரமா உக்காந்தா, உடனே பொம்மை டாஸ்க் வெச்சு வில்லனாக்கிட்டாங்க. தனலஷ்மி கூட சண்டை, குறும்படம்ன்னு ஏக கலாட்டாவா போச்சு... பல வாரங்களுக்குப் பேசுபொருளா மாறிட்டேன். டாஸ்க்ல மத்தவங்க ஒரு டிராக்ல போகும் போது நான் தனி டிராக்ல போயி சுவாரஸ்யம் பண்ணுவேன். அமுதவாணனை வெச்சு ஃபன் பண்ணியிருக்கேன். (அது அமுதவாணன் பண்ணது. நீங்க என்ன பண்ணீங்க?!). ராம் மாதிரி இமிடேட் பண்ணியிருக்கேன். (அது ராம் பண்ணது. நீங்க என்ன பண்ணீங்க!") கதிரவன் மாதிரி......

பிக் பாஸ் 6 நாள் 85
பிக் பாஸ் 6 நாள் 85
நீண்ட நேரமாக அசிம் வெளியே வராததால் “என்னடா... பொழுதே போயிடுச்சு. இருட்டா ஆயிடுச்சு... இவனை ஆளக்காணோம். ஏடிகேவும் ஷிவினும் தூங்கியே தூங்கிட்டாங்க... போயி ஒன்றரை மணி நேரம் ஆவுது... என்னய்யா நடக்குது? அப்படியே வெளியே அனுப்பிட்டாங்களா... பெட்டியை எடுத்துட்டு போயிட்டானா... ஒண்ணும் புரியலையே... நைட்டு சாப்பாடு அவனுக்குச் செய்யணுமா... வேணாமா... காலைல பல்லு வெளக்கும் போதுதான் வருவான் போல” என்றெல்லாம் வெளியே மக்கள் சஸ்பென்ஸூடன் காத்திருக்க, பிக் பாஸ் திணறத் திணற அடித்தாலும் எதிர்நீச்சல் போட்டு சமாளித்துக் கொண்டிருந்தார் அசிம். (என்னா அடி?!)

அடுத்துச் சென்ற ரச்சிதா, ‘ஏகாம்பரி... நீலாம்பரி... ஸ்கூல் டாஸ்க்’ என்று சொன்னதோடு நின்று விட, அவரை விரைவில் வெளியே அனுப்பினார் பிக் பாஸ். அடுத்து வந்த விக்ரமன், சிறிது நேரமாவது சமாளிப்பார் என்று பார்ததால்... “ரேங்கிங் டாஸ்க்ல ஆறாவது இடம் வந்தேன். என் இடத்துக்காகக் கடுமையா வாக்குவாதம் பண்ணியிருக்கேன். விட்டுக் கொடுத்திருக்கேன். பொறுமையா இருந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டுத் தொடர முடியாமல் விழிக்க “என்னய்யா... நீ வக்கீலுன்ற...” என்று மைண்ட் வாய்ஸில் நினைத்தபடி வெளியே அனுப்பினார் பிக் பாஸ்.

ஆக... நீண்ட நேரம் தாக்குப் பிடித்த அசிம்தான் வெற்றியாளர் என்பது அப்போதே தெரிந்து போயிற்று. ஆனால் இதெல்லாம் ஏன் நடந்தது, அதற்கான பரிசு என்ன என்பது இனிதான் தெரிய வேண்டும். எல்லோரையும் சபையில் அமர்த்திய பிக் பாஸ், "இந்த டாஸ்க்கில் நீண்ட நேரம் தாக்குப் பிடித்த அசிம் வெற்றி. அவர் இந்த வார நாமினேஷனில் இருந்து விலக்கு பெறுவார்" என்று சொன்னதும் அசிமுக்கு மகிழ்ச்சி. "மற்ற அனைவரும் நாமினேஷனில் வருவார்கள்" என்று கூடவே அதிர்ச்சி வைத்தியம் செய்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் 6 நாள் 85
பிக் பாஸ் 6 நாள் 85
இந்தச் சமயத்தில் அமுதவாணன் செய்த காமெடி நிச்சயம் சுவாரஸ்யம். “ஏன்யா... இத்தனை நாள் கையை உடைச்சு, காலை உடைச்சு டாஸ்க் பண்ணிட்டு உக்காந்திருந்தா... இவன் இவ்வளவு நேரம் பேசிட்டு வந்திருக்கானே... நாம ஒண்ணா பேசின அத்தனையையும் இவன் ஒருத்தனே அங்க பேசியிருக்கான். நம்ம கிட்ட பேசறா மாதிரியே அங்கயும் பேசியிருக்கான். பிக் பாஸ்... எங்க பாவம் உங்களை சும்மா விடாது. அங்கயே நான் அழுதிருப்பேன். கௌவரமா இருக்காதுன்னு அடக்கிக்கிட்டேன்” என்று கவுண்டமணி வாய்ஸில் அமுதவாணன் அழுது அனத்த, விக்ரமன் உட்பட வீடே வெடித்து சிரித்தது.

‘நாளைக்கு டிக்கெட் டு பினாலே ஆட்டம் ஆரம்பம்’

‘எங்களுக்கு இன்னமும் நறுமணம் தேவை’ என்கிற பெயரில் ஒரு காஃபி விளம்பர டாஸ்க். ரிலே ரேஸ் மாதிரி நடந்த இந்தப் போட்டியில் ரச்சிதா தலைமையிலான அணி வெற்றி. கடைசியில் சமயோசிதமாக அமுதவாணன் செயல்பட்டு இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்றொரு சுவாரஸ்யமான விளையாட்டு அடுத்ததாக நடந்தது. ‘வார்த்தை விளையாட்டு’ என்கிற பெயரில் நாம் தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்த்த விளையாட்டுதான். இரண்டாவது கேள்வி கேட்கப்படும் போது முதல் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். சற்று கவனத்தைக் கோரும் விளையாட்டு. முதல் கேள்வியை ஞாபகம் வைத்துக் கொண்டு விடை சொல்லும் அதே நேரத்தில், இரண்டாவது கேள்வியையும் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ள வேண்டும். கவனம் சிதறினால் போச்சு.

இந்த விளையாட்டில் கதிரவன் அநாயசமாகக் கேள்விகளை எறிந்து வெற்றி பெற்றார். அவர் வீஜே என்பதால் இந்த ஆட்டத்திற்குப் பழகியிருப்பாரோ?! “ரொம்ப குழப்பறே நீ” என்று மைனா சிணுங்க, விக்ரமன் மிகத்திறமையாக ஆடினார். என்றாலும் இறுதியில் கதிரவன் வெற்றி.

பிக் பாஸ் 6 நாள் 85
பிக் பாஸ் 6 நாள் 85
“ஓகே. நல்லாத் தூங்கி உடம்பை ரெடி பண்ணி வெச்சுக்கங்க. நாளைக்கு டிக்கெட் டு பினாலே டாஸ்க் ரணகளமா இருக்கும்” என்று எச்சரித்து ‘குட் நைட்’ சொன்னார் பிக் பாஸ். (பயமா இருக்கா, இனிமேதான் பயங்கரமா இருக்கும்!) இனி அவர்களுக்குத் தூக்கம் வருமா என்ன?
ஆக... இந்த வாரம் அசிமைத் தவிர அனைவருமே எவிக்ஷன் ஆபத்தில் இருக்கிறார்கள். மிகத் திறமையாக ஆடிய அசிமிற்குப் பாராட்டு. அவரைப் பாராட்டி இருப்பதால், வசையாளர்கள் இன்று ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு கனிவோடு கேட்டுக் கொள்கிறேன்.