Published:Updated:

` என் காதல்!' - காதலன் மால் மருகாவை கரம் பற்றிய `சந்திரலேகா' ஸ்வேதா!

ஸ்வேதா - மால் மருகா

`என் காதல்!' என குறிப்பிட்டு ஸ்வேதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஹந்தி வைபவம் மற்றும் திருமண புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

` என் காதல்!' - காதலன் மால் மருகாவை கரம் பற்றிய `சந்திரலேகா' ஸ்வேதா!

`என் காதல்!' என குறிப்பிட்டு ஸ்வேதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஹந்தி வைபவம் மற்றும் திருமண புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Published:Updated:
ஸ்வேதா - மால் மருகா
`ஆழ்வார்' திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஸ்வேதா. அதன் பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். சன்டிவியில் ஒளிபரப்பான `சந்திரலேகா' தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரியானார்.

கிட்டத்தட்ட 2000 எபிசோடிற்கும் மேலாக ஒளிபரப்பான அந்தத் தொடர் ஒரே டைம் ஸ்லாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது. கதாநாயகர்கள்கூட அந்தத் தொடரில் மாறினார்கள். ஆனால், ஸ்வேதா ஆரம்பம் முதல் இறுதி வரையில் அந்தத் தொடரில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

ஸ்வேதா - மால் மருகா
ஸ்வேதா - மால் மருகா

சின்னத்திரை ஹன்சிகா என்று ஸ்வேதாவை அவருடைய ரசிகர்கள் செல்லமாக கூப்பிடுகிறார்கள். ஸ்வேதா விகடனிற்கு அளித்தப் பேட்டியில் அவருடைய திருமணம் குறித்த கேள்விக்கு, `என்னை விட உயரமான, தாடி வைத்து ஸ்மார்ட் ஆக இருக்கிற பையனைத் தான் திருமணம் செய்துப்பேன்! அதுவும் காதல் திருமணம் தான்!' எனக் கூறியிருந்தார். அவருடைய விருப்பப்படியே காதலனை கரம்பிடித்தும் இருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி சென்னையில் ஸ்வேதாவிற்கும் மால் மருகாவிற்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. மால் மருகா, சன் மியூசிக் விஜேவாக 90ஸ் கிட்ஸ் மனதில் இடம் பிடித்தவர். நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். இவருக்கும், ஸ்வேதாவிற்கும் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ஸ்வேதா - மால் மருகா
ஸ்வேதா - மால் மருகா

`என் காதல்!' என குறிப்பிட்டு ஸ்வேதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஹந்தி வைபவம் மற்றும் திருமண புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்!

வாழ்த்துகள் ஸ்வேதா - மால்!