Published:Updated:

பிக் பாஸ் Finale Exclusive: இறுதி நேரம் குவிந்த வாக்குகள்; டைட்டில் வென்ற அசிம்; 2-ம் இடத்தில் யார்?

பிக் பாஸ் அசிம்

ஷிவின், அசிம், விக்ரமன் என நான்கு பேர் இருந்த நிலையில் மைனா நந்தினி மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறினார்.

பிக் பாஸ் Finale Exclusive: இறுதி நேரம் குவிந்த வாக்குகள்; டைட்டில் வென்ற அசிம்; 2-ம் இடத்தில் யார்?

ஷிவின், அசிம், விக்ரமன் என நான்கு பேர் இருந்த நிலையில் மைனா நந்தினி மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறினார்.

Published:Updated:
பிக் பாஸ் அசிம்
பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஜி.பி.முத்து, அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜி.பி முத்து தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிலேயே வெளியேறிவிட அடுத்தடுத்து மெட்டி ஒலி சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா என வரிசையாக எவிக்ட் ஆகி வெளியேறினார்கள். கடைசியில் மைனா நந்தினி, ஷிவின், அசிம், விக்ரமன் என நான்கு பேர் இருந்த நிலையில் மைனா நந்தினி மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறினார்.

மைனா
மைனா

எனவே அசிம், விக்ரமன், ஷிவின்  என மூன்று பேர் கோப்பைக்கான இறுதிச் சுற்றில் இருந்த நிலையில், கிராண்ட் பைனலின் ஷூட்டிங் நேற்றும் இன்றும் பிக் பாஸ் செட்டில் நடைபெற்றது.

பிக் பாஸ் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் சின்னத்திரை நடிகர் அசிம் அதிக வாக்குகளைப் பெற்றி வெற்றி பெற்றதாக அறிவித்து, இன்று நடந்த நிறைவு நாள் ஷூட்டிங்கில் கமல் அசிமுக்குக் கோப்பையை வழங்கியுள்ளார்.

விக்ரமன்
விக்ரமன்

இரண்டாம் இடத்தை விக்ரமனும், மூன்றாம் இடத்தை ஷிவினும் பெற்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.