Published:Updated:

Bigg Boss Exclusive: பன்றிக் காய்ச்சல், டெங்கு எதிரொலி - தள்ளிப்போகிறதா பிக் பாஸ் சீசன் 6?

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தீவிரமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

Published:Updated:

Bigg Boss Exclusive: பன்றிக் காய்ச்சல், டெங்கு எதிரொலி - தள்ளிப்போகிறதா பிக் பாஸ் சீசன் 6?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தீவிரமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

பிக் பாஸ்

பிக் பாஸ் - இன்டர்நேஷனல் ஃபார்மேட்டான இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஐந்தாண்டுகளுக்கு முன் தமிழுக்குக் கொண்டு வந்தது விஜய் டிவி. தமிழ்த் தொலைக்காட்சி உலகத்துக்குப் புதிய நிகழ்ச்சி என்பதால் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசனுக்கான புரோமோக்கள் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன.

நிகழ்ச்சி தொடங்கும் தேதி அக்டோபர் 2 எனத் தகவல்கள் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்தன. இது குறித்து நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

`பிக் பாஸ்’
`பிக் பாஸ்’

ஆனால், தற்போது கிடைக்கிற தகவல்கள் நிகழ்ச்சி மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகலாம் என்கின்றன. தற்போது ஆங்காங்கே பரவலாகப் பலருக்கும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்படுவதானாலேயே இந்த முடிவு என்கிறார்கள்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தீவிரமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

எனவே அக்டோபர் 2க்குப் பதில் 9ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது நிகழ்ச்சி. அதேநேரம் போட்டியாளர்கள் அக்டோபர் 2ம் தேதியிலிருந்தே க்வாரன்டீனில் இருப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.