Published:Updated:

`வெல்கம் விகடகவி ராஜூ' பிக்பாஸிற்கு பிறகு ராஜூ - இமான் சந்திப்பு!

ராஜூ - இமான்

அண்ணாச்சி இறுதி விழாவுக்கு வர முடியலைங்கிற வருத்தத்தை தெரிவிச்சாரு. ராஜூவும், நானும் அவார்ட் எடுத்துட்டு வந்து உங்ககிட்ட காட்டணும்னு நினைச்சேன். ஆனா, அவசரமா வந்ததால கொண்டு வர முடியலைன்னு சொன்னார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ராஜூ வெளியே வந்த அன்னைக்கே நிச்சயம் அவருடைய வீட்டுக்கு போய் ராஜூவை சந்தித்து வாழ்த்துகள் கூற இருப்பதாக இமான் அண்ணாச்சி தெரிவித்திருந்தார். தற்போது, ராஜூ இமானின் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து இமான் தரப்பில் பேசினோம்.

ராஜூ - இமான்
ராஜூ - இமான்

ராஜூ வந்த பிறகு அவரிடம் ஃபோனில் அண்ணாச்சி பேசினார். அவரிடம் வாழ்த்துகள் சொல்லிட்டு அவர் வீட்டுக்கு வரட்டுமான்னு கேட்டார். ராஜூவுடைய சொந்தக்காரங்க பலர் வீட்டில் இருக்காங்கன்னு ராஜூ சொன்னார். அத்துடன், நானே ஃப்ரீயானதும் உங்க வீட்டுக்கு வரேன்னும் சொல்லியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரெண்டு நாட்கள் ஆகியும் வரலைன்னு மறுபடி ஃபோன் பண்ணி கேட்டதுக்கு ரெண்டு நாளுக்குள் வரேன்.. இன்னமும் சொந்தக்காரங்க தொடர்ந்து வந்துட்டு, போய்ட்டு இருக்காங்கன்னு சொன்னார். சரி, அவர் எப்பனாலும் வருவார்னு நாம ரெடியா கேக் வாங்கி வச்சிடுவோம்னு ரெடியா கேக்கில் 'வெல்கம் விகடகவி ராஜூ' என எழுதி வச்சிட்டோம்.

ராஜூ - இமான்
ராஜூ - இமான்

சொந்தக்காரங்களை டிரெயின் ஏற்றிவிட போகும்போது அவங்களையும் கூட்டிகிட்டே திடீர்னு எங்க வீட்டுக்கு வந்து அண்ணாச்சிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டார். டிரெயின் ஏற்றப் போகணுங்கிறதனால ரொம்ப நேரமெல்லாம் பேச முடியலை.

அண்ணாச்சி இறுதி விழாவுக்கு வர முடியலைங்கிற வருத்தத்தை தெரிவிச்சாரு. ராஜூவும், நானும் அவார்ட் எடுத்துட்டு வந்து உங்ககிட்ட காட்டணும்னு நினைச்சேன். ஆனா, அவசரமா வந்ததால கொண்டு வர முடியலைன்னு சொன்னார்.

ராஜூ - இமான்
ராஜூ - இமான்

ஃபோட்டோ எடுக்கும்போது அண்ணாச்சிக்கு கேக் ஊட்டிவிடுற மாதிரி போஸ் கொடுக்க சொன்னதுக்கு நான் போஸ் மட்டும் தானே கொடுக்கணும்னு கேட்டார். நாங்க ஆமான்னு சொல்லவும் அண்ணாச்சிக்கு கேக் ஊட்டுற மாதிரி போஸ் மட்டுமே கொடுத்தார். அண்ணாச்சியும் கேக் கொடுத்துடுவாருன்னு வாயை திறந்துட்டே இருந்தார். ஆனா, கடைசி வரைக்கும் ராஜூ கேக் கொடுக்கவே இல்லையே! சின்ன, சின்ன இடங்களிலும் அவருடைய எதார்த்தமான நகைச்சுவை திறனை எல்லாரும் ரசிச்சிட்டு இருந்தோம்.

கொஞ்ச நேரத்துல கிளம்பிட்டதனால அவரை ஒரு நாள் மதிய உணவு விருந்துக்கு வர சொல்லி கேட்டோம். அவரும் எங்களை வர சொன்னார்!' என்றார்.

ராஜூ - இமான்
ராஜூ - இமான்

விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சீக்கிரமே தொடங்க இருக்கிறது. இதுவரை நடந்த பிக்பாஸ் சிறப்பு நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் பங்கேற்றிருக்கிரார்கள். அப்படியான சிறப்பு நிகழ்ச்சியில் மீண்டும் இமான் - ராஜூ கூட்டணியை பார்த்து ரசிக்கலாம்!