Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 96: விருந்தினர்களிடமும் எகிறிய அசிம்; வீடு முழுவதும் வெடித்த மேக்கப் பிரச்னை!

பிக் பாஸ் 6 நாள் 96

‘அசிம் ஒப்பனை அணிந்தாரா, இல்லையா... இந்த உண்மையை ஆராய்வோம். தொடர்ந்து இணைப்பில் இருங்கள். விவாதிப்போம்’ என்கிற கதையாக வீடு முழுக்க இந்த விஷயம் பரவியது. இதை வைத்து அசிமை ஓட்டலாம் என்று மற்றவர்கள் முடிவு செய்தது வினையாகப் போயிற்று.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 96: விருந்தினர்களிடமும் எகிறிய அசிம்; வீடு முழுவதும் வெடித்த மேக்கப் பிரச்னை!

‘அசிம் ஒப்பனை அணிந்தாரா, இல்லையா... இந்த உண்மையை ஆராய்வோம். தொடர்ந்து இணைப்பில் இருங்கள். விவாதிப்போம்’ என்கிற கதையாக வீடு முழுக்க இந்த விஷயம் பரவியது. இதை வைத்து அசிமை ஓட்டலாம் என்று மற்றவர்கள் முடிவு செய்தது வினையாகப் போயிற்று.

பிக் பாஸ் 6 நாள் 96

"தன்னிலை அறிதல்’ன்னு ஒரு விஷயம் விக்ரமன் கிட்ட இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்" என்று அசிம் பாராட்டினார். ஆனால் ‘தன்னிலை மறத்தல்’ என்கிற பிரச்னை அசிமிடம் இருக்கிறது. கோபம் தலையில் ஏறிவிட்டால் கோயில் காளை போல எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் முட்டித் தள்ளி விடுகிறார். ஒருவர் இயல்பாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதை வைத்து, தன்னிடமுள்ள போர்க்குணத்தை அடிக்கடி வெளிப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. அதைக் கட்டுப்படுத்திக் கொள்வதுதான் மனமுதிர்ச்சி.

விருந்தினர்கள் கூடுதலாக உள்ளே வந்ததால் திருவிழாவின் மனநிலைக்கு வீடு மாறியது. ஆனால் சலம்பல் செய்து இதைக் குலைப்பதற்கு என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு ஆள் இருப்பார். மக்கள் நாயகன் திருவாளர் அசிம் சார் அவர்கள் இன்று முட்டித் தள்ளிய நபர்களின் பட்டியல்: ராபர்ட், மைனா, மகேஸ்வரி, ஷிவின், விக்ரமன். (பட்டியல் தொடரும்).
பிக் பாஸ் 6 நாள் 96
பிக் பாஸ் 6 நாள் 96

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘வாடி என் தமிழ்ச்செல்வி’ பாடலுடன் நாள் 96 விடிந்தது. “சைக்கிள் டாஸ்க்ல ரச்சிதா என்னை பிரெயின் வாஷ் பண்ணிட்டாங்க. க்யூட் ஃபேஸை வெச்சு மாத்திட்டாங்க. இல்லாட்டி நானும் விக்ரமனும் ஒழுங்கா ஓட்டியிருப்போம். ஷிவின் வேற சிரிச்சதால செம கோபம் வந்துச்சு. வெச்சு செஞ்சிடுவேன்னு ரெண்டு போ் கிட்டயும் கத்தினேன்” என்கிற பழைய விஷயத்தை பெருமிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் அசிம். ஒரு வாதத்திற்கு, ரச்சிதா சிரித்து மயக்கினார் என்றே வைத்துக் கொள்வோம். எனில் இங்கு ஏமாந்தது அசிம்தானே?! ஒருவர் தான் ஏமாந்த கதையை இத்தனை பெருமிதமாகவா மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?!

‘வெச்சு செஞ்சிடுவேன்’ என்பதை அசிம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதன் கொச்சையான அர்த்தம் அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. ஒருவர் தான் கோபப்பட்டு மற்றவர்களை மிரட்டிய தருணத்தை பிறகு உணர்ந்து வருந்துவதுதான் இயல்பு. அதுதான் நல்ல பண்பும் கூட. ஆனால் அதையே ஒருவர் பெருமிதமாக மற்றவர்களிடம் சொல்லிச் சிரிப்பார் என்றால்... அசிம் சார்... கொஞ்சம் மாறுங்களேன் சார்.

அபூர்வமாக வெளிப்பட்ட விக்ரமனின் சென்ஸ் ஆஃப் ஹியூமர்

"ஒரு பொண்ணுகிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணனும்... எப்படிப் பண்ணுவீங்க?" என்று முத்துவிடம் கேட்டுக் கலாய்த்துக் கொண்டிருந்தார் அமுதவாணன். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி ‘உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னே தெரியல’ என்று விதம் விதமாக முத்து தவித்துக் கொண்டிருக்க, மைனா அவரைக் கூடுதலாகக் கலாய்த்து ‘உண்மையான பையனா இருக்கணும்” என்று எடுத்துக் கொடுக்க இந்தச் சமயத்தில் விக்ரமன் அடித்த கமென்ட் ஆச்சரியம். “அதுக்கு அவர் பையனே இருக்கான்” என்று டைமிங்கில் சொல்லச் சபை வெடித்துச் சிரித்தது. (அடடே! சப்ஜெக்ட்டுக்குள்ள ஹியூமர் சென்ஸூம் இருக்குப்பா!).

பிக் பாஸ் 6 நாள் 96
பிக் பாஸ் 6 நாள் 96

ராக் மியூசிக் ஒலிக்க, ரகளையான கலர் கொண்ட டீஷர்ட்டை அணிந்து ராம் உள்ளே நுழைந்தார். ஃப்ரீஸில் நின்றிருந்த ஒவ்வொருவரையும் கட்டியணைத்து விசாரித்தார். ‘ரிலீஸ் பண்ணுங்க பிக் பாஸ்’ என்று ஏடிகேவின் நட்பு மீசை அதிகமாகத் துடித்தது. ‘உன் விழிகளில்’… என்கிற பாடல் அடுத்து ஒலிக்க ‘ஆயிஷாதான் வரா’ என்று உறுதியாக யூகம் செய்தார் மைனா. ஆனால் கையில் வெடிகுண்டுடன் வந்தது, ஷெரினா.

ராஜாங்கம் டாஸ்க்கில் சோற்றில் உப்பைப் போட்டு ஷவின் செய்த குறும்பு பிறகு பெரிய அளவில் வெடித்தது. அதைப் போலவே இம்முறையும் அவர் சாதாரணமாகச் செய்த குறும்பு, பிறகு பெரிய சண்டையாக மாறியது. ‘தியாகம் செய்யும் டாஸ்க்கின் படி’ அசிம் ஒப்பனை செய்யக்கூடாது. முகம் கூட கழுவக்கூடாது. லுங்கி, பனியனில்தான் இருக்க வேண்டும். இதை முதலில் ஒப்புக் கொண்ட அசிம், பிறகு ‘சந்தைக்குப் போகணும்... ஆத்தா வையும்... காசு கொடு’ என்கிற கதையாக ‘பிக் பாஸ்... இந்த டிரஸ் வேணாம்’ என்று தனியாகச் சென்று அனத்திக் கொண்டே இருந்தார். ஒப்பனை செய்யாததால் அவருடைய கண்களின் கீழே கறுப்பாகத் தெரிந்தது. எனவே அவர் பாத்ரூமிற்குச் சென்று ரகசியமாக, லைட்டாக மேக்கப் போட்டுக் கொள்கிறாரோ என்கிற சந்தேகம் வீட்டாருக்கு எழுந்தது.

பெரிதாக வெடித்த ஷிவினின் குறும்பு

பாத்ரூமின் அருகே இருந்த அசிமின் மேக்கப் பொருள்களை ஷிவின் நைசாகத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். ‘திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக அசிமால் வெளியே சொல்லவும் முடியாது. தமாஷா இருக்கும்’ என்பது அவரின் ஜாலியான ஐடியா, ஆனால் மைனாவோ "யப்பா சாமி... அவன் விவகாரம் வேணாம். வெச்சுடு" என்று எச்சரித்தார்.

பாத்ரூமின் அருகே இருந்த அசிமின் மேக்கப் பொருள்களை ஷிவின் நைசாகத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். ‘திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக அசிமால் வெளியே சொல்லவும் முடியாது. தமாஷா இருக்கும்’ என்பது அவரின் ஜாலியான ஐடியா, ஆனால் மைனாவோ "யப்பா சாமி... அவன் விவகாரம் வேணாம். வெச்சுடு" என்று எச்சரித்தார்.

பிக் பாஸ் 6 நாள் 96
பிக் பாஸ் 6 நாள் 96

‘அசிம் ஒப்பனை அணிந்தாரா, இல்லையா... இந்த உண்மையை ஆராய்வோம். தொடர்ந்து இணைப்பில் இருங்கள். விவாதிப்போம்’ என்கிற கதையாக வீடு முழுக்க இந்த விஷயம் பரவியது. இதை வைத்து அசிமை ஓட்டலாம் என்று மற்றவர்கள் முடிவு செய்தது வினையாகப் போயிற்று. “ஏண்டா என்னையே நோண்டறீங்க. உங்க கிட்டல்லாம் பதில் சொல்லணும்னு அவசியமில்லை... போங்கடா” என்று டென்ஷன் ஆகிவிட்டார் அசிம். அவர் இவ்வளவு வலுவாக மறுப்பதால், சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து இதை விட்டுவிடுவதுதான் சரியான விஷயமாக இருந்திருக்கும். மேலும் அசிம் இதனால் அவஸ்தைப்படுகிறார் என்கிற அனுதாபத்தையாவது காட்டியிருக்கலாம். இதைக் கண்காணிக்க வேண்டியது பிக் பாஸின் வேலையும் கூட!

ஆனால் அசிம் முன்னர் செய்த ராவடித்தனங்கள் காரணமாக, அவரை ஜாலியாகக் கலாய்த்துப் பழிவாங்கலாம் என்று மற்றவர்கள் நினைத்திருப்பார்கள். ராபர்ட்டும் இந்த விஷயத்தை வைத்து ஜாலியாகக் கேள்வி கேட்க “ரச்சிதாவை சொன்னதால மாஸ்டர் காண்டாயிட்டாரு போல” என்று அசிம் கிண்டல் செய்ய, “ரச்சிதாவை கிண்டல் செஞ்சா எனக்கென்ன...” என்று ஆரம்பித்து விவகாரமாகப் பேசினார் ராபர்ட். அவர் போட்டியாளராக இருந்தபோது கூட இத்தனை கோபம் வந்ததில்லை. விருந்தினராக வந்த சமயத்தில் இப்படி நிகழ்ந்தது.

பிக் பாஸ் 6 நாள் 96
பிக் பாஸ் 6 நாள் 96

"அசிங்கமா கேட்ருவேன்னு யாரைச் சொல்றீங்க. சொல்லிப் பாருங்க...” என்று அசிம் வெடிக்க பிக் பாஸிடம் முறையிட்டு விட்டு ‘பைத்தியக்காரன்’ என்று முனகியபடி விலகிச் சென்றார் ராபர்ட். “நீங்கள்லாம் யாரு என்னைக் கேட்க? உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று அசிம் அழிச்சாட்டியம் செய்வதும் ஒருவகையில் நியாயமல்ல. அமுதவாணன் சுட்டிக் காட்டுவது போல எல்லோருமே வீட்டின் கேப்டன்கள்தான். இந்தச் சமயத்தில் அமுது ‘ஏயப்பா...’ என்று சொல்லிவிட அசிமின் ‘மரியாதை டிமாண்ட் செய்யும் மோடு’ உக்கிரமாக விழித்துக் கொண்டது. ‘யாரை ஏய்’ன்னு சொல்றே’ என்று வழக்கம் போல சாமியாட ஆரம்பித்து விட்டார். (குஷ்டமப்பா... ச்சே... கஷ்டமப்பா!).

அசிம் மேக்கப் போட்டாரா, இல்லையா? வாருங்கள் விவாதிப்போம்!

மற்றவர்கள் இது குறித்து சொல்வதைக் காட்டிலும் ‘விக்ரமன் என்ன சொல்கிறார்’ என்று டார்கெட் செய்வதில் அசிம் தனியான கவனத்தைக் காட்டினார். விக்ரமன் மாட்டினால் ‘வெளுத்து வாங்கலாம்’ என்பது அவரது பிளான் போல. இந்த டெக்னிக் விக்ரமனுக்குப் புரிந்துவிட்டது. எனவே ‘அவன் குள்ளமாவும் இருப்பான்... உயரமாகவும் இருப்பான்’ என்பது போல் கலந்து கட்டிச் சொல்ல ஆரம்பித்தார்.
பிக் பாஸ் 6 நாள் 96
பிக் பாஸ் 6 நாள் 96

உப்புப் பெறாத இந்தச் சர்ச்சை காரணமாக வீடு ரணகளமாக, நிவாஷணி உள்ளிட்ட மற்றவர்கள் முகம் சுளிக்க, கலகத்தை ஆரம்பித்து வைத்த ஷிவினிடம் “பரவால்லயே... சூதானமா இருந்து தப்பிச்சிட்டே" என்று சிரித்தார் தனலஷ்மி. ஆனால் ஷிவினால் அவ்வாறு தப்பிக்க இயலவில்லை. "என்னை என்ன மென்ட்டல்ன்னு நெனச்சியா?" என்று அசிம் எகிறிக் கொண்டு வர “மன்னிச்சூ” என்று சிரித்தபடி மொத்தமாகச் சரணாகதி அடைந்து விட்டார் ஷிவின். அதற்காகவாவது அசிம் விட்டிருக்கலாம். பிறகும் கோபம் அடங்காமல் ஷிவினுடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் “எல்லோரும் லிவ்விங் ஏரியாவுக்கு வாங்க” என்று கூப்பிட, அப்போதும் அசராமல் முகத்தைக் கழுவிக் கொண்டு கெத்தாகக் கிளம்பினார் அசிம்.

பிக் பாஸ் பேசியது எச்சரிக்கையாகவும் இருந்தது. அதே சமயத்தில் கெஞ்சலாகவும் இருந்தது. “Sacrifice Task-ன்றது நீங்க ஒப்புக் கொண்ட விஷயம். ஏற்க விரும்பலைன்னா முதல்லயே மறுத்திருக்கலாம். அதைக் கொடுக்கும் போது உங்களை விடவும் எனக்குத்தான் அதிகம் வலிச்சது. (பார்றா!) நீங்க அதைச் செய்யும் போது மனமார பாராட்டியிருக்கேன். அசிம்... இந்த டாஸ்க்கை செய்யறதும்../ செய்யாததும் உங்க விருப்பம்” என்று தண்ணி தெளித்து விட்டுவிட்டார். ஆனால் இதன் விளைவு பின்னால் நிச்சயம் தெரியும். பிக் பாஸ் லேசுப்பட்ட ஆசாமி அல்ல. பழிவாங்குவதில் அசிமிற்கு மாஸ்டர் அவர்!

பிக் பாஸ் 6 நாள் 96
பிக் பாஸ் 6 நாள் 96

மற்றவர்கள் சிரமப்பட்டு டாஸ்க் செய்யும் போது அசிம் மட்டும் இப்படித் தனியாக நடப்பதாலும் பிக் பாஸ் ஆட்சேபம் செய்வதாலும் விக்ரமன் கேள்வி எழுப்ப, அவருடன் முட்டலை நிகழ்த்தினார் அசிம். “ராபர்ட் வந்திருக்கிற கெஸ்ட். போட்டியாளர் இல்ல" என்று விக்ரமன் சொன்ன பாயின்ட் முக்கியமானது. “நீங்க லைட்டா மேக்கப் போட்ட மாதிரிதான் தெரியுது" என்று சொல்லி ரணகளத்திலும் தனலஷ்மி காமெடி செய்தார். வேறு யாராவது சொல்லியிருந்தால் அசிமின் கோபம் அங்கும் பாய்ந்திருக்கும்.

Sacrifice Task-ல் கூடுதல் ரணகளத்தைக் கூட்டிய பிக் பாஸ்

டாஸ்க் லெட்டருடனும் துள்ளலான இசையுடனும் உற்சாகமாக உள்ளே நுழைந்தார் மகேஸ்வரி. அவர் கொண்டு வந்திருந்த கடிதத்தில் ஒரு வில்லங்கம் இருந்தது. Sacrifice Task 2.O ‘ஒருவர் செய்த டாஸ்க் மற்றவர்களை விடவும் குறைவு என்று நினைத்தாலோ அல்லது தான் அதைச் சரியாகப் பின்பற்றவில்லை என்று நினைத்தாலோ இப்போது கூடுதல் தியாகத்தைச் செய்யலாம்’ என்பதுதான் அதன் சாரம். இது அசிமை டார்கெட் செய்து கொண்டுவரப்பட்ட மாற்றம் என்பதாகத் தெரிகிறது. ஏனெனில் மற்றவர்கள் அனைவரும் தங்களின் தியாகத்தை நிறைவேற்றி விட்டார்கள். ஷிவின் கூட முடியைக் கத்தரித்துவிட்டார்.

இது தொடர்பாக மற்றவர்கள் கலந்து பேசி சொல்லலாம் என்று அறிவிக்க, கூச்சலும் குழப்பமும் எழுந்தது. எனவே ‘போட்டியாளர்கள் கார்டன் ஏரியாவிற்குச் செல்லுங்கள்’ என்று அறிவித்தார் பிக் பாஸ். ஆனால் அங்கு சென்றும் சண்டை தொடர்ந்தது. தான் மன்னிப்பு கேட்டும் அசிம் சர்ச்சையைத் தொடர்வதால் “முத்து சொன்னாரு. குறும்படம் கேட்கலாமா?’ என்று டென்ஷன் ஆனார் ஷிவின். "ஷிவின் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு நம்புவீங்களா. உங்களுக்குச் சுயபுத்தி வேணும்” என்று விக்ரமனிடம் வெடித்தார் அசிம்.

பிக் பாஸ் 6 நாள் 96
பிக் பாஸ் 6 நாள் 96

‘தான் மேக்கப் போடவில்லை’ என்பதை விதம் விதமான வார்த்தைகளில் சொல்லிப் போராடிக் கொண்டிருந்தார். அசிம். அவர் இவ்வளவு சொல்லும் போது என்ன செய்வது? நம்பித்தான் ஆக வேண்டும். ஆனால் பிக் பாஸ் எதற்கு Sacrifice Task 2.O கொண்டு வர வேண்டும் என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது. அசிமை மட்டும் தனியாக எழுப்பி ‘உங்க விருப்பம்’ என்று எதற்காகச் சொல்ல வேண்டும்?!

‘என்ன தியாகம் செய்ய வைக்கலாம்?’ என்று விருந்தினர்கள் சதித்திட்டங்களைத் தீட்டினார்கள். இதற்குத் தலைமை வகித்தவர் தனலஷ்மி என்று சொல்லலாம். அவர் முன்வைத்த ஐடியாக்கள் டெரராக இருந்தன. “அசிமை லேடி கெட்டப் போடச் சொல்லலாம்” என்பது அதில் ஒன்று. அசிம் இதை நிச்சயம் மறுப்பார் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவகையில் இதுவொரு செக்மேட். தன்னை ‘ராக்கி பாயாக’ கருதிக் கொண்டிருக்கும் ஒரு நபர் எவ்வாறு ‘அவ்வை சண்முகி’யாக மாறுவார்?!

மற்றவர்கள் அனைவரும் ஒருமாதிரியாக தங்களின் தியாகங்களைச் செய்ய ஒப்புக் கொண்டார்கள். ஷிவினும் விக்ரமனும் கேள்விகள் எழுப்பி, காரணம் கேட்ட பிறகு ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அசராத அசிம் மட்டும் ‘சேலை, சுடிதார்’ அணிய ஒப்புக் கொள்ளவில்லை. “கீழ இறங்க விரும்பலை” என்று அவர் காரணம் சொல்ல, ‘பெண்கள் ஆடை அணிவது என்பது கீழே இறங்குவதா?’ என்று மகேஸ்வரி ஆட்சேபம் தெரிவிக்க அங்கும் மோதினார் அசிம். "கமல் சார் கூட படத்துல கெட்டப் போட்டிருக்காரு" என்று மைனா சொல்ல, அங்கும் சண்டை. அதுவரை பெரிதாகக் கோபம் வராத மைனா கூட அசிமுடன் பயங்கரமாகச் சண்டை போட்டார்.

விக்ரமன், கதிரவனின் மனமுதிர்ச்சி

"அசிமிற்கு தந்த டாஸ்க்கை நான் ஏற்கிறேன்" என்று சொல்லிய கதிரவனுக்குப் பாராட்டு. அதை அவர் அவமானமாகக் கருதவில்லை. என்றாலும் பிறகு பாதி உடை அணிந்து வந்த போது அநியாயத்திற்கு வெட்கப்பட்டார். ‘பட்டிணத்தில் பூதம்’ கெட்அப்பிற்கு மாறிய ஏடிகேவின் தியாகத்தை அனைவரும் பாராட்டினார்கள். கீரிப்பிள்ளை தோற்றத்திற்கு அமுதவாணனின் சிகையலங்காரம் மாறியது. பார்க்கவே பாவமாக இருந்தது. பிரௌன் மேக்கப்பிற்கு ஷிவினும் சம்மதித்துவிட்டார்.
பிக் பாஸ் 6 நாள் 96
பிக் பாஸ் 6 நாள் 96

‘விக்ரமனுக்கு ஒருபக்கம் மீசை, தாடியை எடுக்கச் சொல்லலாம்’ என்று தனலஷ்மி தந்த ஐடியாவை முதலில் ஏற்க மறுத்த விக்ரமன், பிறகு ஏற்றுக் கொண்டார். பிறகு கேமரா முன் வந்து "நான் சரியான காரணத்தைத்தான் கேட்டேன். இது வெறும் முடிதான். இதைத் தியாகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த வீடு எனக்குத் தந்தது அதையெல்லாம் விடப் பெரிய விஷயம்" என்று சொன்னதற்குப் பெயர்தான் மனமுதிர்ச்சி.

இன்று பஞ்சாயத்து நாள். விசாரணைகளுக்கும் கேள்விகளுக்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனவே இந்த வார இறுதி எபிசோடுகள் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்ப்போம். அசிமின் வறுவலோடு இந்தப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.