Published:Updated:

``ரேகா அன்பா இருக்கிறது ஆறுதல்!'' - `பிக்பாஸ்' அனிதாவின் அப்பா

அனிதா
News
அனிதா

நிஜ வீட்டுக்குள் அனிதா எப்படி என்று தெரிந்துகொள்வதற்காக, அவரின் அப்பா சம்பத், அம்மா சுவர்ணா தேவி ஆகியோரிடம் பேசினோம்.

பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்ததில் இருந்தே செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தை வைத்துதான் பல புரொமோ காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனிதாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நிஜ வீட்டுக்குள் அனிதா எப்படி என்று தெரிந்துகொள்வதற்காக, அவரின் அப்பா சம்பத், அம்மா சுவர்ணா தேவி ஆகியோரிடம் பேசினோம். முதலில் பேசியவர் சம்பத்.

அனிதா சம்பத் குடும்பத்துடன்
அனிதா சம்பத் குடும்பத்துடன்

``என் பொண்ணைப்பத்தி ஒரு வரியில சொல்லணும்னா மிடில் கிளாஸ் குடும்பத்துல பிறந்த துறுதுறுப்பான குழந்தை. ஸ்கூல் படிக்கிறப்போ, தினமும் பிரேயர்ல அன்றைக்கான முக்கியச் செய்திகளை வாசிக்கிறது, ஆண்டு விழாக்கள்ல வரவேற்புரை கொடுக்கிறது, பாடறது, டான்ஸ் ஆடறதுன்னு எப்பவும் ஆக்டிவ்வா இருப்பா. எல்லா பெண் குழந்தைகளும் டாடீஸ் கேர்ள்னா, அனிதாவை மம்மிஸ் கேர்ள்னுதான் சொல்லணும். ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்போ வீட்டுக்கு வந்ததும், அவங்கம்மா மடியில படுத்துக்கிட்டு அன்னிக்கு நடந்ததெல்லாம் ஒண்ணுவிடாம ஒப்பிக்கும். அப்பாவுக்குத் தெரியாம இதைச் செய்யணும், அம்மாகிட்ட இதை மறைக்கணும்கிற கபடமெல்லாம் அனிதாகிட்ட இருந்ததே இல்ல. பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயும் அவங்கம்மா ஞாபகத்துலதான் நடிகை ரேகாகிட்டேயும், அறந்தாங்கி நிஷாகிட்டேயும் ரொம்ப க்ளோஸா இருக்கிறா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அனிதாகிட்ட உனக்கு அப்பா பிடிக்குமா, அம்மா பிடிக்குமான்னு கேட்டா `தம்பி கார்த்திகேயனைத்தான் பிடிக்கும்'னு சொல்வா. அவளைவிட ஆறு வயசு சின்னவன்கிறதால அவன் மேல ரொம்ப உயிரா இருப்பா.

நானும் மீடியா ஃபீல்டுல இருந்தேன்னாலும், அனிதா செய்தி வாசிப்பாளர் ஆனதுல என் பங்கு எதுவும் இல்லைன்னுதான் சொல்லணும். ஸ்கூல் டேஸ்ல தினமும் செய்தி வாசிச்ச அனுபவத்தை வெச்சுக்கிட்டு, பாலிமர் டி.வி ஆடிஷனுக்குப் போய் செலெக்ட் ஆயிட்டா. அதுக்கப்புறம் நியூஸ் செவன், சன் டிவின்னு சொந்தத் திறமையால வளர்ந்தா. இங்கிலீஷ் மீடியத்துலதான் படிச்சா. ஆனாலும், சாதாரணமா பேசுறப்போகூட `ழ'கரத்தைச் சரியா உச்சரிப்பா. `ல்', `ள்' உச்சரிப்புல இருக்கிற வித்தியாசம்கூட அனிதா பேச்சுல தெளிவா இருக்கும்'' என்கிற அனிதா அப்பாவின் குரலில் பெருமிதம் தெரிகிறது.

குழந்தை அனிதா
குழந்தை அனிதா

அடுத்து அனிதாவின் அம்மா சுவர்ணா தேவி பேச ஆரம்பித்தார்.

``அனிதாவுக்கு பிக்பாஸ்ல கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சதை அவ அப்பாகிட்ட சொன்னவுடனே, `மாப்பிள்ளை இதுக்கு சம்மதம் சொல்லிட்டாரா'ன்னுதான் முதல்ல கேட்டார். `அவர் ஓகே சொல்லிட்டார்ப்பா'ன்னு அனிதா சொன்ன பிறகுதான், `இது நல்ல வாய்ப்புமா, கலந்துக்கோ'ன்னு சொன்னார். எனக்கும், `கல்யாணமான பொண்ணுங்கிறதால தேவையில்லாத கெட்ட பேரெல்லாம் வராது'ங்கிற தைரியம் இருந்ததால சரின்னு சொல்லிட்டேன்'' என்றவர், தன் நிறம் குறித்து மகள் சொன்னது தொடர்பாகப் பேச ஆரம்பித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் டார்க் காம்ப்ளெக்‌ஷன்கிறதால, சில புடவைகளை நான் செலெக்ட் பண்ணவே மாட்டேன். `இது இன்னும் என்னை டார்க்கா காட்டும் அம்மு'ன்னு சொன்னா, `உனக்கு எல்லா கலரும் அழகா இருக்கும் மம்மி'ன்னு என்னை சமாதானப்படுத்திடுவா'' என்று நெகிழ்ந்தவரைத் தொடர்ந்து அனிதாவின் அப்பா பேச ஆரம்பித்தார்.

பிகபாஸ் அனிதா சம்பத்
பிகபாஸ் அனிதா சம்பத்

``சுரேஷ் எல்லார்கிட்டேயும் ஒரே மாதிரிதான் பேசறார். பார்க்கவும் நல்ல மனுஷனாத்தான் தெரியறார். ஆனா, `எச்சில் தெறிக்கும்'கிற வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம். அனிதாவை, வனிதாகூட கம்பேர் பண்ணிப் பேசறாங்க. அவங்க இந்த மாதிரி சிச்சுவேஷன்ல அழ மாட்டாங்க. போல்டா இருப்பாங்க. இது அழுவுது. சின்னப்பிள்ளை இல்லையா... இப்போதைக்கு நடிகை ரேகா, `அனிதா பாப்பா'ன்னு இவ மேலே அன்பா இருக்கிறது ஆறுதலா இருக்கு'' என்கிறார்.