Published:Updated:

திடீரென பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தாடி பாலாஜி; கூடவே வந்த கோரிக்கை கேட்டுக் கடுப்பான நித்யா!

தாடி பாலாஜி, நித்யா

"'பிக் பாஸ்' நிகழ்ச்சியில கடைசியில நாங்க ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரிக் காட்டினது மாதிரி திரும்பவும் காட்டப்போறீங்களா, உங்க டி.ஆர்.பி-க்கெல்லாம் இனி நான் இரையாக மாட்டேன்னு சொல்லிட்டேன்." - நித்யா

Published:Updated:

திடீரென பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தாடி பாலாஜி; கூடவே வந்த கோரிக்கை கேட்டுக் கடுப்பான நித்யா!

"'பிக் பாஸ்' நிகழ்ச்சியில கடைசியில நாங்க ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரிக் காட்டினது மாதிரி திரும்பவும் காட்டப்போறீங்களா, உங்க டி.ஆர்.பி-க்கெல்லாம் இனி நான் இரையாக மாட்டேன்னு சொல்லிட்டேன்." - நித்யா

தாடி பாலாஜி, நித்யா

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவர் மனைவி நித்யாவுக்கும் இடையிலான பஞ்சாயத்து ஊரறிந்ததே. இவர்களின் குடும்பப் பிரச்னை நீதிமன்றம் வரை வந்துவிட்ட போதும், சட்டப்படி இன்னும் விவாகரத்து வழங்கப்படவில்லை. இருந்தும் கடந்த சில வருடங்களாக இருவரும் தனித்தனியேதான் வசித்து வருகின்றனர். மகள் போஷிகா நித்யாவுடன் வளர்ந்துவருகிறார். அவ்வப்போது இருவருக்குமிடையில் சண்டை பெரிதாவதும், பிறகு தணிவதுமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி நித்யாவின் பிறந்த நாள். ஏழாம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணி ஆனதும், 'ஹேப்பி பர்த் டே பொண்டாட்டி' என தன் டி.பி-யில் வைத்த பாலாஜி, மனைவி நித்யா மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் ஸ்டேட்டஸ் வைத்து நித்யாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவருக்குமிடையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாத நிலையில், பாலாஜியின் இந்தத் திடீர் வாழ்த்து இருவரின் நண்பர்கள் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

நடிகர் பாலாஜி மனைவி நித்யா
நடிகர் பாலாஜி மனைவி நித்யா

'பாலாஜி மனம் மாறியுள்ளார்' என்கிற ரீதியில் அவர்கள் பேசிவந்த நிலையில் சில மணி நேரத்தில் அந்த ஸ்டேட்டஸை நீக்கினார் பாலாஜி. ஆனால் டி.பி-யை மாற்றவில்லை.

'என்ன நடந்தது' என அறிய பாலாஜியைத் தொடர்பு கொண்டோம்.

"பொண்டாட்டிக்கு வாழ்த்து சொல்றது தப்பாண்ணே" என்றவரிடம், வாழ்த்துக்கு நித்யாவின் ரியாக்‌ஷன் என்ன எனக் கேட்டதும், "தேங்க்ஸ் சொன்னாங்க!" என்றார்.

ஸ்டேட்டஸை உடனே நீக்கியது குறித்துக் கேட்டதும், "ஷூட்டிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்" எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

நித்யாவிடமும் பேசினோம்.

"'சும்மா ஆடாதாம்'ன்னு தொடங்குகிற ஒரு பழமொழி சொல்வாங்க. முழுசாச் சொன்னா ஜாதி பத்திப் பேசறான்னு எங்கூடச் சண்டைக்கு வந்திடுவாங்க. அந்தப் பழமொழிதான் நிஜம். நான்கூட 'என்ன இந்த மனுஷன் என்னைக்கும் இல்லாத திருநாளா வாழ்த்துச் சொல்றார்'ன்னு ஒரு நொடி யோசிச்சேன்.

ஆனா, பின்னாடி ஏதோவொரு பிளான் இருக்கும்கிறது மட்டும் எனக்கு அந்த நொடியே தெரிஞ்சது.

நான் நினைச்சது சரியா நடந்தது. மறுநாளே 'கலக்கப்போவது யாரு' தாம்சன்கிட்ட இருந்து போன். அவரும் வாழ்த்துச் சொல்லிட்டு பாலாஜி ஜட்ஜா இருக்கிற 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் என் மகள் போஷிகா கலந்துகொள்ளணும்னும், 'இந்த நிகழ்ச்சி உங்க பெர்சனல் வாழ்க்கையில நல்லதொரு மாற்றத்தைத் தரலாமில்லையா'ன்னும் சொல்லிக் கேட்டார்.

தாடி பாலாஜி - நித்யா
தாடி பாலாஜி - நித்யா

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில கடைசியில நாங்க ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரி காட்டினது மாதிரி திரும்பவும் காட்டப் போறீங்களா, உங்க டி.ஆர்.பி-க்கெல்லாம் இனி நான் இரையாக மாட்டேன்னு சொல்லிட்டேன். 'கமல் சார் முன்னாடி ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க. இனி இவங்க வாழ்க்கையில பிரச்னையே வராது'ன்னு சொல்லி அன்னைக்கு டி.வி-யில காட்டுனீங்க. நிகழ்ச்சி முடிஞ்ச மூணாவது நாளே எங்கூட மல்லுக்கு வந்தார் பாலாஜி. இப்ப வரைக்கும் ஒரு பொறுப்பான தகப்பனா என் மகளுக்குச் செய்ய வேண்டிய எதைச் செஞ்சிருக்கார் அவர்? அதனால இந்த மாதிரி டிராமா கண்டெல்லாம் இனி நான் மயங்க மாட்டேன்.

அதுவும் போக, இப்பெல்லாம் போஷிகா அவளாகவே தெளிவான முடிவை எடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டா. நீங்க அவகிட்டயே கூடக் கேட்டுக்குங்க'ன்னு போனை மகள்கிட்ட தந்தேன்.

அவ பேசி, 'அதெல்லாம் ஃபேக்கா இருக்கும்னு தோணுது அங்கிள்'ன்னு ஒரே வார்த்தையில முடிச்சுட்டா. நாமெல்லாம் சேர்ந்து வாழலாம்னு பாலாஜி கூப்பிட்டா, அது ஃபேக்கா இருக்கும்னு என் பொண்ணு மனசுலயே பதிஞ்சிருக்குன்னா மேற்கொண்டு நான் என்ன சொல்றது..." என முடித்துக்கொண்டார் நித்யா.