Published:Updated:

Bigg Boss Ultimate: போட்டியாளர்களின் முழுப்பட்டியல் இதுதான்!

Bigg Boss Ultimate

மொத்தப் போட்டியாளர்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் இங்கே...

Bigg Boss Ultimate: போட்டியாளர்களின் முழுப்பட்டியல் இதுதான்!

மொத்தப் போட்டியாளர்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் இங்கே...

Published:Updated:
Bigg Boss Ultimate

பிக் பாஸ் முதன் முறையாக தமிழில் ஓ.டி.டி.யில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் இன்று காலை தொடங்கியது. தொலைக்காட்சிக்காக சென்னை பூந்தமல்லியில் போடப்பட்டிருக்கும் அதே பிக் பாஸ் வீடுதான். உள்ளே சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில போட்டியாளர்களின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும் விகடனுக்கு எக்ஸ்க்ளூசிவாகக் கிடைத்த பெயர்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். தற்போது மொத்தப் போட்டியாளர்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் இங்கே...

ஜூலி

ஜல்லிக்கட்டு கேட்டு நடந்த மெரினா போராட்டம் மூலம் பிரபலமானவர், ‘வீரத் தமிழச்சி’ என பிக் பாஸ் வீட்டுக்குள் போகும் போது கொண்டாடப்பட்டவர், நிகழ்ச்சியின் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளவில்லையா தெரியவில்லை, வெளியில் வரும்போது அவ்வளவு நெகடிவ் கமென்ட்டுகள். இவரைப் போன்ற ஒருவர் இருந்தால் கன்டன்ட் நிச்சயம் என்பதால் கூட்டி வந்துள்ளனர்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளர். அந்த சீசனில் ஜெயித்தவரோ அல்லது இரண்டாம் மூன்றாம் இடமோ கூடக் கிடையாது. ஆனாலும் அந்த சீசனில் நிறைய கன்டென்ட் கிடைக்கக் காரணமாக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்ல பொது வெளியிலுமே தன்னை கவனத்தின் மையப் புள்ளியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறவர். ல்ட்சுமி ராமகிருஷ்ணனுடன் லைவில் சண்டை, ரம்யா கிருஷ்ணனுடன் முறைத்துக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது என ஏக சர்ச்சைகளில் சிக்கியவர். பிக் பாஸ் அல்டிமேட்டில் என்ன பண்ணக் காத்திருக்கிறாரோ?

சிநேகன்

பிக் பாஸ் முதல் சீசனில் இரண்டாமிடம் பிடித்தவர். தொடர்ந்து கமலின் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். சமீபத்தில் கமல் தலைமையில் இவரது திருமணமும் நடந்தது நினைவிருக்கலாம்.

அபிராமி வெங்கடாசலம்

நடிகை. பிக் பாஸ் 3ல் கலந்து கொண்டவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அபிராமி
அபிராமி

சுரேஷ் சக்ரவர்த்தி

பிக் பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்டவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கிய அனுபவம் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கிறார். .

தாடி பாலாஜி

பிக் பாஸ் இரண்டாவது சீசனின் போட்டியாளர். அந்த சீசனுக்குள் செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் இவர் பத்திரிக்கைகளின் பரபரப்புச் செய்தி ஆனார். காரணம், இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்குமான குடும்பப் பிரச்னை கோர்ட்டுக்கு வந்தது. பரஸ்பரம் இருவரும் மாற்றி மாற்றிப் புகார் வாசித்தார்கள்.

பார்த்தது சேனல். ‘பேசாமல் இருவரையும் சேர்த்து அந்த வீட்டுக்குள் அனுப்பினா என்ன’ என நினைத்தது. பாலாஜியின் மனைவி நித்யாவும் சம்மதம் தெரிவிக்க இருவருமே போட்டியாளர்களாக உள்ளே சென்றார்கள். ஆனால் நித்யா சேனல் எதிர்பார்த்த அளவுக்கு கன்டென்ட் தரவில்லை. கடைசியில் ’பிரிந்திருந்த இந்த தம்பதியினர் சேர்ந்து விட்டனர்’ எனக் கமல் முன்னிலையில் அறிவித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்கள். ஆனால் இப்போது வரை இருவரும் தனித்தனியேதான் வசித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தற்போது பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்கிறார்.

'பிக் பாஸ்' பாலாஜி
'பிக் பாஸ்' பாலாஜி

ஷாரிக்

நடிகர் ரியாஸ் கான் –உமா ரியாஸ் தம்பதியினரின் மகன். சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவரும் பிக் பாஸ் 2வது சீசன் போட்டியாளரே.

அபிநய்

நடிகர் ஜெமினி கணேசனின் பேரன். பிக் பாஸ் 5வது சீசனின் போட்டியாளர். அதில் ஓரளவுக்கு நல்லபடியாக விளையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அனிதா சம்பத்

சன் டிவியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தவரைக் கூட்டி வந்து பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக இறக்கி விட்டார்கள். இவரும் 84 நாட்களை அந்த வீட்டுக்குள் கடத்தி விட்டுத்தான் வெளியேறினார்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாலாஜி முருகதாஸ்

பிக் பாஸ் 4 சீசனின் ரன்னர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானியுடன் இணைத்துக் கிசுகிசுக்கப் பட்டவரும் கூட.

சுருதி

பிக் பாஸ் 5 சீசன் போட்டியாளர். மாடலிங் செய்து வருகிறவர், சில படங்களிலும் நடித்துள்ளார். அவை இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தாமரை

நாடகக் கலைஞர். பிக் பாஸ் 5ல் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தவர்.

நிரூப்

பிக் பாஸ் 3-ல் டாப் 5 -ல் வந்தவர். நடிகை யாஷிகா ஆனந்தின் நண்பர்.

இவர்கள் தவிர நடிகை ஓவியா, புகழ் இருவரும் பட்டியலில் இருந்தனர். இவர்களில் ஓவியாவால் கடைசி நேரத்தில் வர இயலாமல் போனதால் அவருக்குப் பதில் சுஜா வருணி களமிறங்குகிறார்.

சுஜா வருணி

திரைப்பட நடிகை சுஜா வருணி ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்.

மேலும் புகழிடமும் பேசி வந்தார்கள். முதலில் சம்மதம் தெரிவித்த புகழ், பிறகு சில படங்களின் ஷூட்டிங்கைக் காரணம் காட்டி தயக்கம் காட்டுகிறாராம். ஒருவேளை அவர் செல்ல மறுத்தால் அவருக்குப் பதிலும் வேறு ஒருவர் செல்வார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism