Published:Updated:

̀சுரேஷ் சக்கரவர்த்தி நல்லவரா, கெட்டவரா?!' - சுவாரஸ்ய நாஸ்டால்ஜி பகிரும் பெண் பிரபலங்கள்

சுரேஷ் சக்கரவர்த்தி
சுரேஷ் சக்கரவர்த்தி

ஒரு பக்கம் கேப்ரியலாவை தோளில் சுமந்து அப்ளாஸ் அள்ளுகிறார், மறுபுறம் `பாம்பை பக்கத்துலயே படுக்க வெச்சுருக்கியே!' என்று சூடு தெறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். `சுரேஷ் சக்கரவர்த்தி நல்லவரா, கெட்டவரா?' என்ற கேள்வி எழவே, இதை அவருடன் பணியாற்றிய பிரபலங்களிடமே கேட்டோம்.

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா வழங்கிய `பிபி4 ட்ரெண்டிங்' என்ற பட்டத்தை விடாமல் தாங்கிக்கொண்டிருப்பவர் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும்தான். அவர் என்ன செய்தாலும் `டாக் ஆஃப் தி டவுன்' ஆகிவிடுகிறது. நிகழ்ச்சியில் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்களிடம் சரளமாக தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதற்கு பலம் சேர்ப்பதுபோல் ஆகிவிட்டது இந்த வாரம் நடைபெற்ற `சொர்க்கபுரியா நரகபுரியா' டாஸ்க்.

Bigg boss season 4
Bigg boss season 4

ராஜாவாக வேடமிட்டிருந்தவரின் கையில் இருந்த செங்கோலை வைத்து அரக்கர்களை விரட்ட முயன்றபோது அது சனத்தின் மீது பட்டுவிட வீடே ரணகளமாகியது. அவருக்குப் பக்கபலமாக இருக்கும் பாலாஜி முதற்கொண்டு அனைவரும் அவரை விமர்சிக்க... தன் தவற்றை உணர்ந்து குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழுது கன்ஃபெஷன் ரூமில், `வீட்டுக்குப் போணும் பிக்பாஸ்' என்று கண்ணீர் மல்கினார்.

ஒரு பக்கம் தன் உடல் பலவீனத்தையும் பொறுத்துக்கொண்டு கேப்ரியலாவை தோளில் சுமந்து அப்ளாஸ் அள்ளுகிறார், மறுபுறம் `பாம்பை பக்கத்துலயே படுக்க வெச்சுருக்கியே!' என்று சூடு தெறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். `சுரேஷ் சக்கரவர்த்தி நல்லவரா, கெட்டவரா?' என்ற கேள்வி எழவே செய்கிறது. இதை அவருடன் பணியாற்றிய பிரபலங்களிடமே கேட்டோம்.

Suresh chakravarthy
Suresh chakravarthy

செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி:

``1996-ல இருந்து எனக்கு அவரைத் தெரியும். எனக்கு அன்பான சகோதரர். இப்ப இருக்கிற மாதிரிதான் எப்பவும் ஜாலியா இருப்பார். அவர் இருக்கிற இடமே கலகலப்பா இருக்கும். அப்பவும் சில பெண்கள்கிட்ட இப்படி எடக்கு மடக்கா பேசிப் பார்த்திருக்கேன். ஆனா, எங்களையெல்லாம் ரொம்ப மரியாதையா நடத்துவாரு. அவரு பையன் கல்யாணம் பெங்களூர்ல நடந்துச்சு. குடும்பத்தோட போய் இரண்டு நாள்கள் தங்கி கல்யாணத்துல கலந்துகிட்டோம்" என்றவரிடம், நிகழ்ச்சி தொடங்கிய கொஞ்ச நாள்ல ஒரு செய்தி வாசிப்பாளர் `வணக்கம்'னு சொல்லும்போதே எச்சில் தெறிக்கும்னு கலாய்ச்சாரே. அவர் உங்களைத்தான் சொன்னாருன்னு சமூகவலைதளங்கள்ல எல்லாம் பரவிச்சே' என்றோம்.

``அவர் அப்படியா சொன்னாரு. நான் பிக்பாஸ் தொடர்ந்து பார்க்க மாட்டேன். புரொமோ'ஸ் பார்க்குறதோட சரி. வணக்கம்னு சொன்னா அது நான்தான். அவர் என்கூட செய்தி வாசிச்சதும் இல்ல. ஒரே நிகழ்ச்சியில ஒண்ணா வேல பார்த்ததும் இல்ல. ஒரே பீரியட்ல நாங்க எல்லாம் சன் டிவில வேலை செஞ்சோம்... அவ்ளோதான். அவர் அப்படிச் சொன்னா `காமெடி பீஸ்' மாதிரி ஏதோ சொல்லிட்டு இருக்காருன்னு விட்டுட்டுப் போயிட வேண்டியதுதான். விமர்சனத்துக்கெல்லாம் எதிர் விமர்சனம் செய்யுறது சரியில்ல. எனக்கு எப்பவுமே அவர் அன்பான சகோதரர்தான்" என்கிறார் நிர்மலா.

Nirmala Periasamy
Nirmala Periasamy

`மலரும் மொட்டும்' இ.மாலா:

``நான் சன் டிவியில இருந்து விலகுறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னால சுரேஷ் அங்கே ஜாயின் பண்ணினாரு. அப்போ இருந்து அவரைத் தெரியும். பிக்பாஸ்ல பாக்குற மாதிரியேதான் எப்பவும் இருப்பாரு. நாங்க ஒண்ணா வேலை பார்த்த நேரத்துல எல்லார்கிட்டேயும் மரியாதையாத்தான் பேசுவார். வயதின் காரணமாக இப்போ அப்படிப் பேசுறாரா இருக்கும்.

தானா போய் எல்லாருக்கும் உதவி செய்யுறது அவரோட குணம். அதனால பல பிரச்னைகள்லயும் மாட்டிருப்பாரு. யார் பக்கத்துல இருக்காங்க, இல்லைன்னு பார்த்துப் பேசமாட்டாரு. மனசுல பட்டதை பட்டுன்னு பேசிட்டுப் போயிட்டே இருப்பாரு. மனசுக்குள்ளே ஒண்ணு வெளில ஒண்ணு வெச்சுப் பேசமாட்டாரு.

பிக்பாஸ்லயும் எல்லார்கிட்டேயும் அவர் அமளி துமளி பண்றதில்ல. எதிர்ல இருக்கிறவங்களோட செயல்களும் அவரோட ரியாக்ஷனுக்கு காரணமா இருக்கலாம். அவர் ஆஸ்திரேலியாவுல இருந்து வந்து சமையலுக்கான யூடியூப் ஆரம்பிச்ச பிறகு, அவர் செய்யுற ரெசிபி எப்படி இருந்துச்சுன்னு கமென்ட் சொல்லுவேன். அவர் செய்யுறதை எங்க வீட்லயும் செஞ்சு பார்ப்போம். எங்க எல்லார்கிட்டேயும் நல்ல நட்புணர்வோடதான் இருப்பாரு. பிக்பாஸுக்கு போறதுக்கு முன்னாடிகூட நண்பர்களுக்கெல்லாம் தகவல் சொல்லிட்டுத்தான் போனாரு."

Mala
Mala

டாக்டர் ஷர்மிளா:

``சுரேஷ் சக்கரவர்த்தி ஃபன் லவ்விங் பர்சன். வாழ்க்கையில் அவர் பல விஷயங்களை சாதிச்சிருக்காரு. இன்றைய தலைமுறையினருக்கு அவரின் சாதனைகள் தெரிய வாய்ப்பில்லை. பிக்பாஸ் மூலமாகத்தான் தன்னை ப்ரூவ் பண்ணணும்கிற அவசியம் அவருக்கு இல்லை. என்டெர்டெயின்மென்ட்டுக்காகத்தான் போயிருக்காரு. கோபத்திலிருக்கும்போது எல்லாருமே வார்த்தைகளை வெளிப்படுத்தத்தான் செய்வோம். சொர்க்கம், நரகம் டாஸ்க்ல அவர் அடிச்சுட்டாருன்னு ஒரு பிரச்னை நடந்துச்சு.

தெரியாம செஞ்சுட்டேன். சனம்னு தெரிஞ்சிருந்தா தொட்டிருக்கக்கூட மாட்டேன்னெல்லாம் சொன்ன பிறகும் ஒவ்வொருத்தர்கிட்டேயும் அர்ச்சனா அவரை மன்னிப்புக் கேட்கச் சொன்னது ஓவரா இருந்துச்சு. அங்கே செட்தான் போட்டிருந்தாங்க. அவர் பயன்படுத்துன செங்கோல்கூட தெர்மகோல்ல செஞ்சதுதான். அதுல அடிச்சது சனம் ரியாக்ட் பண்ணின அளவுக்கு வலிக்காதுன்னு நினைக்கிறேன். சனம் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டாங்க.

Dr.Sharmila
Dr.Sharmila

அந்த டாஸ்க்ல என்டெர்டெய்னிங்கா இருந்தது அவர் மட்டும்தான். இளைஞர்களுக்கு சமமா விளையாடுறாரு. அவர் அழுதபோது ரொம்ப பாவமா இருந்துச்சு. அவர்தான் அங்க கன்டென்ட் கொடுக்குறாரு. அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரை பிக்பாஸ் வீட்ல இருந்து அனுப்ப மாட்டாங்கன்னு நினைக்கிறேன்"

இந்த வாரம் நாமினேஷனில் சுரேஷ் சக்கரவர்த்தியும் இருக்கிறார் என்ற தகவலையும் இங்கே நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் மக்களே!

அடுத்த கட்டுரைக்கு