லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

- ரிமோட் ரீட்டா

நானும் அவளும் புருஷன் பொண்டாட்டி மாதிரி - சைத்ரா ரெட்டி

ஜீ தமிழின் ‘யாரடி நீ மோகினி’ தொடர் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்துள்ளது. அதில் ‘ஸ்வேதா’ என்ற வில்லி கதாபாத்திரத்தின் வழியே அழகிலும் அடாவடித்தனத்திலும் மிரட்டிக்கொண்டிருப்பவர் சைத்ரா ரெட்டி. இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. சீரியல் ஹிட், கைகூடிய காதல் திருமணம் என இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார் சைத்ரா. இவருடன் சில நிமிடங்கள்...

உங்க காதல் எபிசோடு சொல்லுங்களேன்...

நான் தமிழுக்கு வர்றதுக்கு முன்னாடி தெலுங்குல நடிச்சிட்டு இருந்தேன். அப்போ தான் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷோட அறிமுகம் கிடைச்சுது. அவரோட ஆல்பம் சாங் புராஜெக்ட்ல ஹீரோயினா கமிட் ஆகியிருந்தேன். அந்த புராஜெக்ட் ஓகே ஆகல. ஆனா, எங்க லவ் ஓகே ஆயிடுச்சு. நான் சென்னைக்கு வந்த பிறகு சீரியல்ல பிஸியாகிட்டேன். ராகேஷ் ஹைதராபாத்தில அவரோட வொர்க்ல பிஸியாகிட்டாரு. அவர் சென்னை வரும்போதும், நான் ஹைதராபாத் போகும்போதும் ரெண்டுபேரும் மீட் பண்ணிப்போம். இப்படியே போயிட்டிருந்த காதலை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோகலாம்னு முடிவெடுத்ததும் வீட்டுல சொன்னோம். அவங்க க்ரீன் சிக்னல் காட்டினதும் மேரேஜ்!

எப்போ ஹனிமூன்?

மேரேஜ் முடிஞ்ச கையோட நான் சென்னை வந்துட்டேன். அவர் ஹைதராபாத்ல இருக்கார். ஹனிமூன் பற்றி இன்னும் பிளான் பண்ணல.

சேனல் சைட் டிஷ்

சீரியல் வில்லி சைத்ரா நிஜத்தில் எப்படி?

அதிர்ந்துகூட பேச மாட்டேன். யார் மேலேயும் சீக்கிரத்துல கோபப்பட மாட்டேன். என்ன கஷ்டமா இருந்தாலும் எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்க டிரை பண்ணுவேன். அதனாலேயே என்னைச் சுத்தி எப்போதும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்.

ஆன் ஸ்க்ரீனில் எலியும் பூனையுமாக இருக்கும் நீங்களும் வெண்ணிலாவும் ஆஃப் ஸ்க்ரீனில் எப்படி?

‘யாரடி நீ மோகினி’ சீரியல்ல அவ ஹீரோயின். நான் வில்லி. அதுல நான் அவளை பாடாப்படுத்துற மாதிரி நிஜத்துல என்னை அவ டார்ச்சர் பண்ணுவா. கடந்த ஒரு வருஷமா ரெண்டு பேரும் சென்னையில ஒரே வீட்டுலதான் தங்கியிருக்கோம். சேர்ந்துதான் ஷூட்டிங் போவோம். வீட்டுலேயே சமைப்போம். வெண்ணிலாவுக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது.

சீரியலைப் பார்த்துட்டு எல்லாரும் அவ நல்லா சமைப்பான்னு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, அவளுக்கு காய்கறி வெட்டுறதுக்கே நான்தான் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். சீரியல்ல காட்டுற மாதிரி நிஜத்துலேயும் வெண்ணிலா அப்பாவிதான். நிறைய விஷயங்கள்ல குழந்தை மாதிரி நடந்துப்பா. சொல்லப்போனா நானும் அவளும் புருஷன் பொண்டாட்டி மாதிரி தான். சண்டை, சமாதானம், கெஞ்சல், கொஞ்சல்ன்னு எங்க ரிலேஷன்ஷிப் செம இன்ட்ரெஸ்ட்டிங்.

***

தமிழ்ப் பெண்ணே... வணக்கம்!

திவ்யா நாதன், கலைஞர் செய்தி களின் முன்னணி செய்தியாளர் மற்றும் தொகுப்பாளர். தீரா தமிழ்க்காதலி.

சேனல் சைட் டிஷ்
சேனல் சைட் டிஷ்

“நான் எப்போதும் ஏதாவது புதுசா வித்தியாசமா முயற்சி பண்ணிட்டே இருப்பேன். அப்படி சமீபத்துல நான் பண்ணது வால் பெயின்டிங். பெயின்ட் பண்ணாத எங்க வீட்டுச் சுவர்ல நார்மலா பெயின்ட் பண்றதுக்குப் பதிலா வித்தியாசமா ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. எனக்குப் பிடிச்ச தமிழ் எழுத்துகளையும், தமிழ் வார்த்தைகளையும் சுவர்ல பெயின்ட் பண்ணியிருக்கேன். மஞ்சள் நிற பேக்ரவுண்டுல சிவப்பு நிறத்துல இருக்குற இந்த எழுத்துகளைப் பார்க்கும்போதே எனக்குள்ள புத்துணர்ச்சி பொங்கும்” என்கிற திவ்யா தன் மகளுக்கு ‘ஆரொளி’ என்று அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.

அது மட்டுமா... ‘அன்பும் அறனும் உடைத்தாயின்...’ என்ற திருக்குறளை தன் கட்டிலில் செதுக்கிவைத்துள்ளார் என்பது ஹைலைட்.

ஆஹா தமிழம்மா!

வேலைக்காரனின் வேலைக்காரி!

விஜய் டி.வியின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் தன் மதுரை மணம் மாறாத டயலாக்குகளால் நம் மனதைக் கவர்ந்தவர் மைனா நந்தினி. இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது ‘வேலைக்காரன்’ சீரியலில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நந்தினியிடம் பேசினோம்.

சேனல் சைட் டிஷ்

“சரவணன் மீனாட்சி சீரியல் மைனா கேரக்டருக்குப் பிறகு அதே மாதியான ஒரு ரோல் கிடைக்கிறதுக்கு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ ‘வேலைக்காரன்’ சீரியல்ல வேலைக்காரியா நடிக்கிறேன். மைனா மாதிரியே ரொம்ப துடுக்குத்தனமான கேரக்டர். இதுல எனக்கு பாவாடையும் சட்டையும்தான் காஸ்டியூம். ரெண்டு பாவாடை வச்சிருக்கேன். அப்பாவோட, ஹஸ்பண்டோட சட்டைகளையே எடுத்துட்டுப் போயிடுவேன்.

ஒரே ஒரு ஃபீலிங்தான். என் குழந்தைக்கு மூணு மாசம்தான் ஆகுது. ஷூட்டிங் வரும்போதெல்லாம் அவனை ரொம்ப மிஸ் பண்றேன். ஆனா, அவன் தாத்தா பாட்டிகூட ஜாலியாதான் இருக்கான். என்னைத் தேடுறதே இல்ல. அம்மா மாதிரியே ரொம்ப சமர்த்து’’ - கலக்கும் நந்தினிக்கு, தான் ஒரு 2கே கிட்டின் அம்மா என்பதில் அம்புட்டு பெருமையாம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஃபீலிங் மச்சி.

‘மணிமேகலையை கூமுட்டைன்னு திட்டிட்டேன்!’

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பிக் பாஸுக்கே பயங்கர டஃப் கொடுக்கிறது. இந்த நிகழ்ச்சி யிலிருந்து சமீபத்தில் எவிக்ட் ஆகியுள்ளார் தீபா சங்கர்.

‘நான் சூப்பரா எல்லாம் சமைக்க மாட்டேன். கொஞ்சம் மக்குதான். எனக்கு வந்த கோமாளிகள் எல்லாம் என்னைவிடப் பெரிய மக்கா இருந்தாங்க. நான் தூத்துக்குடி பாஷை பேசுவேன். நான் பேசுறது என் கோமாளிக்குப் புரியாது. எனக்கு வர்ற கோமாளி இங்கிலீஷுல பேசுறது எனக்குப் புரியாது. இதுக்கு இடையில சமைச்சு முடிக்கிறதுக்குள்ள ஒரே கூத்தா இருக்கும்.

சேனல் சைட் டிஷ்

ஒருவாட்டி மணிமேகலை புள்ள எனக்குக் கோமாளியா வந்துச்சு. எனக்கு கண்ணைக்கட்டி விட்டுட் டாங்க. நான் சொல்லச் சொல்ல அவ சமைக்கணும். குழம்பு வைக்கணும்னு சொல்லிட்டு சட்டியில கடுகு, வெங்காயம் எல்லாம் போட்டுத் தாளிக்கச் சொன்னேன். அந்தப் புள்ள எண்ணெய் ஊத்தாம எல்லாத்தையும் போட்டுக் கிளறிக்கிட்டு இருக்கு.

கண்ணைத் திறந்து பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகிட்டேன். சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிட்டு. நடுவுல மணிமேகலையை கூமுட்டைன்னு வேற திட்டிட்டேன். ஆனா, அது தப்பா எடுத்துக்கல. அந்த ஷோவுல கோமாளியா வர்ற புள்ளைங்க எல்லாத்துக்கும் சமைக்க மட்டும்தான் தெரியாது. மத்தபடி எல்லாம் தங்கம்” என்று மெச்சுகிறார் தீபா.

சரி... நீங்க எப்போ சமையல் கத்துக்கப் போறீங்க!

டி.ஆர்.பி டேட்டா: தமிழ்த் தொலைக்காட்சிகளின் சென்ற வார TRP ரேட்டிங்

சேனல் சைட் டிஷ்
சேனல் சைட் டிஷ்